பிரதம நீதியரசருக்கு எதிரான தெரிவுக்குழு அதன் செயற்பாடுகளை பார்க்கும்போது. இனப்பிரச்சினைக்கு தீரவுகாண்பதற்கான தெரிவுக்குத்தொடர்பில் தமிழர்களுக்கு நம்பிக்கையில்லை. அந்த தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த்தலைவர்கள் செல்லமாட்டார்கள். என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் உபதலைவரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான குமரகுருபரன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் ‘எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு’ எனும் தொனிப்பொருளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பிரதம நீதியரசருக்கு எதிராக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்து அரசாங்கம் கேளிக்கூத்தாடி தனது சுயரூபத்தை முழு நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கே காண்பித்துவிட்டது. இந்த தெரிவுக்குழுவானது விசாரணைகள் இன்றியே தீர்ப்பளித்துள்ளது.
இவ்வாறான நிலையில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக நியமிக்கப்படவுள்ள தெரிவுக்குழுவை எவ்வாறு நம்புவது. அந்த தெரிவுக்குழுவில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த்தலைவர்கள் பங்கேற்கமாட்டார்கள்.
வடக்கு கிழக்கில் புதுப்புது பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளினால் நாட்டில் புரையோடிபோயுள்ள பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காணமுடியாது என்பது மட்டுமே உண்மையாகும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.