யாழ். மண்டைதீவில் கடந்த 27ம் திகதி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட நான்கு வயதுச் சிறுமிக்கு நீதி வேண்டி மண்டைதீவு மக்கள் அமைதி பேரணி ஒன்றை இன்று (03) காலை 10 மணியளவில் நடத்தியிருந்தார்கள்.
மண்டைதீவு பேரருலானவர் தேவாலயத்தில் இருந்து ஆரம்பமான இந்த பேரணி மண்டைதீவில் உள்ள வேலணை உப பிரதேசசபை காரியாலயத்துக்கு சென்று, அங்கு இருந்து மண்டைதீவு வீதிகளை சுற்றி வந்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் நிலையமான மண்டைதீவு பொலிஸ் நிலையத்தை சென்றடைந்தது.
பொலிஸ் நிலையத்தில் வைத்து யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்திகஸ்தர் எம்.சி.எம்.மொஹமட் ஜெவ்ரி, மண்டைதீவு பங்குத்தந்தை விஜெந்திரதாஸ், வேலணை தவிசாளர் சி.சிவராசா ஆகியோரிடம் உயிரிழந்த மாணவியுடன் கல்வி கற்ற மாணவிகளால் இந்த கொலை சம்பவம் தொடர்பான துரித விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளியை நீதிக்கு முன் நிறுத்த வேண்டி மகஜர் ஒன்றினை கையளித்தார்கள்.
மகஜரை பெற்று கொண்டு யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்திகஸ்தர் எம்.சி.எம்.மொஹமட் ஜெவ்ரி உரையாற்றுகையில்,
நாம் இந்த குற்றம் தொடர்பாக துரித விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம். கூடிய விரைவில் குற்றவாளியை பிடித்து நீதிக்கு முன் நிறுத்தி தகுந்த தண்டனையை பெற்று கொடுப்போம். அதற்கு விசாரணைகளின் போது எமக்கு பிரதேச மக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை வேலணை பிரதேச சபை தவிசாளர் உரையாற்றுகையில்,
பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு விரைவில் குற்றவாளியை கைது செய்து நீதிக்கு முன் நிறுத்தி குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரியிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.