
இந்த நிலையிலே நேற்று நண்பகல் அளவில் கடத்தப்பட்ட இவர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் கைகள் கண்கள் கட்டப்பட நிலையிலே தான் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் வெள்ளை வான் ஒன்றில் ஏற்றப்பட்ட பின் அந்த வாகனம் சுமார் ஒரு மணித்தியாலம் வரை ஓடித் திரிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். கண்கள் கட்டப்பட்ட நிலையில் தான் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் சிகரெட்டால் சுடப்பட்டதாகவும் லண்டனுக்கு சென்றதற்கான காரணம் , செல்வதற்கு பணம் வழங்கியது யார், சென்று 3மாதங்களில் ஏன் திரும்பி வந்தது போன்ற குறித்த கேள்விகளையே திரும்பத் திரும்ப கேட்டு சித்திரவதை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இவர் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் இவர் கல்லுண்டாய் வீதியில் வாகனமொன்றிலிருந்து தள்ளி விழுத்தப்பட்டுள்ளார். ஆட்களற்ற பகுதியில் தள்ளிவிடப்பட்ட இவர் ஒருவாறு மீண்டெழுந்து இப்பகுதியில் சென்ற வாகனமொன்றில் பயணித்து யாழ் நகரப் பகுதியை சென்றடைந்துள்ளார். இவரிடமிருந்த கைத்தொலைபேசியை பறித்த நபர்கள் அதன் சிம்மைக் கூட பிடுங்கி எடுத்துள்ளனர். இதன் பின்னரே இவர் விடுவிக்கப்பட்டு குடும்பத்தவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அவர்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். எனினும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தினர் முறைப்பாட்டை ஏற்க மறுத்த போதும் சம்பவம் இடம்பெற்ற யாழ் நகர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.