பிரான்சில் வசித்த ஈழத் தமிழர் ஒருவர் பெண்ணொருவரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சியில் புலோலியைச் சேர்ந்த குடும்பஸ்தரான 49 வயதுடைய கணபதிப்பிள்ளை சிவராசா என்ற குடும்பஸ்தரே நேற்று முன்தினம் திங்கட்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். விடுதியொன்றில் பணியாற்றி வந்த இந்தக் குடும்பஸ்தர் கடந்த திங்கட்கிழமை தனது தொழில் நிலையத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கையிலேயே வழியில் காத்துநின்ற அல்ஜீரிய நாட்டுப் பெண் இவரைக் குத்திக் கொலை செய்துள்ளார்.
இவர் தொழில் செய்யும் விடுதியில் ஏற்பட்ட முரண்பாட்டினாலேயே இந்தப் பெண் மேற்படிக் குடும்பஸ்தரை குத்திக் கொலை செய்ததாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் தனது மனைவி மற்றும் 4 பிள்ளைகளுடன் பாரிஸ் நகரின் புறநகர் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் கொலை செய்யப்பட்டுள்ளமை குறித்து பிரான்ஸ் நாட்டுக் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவரின் படுகொலையைத் தொடர்ந்து தாயகத்திலுள்ள இவரின் உறவினர்கள் உயிரிழந்தவரின் சகோதரர் வீட்டில் துயர் பகிர்ந்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.