பக்கங்கள்

04 ஆகஸ்ட் 2011

நல்லூர் முருகன் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மஹோற்சவம் இன்று வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. திருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. இன்று காலை விசேட பூசை, அபிசேகங்கள் இடம்பெற்று முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றது.
நல்லூர் ஆலயத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன. அத்துடன் பக்தர்களின் நலன் கருதி குடிதண்ணீர், சுகாதார வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நல்லூர் ஆலய வீதியினூடான போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது.
ஆலய வீதியில் விசேட முதலுதவிச் சிகிச்சைப் பிரிவு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நல்லூர் உற்சவகாலத்தின் போது தமிழ் பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளனர். அத்துடன் ஆலயத்தின் வீதிகளில் கண்காணிப்பு வீடியோக் கமராக்கள் பொருத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நல்லூர் ஆலய முன்வீதி, பின்வீதி, அரசடி வீதி ஆகியவற்றில் அலங்காரப் பந்தல்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருந்திருவிழாவில் இம்முறை ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.