நாகை மாவட்டம் மயிலாடு துறையில் ம.தி.மு.க. சார்பில் மொழிபோர் தியாகிகள் நினைவு நாள் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மொழிபோர் தியாகிகளின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது-
மத்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்களை அனுப்பி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. கொலை குற்றவாளியான இலங்கை ஜனாதிபதியை குற்றம் சாட்டுவது போல் மத்திய அரசும், அதில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அரசும் நாடகமாடி வருகிறது.
தமிழர்களின் கொலைக் குற்றத்திற்கு காரணமான ராஜபக்ஷவையும், அவருக்கு துணை நிற்பர்களையும் கூண்டில் ஏற்ற வேண்டும்.
இனிமேல் ராஜபக்ஷ இந்தியாவிற்கு வந்தால் நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு இந்திய பிரதமர் வீட்டை முற்றுகையிட வேண்டும். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது தமிழகத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டது.
இதில் மாணவர்களின் பங்கு மிகவும் முக்கியமானவை. அதன் விளைவாக இன்றும் தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை.
இவ்வாறு வைகோ பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.