தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் தனிப்பட்ட செயலாளர் பொன்னம்பலம் இலட்சுமி காந்தன் சிக்கவைக்கப்பட்டதன் பின்னணியில் சில முக்கிய தரப்பினர் இருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த வகையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளிற்கும் லட்சுமிகாந்தனின் கைதில் தொடர்பிருக்கலாம் என்ற தகவல்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைத்துள்ளன.
கடந்த 16ம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகமான இல165 கொழும்பு -8 இலுள்ள கின்சி வீதி அலுவலகத்தினில் தனக்குள்ள உயிராபத்து பற்றி புகார் செய்துவிட்டு வெளியேற முற்பட்ட வேளையிலேயே காத்திருந்த பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் என நம்பப்படுபவர்களால் கடத்தப்பட்டமை அம்பலத்திற்கு வந்துள்ளது.
தான் எந்நேரமும் பழிவாங்கும் வகையில் கடத்தப்படலாமென பொன்.காந்தன் தனது முறைப்பாட்டை செய்து விட்டு சித்திரவதைகளுக்கு அஞ்சி இந்தியாவிற்கு தப்பி செல்ல முற்பட்டுள்ளார்.
இந்நிலையில் பொன்காந்தன் மனித உரிமைகள் அலுவலகத்தில் தங்கியிருந்த விடயம் முள்ளிவாய்க்காலின் பின்னர் ஞானஸ்தானம் பெற்று அரச பங்காளிகளுடன் கூட்டு சேர்ந்துள்ள நபரொருவர் ஊடாகவே புலனாய்வுத் தரப்புகளுக்கு பரிமாறப்பட்டதாகவும் அதனையடுத்தே பொன்காந்தன் அள்ளி செல்லப்பட்டுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.
அவர் தற்போது எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பது பற்றியதகவல்கள் ஏதும் வெளிவராத போதும் மூத்த சட்டத்தரணியொருவர் எதிர்பாராத விதமாக 4ம் மாடியினில் பொன்காந்தனை கண்டுள்ளார். தற்போது வேழனெனப்படும் வேழமாலிகிதனும் அதே 4ம் மாடிக்கு மேலதிக விசாரணைக்கென வவுனியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதனிடையே பொன் காந்தன் மற்றும் வேழனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த ஏதுவாக அவர்களது கடந்த கால போராட்ட பங்களிப்புக்கள் பற்றி இப்போதே படையினர் வீடு வீடாக தேடிவருவதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
31 ஜனவரி 2013
மரதன் ஓடிய மாணவி திடீர் மரணம்!
30 ஜனவரி 2013
தேசிய கீதத்தில் தமிழீழத்தை பற்றி பாடவில்லை: மனோ
தேசியகீதம் தமிழ் மொழியில் பாடப்படுவது இந்நாட்டில் நீண்டகாலமாக இருக்கிறது. 'ஸ்ரீ லங்கா தாயே' என தொடங்கும் தேசிய கீதத்தில் தமிழீழத்தை பற்றி பாடவில்லை. அது 'ஸ்ரீ லங்கா' என்ற முழு இலங்கையை பற்றிதான் பாடுகிறது. இந்த தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை இன்று இருப்பது போலவே பாடவிட்டாலே நமக்கு போதும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்' எனும் தொனிப்பொருளில் கொழும்பில் இன்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
சிங்கள, தமிழ் சொற்கள் அடங்கிய ஒரே தேசிய கீதம் என்ற புதிய யோசனையை எனக்கு தெரிய தமிழர்கள் முன்வைக்கவில்லை. அதை முன் வைத்திருப்பது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார. அதை இந்த ஜெனீவா மார்ச் மாத காலப்பகுதியில் முன்வைத்து, அமைச்சர் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டார்.
அரசாங்கத்தில் உள்ள தீவிரவாத கட்சிகளும், பொதுபல சேனையும் அவரை திட்டுகின்றன. இது அரசாங்க உள்வீட்டு பிரச்சினை. இன்று நிலவும் ஜெனீவா காய்ச்சல் காரணமாக மூளை கலங்கி போய் கண்டதையும் திட்டித்தீர்க்கும் இவர்களது இந்த வேலைப்பற்றி நாம் ஒன்றும்செய்ய முடியாது என இந்நாட்டில் இன்று பாடப்படும் சிங்கள மொழி தேசிய கீதத்தை ஆனந்த சமரகோன் உருவாக்கினார். அதை பின்பற்றி தமிழ் மொழியில் அதே அர்த்தங்களுடன் பண்டிதர் மு. நல்லதம்பி உருவாக்கினார். இது 1950 இல் நடைபெற்றது. இந்த இரண்டு தேசிய கீதங்களும் ஒரே தாள மெட்டிலும் அமைந்துள்ளன. இன்று பிரிந்து நிற்கும் தமிழ், சிங்களம் பேசும் சமூகங்களை ஐக்கியப்படுத்தும் அற்புதமான கருவி இதுவாகும். இதை புரிந்துகொண்டு செயற்படுவது நாட்டை நேசிப்பவர்களின் கடமையாகும்.
கனடாவில், 'ஓ, கனடா' என ஆரம்பிக்கும் இரண்டு தேசிய கீதங்கள் ஆங்கில, பிரான்சிய மொழிகளில் உள்ளன. பிரான்சிய மொழியில் முதலில் எழுதப்பட்ட இந்த கீதம் பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இது ஒரே நாட்டில், ஒரே அர்த்தத்தில், இரு மொழிகளில் தேசிய கீதங்கள் இருப்பதற்கான உதாரணமாகும்.
தென்னாபிரிக்காவில் தேசிய கீதத்தில் ஆங்கிலம், ஆபிரிக்கான் உட்பட மொத்தம் ஐந்து மொழிகளின் வார்த்தைகள் உள்ளன. இதன்மூலம் அந்த நாட்டின் ஐக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
இலங்கையில் ஒரே அர்த்தத்தில், இரு மொழிகளில் தேசிய கீதங்கள் உள்ளன. இதை வேண்டாம் என சொல்லி பிரச்சினையை இவர்கள் முதலில் கிளப்பினார்கள். இவர்கள் கிளப்பிய பிரச்சினைக்கு தீர்வாக இன்று ஒரே கீதத்தில் இரண்டு மொழி வார்த்தைகள் என இவர்களே சொல்கிறார்கள்.
தமிழ் பேசும் மக்களுக்கு இன்று தேசிய கீதத்தை விட பெரும் பிரச்சினைகள் உள்ளன. தமிழருக்கு இலங்கை தேசிய உணர்வே மறந்து விட்டது. முஸ்லிம்களும் இன்று இந்த கொடுமையை அனுபவிக்க தொடங்கியுள்ளார்கள்.
இருந்தாலும் தேசியகீதம் தமிழ் மொழியில் பாடப்படுவது இந்நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ லங்கா தாயே என தொடங்கும் இந்த பாடல் தமிழீழத்தை பற்றி பாடவில்லை. அது இலங்கை என்ற முழு இலங்கையை பற்றிதான் பாடுகிறது. இந்த தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை இருப்பது போலவே பாடவிட்டாலே நமக்கு போதும்.
ஜெனீவா காய்ச்சல்:
கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கையை காட்டித்தான் அரசு, ஐ.நா.வில் பிணை வாங்கி வந்தது. நமது ஐநா தூதுக்குழு, கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகளை அமுல் செய்கிறோம் என்றும், உண்மையில் 50 வீதம் அமுல் செய்து விட்டோம் என்றும் ஐ.நா.வில் சொன்னார்கள். அப்படியானால் சரி, மிகுதி 50 வீதத்தையும் அமுல் செய்துவிட்டு அடுத்த மார்ச் மாதம் வாருங்கள் என சொல்லி உலகம் நம்மவர்களை வழியனுப்பி வைத்தது. அன்று சொன்ன அந்த 'அடுத்த மார்ச்' வந்துவிட்டது.
இவர்கள் இந்த ஒரு வருடத்தில் கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகள் எதையும் அமுல் செய்யவில்லை. அது நமக்கு தெரியும். எனவே இந்த முறை அங்கு சென்று எந்த பொய்யை,எப்படி சொல்வது என இந்த அரசாங்கம் முழித்துக்கொண்டு இருக்கிறது. இதுவும் இன்று நமக்கு தெரியும். இந்த ஆணைக்குழு அறிக்கை ஐ.நா ஆணைக்குழு அறிக்கை இல்லை. இது இந்த நாட்டு அரசாங்கம் தயாரித்து உலகத்துக்கு அளித்த அறிக்கையாகும். இதுவே இன்று அரசாங்கத்தில் உள்ள சிலருக்கு மறந்துவிட்டது.
கடந்தமுறை இன்றைய பிரதம நீதியரசர் மொஹான் பிரிஸ் அரச தூதுக்குழுவில் ஜெனீவா போனார். இந்தமுறை அவருக்கு பதில் சரத் சில்வா போக இருப்பதாக கதை அடிப்படுகிறது. சரத் சில்வா அங்கும், இங்கும் என்று எல்லா இடத்திலும் இருந்தவர். ஆகவே அவர் ஜெனீவாவும் போகட்டும். யார் போனாலும், உண்மை பேச வேண்டும். இல்லாவிட்டால் சிக்கல் காத்திருக்கிறது. ஏனென்றால் உலகத்துக்கு இன்று உண்மை தெரியும் என்றார்.
யாழ்,செம்மணி பகுதியில் வைத்து சிறுமி கடத்தப்பட்டுள்ளார்!
யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமி இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே குறித்த சிறுமியை செவ்வாய்க்கிழமை மாலை கடத்தியுள்ளனர்.
செம்மணி பகுதியில் வைத்தே குறித்த சிறுமி கடத்தப்பட்டுள்ளார். அருள்நேசன் ஆருனியா என்ற சிறுமியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
29 ஜனவரி 2013
வெவ்வேறு இடங்களில் இருவரது சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்பு!
யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி,வீட்டுக் கிணற்றிலிருந்து அடிகாயங்களுடன் இளம் தாயின் சடலத்தை கோப்பாய் பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை நண்பகல் மீட்டுள்ளனர்.
ஒரு பிள்ளையின் தாயாரான கமலதீபன் கஜந்தினி (வயது 23) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இவரது சடலத்தில் பலத்த அடிகாயங்கள் காணப்படுவதாகவும் இவரது மரணம் தொடர்பில் சந்தேகத்தில் அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ். தொண்டைமானாறு வல்லை வீதியோரமாகவுள்ள ஒற்றைப்பனையடி வயல் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (28) இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதில் கொத்தியகாடு கெருடாவில் தெற்கு தொண்டைமானாற்றைச் சேர்ந்த கிட்டினன் தவராசா (வயது - 50) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் கடந்த சனிக்கிழமை பி.ப. 6 மணியிலிருந்து காணாமல் போனதையடுத்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவரைத் தேடிய நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். அதன் பின்னரும் தொடர்ந்து தேடிய நிலையில் வயல் கிணற்றிலிருந்து தொலைதூரத்தில் சைக்கிள் ஒன்று நிற்பதை அடுத்து உறவினர்கள் வயல் கிணறுகளில் தேடிப்பார்த்தபோதே குறித்த வயல் கிணற்றில் மேற்படி குடும்பஸ்தர் இறந்த நிலையில் சடலமாக கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து உறவினர்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரும் வல்வெட்டித்துறை மரண விசாரணை அதிகாரி சுசீந்திரசிங்கம் ஆகியோர் விசாரணையை மேற்கொண்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டதுடன் பிரேத பரிசோதனையை டாக்டர் மயிலேறும்பெருமாள் மேற்கொண்டார். இதன் பின்னர் மரண விசாரணையின் போது குறித்த நபர் கடந்த 2 வருடங்களாக வேலை இல்லாமல் மனஉளைச்சலுடன் காணப்பட்டதாகவும் அத்துடன் இவருக்கு ஏற்கனவே நோயுள்ளதாகவும் இவர் கிணற்றில் விழுந்து மூச்சுத் திணறியே இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, யாழ். தொண்டைமானாறு வல்லை வீதியோரமாகவுள்ள ஒற்றைப்பனையடி வயல் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (28) இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதில் கொத்தியகாடு கெருடாவில் தெற்கு தொண்டைமானாற்றைச் சேர்ந்த கிட்டினன் தவராசா (வயது - 50) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் கடந்த சனிக்கிழமை பி.ப. 6 மணியிலிருந்து காணாமல் போனதையடுத்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவரைத் தேடிய நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். அதன் பின்னரும் தொடர்ந்து தேடிய நிலையில் வயல் கிணற்றிலிருந்து தொலைதூரத்தில் சைக்கிள் ஒன்று நிற்பதை அடுத்து உறவினர்கள் வயல் கிணறுகளில் தேடிப்பார்த்தபோதே குறித்த வயல் கிணற்றில் மேற்படி குடும்பஸ்தர் இறந்த நிலையில் சடலமாக கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து உறவினர்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரும் வல்வெட்டித்துறை மரண விசாரணை அதிகாரி சுசீந்திரசிங்கம் ஆகியோர் விசாரணையை மேற்கொண்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டதுடன் பிரேத பரிசோதனையை டாக்டர் மயிலேறும்பெருமாள் மேற்கொண்டார். இதன் பின்னர் மரண விசாரணையின் போது குறித்த நபர் கடந்த 2 வருடங்களாக வேலை இல்லாமல் மனஉளைச்சலுடன் காணப்பட்டதாகவும் அத்துடன் இவருக்கு ஏற்கனவே நோயுள்ளதாகவும் இவர் கிணற்றில் விழுந்து மூச்சுத் திணறியே இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் – அமெரிக்கா அறிவிப்பு
போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் ஜேம்ஸ் மூர், கொழும்பில் சற்று முன்னர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்காப் படைகளை விசாரிப்பதற்கான வாக்குறுதியை வழங்குவதற்கு, சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே, ஜெனிவாவில் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.
“கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட பின்னர், சிறிலங்கா சிறியளவிலான முன்னேற்றத்தையே காண்பித்துள்ளது.
ஆனால், இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்று வொசிங்டன் நம்புகிறது.
தமது சொந்த மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அதன் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே, கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் அமெரிக்காவும், ஏனைய 23 நாடுகளும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.
மார்ச் மாதம் கொண்டு வரப்படும் புதிய தீர்மானம், சிறிலங்கா மக்கள் மீதுள்ள அமெரிக்காவின் பொறுப்பின் வெளிப்பாடு.
சிறிலங்காவுக்கு எதிரான இந்தத் தீர்மானத்துக்கு அமெரிக்கா அனுசரணை வழங்கும்.
பொறுப்புக்கூறலை கொழும்பு உறுதி செய்தாக வேண்டும்” என்றும் அவர் மேலும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இங்கு கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் விக்ரம் சிங், சிறிலங்காவின் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவைப் பதவி நீக்கியதும், அமெரிக்காவின் இந்த முடிவுக்கு ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளார்.
“ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான புதிய தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதன் மூலம், சிறிலங்கா விவகாரத்தை அமெரிக்கா புதுப்பித்துக் கொள்ளவுள்ளது.
தலைமை நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், சட்டவிரோதமானது என்றும், அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் இரண்டு நீதிமன்றங்களால், தீர்ப்பளிக்கப்பட்ட நிலையிலும், அவருக்கு எதிரான மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையும், புதிய தீர்மானத்தைக் கொண்டு வர அமெரிக்கா முடிவு எடுப்பதில் பங்களிப்புச் செய்தது.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மூன்று பிரதி உதவி இராஜாங்கச் செயலர்களும் கொழும்பில் இன்று மாலை பங்கேற்ற ஊடக சந்திப்பின் போது, பிரதி உதவி இராஜாங்கச் செயலர் ஜேம்ஸ் ஆர். மூர் ஆற்றிய உரை- முன்னரே தயாரிக்கப்பட்ட ஆரம்ப உரை இது-
“சிறிலங்காவுக்கு மீளவருகை தந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி.
சிறிலங்காவை நெருக்கமாக அவதானிக்கின்ற வொசிங்டனிலுள்ள எனது இரு சகாக்களுடன் இங்கு வருகை தந்துள்ளேன்.
இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்தமைக்காக தூதுவர் சிசன் மற்றும் எமது சிறிலங்கா நண்பர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
சிறிலங்காவுடன், அது சுதந்திரமடைந்த காலப்பகுதியில் இருந்து நீண்ட உறவை அமெரிக்கா கொண்டுள்ளது.
இந்த பன்முகத்தன்மை கொண்ட உறவை நாம் மதிப்பதுடன் அதே உணர்வுடனேயே நாம் இந்தப் பயணத்தை முன்னெடுத்துள்ளோம்.
சிறிலங்காவுக்கு ஜனவரி 26ம் நாள் வருகை தந்த நாம், சிறிலங்கா அரசாங்கம், சிறிலங்கா இராணுவம், அரசியல் கட்சிகள் மற்றும் குடியியல் சமூகத்தவர்களுடன் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் ஆக்கபூர்வமானதும் வெளிப்படையானதுமான சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தோம்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தாபய ராஜபக்ச, இராணுவ தளபதிகள் ஆகியோருடன் சந்திப்புக்களை மேற்கொண்ட நாம், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சிறிலங்கா அதிபரின் செயலர்; லலித் வீரதுங்க மற்றும் ஏனைய அதிகாரிகளைச் சந்திக்க எதிர்பார்த்துள்ளோம்.
சிறிலங்காவுடனான அமெரிக்காவின் உறவானது பரந்ததும் ஆழமானதுமாகும்.
கண்ணிவெடி அகற்றல், கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள், கடற்பாதுகாப்பு ஒத்துழைப்பு, மனிதாபிமான உதவிகள், குடியியல் சமூகம் மற்றும் ஜனநாயக நிறுவனங்களுக்கான உதவிகள் என சிறிலங்காவுடன் பரந்துபட்ட ரீதியில் நாம் கைகோர்;த்து செயற்படுகின்றோம் .
எமது அனைத்து சந்திப்புக்களின் போதும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் தேசிய செயற்திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்காவின் முயற்சிகள் தொடர்பாக நாம் கலந்துரையாடியிருந்தோம்.
அத்துடன், நீடித்து நிலைக்கும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடைவதற்கான முயற்சிகளில் துரித முன்னேற்றம் காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தச் சந்திப்புகளின் போது கலந்துரையாடியிருந்தோம்.
இதற்கு வெளிப்படையான ஆட்சிமுறை முக்கியம்.
அத்துடன் பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புக்கள், மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான நம்பகமான குற்றச்சாட்டுக்கள் உட்பட, போரின் இறுதிக்கட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக பொறுப்புக்கூறும் கடப்பாட்டை முறையாக முன்னெடுத்துச் செல்வதும் அவசியமாகும்.
வினைத்திறன் மிக்க குடியியல் சமூகம், சுதந்திரமான நீதித்துறை, ஊடக சுதந்திர மற்றும் மனிதஉரிமைகளுக்கான முழு மதிப்பளிப்பு ஆகியவற்றின் அவசியம் குறித்தும் நாம் கலந்துரையாடியிருந்தோம்.
வட மாகாணசபைத் தேர்தலை சிறிலங்கா அரசாங்கம் வரும் செப்ரெம்பரில் நடத்த எண்ணியிருப்பதை நாம் வரவேற்கின்றோம்.
அத்துடன் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என நாம் ஊக்குவிக்கின்றோம்.
சிறிலங்காவில் வாழும் அனைத்து சமூகத்தவர்களும் சமமான உரிமைகள்; மற்றும் கௌரவத்தை அனுபவிக்கக் கூடிய வகையிலும்- பாதுகாப்பு மற்றும் சுபீட்சகரமான எதிர்காலத்தை பகிர்ந்து கொள்ளக் கூடியதுமாக இருக்க வேண்டும் என்று சிறிலங்காவின் நீண்டகால நண்பர்கள் என்ற வகையில் நாம் நம்புகின்றோம்.” என்று குறிப்பிட்டார்.
28 ஜனவரி 2013
யாழில் தூதரகம் அமைக்குமாறு ஆயர் வேண்டுகோள்.
இந்தியாவைப் போலவே அமெரிக்காவும், யாழ்ப்பாணத்தில் துணைத்தூதரத்தை அமைக்க வேண்டும் என்று கத்தோலிக்கத் திருச்சபையின் யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலர்கள், நேற்று யாழ். ஆயரைச் சந்தித்த போதே இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.
“யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத்தூதரகம் செயற்பட்டு வருகிறது.
அதுபோலவே, அமெரிக்காவும் துணைத்தூதரகத்தை யாழ்ப்பாணத்தில் அமைத்து, இங்குள்ள நிலைமைகளை நேரடியாக கண்காணிக்கக் கூடிய நிலைமையை உருவாக்க வேண்டும்.
இதன்மூலம், யாழ். குடியியல் சமூகத்துடனான தொடர்புகளை பேணி வரமுடியும்” என்று தாம் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக, யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கையைக் கவனத்தில் எடுத்துக் கொள்வதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர்கள் தெரிவித்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மாடியிலிருந்து விழுந்து இளம்பெண் மரணம்!
27 ஜனவரி 2013
எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட மாணவி மரணம்!
எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவி துளசிகா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார். யாழ். புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் துளசிக்கா (வயது 22) என்ற மாணவி காதல் தோல்வியால் தீயில் எரிந்து தற்கொலை செய்ய முயற்சித்ததாக சொல்லப்படுகிறது.கடுமையான எரிகாயங்களுடன் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட துளசிகா என்ற அந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று காலை அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அறிவுக் கண் திறக்க வேண்டியவர்களின் காம லீலை!
கிழக்கு மாகாண பள்ளிக்கூடங்களில் மாணவிகள் மீதான பாலியல் சம்பவங்கள் தொடர்பாக கிடைத்துள்ள முறைப்பாடுகளின் பேரில் இதுவரை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் என 25 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.பள்ளிக்கூடங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் மாணவிகள் மீதான பாலியல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறும் அவர், முறைப்பாடு பதிவு செய்யப்படாத சம்பவங்களும் இருப்பதால் நடந்த சம்பவங்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் அவர் கூறினார்.தமிழ், முஸ்லிம் சமூகங்களிடமிருந்து இவ்வாறான முறைப்பாடுகள் வெளிவருவதில்லை. சிங்கள சமூகத்திடமிருந்துதான் பெரும்பாலான முறைப்பாடுகள் வந்துள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.
விசாரணைகளின் முடிவில் சிலர் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள அதேவேளை இன்னும் சிலர் வேறு பள்ளிக்கூடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க குறிப்பிடுகின்றார்.
விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஒருசிலர் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளார்கள். ஆனால் சாட்சியங்கள் இல்லாத நிலையில் சிலர் நிரபராதி என விடுதலையான சம்பவங்களும் உள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டுகிறார்.
முறைப்பாட்டாளர்களும் சாட்சிகளும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன்வராமையால் பள்ளிக்கூட மாணவிகளுக்கு எதிரான பாலியல் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தடைகள் காணப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களின் கட்டளைகளுக்கு அமைவாக மாணவர்கள் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றமையே இவ்வறான துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கக் காரணம் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
சில நாடுகளை பின்பற்றி இலங்கையிலும் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்காக முன்பள்ளிகள் தொடக்கம் விழிப்புணர்ச்சி விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டியது அவசியம் என்று விழுது அமைப்பின் தலைவி சாந்தி சச்சிதானந்தம் கூறினார்.
26 ஜனவரி 2013
மஹிந்த இந்திய மண்ணில் கால் வைத்தால் மன்மோகன் வீடு முற்றுகை!
நாகை மாவட்டம் மயிலாடு துறையில் ம.தி.மு.க. சார்பில் மொழிபோர் தியாகிகள் நினைவு நாள் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மொழிபோர் தியாகிகளின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது-
மத்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்களை அனுப்பி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. கொலை குற்றவாளியான இலங்கை ஜனாதிபதியை குற்றம் சாட்டுவது போல் மத்திய அரசும், அதில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அரசும் நாடகமாடி வருகிறது.
தமிழர்களின் கொலைக் குற்றத்திற்கு காரணமான ராஜபக்ஷவையும், அவருக்கு துணை நிற்பர்களையும் கூண்டில் ஏற்ற வேண்டும்.
இனிமேல் ராஜபக்ஷ இந்தியாவிற்கு வந்தால் நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு இந்திய பிரதமர் வீட்டை முற்றுகையிட வேண்டும். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது தமிழகத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டது.
இதில் மாணவர்களின் பங்கு மிகவும் முக்கியமானவை. அதன் விளைவாக இன்றும் தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை.
இவ்வாறு வைகோ பேசினார்.
எரியுண்ட நிலையில் யாழ்.பல்கலைக்கழக மாணவி!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவி எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் இரண்டாம் தரத்தில் கல்விப்பயிலும் துளசிக்கா (வயது 22 ) என்ற மாணவியே இவ்வாறு எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். புகையிரத நிலைய வீதியில் எரியுண்ட நிலையிலிருந்த குறித்தமாணவியை மீட்டெடுத்த பிரதேசவாசிகள் அவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அவரின் நிலைமை மோசமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
25 ஜனவரி 2013
மட்டக்களப்பில் பாம்பு மழை!
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியின் சில பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை காலை பாம்பு மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். காத்தான்குடி 6ஆம் குறிச்சி அமானுல்லா வீதி, காத்தான்குடி ஜன்னத் மாவத்தை ஆகிய பகுதிகளிலேயே இப்பாம்பு மழை பெய்துள்ளது. காத்தான்குடி அமானுல்லா வீதியிலுள்ள வீட்டு வளாகமொன்றிலும் ஜன்னத் மாவத்தையிலுள்ள வீட்டு வளாகமொன்றிலுமே இப்பாம்பு மழை பெய்துள்ளது. தான் வளாகத்தில் நின்றுகொண்டிருந்தபோது மழையுடன் சேர்ந்து இரண்டு பாம்புகள் வந்து விழுந்ததாகவும் அதில் ஒரு பாம்பு தனது தோள் மீது விழுந்து ஓடியதாகவும் ஜன்னத் மாவத்தையில் வசிக்கும் பெண்ணொருவர் கூறினார்.
இப்பாம்புகள் எந்த இனத்தை சேர்ந்த பாம்புகளென்பது பற்றி தங்களுக்கு தெரியாதெனவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
சிறிய தந்தையால் கர்ப்பமான சிறுமி!
கிளிநொச்சி - வட்டக்கட்சி பிரதேசத்தில் 15 வயதுச் சிறுமி சிறிய தந்தையால் தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரித்த நிலையில் உள்ளதாக யாழ். பிராந்தியப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இச்சம்பவம் தொடர்பாக அவர் கூறியதாவது,
40 வயதுடைய சிறிய தந்தை 15 வயது நிரம்பிய சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்த நிலையில் சிறுமியின் வயிற்றில் கரு உருவாகியுள்ளது. இந்தக் கருவினைக் கலைப்பதற்காக வைத்தியரை நாடிய போது சிறிய தந்தை கையும் களவுமாக கிளிநொச்சி பொலிஸாரிடம் மாட்டியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள 40 வயதுடைய சிறிய தந்தை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
24 ஜனவரி 2013
பிரான்சில் தமிழர் குத்திகொலை!
பிரான்சில் வசித்த ஈழத் தமிழர் ஒருவர் பெண்ணொருவரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சியில் புலோலியைச் சேர்ந்த குடும்பஸ்தரான 49 வயதுடைய கணபதிப்பிள்ளை சிவராசா என்ற குடும்பஸ்தரே நேற்று முன்தினம் திங்கட்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். விடுதியொன்றில் பணியாற்றி வந்த இந்தக் குடும்பஸ்தர் கடந்த திங்கட்கிழமை தனது தொழில் நிலையத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கையிலேயே வழியில் காத்துநின்ற அல்ஜீரிய நாட்டுப் பெண் இவரைக் குத்திக் கொலை செய்துள்ளார்.
இவர் தொழில் செய்யும் விடுதியில் ஏற்பட்ட முரண்பாட்டினாலேயே இந்தப் பெண் மேற்படிக் குடும்பஸ்தரை குத்திக் கொலை செய்ததாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் தனது மனைவி மற்றும் 4 பிள்ளைகளுடன் பாரிஸ் நகரின் புறநகர் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் கொலை செய்யப்பட்டுள்ளமை குறித்து பிரான்ஸ் நாட்டுக் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவரின் படுகொலையைத் தொடர்ந்து தாயகத்திலுள்ள இவரின் உறவினர்கள் உயிரிழந்தவரின் சகோதரர் வீட்டில் துயர் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழர் பகுதிகளில் சிங்கள திணிப்புக்கு இரகசிய திட்டம்!
ஈழத்தை முற்றிலும் சிங்கள மயமாக்கும் முயற்சிகளை இலங்கை அரசு இரகசியமாக தொடங்கி விட்டது. முதல் கட்டமாக தமிழ்ப் பெயர்களில் உள்ள நகரங்களின் பெயர்களை சிங்களத்தில் மாற்றவுள்ளது. இதற்காக 89 நகரங்களின் பெயர்களைத் தேர்வு செய்துள்ளது சிங்கள அரசு.
ஈழப் போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஈழத்தை சிங்களவர்கள் கைப்பற்றி முழுமையாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.
அங்கு குவிக்கப்பட்ட இராணுவத்தினர் இன்னும் போகவில்லை. தமிழர்கள் அனாதைகளாக்கப்பட்டு விட்டனர். அடுத்தவர் கையை ஏந்திப் பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஒன்றுமில்லாமல் போய் விட்ட தமிழர்களை மேலும் கஷ்டப்படுத்தும் வகையில், தமிழ் நகரங்களின் பெயர்களையெல்லாம் சிங்களமயமாக்கும் முயற்சிகளை இலங்கை அரசு தொடங்கியுள்ளது.
முதல் கட்டமாக 89 நகரங்களின் பெயர்களை சிங்களத்தில் மாற்றவுள்ளனராம். இது தொடர்பில் கடந்த அக்டோபர் மாதம் இலங்கை அரசானது ஒரு இரகசிய சுற்றறிக்கையை தயாரித்துள்ளது.
இதன் அடிப்படையில் 89 தமிழ் நகரங்களுக்கு சிங்களப் பெயரைச் சூட்ட இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது.
வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டையை பட்டகொட்ட என்றும், பருத்தித்துறையை பேதுருதொடுவ என்றும், நயினாதீவை நாகதீப என்றும், கிளிநொச்சியை கரணிக என்றும், முல்லைத்தீவை மோலடோவா என்றும் மாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்கள் ஆணையைப் பெற்றவர்கள் மகிந்தவின் ஆட்சிக்கு சோரம் போயுள்ளனர்!
20 ஜனவரி 2013
எரிந்த நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம், ஆவரங்கால், சர்வோதய வீதியினைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் எரிந்த நிலையில் விசுவமடு பன்னிரண்டாம் கட்டைப் பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பவித்ரா வயது (21) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று (20) காலை குறித்த பிரதேசத்தில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று அயலவர்களினால் கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து உடனடியாக பிரதேச பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
18 ஜனவரி 2013
சிறீலங்கா பெண்ணை மணம் செய்ய 16லட்சம் ரூபா!
இலங்கை பெண்ணை காதலிக்கும் இந்திய இராணுவ மேஜரை, 16 லட்சம் இந்திய ரூபாய் பயிற்சி செலவை செலுத்தி விட்டு வெளியேறுமாறு, இராணுவம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய இராணுவத்தின் சிக்னல் பிரிவில் பணியாற்றிய, மேஜர் விகாஸ் குமார், இலங்கையை சேர்ந்த, எம்.பில்., மாணவி, அர்னிலா ரங்கமலி குணரத்னே என்ற பெண்ணை காதலித்து வருகிறார். அந்த பெண்ணை மணக்க அனுமதிக்குமாறு கேட்டபோது, இராணுவம் அனுமதி தரவில்லை.
இதனால், தன்னை பணியிலிருந்து விலக அனுமதிக்குமாறு, விகாஸ் குமார் கோரினார். எனினும், அவரின் கோரிக்கை கவனிக்கப்படவே இல்லை. கர்நாடக மேல் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். இராணுவத்திற்கும், விகாஸ் குமாருக்கும் இடையே நடந்த நீதிமன்ற மோதல், இரண்டு ஆண்டுகள் நீடித்தது.
இறுதியில், நீதிமன்ற உத்தரவின் படி, விகாஸ் குமாரின் பணி ஓய்வு, கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும், இராணுவ வீரர்களுக்கான பலன்கள் பெற வேண்டுமானால், இந்திய இராணுவ கல்வி நிறுவனத்தில், விகாஸ் குமாருக்கு அளிக்கப்பட்ட பயிற்சிக்கான தொகை, 16 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என, இராணுவம் நிபந்தனை விதித்தது.
இதை எதிர்த்து, விகாஸ் குமார், நீதிமன்றத்தை நாடினார். அதில், தான் ஏற்கனவே, ஐந்து ஆண்டுகள், இராணுவத்தில் பணி செய்துள்ளதால், பணப் பலன்கள் கிடைக்க தகுதி உடையவர் எனவும், தன்னிடம் பயிற்சி கட்டணத்தை வசூலிக்க கூடாது எனவும் தெரிவித்திருந்தார்.
எனினும், இராணுவம் தரப்பில், பயிற்சி கட்டணம், 16 லட்சம் ரூபாய் மற்றும் திருமண பத்திரமும் கொடுத்தால் தான், பணி ஓய்வு பலன்கள் கிடைக்கும் என, உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை காதலிக்காக, பணத்தை திரட்டும் பணியில், மேஜர் விகாஸ் குமார் ஈடுபட்டுள்ளதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
யாழ். நபரை ஏமாற்றி வாங்கிய வாகனத்தை போலி ஆவணங்களில் விற்க முயன்ற இருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவரை ஏமாற்றி பெற்ற வாகனம் ஒன்றை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ய முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்குரனை பகுதியில் கைது செய்யப்பட்ட நபர்கள் அக்கரைப்பற்று மற்றும் அலுத்கம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குற்றச்செயல்கள் தொடர்பில் குற்றத்தடுப்புப் பிரிவினரால் தேடப்பட்டு வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பில் அலவத்துகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
17 ஜனவரி 2013
நீண்ட போராட்டத்தின் பின் சட்டத்தரணிகள் கடமைக்குத் திரும்பினர்!
பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளது!
இலங்கை அரசின் முக்கிய பரப்புரை இணையங்களில் ஒன்றான, தேசிய பாதுகாப்புக்காக ஊடகத் தகவல் மையத்தின் இணையத்தளம், 'கேம்ஓவர்' என்று அறியப்பட்ட ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளாகி முற்றாகச் செயலிழந்துள்ளது. இந்த இணையத்துக்குள் ஊடுருவியவர், அதைச் சீர்குலைத்ததுடன், அதில் தனது செய்திகளை உள்ளிட்டதுடன், அதன் சேவை வழங்கி ஊடாக இன்னொரு தளத்தினுள் நுழையவும், ஏற்பாடு செய்திருந்தார்.
மேலும் இந்த இணையத்தளத்தின் பயனாளர்கள் பற்றிய நூற்றுக்கணக்கான புகுபதிவுத் தகவல்களும் அவரால் திருடப்பட்டுள்ளன. தற்போது, ஊடுருவல் பக்கம் நீக்கப்பட்டுள்ளதுடன், தளத்தில் மேம்பாட்டு பணிகள் இடம்பெற்று வருவதாகவும், 100 வீதம் முன்னைய நிலைக்குத் திரும்பும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இணையத்தளம் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் நேரடிக் கண்காணிப்பில் செயற்பட்டு வந்ததுடன், இதன் ஊடாக இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, லக்ஸ்மன் ஹுலுகல்ல போன்றோர் பரப்புரைகளை மேற்கொண்டு வந்தனர்.
முன்னதாக, பங்களாதேஸ் சேர்ந்த இணைய முடக்கிகளால், இலங்கை அரசின் வடமத்திய மாகாணசபையின் 22 துணை இணையத்தளங்கள் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
16 ஜனவரி 2013
சிறிலங்காவில் இன்னொரு போராளிக்குழு உருவாகும்-சந்திரிகா
சிறிலங்கா அரசாங்கம் தனது மூலோபாயத்தின் படியே தொடர்ந்து நடக்குமேயானால், இன்னும் சில ஆண்டுகளில் இன்னொரு போராளிக்குழு உருவாகும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எச்சரித்துள்ளார்.
அடிப்படைவாத போகோ ஹராம் குழுவின் தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நைஜீரியாவின் தலைநகர் லாகோசில் இருந்து வெளியாகும், AYO OKULAJA இதழுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவரது செவ்வியின் முக்கிய பகுதிகள் வருமாறு
“தமிழ்ப் புலிகளுக்கு எதிரான மகிந்த ராஜபக்சவின் தாக்குதல் இப்போது அனைத்துலக சமூகத்தில் மிகப் பெரிய விவகாரமாக உள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை அதை இன்னமும் விசாரித்துக் கொண்டிருக்கிறது.
நாம் போரை முடிவுக்கு கொண்டு வந்த போதிலும், வேறொரு போரில் ஒரு நீண்டகால கடிவாளமாக இருக்கக் கூடும் என்றே நான் இன்னமும் நம்புகிறேன்.
தமிழ்மக்கள் நீண்டகாலமாகவே பாரபட்சமாக நடத்தப்பட்டார்கள். அவர்கள் தமது உரிமைகளைக் கோரினார்கள்.
அவர்களின் உரிமைகளை வழங்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற எனது அரசாங்கம் முதன்முதலாக இணங்கியது.
முழு உரிமைகளையும் கொண்ட ஒரு சமஸ்டி ஆட்சியை நிறுவ இணங்கப்பட்டது.
ஆனால், ராஜபக்ச சிறுபான்மையினரின் உரிமைகளில் நம்பிக்கை கொண்டவரல்ல.
அவர் ஒருவரே எனது அமைச்சரவையில் பேச்சுக்களுக்கு எதிராக இருந்தார். அவரது தேவை அவர்களை கொல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது.
இப்போது ஒட்டுமொத்த உலகமுமே, இராணுவத் தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுக்கிறது.
புலம்பெயர் தமிழர்கள் மீளஇணைகிறார்கள். தாக்குதல்களைக் கண்டிக்கிறார்கள்.
சிறிலங்கா அரசாங்கம் தனது மூலோபாயத்தின் படியே தொடர்ந்து நடக்குமானால், இன்னும் சில ஆண்டுகளில் இன்னொரு போராளிக்குழு உருவாகும்.
இறுதித் தாக்குதலின் போது பொதுமக்களின் மனிதஉரிமைகள் அவர்களால் மீறப்பட்ட சம்பவங்கள் நிறையவே இடம்பெற்றன.
ஏனென்றால், புலிகள் தம்மைச் சுற்றி பொதுமக்களை வைத்திருந்தார்கள்.
பொதுமக்களை சுட்டுவிழுத்த சிறிலங்கா அரசாங்கம் ஜெட் போர் விமானங்களையும் பயன்படுத்தியது.
சிறிலங்கா அரசாங்கம் அதிகளவு மனிதாபிமான அணுகுமுறையில் செயற்பட்டிருந்தால், இந்தக் கொலைகளைத் தவிர்த்திருக்கலாம்.
பொதுமக்களைக் கொல்லவேண்டிய தேவை இருக்கவில்லை. இதனால் என்ன நடந்திருக்கிறது, எல்லோரும் கோபமுற்றிருக்கிறார்கள்.
தனியே தமிழ்ப்புலிகளை மட்டும் அழித்திருந்தால், யாரும் கவலைப்பட்டிருக்கமாட்டார்கள்.
ஏனென்றால் அவர்கள் கொடூரமானவர்களாக இருந்தனர்.
அல்கெய்தாவுக்கு முன்னர், உலகிலேயே மிகப்பெரிய எண்ணிக்கையில் தற்கொலைக் குண்டுதாரிகளை அவர்களே உருவாக்கினார்கள்.
மக்கள் வன்முறைகளை விரும்பமாட்டார்கள். வன்முறைகளுக்கு மிகஆழமான காரணங்கள் இருக்கின்றன.
எனவே முரண்பாடுகளுக்கான அந்தக் காரணங்களைக் கண்டறிய வேண்டும். அந்தக் காரணங்களை தீர்க்க வேண்டும்.
அடிப்படைக் காரணங்களை கண்டுபிடிக்கும் வரை நிறுத்தக் கூடாது.
போகோ ஹராம் ஏழைகளை ஆட்சேர்ப்புச் செய்கிறது. அவர்கள் பாரபட்சத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே முதலில் நீங்கள் தீர்க்க வேண்டிய பிரச்சினை வறுமை. அவர்களை உள்ளடக்கிய ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும்.
வம்ச அரசியல் முறையை நான் ஏற்கவில்லை. எனது பிள்ளைகளை நான் அரசியலுக்குக் கொண்டு வரவில்லை.
எனது தந்தையும், தாயும் அரசியலில் இருந்தனர். எனது தந்தை படுகொலை செய்யப்பட்ட பின்னர், அரசியலுக்கு வர எனது தாயார் மறுத்து விட்டார்.
ஆனால் கட்சி அவரை வருமாறு கேட்டது. இதனால் நாம் ஆட்சியில் இருக்க வேண்டியதாகி விட்டது.
பின்னர் எனது தாய் மிகவும் புகழ் பெற்றார். அவர் தனது பணியை சரியாகச் செய்தார் என்று நான் நினைக்கிறேன்.
அவருக்குப் பின்னர் கட்சிக்கு இன்னொரு தலைவர் தேவைப்பட்டார்.
எனக்கு அரசியல் தேவையில்லை என்று நான் கூறினேன். நான் மறுத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அதற்குள் நான் இழுத்து வரப்பட்டேன்.
அப்போதே என்னுடன் இந்த வம்சஆட்சி முடிவுறும் என்று கூறினேன். எனக்குப் பிள்ளைகள் இருக்கின்ற போதிலும், அவர்களை அரசியலுக்கு கொண்டு வர விரும்பவில்லை.
வம்ச அரசியல் நல்லதல்ல என்று நினைக்கிறேன்.
எல்லாவற்றையும் தமக்காக அபகரிக்க ஒரு குடும்பத்துக்கு அது இடமளிக்கிறது.
அந்த முறையில் ஊழல்கள் மோசமாக உள்ளது. சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மிகப் பெரிய ஊழல்களை செய்துள்ளார்.
அவரது குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 2000 பேர் அரசாங்கப் பதவிகளில் உள்ளனர். நான்கு சகோதரர்கள் அமைச்சரவையில் உள்ளனர்.
அவர்களின் பிள்ளைகள் நாடாளுமன்றத்தில் உள்ளனர். இந்தமுறையில் உள்ள நன்மைகளை விட தீமைகளே அதிகம்.
தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்குத் தெரியாது.
ஆனால் அது ஒரு அதிசயம். நான் எனது ஒரு கண்ணை இழந்தேன். எனக்கு இடது கண்ணில் பார்வை இல்லை.
எனது மூளையில் இப்போதும் ஒரு இரும்புத்துண்டு உள்ளது. அந்தத் தாக்குதலில் எனது சாரதி உள்ளிட்ட 26 பேர் கொல்லப்பட்டனர்.
கொலை செய்யப்பட்ட பின்னரே கிணற்றில் வீசப்பட்டுள்ளார்!
யாழில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்ட பின்னரே கிணற்றுக்குள் வீசப்பட்டுள்ளதாக பிரேரத பரிசோதனையின் போது தெரியவந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பெரிய கோயில் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறத்தில் உள்ள கிணற்றில் இருந்து கடந்த சனிக்கிழமை பெண் ஒருவர் சடலமாக யாழ்.சிறுகுற்றத்தடுப்பு பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தார்.
குறித்த சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் ஈச்சமோட்டையைச் சேர்ந்த புஸ்பம் ( வயது 78) என அவரது பிள்ளைகளினால் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
மரண விசாரணையினை அடுத்து இவர் கொலை செய்யப்பட்ட பின்னரே கிணற்றில் வீசப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதேவேளை குறித்த பெண் அணிந்திருந்த தங்க ஆபரணங்களும் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செயதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை சட்ட ஆட்சியின் எதிர்காலம் கவலைக்குள்!
15 ஜனவரி 2013
பிரதம நீதியரசரை பதவி நீக்கியமைக்கு கனடா விசனம்!
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் பதவி நீக்கம் பற்றி கனடா இன்று விசனம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட நடவடிக்கைக் குழு ஆகியவற்றில் எடுக்கவுள்ளதாவும் கனடா கூறியுள்ளது.
பெருமளவில் அரசியல் மயமாக்கப்பட்டதாகவும் வெளிப்படைத் தன்மை இல்லாததாகவும் நீதியான விசாரணைக்கான உத்தரவாதம் அளிக்கப்படாததாகவும் காணப்பட்ட குற்றப்பிரேரணை செயன்முறையால் பிரதம நீதியரசரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியிறக்கியதையிட்டு கனடா பெரிதும் விசனமுற்றிருப்பதாக கனேடிய பிரதமர் ஸ்ரீபன் ஹாப்பர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியலமைப்பையும் நீதித்துறையின் சுயாதீனத்தையும் மதிக்க வேண்டும் எனவும் உடனடியாக அரசாங்கம் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் நாம் அரசாங்கத்தை கேட்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசனங்களை நேரடியாக இலங்கையுடனும் ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாயம் ஆகிய அரங்கங்களில் தீர்மானங்கள் வழியாகவும் நாம் தொடர்ந்து கிளப்பி வருவோம் என கனேடிய பிரதமர் கூறியுள்ளார்.
பொதுநலவயத்தின் அமைச்சர் மட்ட நடவடிக்கை குழுவில் மிகவும் கவலை தரும் இந்த புதிய நிலைமை பற்றி நாம் பிரஸ்தாபிக்கவுள்ளோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
யாழ். குடாநாட்டில் திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு: - முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்
14 ஜனவரி 2013
"புதிய பிரதம நீதியரசர் நியமனத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியும்"
மது அருந்தி பொங்கலை வரவேற்றவரை எமன் அழைத்துச் சென்றார்!
13 ஜனவரி 2013
பொங்கலுக்கு முன்னர் மாணவர்கள் விடுவிக்கப்படும் சாத்தியம் இல்லை!

பதவியிலிருந்து சிராணி நீக்கம்!உத்தரவுக் கடிதம் கையளிப்பு
சிறிலங்காவின் தலைமை நீதியரசர் பதவியில் இருந்து சிராணி பண்டாரநாயக்க நீக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த 11ம் நாள் நிறைவேற்றப்பட்ட குற்றப்பிரேரணைக்கு அமைவாக, தலைமை நீதியரசரை உடனடியாகப் பதவியில் இருந்து நீக்கும் உத்தரவில் இன்று காலை சிறிலங்கா அதிபர் கையெழுத்திட்டார்.
அரசியலமைப்பின் 107 (2வது) பிரிவின் கீழ் சிறிலங்கா அதிபரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக் கடிதம் உடனடியாகவே சிராணி பண்டாரநாயக்கவின் இல்லத்தில், அதிபர் செயலக மூத்த உதவிச்செயலர் மற்றும் சிறிலங்கா அதிபரின் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரி ஆகியோரால் ஒப்படைக்கப்பட்டதாக சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் மொகான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பதவிநீக்கம் தொடர்பான சிறிலங்கா அதிபரின் உத்தரவு சிராணி பண்டாரநாயக்கவுக்கு, கிடைத்துள்ளதை உறுதி செய்துள்ள அவரது சட்டவாளர்கள், அடுத்த நடவடிக்கை பற்றி கருத்து வெளியிட மறுத்து விட்டனர்.
செஞ்சோலை சிறுவர் இல்லத்தை மீண்டும் கே.பி.திறக்கிறாராம்!
12 ஜனவரி 2013
சிறீதரனின் அலுவலகத்தில் சி 4 வெடிமருந்தாம்!சிங்களத்தின் பித்தலாட்டம்
யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் அலுவலகத்தில் இருந்து 4 சீ வெடிமருந்துகள், ஆபாச இறுவட்டுகள், ஆணுறைகள் மீட்கப்பட்டதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கியுள்ளனர்.
இன்று சிறீதரனின் பத்திரிகை அலுவலகத்தில் தொடர்ந்து இடம்பெற்ற தேடுதலின் போது எந்த ஊடகங்களும் அனுமதிக்கப்படவில்லை. எனினும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகையின் கிளிநொச்சி பெண் செய்தியாளரும் முள்ளிவாய்க்காலின் பின் ஞானஸ்தானம் பெற்று ஊடகவியல் தெரிந்த ஒரே பிரபல ஊடக ஜாம்பவான் தானே என தனக்கு பட்டம் சூட்டியவருமான ஒருவருமே தேடுதலின் போது படைப் புலனாய்வாளர்களால் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பிரபல பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே சிறீதரனின் அலுவலகத்தில் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் யுத்த வரலாற்றில் வடகிழக்கில் நடத்தப்பட்ட புலனாய்வாளர்களின் தேடுதலின் போது தமிழ்ப் பத்திரிகையாளர்களையும் அனுமதித்து அவர்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் என்றால் சிறீதரனின் அலுவலகத் தேடுதலாகவே இருக்க முடியும் என கொழும்பின் ஊடகவியலாளர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
இதே வேளை யாழ்ப்பாணத்திலேயே இருந்து தனது கடமைகளை ஆற்றும் இந்தப் பிரபல பத்திரிகையாளருக்கு இப்படி ஒரு தேடுதல் நடக்கப் போவதாக முன்னமே தகவல் தெரிந்திருக்க வேண்டும் எனக் கூறும் உள்ளகத் தகவல் ஒன்று அவர் ஏற்கனவே கிளிநொச்சிக்கு சென்று காத்திருந்ததாகவும் தெரிவிக்கிறது.
குற்றப் பிரேரணை வெற்றியை சகோதரர் மகிந்தவிற்கு தெரிவித்தார் சமல்!
கருப்பு நிறத்தில் பெய்தது மழை!
11 ஜனவரி 2013
குர்திஸ் மூத்த போராளிகள் மூவர் பிரான்சில் சுட்டுக்கொலை!
பாராளுமன்றின் பக்கமே செல்ல வேண்டாம்!
பாராளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதால் அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற சுற்றுவட்டம் மற்றும் பொல்துவ சுற்றுவட்டம் ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.
இதனால் கொழும்பில் இருந்து கடுவல, மாலபே செல்லும் வாகனங்கள் மாற்று வீதியாக புத்கமுவ வீதியை பயன்படுத்துமாறு தலவத்துகொட, ஹோமாகம, கொட்டாவ வீதியை பயன்படுத்துவோர் நாவல சந்தியின் பாகொட வீதி மற்றும் எத்துல்கோட்டே வீதியை பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளார்.
10 ஜனவரி 2013
உதயன் பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது தாக்குதல்!
நான்கு மாவட்டங்களுக்கு 24 மணிநேர அனர்த்த அபாய எச்சரிக்கை!
09 ஜனவரி 2013
விஸ்வரூபம் பட போஸ்டரில் தலைவரின் படம்!
அநுராதபுரம் மல்வத்து ஓயாவில் பள்ளிவாசல் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
08 ஜனவரி 2013
புலிகளுக்கு பிராணவாயு கொடுக்கிறது கனடா – ஜி.எல்.பீரிஸ்
நந்திக்கடலில் போரிடும் திறனை இழந்து போன விடுதலைப் புலிகளுக்கு, கனடா பிராண வாயு கொடுத்து உயிர்ப்பிக்க முனைவதாக, முறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.
சிறிலங்கா அரசு மீது கனேடிய அமைச்சர் ஜாசன் கென்னி நேற்று சுமத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்,
“நந்திக்கடல் கரையோரத்தில் 2009 மே மாதம் தமது போரிடும் திறனை இழந்து போன விடுதலைப் புலிகளுக்கு, அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி புதுவாழ்வு கொடுத்துள்ளது.
சிறிலங்காவுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், தனிஈழத் திட்டத்தின் மீது இன்னமும் நம்பிக்கை கொண்டுள்ளவர்களுக்கு பிராணவாயுவை வழங்கியுள்ளது.
உறுதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய நல்லிணக்க முயற்சிகளைச் சீர்குலைக்கும் வகையிலேயே வெளியகத் தலையீடுகள் அமைந்துள்ளன.
இராணுவ பலம் இல்லாவிட்டாலும் அனைத்துலக அமைப்புகளில் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களில் சிறிலங்கா அரசுக்கு அழுத்தங்களை கொடுக்க முடியும் என்று விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தனது இனத்திற்காக மீண்டும் குரல் கொடுத்தார் மாயா!
நேற்று முந்தினம் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்குச் சென்ற உலகப் புகழ் பாப் பாடகி மாதங்கி அருட்பிரகாசம்(மாயா) ஈழத் தமிழர் தொடர்பாக தனது கருத்தைப் மீண்டும் பதிவுசெய்துள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க விழா ஒன்றில் பாடல் பாட கோல் கோஸ்ட் என்னும் இடத்துக்குச் சென்ற மாயவை அங்குள்ள ஊடகங்கள் பேட்டிகண்டது. இந் நாடு மிகவும் பெரியது எனவே சிறுபாண்மை இனத்தவர்களை நாட்டுக்கு வெளியே வைத்திருப்பது நல்லதல்ல, அவர்களையும் இந்த நாட்டுக்குள் உள்வாங்கவேண்டும் என்று கூறியுள்ளார் மாயா. ஈழத் தமிழ் அகதிகள் பலர் அவுஸ்திரேலியா சென்றவேளை அவர்கள் அருகில் உள்ள பல தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் அவர்களை விடுவித்து அவுஸ்திரேலியாவுக்குள் கொண்டுவரவேண்டும் என்பதனையே இவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.
மாயா என்று அழைக்கப்படும் மாதங்கி அருட்பிரகாசம், ஒரு ஈழத் தமிழர் ஆவர். யாழில் வசித்துவந்த அவரது குடும்பம் பின்னர் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தது.இவரது பல பாடல்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
07 ஜனவரி 2013
தமிழர்களுக்கு தெரிவுக்குழுவில் நம்பிக்கையில்லை – குமரகுருபரன்!
அகதிகள் முகாமில் இலங்கை தமிழ் பெண்களுக்கு பாலியல் தொல்லை!
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இலங்கை தமிழர்கள் 42 பேர் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் 23 பேர் தங்களை திறந்த வெளிமுகாமிற்கு மாற்றக்கோரி உண்ணாவிரதம் இருந்து வந்தனர். உடல்நிலை பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள் அங்கும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் சித்திரசேனன், போலீஸ் எஸ்.பி. ரூபேஷ் குமார் மீனா, கியூ பிரிவு டி.எஸ்.பி. ராமசுப்பிரமணியம், செங்கல்பட்டு டி.எஸ்.பி. மூவேந்தன், தாசில்தார் இளங்கோவன் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பேரில் 14 பேர் தங்களது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்று சிறப்பு முகாமிற்கு திரும்பினர்.
9 பேர் வைத்தியசாலையில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அரசு வைத்தியசாலையில் அவர்களை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அகதிகள் முகாமில் உள்ள 2 லட்சம் பேர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறுகிறார்கள். ராமேஸ்வரம் முகாமில் எனக்கு தெரிந்த தங்கை ஒருவர் என்னை பாலியல் தொந்தரவிற்கு ஒரு அதகாரி அழைக்கிறார். அப்படி இல்லையென்றால் உனது அப்பா, அண்ணனை சிறப்பு முகாமில் அடைத்துவிடுவேன் என்று அச்சுறுத்துகிறார் என்று கூறி கதறி அழுதாள்.
இதுபோல வெளிநாட்டவர் தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
14 நாட்களாக பட்டினி போராட்டம் நடத்துபவர்கள் உடல்நிலை பலவீனம் ஆன பிறகு அரசு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 9 பேர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். 5 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள். சிறப்பு முகாம் நிரந்தரமாக தேவையில்லை.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி யாருக்கும் ஆதரவு அளிக்காது. 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம். அதற்குள் கட்சியை பலப்படுத்த வேண்டிய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். 2021 சட்டமன்ற தேர்தல் எங்கள் இலக்காக அமையும். இவ்வாறு சீமான் கூறினார்.
06 ஜனவரி 2013
பாரிய மக்கள் போராட்டமொன்று நடாத்தப்படும் – ஜே.வி.பி!
பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளதாக ஜே.வி.பி. அறிவித்துள்ளது. அரசியல் சாசனத்திற்கு எதிராக செயற்பட்டால் சபாநாயகர், அரசாங்கம் அல்லது எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக குரல் கொடுக்கும் உரிமை நாட்டின் பொது மக்களுக்கு காணப்படுவதாகக் ஜே.வி.வி. சுட்டிக்காட்டியுள்ளது.
உழைக்கும் வர்க்கத்தினர், புத்திஜீவிகள், தொழில்சார் நிபுணர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி போராட்டம் நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
சட்ட விளக்கம் அளிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றிற்கு காணப்படுவதாக அரசியல் சாசனத்தின் 125ம் சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் நீதிமன்றம் ஏற்கனவே சட்ட விளக்கத்தை அளித்துள்ளது.
இந்த சட்ட விளக்கத்தை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றின் சட்ட விளக்கத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என சபாநாயகர், அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாகவும், இது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்றி;ற்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் தரப்பினருக்கு தண்டனை விதிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
உயர் நீதிமன்றத் தீர்ப்பினை விமர்சனம் செய்த குற்றத்திற்காக தற்போதைய உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு நீதிமன்றம் தண்டனை விதித்திருந்ததாகவும், இதே நடைமுறை ஏனையவர்கள் விடயத்திலும் பின்பற்றப்பட வேண்டுமெனவும் கே.டி. லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.
குழந்தையை பற்றிப் பிடித்தபடி கிணற்றிலிருந்து தாயின் சடலம் மீட்பு!
கிளிநொச்சி,குஞ்சுப்பரந்தன் பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து தாய் மற்றும் பிள்ளை ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் 29 வயதான சுகுமார் நிசாந்தினி மற்றும் 4 வயதான சுகுமார் கிருத்திகன் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் நேற்று (05) மாலையிலிருந்து காணாமற்போயிருந்த நிலையில் இன்று காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கிணற்றில் மிதந்து கொண்டிருந்த தாயின் சடலம் பிள்ளையை பற்றிக் கொண்டிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு அருகில் உள்ள கிணறொன்றிலிருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இரண்டு சடலங்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த தாய் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும், கணவன் - மனைவிக்கிடையில் அண்மைக்காலமாக சச்சரவு இருந்து வந்துள்ளதாக பிரதேச மக்கள் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
03 ஜனவரி 2013
வன்னியில் சிங்களம் கற்பிக்க இராணுவம் நியமனம்!
கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் பாடசாலை மாணவர்களுக்கு இரண்டாம் மொழியான சிங்களம் கற்பிப்பதற்கு கல்வி வலயங்களுக்கு ஊடாக இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்களத்தைத் திணிக்கும் இந்த முயற்சி வடபகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வித்துறை அதிகாரிகளும் இந்தப் பிரச்சினையை எவ்வாறு கையாள்வது எனத் தெரியாமல் திண்டாடுவதாகத் தெரிகின்றது.
2013 ஆம் ஆண்டு 1 ஆம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டபோது துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகளுக்கும், கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட சாந்தபுரம் கிராமத்திலுள்ள பாடசாலைக்கும் படையினர் சீருடைகளுடன் கற்பித்தலுக்காகச் சென்றிருக்கின்றனர்.
மேலும் இந்தப் பாடசாலைகளில் சிங்கள மொழி கற்பிப்பதற்கு கல்வி வலயத்தின் ஊடாக தமக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், பாடசாலை அதிபர்களுக்கு படையினர் தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளர் மாலினி வெஸ்ரனுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, தமது வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இரண்டாம் மொழி சிங்களம் கற்பிப்பதற்கு படையினர் முன்னர் உத்தியோகப்பற்றற்ற அனுமதியினை கோரியிருந்தனர். தற்போது உத்தியோக பூர்வமாக தமக்கு அனுமதி வழங்குமாறு கோரியிருக்கின்றனர். இந்நிலையில் விடயம் தொடர்பில் எமது மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தவுள்ளோம். அவர்களே இவ்விடயம் குறித்து தீர்மானிப்பார்கள் என்று கூறினார்.
இதேவேளை விடயம் குறித்து தகவலறிவதற்காக கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டபோது, தான் கூட்டமொன்றுக்குச் சென்றுகொண்டிருப்பதாகக்கூறினார்.
எனினும் கிளிநொச்சி கல்வி வலயத்திற்குச் சென்ற இராணுவத்தினர் ஏனைய வலயங்களில் படையினர் சிங்களம் கற்பிப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதிக் கடிதத்தைக் காண்பித்து தமக்கு அனுமதி வழங்குமாறு கேட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக ஆசிரியர்கள் சிலர் தெரிவித்திருக்கின்றனர். எனினும் இது குறித்து அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மண்டைதீவில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி பேரணி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)