டுபாயில் நான்காம் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த தனது சகோதரியின் மரணம் தொடர்பில் அவரது தங்கை சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
புத்தளம் மாதம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான அனுபமா என்ற பெண்ணே மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
இவர் தனது சிறிய வயதிலேயே தாய், தந்தையை இழந்துள்ளதாகவும் பின்னர் திருமணம் செய்து கொண்ட போதும் சிறிது காலத்தின் பின்னர் விவாகரத்து பெற்று விட்டதாகவும் அவரது தங்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டுபாயில் ஆறு வருடங்கள் வேலை பார்த்து வந்துள்ளார்.
நான்காம் மாடியில் உள்ள நிறுவனம் ஒன்றில் உயிரிழந்த பெண் சுத்திகரிப்பு வேலை செய்துவந்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் திகதி டுபாயிலிருந்து நபர் ஒருவர் தொலைபேசி அழைப்பெடுத்து உங்கள் அக்கா தற்கொலை செய்து கொண்டார் என தன்னிடம் தெரிவித்ததாக உயிரிழந்தவரின் தங்கை தெரிவித்தார்.
எனினும் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதை எற்றுக் கொள்ள முடியாது எனவும், தற்கொலை செய்து கொள்வதற்கு அவருக்கு எந்தவொரு காரணமும் இல்லை எனவும் உயிரிழந்தவரின் தங்கை தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.