மாயன் நாட்காட்டி முடிவுற்று 2012-12-21ம் திகதி உலகம் அழியும் என்ற வதந்தி கிளம்பியதை அடுத்து இலங்கையில் மஞ்சள், சிவப்பு, பச்சை நிறங்களிலும் மீன், இறால், முதலை போன்ற விலங்குகள் வடிவிலும் மழை பெய்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
அந்த ஆச்சர்யத்தின் மற்றுமொரு அங்கமாக ஊவா மாகாணத்தின் பல பகுதிகளில் நேற்று (11) கருப்பு மழை பெய்துள்ளது.
உடுதும்பர, கோவில்மடு, ஹப்புகஸ்கும்புர மற்றும் லுணுகலை ஆகிய பகுதிகளில் கருப்பு மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இதனால் வெயிலில் உலர வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற ஆடைகளில் கருப்பு கறை காணப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த மழை நீரை பொதுமக்கள் சேமித்து வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.