யாழில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்ட பின்னரே கிணற்றுக்குள் வீசப்பட்டுள்ளதாக பிரேரத பரிசோதனையின் போது தெரியவந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பெரிய கோயில் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறத்தில் உள்ள கிணற்றில் இருந்து கடந்த சனிக்கிழமை பெண் ஒருவர் சடலமாக யாழ்.சிறுகுற்றத்தடுப்பு பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தார்.
குறித்த சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் ஈச்சமோட்டையைச் சேர்ந்த புஸ்பம் ( வயது 78) என அவரது பிள்ளைகளினால் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
மரண விசாரணையினை அடுத்து இவர் கொலை செய்யப்பட்ட பின்னரே கிணற்றில் வீசப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதேவேளை குறித்த பெண் அணிந்திருந்த தங்க ஆபரணங்களும் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செயதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.