பக்கங்கள்

04 பிப்ரவரி 2012

மனித உரிமை அமர்வுகளுக்கு முன் காங்கிரஸ் அரசும் கூட்டமைப்பும் பேசவுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், இந்தியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கை வந்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்திய பயணம் குறித்து தகவல் வெளியானது.
இதன் போது இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இது தொடர்பாக சுரேஷ் பிரேமசந்திரனிடம் வினவிய போது, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கும் நோக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.