பக்கங்கள்

03 ஆகஸ்ட் 2011

இலங்கையில் புதிய நாடொன்று உருவாகும் அல்லது சீனாவின் காலனித்துவ நாடாக மாறும்.

இலங்கைக்கு எதிராக நிலவுகின்ற சர்வதேச சூழல் மற்றும் இலங்கையின் அரசியல் கலாசார நிலைமைகள் தற்போதுள்ளவாறு தொடர்ந்தால் உலகின் 194 ஆவது நாடு தோற்றம் பெறுவதை எவரும் தடுக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜேயதாச ராஜபக்ஸ குறிப்பிடுகின்றார்.
அரசியல்வாதிகளினால் சிறந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை உரிய நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படாவிடின் முடிவுகள் எட்டப்படாது என கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் கூறியிருந்தார்.
தேசாபிமானி பேராசிரியர் நந்ததாச கொதாகொடவின் 14 ஆவது ஞாபகார்த்த தின நிகழ்வு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
நீண்ட கால சமூக ஒற்றுமையை நோக்கிய எதிர்கால பயணம் என்ற தொனிப்பொருளில் பாராளுமன்ற உறுப்பினர் விஜேயதாச ராஜபக்ஸ இதன்போது உரையாற்றினார்.
இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகள் நாட்டிற்கு எதிராக குற்றம் சுமத்தி வருவதாக அவர் கூறினார்.
சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிராக நிலவுகின்ற சூழல் தொடர்ந்தும் நீடிக்குமாயின் நாடு பிளவுபட்டு உலகின் 194 ஆவது சுயாதீன நாடொன்று உருவாவதை யாராலும் தடுக்க முடியாமற் போய்விடும் என விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.
அவ்வாறு நடைபெறாவிட்டால் மாற்றீடாக நாடு சீனாவிற்கு காலனித்துவ நாடாக மாற்றமடையக் கூடும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மேற்குலக நாடுகளின் தலையீடுகள் காரணமாகவே இலங்கை மீது போர்க் குற்றங்கள் சுமத்தப்படுகிறது:-
மேற்குலக நாடுகளின் தலையீடுகள் காரணமாகவே இலங்கை மீது போர்க் குற்றங்களைச் சுமத்த ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடுகளை மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சூடானைப் பிளவுபடுத்தியதைப் போல் இலங்கையைப் பிளவுபடுத்துவதே மேற்குலக சக்திகளின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.
பேராசிரியர் நந்ததாச கோதாகொடவின் 14ஆவது நினைவுதின சொற்பொழிவில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேற்குலக நாடுகளின் தேவைகளை நிறைவேற்றத் தவறினால் இலங்கை சீனாவின் காலணித்துவ நாடாக மாறும் ஆபத்து இருப்பதாகவும் விஜயதாஸ ராஜபக்ஷ கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.