சிலாபம் ஆனந்தா தேசிய பாடசாலையில் உயர்தரம் கற்கும் மாணவி ஒருவர் விளையாட்டு போட்டியில் மரதன் ஓடிக் கொண்டிந்த வேளை கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (31) காலை இடம்பெற்றுள்ளது.
சிலாபம் - இலுப்பதெனிய - கனுகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய கௌசல்யா பவித்ராணி என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.
இல்ல விளையாட்டு போட்டியின் போது மரதன் ஓடிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்த மாணவியை ஆசிரியர்கள், மாணவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அவரை காப்பாற்ற முடியவில்லை என கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.