இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில், கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளக் கூடிய வகையில்- பெரியதொரு அணியை சிறிலங்கா அரசு ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கவுள்ளது.
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அமெரிக்கா எடுத்துள்ள அதிகாரபூர்வ முடிவை அடுத்து, ஜெனிவா கூட்டத் தொடருக்கான சிறிலங்காவின் பிரதிநிதிகள் குழு 52 பேர் கொண்டதாக விரிவாக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க, நிமால் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கிம், றிசாத் பதியுதீன், அனுர பிரியதர்சன யாப்பா, ஜோன் செனிவிரத்ன, டிலான் பெரேரா, மற்றும் சஜின் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் குழுவில் இடம்பெறவுள்ளனர்.சிறிலங்கா பிரதிநிதிகள் குழுவுக்கு அமைச்சர்கள் ஜி.எல். பீரிஸ் மற்றும் மகிந்த சமரசிங்க ஆகியோர் தலைமை தாங்கவுள்ளனர். மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் வரும் 27ம் நாள் ஆரம்பமாகவுள்ள நிலையில் அடுத்தவாரம் இந்தக்குழு ஜெனிவா செல்லவுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு இரண்டு மாதங்கள் தான் ஆகின்றன, இதனை நடைமுறைப்படுத்த போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை என்ற வாதத்தையே இவர்கள் முன்வைக்கவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.