பக்கங்கள்

01 ஆகஸ்ட் 2011

சனல்4வில் ஒளிபரப்பான நேரடி சாட்சியங்கள் உண்மையானவையே!

பிரிட்டனின் சனல்4 தொலைக்காட்சி கடந்த வாரம் வெளியிட்டிருந்த புதிய ஒளிநாடாப் பிரதிமையில் உள்ளடக்கப்பட்டிருந்த நேரடி சாட்சியங்களில் நம்பகத்தன்மையை அந்தப் பிரதிமையை ஆவணப்படுத்திய ஊடகவியலாளர் ஜொனாதன் மில்லர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த ஆவணத்தில் இரு நேரடி சாட்சியங்களையும் மில்லர் பேட்டி கண்டிருந்தார். அவர்களின் நம்பகத்தன்மை தொடர்பாக எந்த சந்தேகமுமில்லை என அவர் கூறியுள்ளார். சண்டே லீடர் பத்திரிகைக்கு மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள பிரத்தியேகப் பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்திருப்பதாக அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
சாட்சியங்களிடமிருந்து முதலில் அவர்கள் கூறிய விடயங்களில் உண்மைத்தன்மைகளை அதாவது நாங்கள் எதிர்பார்க்கப்படும் உயர்ந்த மட்டத்திலான எதிர்பார்ப்புகளை உறுதிப்படுத்தாமல் அக்குற்றச்சாட்டுகளை நாங்கள் வெளியிடுவதில்லை.
எமது சட்டத்தரணிகள் மற்றும் பிரிட்டனின் ஒழுங்கமைப்பு அதிகாரசபையான பிரிட்டிஷ் ஒலிபரப்பு ஒழுங்கமைப்பு பிரிவான ஒவ்கொம் ஆகியவற்றினால் உறுதிப்படுத்தப்படாமல் இவற்றை வெளியிடுவதில்லையென மில்லர் கூறியுள்ளார்.
நேரடி சாட்சியங்களின் நம்பகத்தன்மையை ஏனையவர்கள் தீர்மானிப்பது அவர்களைப் பொறுத்த விடயம் என்று அவர் மேலும் தெரிவித்திருக்கிறார். சாட்சியங்களின் நம்பகத்தன்மை குறித்து எனது ஆசிரியர்களும் நானும் அதிகளவுக்குத் திருப்தியடைந்துள்ளோம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த நேரடி சாட்சியங்களுடனும் தான் எவ்வாறு தொடர்பைக் கொண்டார் என்பதை தன்னால் வெளியிட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர்களின் பாதுகாப்புக்கான அச்சத்தினாலேயே விபரத்தை வெளியிட முடியாதெனவும் அவர்கள் தமது உயிர்களுக்கு ஆபத்து நேர்ந்துவிடுமென்ற அச்சத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்ட வில்லர், இந்தச் சாட்சியங்கள் தமது பாதுகாப்புக் குறித்து அச்சமடைந்துள்ளனர். அவர்களை இனங்காட்டாமல் இருப்பது குறித்து நாங்கள் இணங்கியுள்ளோம்.
எமது நடிகர்களையும் குரல்களையும் உள்ளடக்கி மறைவான விதத்தில் அவர்களின் அடையாளங்களைக் கண்டுகொள்வதற்காக இதனை நாம் செய்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.