
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
31 மார்ச் 2011
யாழ்,மக்களின் வாழ்வு அச்சத்துடனேயே கழிகின்றது!

தந்தை செல்வா ஜனன தினம்!

30 மார்ச் 2011
அமைச்சர்கள் இரசித்த அழகிகள் அணிவகுப்பு!

தனது கட்சி வேட்பாளருக்கே அடித்த விஜயகாந்த்.

29 மார்ச் 2011
விஜயகாந்தை தரக்குறைவாக பேசிய வடிவேலு மீது வழக்கு.

மன்மோகனைப்பார்த்து நியுசிலாந்தை அழைத்து ஏமாந்த மகிந்தர்.

28 மார்ச் 2011
மகிந்தவின் அழைப்பை நிராகரித்த நியூசிலாந்து.

27 மார்ச் 2011
காங்கிரசிற்கு எதிரான சீமானின் பிரச்சாரம்.
நடைபெற இருக்கு
ம் தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்துவதற்கு நாம் தமிழர் கட்சியின் போராளிகள் களம் அமைத்துள்ளனர். இன்று காலை நாம் தமிழரின் காங்கிரசு கட்சிக்கு எதிரான பரப்புரை புளியங்குடியில் நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுட்சி உரையாற்றினார். காங்கிரசு கட்சி தமிழினத்திற்கு செய்த கொடுமைகளையும் தலைவிரித்தாடும் காங்கிரசின்
ஊழல்களை பற்றியும் காங்கிரசு தலைவர்களின் மக்கள் விரோத எண்ணத்தையும் திரண்டிருந்த மக்கள் கூட்டம் உணர்ந்துகொள்ளும் விதமாக கருத்துக்களை அடுக்கினார். கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் உணர்வுடன் தமிழர்கள் திரண்டிருந்தனர். இக்கூட்டத்தில் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாண சுந்தரம், நெல்லை சிவக்குமார், தலைமை நிலைய பேச்சாளர்கள் ஜெயசீலன், திலீபன் உட்பட கட்சியினர் பலர் பங்குபெற்றனர். இக்கூட்டத்தை முடித்துக்கொண்டு பரப்புரை குழுவினர் கடையநல்லூர் பிரசார பொதுக்கூட்டத்திற்கு கிளம்பினர்.


இளம் வயதிலேயே காதலித்து திருமணம் செய்வது யாழில் அதிகரிப்பு.

26 மார்ச் 2011
அரசின் செயல்கள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்.

இதற்கான முன்னேற்பாடே உள்ளூராட்சி சபைகளை ள்ளடக்கிய நகரக் கூட்டுத்தாபனமாகும். இதற்கு ஆளுனராக நியமிக்கப்படுபவர் 100 வீதம் இராணுவ அதிகாரியாகவோ அல்லது சர்வாதிகாரியாகவோ அல்லது சர்வாதிகார கொள்கையுடையவராகவோ இருப்பார் எனவும் அவர் எதிர்வு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: தற்போதைய அரசாங்கத்தின் காய் நகத்தல்கள் தொடர்பாக ஜே.வி.பி. கடந்த காலங்களில் கூறிய எதிர்வு கூறல்கள் பொய்யாகவில்லை. சபைகளை உள்ளடக்கிய நகரக் கூட்டுத்தாபனம் தொடர்பாக ஜே.வி.பி ஏற்கனவே பொதுமக்களை தெளிவுபடுத்தியிருக்கிறது. ஜனநாயக ஆட்சி முறைமை ஒன்றிற்கான மூலக்கூறுகளை முடக்கும் செயலிலேயே அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.
அரசாங்கம் செல்லும் வழி மிக தெளிவாகவே உள்ளது. அதன் ஆபத்துக்கள் குறித்து மக்கள் விழிப்படையவில்லை. என்பதே தற்போதைய உண்மையான நிலையாகும்.
18வது தடவையாக அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களானது ஜனநாயக ஆட்சியில் முடிவை சுட்டிக் காட்டியுள்ளது. குறிப்பாக 17வது திருத்தம் அரசியலமைப்பில் அப்புறப்படுத்தப்பட்டமையானது ஜனநாயக செயற்பாடுகளுக்கு விழுந்த முதல் அடியாகும்.
எனவே தற்போது அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய உள்ளூராட்சி சபைகளை உள்ளடக்கிய நகரக் கூட்டுத்தாபன முறையானது தேர்தல்களின் ஊடாக வெளிப்படும் மக்கள் ஆணையை இல்லாதொழிக்கும் நிலமையாகும். இன்று கொழும்பு, தெஹிவளை, கோட்டே, கொலன்னாவ மற்றும் முல்லேரியா போன்ற உள்ளூராட்சி சபைகளுக்கு ஏற்பட்ட நிலமை நாட்டின் ஏனைய சபைகளுக்கும் ஏற்படும்.
அரசாங்கத்தின் இந்த திட்டத்தினை நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்த நகரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் அல்லது ஆளுனராக நியமிக்கப்படுபவர் இராணுவஅதிகாரியாகவே காணப்படுவார்.
என்பது உறுதியான விடயமாகும். இன்று வடக்கில் உள்ள சூழலே தெற்கிலும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்படப்போகின்றது.
மூதாளரின் மரணத்தில் மர்மம்!

சில்லாலை தெற்கு, பண்டத்தரிப்பைச் சேர்ந்த குடும்பஸ்தரான செபஸ்தியாம்பிள்ளை மரியநாயகம் (வயது 65) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
பிரஸ்தாப நபர் கடந்த 22 ஆம் திகதி முதல் காணாமற் போயிருந்தார் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
பல இடங்களிலும் தேடி அவரைக் காணவில்லை. இந்நிலையில், நான்கு நாள் கழிந்த நிலையில் அவரது சடலம் ஊதிப் பெருத்த நிலையில் மாதகல் பகுதியில் உள்ள வயல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சடலம் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்டது என்றும் வயிற்றுப் பகுதியில் நைலோன் கயிறு கட்டப்பட்டிருந்தது என்றும் கல் ஒன்று போடப்பட்ட பிளாஸ்ரிக் பை உடலில் இணைக்கப் பட்டிருந்தது என்றும் ஸ்ரீலங்கா பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பொறுப்பதிகாரி புஞ்சிஹேவா தலைமையிலான பொலிஸாரும் இளவாலைப் பொலிஸாரும் சம்பவ இடத்தில் விசாரணைகளை நடத்தினர்.
மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிவான் அ.தம்பிமுத்து சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.
சடலத்தில் அடிகாயங்கள் காணப்பட்டன என வைத்திய வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த மூதாளர் கொலைசெய்யப்பட்ட பின் கிணற்றில் வீசப்பட்டாரா? அல்லது கிணற்றில் வீசப்பட்டு மரணமானாரா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
25 மார்ச் 2011
வடமராட்சி கடற்பகுதியில் இந்திய கடற்படையினர்.

வழமைக்கு மாறாக நேற்றுக் காலை முதல் மாலை வரை வடமராட்சிக் கடற்பரப்பில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இந்தியக் கடற்படையினரின் அதிவேகப் படகுகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, நேற்றுமுன்தினம் மாலை 6 மணியளவில் கடலில் தொழிலுக்குச் சென்ற வல்வெட்டித் துறை ஆதிகோயிலடியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நேற்று அதிகாலை 2 மணியளவில் கடலில் வைத்து இந்திய மீனவர்களால் தாக்கப்பட்டதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் எமிலியாம்பிள்ளை தெரிவித்தார்.
கடந்த மூன்று நாள்களில் இந்திய மீனவர்களால் கடத்தப்பட்ட ஐந்தாவது மீனவர் இவர்.
வழக்குத்தாக்கல் செய்தவருக்கே விழுந்தது ஆப்பு!

சரத் என் சில்வா பதவியில் இருந்த போது, தமது பதவியை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும், தன்னிச்சையாக செயற்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்திருந்தார்.
தம்மை போலியான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து, 294 நாட்கள் சிறையில் வைத்திருந்ததாகவும், இதனால் தமக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு 10 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க வேண்டும் எனுவும் அவர் கோரியிருந்தார்.
எனினும் இந்த வழக்கு அடிப்படை அற்றது என கூறி, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கை நிராகரித்தது.
அத்துடன் குறித்த வழக்குக்கு செலவான பணத்தின் நான்கு மடங்கு தொகையை சரத் என் சில்வாவுக்கு வழங்க வேண்டும் எனவும், மனுதாரரான பாலசூரியவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
24 மார்ச் 2011
பான் கீ மூனும் போர்க்குற்றவாளி என்கிறார் விமல்.
லிபியா மீதான மேற்குலக நாடுகளின் தாக்குதல்களை கண்டித்து இன்று ஸ்ரீலங்காவின் கொழும்பு ஐ.நா. அலுவலகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்
டுள்ளது.தேசிய சுதந்திர முன்னணியின் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் இவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லிபியா மீதான தாக்குதல் குறித்து அமைச்சர் விமல் வீரவன்ச கருத்து தெரிவிக்கையில்,
லிபியாவில் நடைபெற்ற போராட்டங்கள் உள்நாட்டு விடயமாகும். உள்நாட்டின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள லிபியாவின் அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்குமே உரிமையுள்ளது. எந்த ஒரு நாட்டினதும் உள்நாட்டு விடயங்களில் தலையிட்டு இறையாண்மைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் உரிமை எந்தவொரு அரசி
ற்கோ அமைப்பிற்கோ கிடையாது.
ஆனால், ஐ.நா. பாதுகாப்பு சபையின் அனுமதியுடன் அமெரிக்க மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பலவந்தமாக தலையிட்டு லிபியா மீது விமானம் மூலமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. ஈராக்கிற்கு நடந்த நிலையே இன்று லிபியாவிற்கும் நடைபெறுகின்றது. லிபியாவின் எண்ணெய் வளத்தை குறிவைத்து மேற்குலக நாடுகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
தாக்குதல்கள் நடத்துவதற்கு அனுமதியளித்து பான் கீ மூனும் போர்க்குற்றவாளியாகியுள்ளார். ஏனைய நாடுகளில் போர் குற்றங்களைத் தேடும் ஐ.நா. உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இன்று லிபியாவில் பாரிய போர் குற்றங்களை வெளிப்படையாக செய்து வருகின்றன. படைகளைப் பயன்படுத்தி ஏனைய நாடுகளை ஆக்கிரமிக்க இது ஒன்றும் 19ஆம் நூற்றாண்டு அல்ல. எனவே,லிபியா மீதான தாக்குதலை இலங்கை வன்மையாக கண்டிக்கின்றது எனக் கூறினார்.

லிபியா மீதான தாக்குதல் குறித்து அமைச்சர் விமல் வீரவன்ச கருத்து தெரிவிக்கையில்,
லிபியாவில் நடைபெற்ற போராட்டங்கள் உள்நாட்டு விடயமாகும். உள்நாட்டின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள லிபியாவின் அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்குமே உரிமையுள்ளது. எந்த ஒரு நாட்டினதும் உள்நாட்டு விடயங்களில் தலையிட்டு இறையாண்மைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் உரிமை எந்தவொரு அரசி

ஆனால், ஐ.நா. பாதுகாப்பு சபையின் அனுமதியுடன் அமெரிக்க மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பலவந்தமாக தலையிட்டு லிபியா மீது விமானம் மூலமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. ஈராக்கிற்கு நடந்த நிலையே இன்று லிபியாவிற்கும் நடைபெறுகின்றது. லிபியாவின் எண்ணெய் வளத்தை குறிவைத்து மேற்குலக நாடுகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
தாக்குதல்கள் நடத்துவதற்கு அனுமதியளித்து பான் கீ மூனும் போர்க்குற்றவாளியாகியுள்ளார். ஏனைய நாடுகளில் போர் குற்றங்களைத் தேடும் ஐ.நா. உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இன்று லிபியாவில் பாரிய போர் குற்றங்களை வெளிப்படையாக செய்து வருகின்றன. படைகளைப் பயன்படுத்தி ஏனைய நாடுகளை ஆக்கிரமிக்க இது ஒன்றும் 19ஆம் நூற்றாண்டு அல்ல. எனவே,லிபியா மீதான தாக்குதலை இலங்கை வன்மையாக கண்டிக்கின்றது எனக் கூறினார்.
23 மார்ச் 2011
பரந்தனில் பேரூந்துக்குள் விபச்சாரம்!

தென்பகுதி தனியார் பேரூந்து ஒன்று பரந்தன் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அதற்குள் இரு ஜோடிகள் மிகவும் கேவலமான முறையில் காணப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
பொதுமக்கள் பார்க்கின்றார்கள் என்பதைக் கூட அறியாத நிலையில் பேரூந்தில் இருந்த அவர்கள் பற்றிய தகவல்களை பொது மக்கள் உடனடியாக பரந்தன் பொலிசாருக்கு தெரிவித்தனர். அப் பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆயராக்கினர். இவர்களில் பெண்கள் இருவரையும் மிகவும் கடுமையாக எச்சரித்து அனுப்பிய நீதிபதி ஆண்கள் இருவருக்கும் தலா ஒரு லட்சம் அபராதம் விதித்தாகவும் தெரியவருகின்றது. பேரூந்தில் தவறு செய்தவர்களில் ஒரு ஆண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் பெண்கள் இருவரும் பெரும்பான்மை இனத்தவர்கள் எனவும் தெரியவருகின்றது.
லண்டன் சென்று திரும்பிய இளைஞர் கடத்தப்பட்டு தாக்குதல்.

இந்த நிலையிலே நேற்று நண்பகல் அளவில் கடத்தப்பட்ட இவர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் கைகள் கண்கள் கட்டப்பட நிலையிலே தான் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் வெள்ளை வான் ஒன்றில் ஏற்றப்பட்ட பின் அந்த வாகனம் சுமார் ஒரு மணித்தியாலம் வரை ஓடித் திரிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். கண்கள் கட்டப்பட்ட நிலையில் தான் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் சிகரெட்டால் சுடப்பட்டதாகவும் லண்டனுக்கு சென்றதற்கான காரணம் , செல்வதற்கு பணம் வழங்கியது யார், சென்று 3மாதங்களில் ஏன் திரும்பி வந்தது போன்ற குறித்த கேள்விகளையே திரும்பத் திரும்ப கேட்டு சித்திரவதை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இவர் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் இவர் கல்லுண்டாய் வீதியில் வாகனமொன்றிலிருந்து தள்ளி விழுத்தப்பட்டுள்ளார். ஆட்களற்ற பகுதியில் தள்ளிவிடப்பட்ட இவர் ஒருவாறு மீண்டெழுந்து இப்பகுதியில் சென்ற வாகனமொன்றில் பயணித்து யாழ் நகரப் பகுதியை சென்றடைந்துள்ளார். இவரிடமிருந்த கைத்தொலைபேசியை பறித்த நபர்கள் அதன் சிம்மைக் கூட பிடுங்கி எடுத்துள்ளனர். இதன் பின்னரே இவர் விடுவிக்கப்பட்டு குடும்பத்தவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அவர்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். எனினும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தினர் முறைப்பாட்டை ஏற்க மறுத்த போதும் சம்பவம் இடம்பெற்ற யாழ் நகர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இரு தமிழர்களுக்கு அவுஸ்திரேலியா புகலிடம் வழங்கியது.

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால் ஆபத்து ஏற்படக் கூடும் என்ற அடிப்படையில் குறித்த நபர்களுக்கு புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.
விமானம் அல்லது படகு மூலமாக அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஒரே விதமான சட்டங்களே அமுல்படுத்தப்படும் என அந்நாட்டு உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கிறிஸ்மஸ் தீவுகளில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வன்முறைகள் ஆரோக்கியமானதல்ல என அந்நாட்டு எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
22 மார்ச் 2011
மீசாலையில் எரிந்த நிலையில் பெண்ணின் உடலம்!

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்ட சாவகச்சேரி நீதவான் எம்.கணேசராசா சடலத்தைப்பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். சாவகச்சேரிப் பொலிசார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
21 மார்ச் 2011
லிபியா மீதான தாக்குதலை ஜே.வி.பி கண்டிக்கிறது.

இது தொடர்பில் அது நேற்று (20) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
அமெரிக்காவின் முதலாளித்துவத்திற்கு எதிராக லிபியா போராடவேண்டும். இறுதி வெற்றிவரை லிபிய மக்கள் போராடவேண்டும். லிபியாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அவர்கள் போர் தொடுக்கவில்லை, மாறாக அங்குள்ள எண்ணை வழங்களை கையகப்படுத்தவே மேற்குலகம் முயன்றுவருகின்றது.
ஜனநாயகம் வேண்டி வட ஆபிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் பல மில்லியன் மக்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். அதற்கு நாம் எமது ஆதரவுகளை வழங்குவோம்.
துனீசியா மற்றும் எகிப்பதில் நடைபெற்ற போராட்டங்களில் மக்கள் அந்த அரசுகளை தூக்கியெறிந்தபோதும், தற்போது அந்த நாடுகளின் நிர்வாகத்தை மேற்குலகமே கைப்பற்றியுள்ளது.
ஈராக்கில் நடத்தியதை போலவே லிபியாவிலும், நேட்டோ நாடுகளின் போர்வையில் அமெரிக்கா தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் நாம் லிபிய மக்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவுகளை வழங்கத்தயாராக உள்ளோம். மேற்குலகம் தமது தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா படைகளுடன் கூட்டிணைந்து இன அழிப்பில் ஈடுபட்ட இந்தியப்படைகள்!

இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை இந்திய இராணுவ அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள் என்றும் தாக்குதலை நடத்திய சிறிலங்கா இராணுவத்தின் 57வது படைப்பிரின் முன்னணிப் பிரிவான CDO என்று அழைக்கப்படும் கொமாண்டோ டிவிஷன்( CDO Commando Regiment ) பிரிவினருடன் இந்திய இராணுவத்தின் கொமாண்டோ பிரிவு இணைந்து செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் மற்றும் 5ம் திகதிகளில் வன்னி புதுக்குடியிருப்பு மற்றும் புதுமாத்தளன் பிராந்தியத்தில் நடைபெற்ற பாரிய சண்டையில் பெரும் அளவிலான விடுதலைப் புலிகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். விடுதலைப் புலிகளின் மிக முக்கிய தளபதிகளான கேணல் தீபன், கேணல் விதூஷா, கேணல் துர்கா, லெப்.கேணல் நாகேஷ், உட்பட நூறுக்கும் அதிகமான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டார்கள். பெருமளவிலான ஆயுத தளபாடங்களும் சிறிலங்கா இராணுவத்தால் கைப்பற்றப்பட்டன. இரசாயன ஆயுதங்களைப் பாவித்து மேற்கொள்ளப்பட்டதாக விமர்சிக்கப்பட்ட இந்தத் தாக்குதலை சிறிலங்கா இராணுவத்தின் 57வது படைப்பிரிவின் முன்னணிப் பிரிவான CDO என்று அழைக்கப்படும் கொமாண்டோ டிவிஷன்(CDO Commando Regiment ) மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.
ஆனால் இந்தத் தாக்குதலில் சிறிலங்கா இராணுத்துடன் இணைந்து இந்திய இராணுவமும் நேரடியாகக் கலந்துகொண்டதற்கான ஆதாரம் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது என்று மேற்படி அவ்விணையம் தகவல் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். இப் புகைப்படங்கள் ஒரு சான்றாகவும் அமைந்துள்ளது.
20 மார்ச் 2011
ஸ்ரீலங்காவின் எதிர்க்கட்சியான ஐ.தே.கவின் தலைவர் யார்?

ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்தவரை, தாமே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என தெரிவித்து வருகிறார்.
இந்தநிலையில் இதுவரை காலமும், தாமே தலைவராக வேண்டும் எனக் கூறி வந்த சஜித் பிரேமதாஸ, தற்போது இந்த விடயத்

இணக்கம் ஒன்றின் மூலமே, கட்சியின் தலைமை பிரச்சினையை தீர்க்கமுடியும் என்று சஜித் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாளை கூடவுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில், இணக்கமான முறையில் தலைவர் ஒருவரை தெரிவுசெய்வதற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்படும்,
அதில் இணக்கம் ஏற்படாவிட்டால், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கட்சித் தரப்புகள் தெரிவித்துள்ளன.
19 மார்ச் 2011
மன்னிப்புச்சபையால் ஸ்ரீலங்காவிற்கு பாதிப்பு!

இது தொடர்பில் அனைத்துலக மன்னிப்புச்சபையின் அமெரிக்காவுக்கான பிரதிநிதி ஜேம்ஸ் மக்டோனால்ட் இற்கு எழுதிய கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிறீலங்கா அரசுக்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவுகள் தேவைப்படும் சமயத்தில் அதற்கு எதிரான பிரச்சாரங்களை அனைத்துலக மன்னிப்புச்சபை மேற்கொண்டு வருகின்றது.
அனைத்துலக மன்னிப்புச்சபையின் இந்த நடவடிக்கையால் சிறீலங்கா அரசுக்கு பல பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றது. சிறீலங்கா அரசு அமைத்துள்ள இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் குழுவின் முன் சாட்சியமளிப்பதற்கும் மன்னிப்புச்சபை மறுத்துவிட்டதாக அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
18 மார்ச் 2011
கடாபி மீது போர் தொடுக்க நேட்டோ தயாராகிறது!

இச் செய்தியை நாம் பிரசுரிக்கும் வேளை, லிபிய நாட்டு வெளியுறவு அமைச்சர், தாம் போராட்டம் நடத்தும் எந்த ஒரு மக்கள் மீது தாக்குதல் நடத்தமாடோம் என்றும், தாம் தமது இராணுவ நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் அமெரிக்கா கேணல் கடாபியை பதவி விலகுமாறு கோரியுள்ளது. அது நடைபெறாவிட்டால் தாக்குதல் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லிபிய நாட்டில் உள்ள விமான எதிர்ப்புக் கட்டமைப்புகளை முதலில் தாக்கியழித்து, பின்னர் நேட்டோ கூட்டுப்படைகளை லிபியாவில் தரையிறக்க அமெரிக்கா நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், விமானத் தாக்குதல்களை பிரித்தானியா முன்னெடுக்க உள்ளதாக அறியப்படுகிறது.
இருப்பினும் லிபிய அதிபர் கேணல் கடாபி, உடனடியாக செயல்பாட்டில் இறங்கவேண்டிய நிலை தோன்றியுள்ளது. இல்லையே சதாம் குசைன்போல சிறைப்பிடிக்கப்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.
புலிகள் இயக்க முக்கியஸ்தரென கருதப்படுபவருக்கு தொடர்ந்து விளக்கமறியல்.

கைது செய்யப்பட்டிருப்பவர்களில் ஆறு தமிழர்கள், நான்கு சிங்களவர்கள் மற்றும் மூன்று முஸ்லிம்கள் உள்ளடங்கியிருந்தனர். அவர்கள் கடந்த 2009ம் ஆண்டில் ஸ்ரீலங்கா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களுக்கெதிரான குற்றச்சாட்டுகள் தனித்தனியாக ஸ்ரீலங்கா நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக அவர்களை எதிர்வரும் மே மாதம் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
17 மார்ச் 2011
பேயிடமிருந்து பிசாசிடம் வந்தோம்,பிசாசு எம்மை பிராண்டி விட்டது!

அவர், ‘’ அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா எங்களை புறக்கணித்து தற்கொலைக்கு இணையான தீங்கை தனக்கு தானே இழைத்துக் கொண்டது.
நாங்கள் 23 சீட் கேட்டிருந்தும், எந்த வித ஆலோசனையும் நடத்தாமல் வெறும் 9 சீட் மட்டுமே வழங்க அ.தி.மு.க., முன்வந்தது, திட்டமிட்டே ம.தி.மு.க., புறக்கணிக்கப்பட்டுள்ளதையே உணர்த்துகிறது. பேயிடம் இருந்து பிசாசிடம் வந்தோம், பிசாசு எங்களை பிராண்டி விட்டது.
இதற்கான பலனை அது அனுபவிக்கும். ஜெயலலிதா விலை போய் விட்டார்.
ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் 3வது அணி அமைந்தால் மட்டும் தான் அதை ஏற்றுக்கொள்வோம், விஜயகாந்த் தலைமையை ஏற்றுக் கொள்ளமுடியாது.
வைகோவின் அதிரடி முடிவுகளால் தான் ம,தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டு வருவதாக பரவலாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது, எனவே தான் வைகோ இம்முறை அமைதி காத்து வருகிறார். இருப்பினும் ம.தி.மு.க.,வின் இறுதி முடிவு வருகிற சனிக்கிழமை (19ம் தேதி) கட்சி உயர்நிலைக்கூட்டத்துக்ப் பின்னர் அறிவிக்கப்படும்’’ என்று ஆவேசமாக கூறினார்.
மாணவியுடன் சேஷ்டை,மூன்று இளைஞர்கள் கைது!

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
குறித்த மாணவி தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் வகுப்புக்குச் சென்று இரவு 7 மணியளவில் தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த சமயம் மறைந்திருந்த மூன்று சந்தேக நபர்கள் மாணவியுடன் தகாதமுறையில் சேஷ்ட்டையில் ஈடுபட்டதுடன் அச்சுறுத்தியுமுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மாணவியின் தந்தையார் நெல்லியடிப் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டையடுத்து மூன்று சந்தேக நபர்களை நெல்லியடி பொலிஸார் கைது செய்து இன்றைய தினம் காலை பருத்தித்துறை நீதவான் திருமதி சிறிநிதி நந்தசேகரம் முன் நிலையில் சற்று முன்னர் ஆஜர்ப்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணி!

அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிடும் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், அதிக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அ.தி.மு.க., தன்வசமாக்கி கொண்டதாக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இதையடுத்து தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இன்று தனித்தனியே ஆலோசனை மேற்கொள்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து விவாதிப்பதாக தெரிகிறது.
அதிமுகவில் இருந்து வெளியேறும் கட்சிகளை தேமுதிக தலைமையில் ஒருங்கிணைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.ஏற்கனவே பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் காலதாமதம் செய்து வந்ததால் அதிமுக மீது இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கேட்ட தொகுதிகளை கொடுக்காமலும், பேச்சுவார்த்தைக்கு அழைக்காமலும் இருந்த அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் அறிவித்திருந்தார். மேலும் அதிமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகும் பட்சத்தில், மதிமுகவுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க தயார் என்றும், அதேபோல் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் அனைத்துக் கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க தயார் என்றும் கார்த்திக் கூறியிருந்தார்.
அதிமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளதால், தமிழகத்தில் மூன்றாவது அணி அமையுமா என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
16 மார்ச் 2011
விடுதிகளில் தங்கியிருந்த யாழ்,தமிழர்கள் கைது!

கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த 48 யாழ்ப்பாண தமிழர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்டவர்களை ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் பயணம் செய்வதற்காக குறித்த நபர்கள் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களில் தங்கியிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை எதிர்வரும் 27;ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் ரஷ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பல்வேறு தேவைகளுக்காக அவர்கள் கொழும்பு சென்றுள்ளதாகவும் சந்தேக நபர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டின் எந்தவொரு பிரஜையும் தாம் விரும்பும் இடத்திற்கு பயணம் செய்வதற்காக பூரண உரிமை காணப்படுவதாக சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அப்பாவி மக்களை புலனாய்வுப் பிரிவினர் எந்தவிதமான காரணமும் இன்றி கைது செய்துள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
பத்து வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் எவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியிருக்க முடியும் என சட்டத்தரணிகள் நீதிமன்றில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டவர்களில் நான்கு பேரை நீதவான் விடுதலை செய்ததுடன் ஏனையவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
15 மார்ச் 2011
பிரதமர் உருத்திரகுமாரன் ஜப்பானுக்கான மனுவை கையளித்தார்!

அமெரிக்க-நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான, ஜப்பானின் உயர்காரியாலத்துக்கு (மார்ச் 14 திங்கட்கிழமை) சென்ற பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள், ஜப்பானிய பிரதமர்க்கு கிடைக்கும் வகையில் மனுவை ஒன்றை கையளித்துள்ளார்.
ஜப்பானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானிய மக்களின் துன்ப, துயரங்களில் தமிழீழ மக்களும் பங்கெடுப்பதாகவும், இத்தகைய பெருந்துயரில் இருந்து ஜப்பானிய மக்கள் மீண்டு எழுந்து வருவார்கள் என தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அந்த மனுவில் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா ஊடகங்கள் நேர்மையுடன் செயற்படவேண்டும்!

ஹவாட் பல்கலைக்கழத்தில் இடம்பெற்ற கருத்தரங்கை விடுதலைப்புலிகள் தடுத்துள்ளனர் என்ற தலைப்பில் சிறீலங்கா அரச ஆதரவு ஊடகமான த நேசன் வாரஏடு கடந்த 6 அம் நாள் வெளியிட்ட தகவல் குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 11 ஆம் நாள் த நேசன் வாரஏட்டுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 1 ஆம் நாள் ஹவாட் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற “போரும், சமாதானமும், நல்லிணக்கமும்” என்ற தலைப்பிலான கருத்தரங்கின் தகவல்களை தவறான முறையில் த நேசன் வாரஏடு பிரசுரம் செய்துள்ளது.
வெளியிடப்பட்ட தகவல்களில் பல தவறானவை. ஊடகவியலாளர் எஸ் திஸ்ஸநாயகம் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்ட தகவல் பொய்யானது. அவர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார்.
பெருமளவான இருக்கைகளை விடுதலைப்புலிகளே நிரப்பியதாக தெரிவிக்கப்பட்ட தகவலும் பொய்யானது. அங்கு விடுதலைப்புலிகளை காணவில்லை. எமது கருத்தரங்கில் பேசப்பட்ட பல விடயங்களை த நேசன் வாஏடு இருட்டடிப்பு செய்துள்ளது என அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
14 மார்ச் 2011
மன்சூர் அலிகான் சுயேட்சையாக களமிறங்குகிறார்!

’’அரசியல் கட்சிகள் வாக்காளர்களை மறந்து விட்டன. எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது எவ்வளவு தொகுதிகள் ஒதுக்குவது என்பதில் தான் கவனம் செலுத்துகின்றன. தேர்தல் முடிந்ததும் உறவை தேனிலவு முடிந்தது என்று சொல்லி உறவை முறித்து விடுவர்.
இது போன்ற செயல்கள் எனக்கு ஆத்திர மூட்டியுள்ளது. எனவே எந்த கட்சியிலும் சேராமல் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளேன். எந்த தொகுதியில் நிற்பேன் என்பதை ஓரிரு தினங்களில் அறிவிப்பேன். ஏற்கனவே 1999 பாராளுமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு 88 ஆயிரத்து 546 வாக்குகள் வாங்கியுள்ளேன்.
அதன் பிறகு திருச்சி பாராளுமன்ற தேர்தலிலும் நின்றேன். முக்கிய ஆளும் கட்சி அங்கு தோற்பதற்கு நான் காரணமாக அமைந்தேன். இந்த முறை நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். நான் சட்டமன்றத்துக்கு சென்றால் ஆளும் கட்சியின் கால்களில் விழுந்தாவது தொகுதி மக்களின் குறைகளை தீர்க்க பாடுபடுவேன்.
புளி வியாபாரம், வத்தல் வியாபாரம் செய்பவர்களின் பணத்தையெல்லாம் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பிடுங்குகிறார்கள்.
உண்மையாகவே பணத்தை கடத்துபவர்கள் இவர்களிடம் மாட்டுவது இல்லை. தமிழர் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன. வெளி மாநிலத்தவர் தான் இங்கு ஆதிக்கம் செய்கின்றனர். தேர்தலுக்கு பிறகு தமிழர்களுக்கு உதவுவதற்காக தமிழ் பேரரசு என்ற அமைப்பை துவங்க இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ்தீவில் புகலிடக்கோரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்!

தங்களுடைய அகதி அந்தஸ்து குறித்து ஒரு தீர்மானமும் எடுக்கப்படாமல் நீண்டகாலமாக கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்கள் கடந்த சனி ஞாயிறு தினங்களில் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக அந்த அகதி முகாமைச் சுற்றிப் போடப்பட்டிருந்த வேலிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, கதவுப் பூட்டுக்களையும் சில தங்குமிடங்களையும் சிலர் சேதப்படுத்தி உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக இந்த ஆர்ப்பாட்டத்தை அமைதிப்படுத்த அதிகாலை 3.37 மணியளவில் தாம் கண்ணீர்ப்புகைப்பிரயோகம் செய்ய நேர்ந்ததாகப் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக்கலவரத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சனி ஞாயிறு தினங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரங்களில் அங்கிருந்து 150 பேர் தப்பிச் சென்றிருந்தர். எனினும் அவர்களில் பலர் தாமாகவே மீண்டும் திரும்பி வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அங்கு நடைபெற்ற கலவரங்கள் குறித்தும் பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர்ப்புகைப் பிரயோகம் குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குடிவரவு குடியகல்வு அமைச்சர் கிறிஸ் பிறவுண் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தமக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே குழப்பத்தில் இறங்கியுள்ளனர். அது புரிந்து கொள்ளக் கூடியது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். ஆனால் இவ்வாறான குழப்பங்களும் அங்கிருந்து தப்பிப் போதலும் அவர்கள் விரும்புகிற முடிவை அடைய அவர்களுக்கு ஒரு போதும் உதவப் போவதில்லை என்றும அவர் தெரிவித்திருக்கிறார்.
மாணவி மர்மமான முறையில் மரணம்!

இந்தச் சம்பவம் உடுவில் மானிப்பாய் வீதியில் உள்ள உடுவில் ப.நோ. கூ. சங்கத்துக்குச் சமீபமாகவுள்ள வீடொன்றில் நேற்றுமுன்தினம் மதியம் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:
கைதடி நுணாவில், சாவகச்சேரியைச் சேர்ந்த மனோகரன் கலைவாணி (வயது 17) என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு மர்மமான முறையில் மரணமாகி உள்ளார் எனக் கூறப்படுகிறது.கைதடி நுணாவில், சாவகச்சேரியைச் சேர்ந்த குறித்த மாணவி தான் கல்வி பயிலும் பாடசாலைக்கு சாவகச்சேரியில் இருந்து தினமும் சென்று வருவது சிரமம் என்பதால் தாயாருடன் உடுவிலில் தங்கியிருந்து கல்வி கற்று வந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாணவியின் தாயார் சாவகச்சேரியில் மரண வீடொன்றுக்கு சென்ற சமயமே குறித்த மாணவி மர்மமான முறையில் மரணமாகி உள்ளார்.பின்னர் இவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அங்கு வைக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
13 மார்ச் 2011
மகிந்தவின் விஜயத்தால் திருமலையில் பலத்த சோதனை கெடுபிடி!

உள்ளூராட்சி சபை தேர்தலில் திருமலை மாவட்டத்தில் போட்டியிடும் அரச தரப்பினரை உற்சாகப்படுத்தும் முகமாக மகிந்தா தேர்தல் கூட்டத்தில் உரையாற்றவுள்ளதாக அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மகிந்தா உரையாற்றவுள்ள மக்ஹெய்சர் விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் வீதிகளில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதுடன், கடுமையான சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
திருமலைக்கு செல்லும் எல்லா வாகனங்களும் நிறுத்தப்பட்டு சல்லடையிட்டு சோதனையிடப்படுவதாக திருமலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
12 மார்ச் 2011
ஸ்ரீலங்காவில் சுயநல ராஜபக்ஸ குடும்ப ஆட்சியே நடைபெறுகிறது!

மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்பின் தலைவரான பாக்கியசோதி சரவணமுத்து, ஜெனீவாவில் கடந்த 9ம் திகதி நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டின் அமர்வில் உரையாற்றும்போதே இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் பிரச்சினைகளுக்கான தீர்வு ஒன்றுக்கு தொடர்பில் மனித உரிமைகளை அறிக்கைப்படுத்தும் சர்வதேச பொறிமுறை ஒன்று இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களை மறந்து எதிர்காலம் நோக்கி செல்லலாம் என அரசாங்கம் கூறுகின்ற போதும், முறையான புனர்நிர்மாண, புனர்வாழ்வளிப்பு இன்றி, கடந்த காலங்களை மறக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், இலங்கையில் தற்போது பல அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் அவை தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களாக உள்ளதெனவும் அவர் கூறியுள்ளார். இந்த அபிவிருத்தி செயற்பாடுகள் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாமல், தன்னிச்சையாக திணிக்கப்பட்டு வருவதாகவும் பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிட்டுள்ளார்.
புதைக்கப்பட்ட இரட்டை சிசுக்கள் நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டன!

யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன், வவுனியா குற்றத்தடுப்புப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் உபாலி சாந்த ஆகியோரும் அங்கு பிரசன்ன மாகியிருந்தனர்.
பிரஸ்தாப சிசுக்களின் தாயார் கடந்த வியாழக்கிழமை சிசுக்களைப் பிரசவித்தவுடன் உயிருடன் போர்வையால் மூடிப் போர்த்தி வீட்டின் சமையல் அறையில் புதைத்தாகக் கூறப்படுகிறது. இந்த விடயம் அம்பலமாகியதை அடுத்து பொலிஸார் பிரஸ்தாப பெண்ணை விசாரணைக்கு உட்படுத்தினர்.
அந்தப் பகுதிக் கிராம சேவையாளர், சுகாதாரத் தொண்டர்கள் குறித்த பெண்ணை விசாரித்தபோது உண்மைநிலை தெரியவரவே, அவரது வீட்டில் சோதனை செய்தபோது சிசுக்களைப் புதைத்த விடயம் வெளிவந்தது.
இதையடுத்து நேற்று சம்பவ இடத்தில் நீதிவான் விசாரணை மேற்கொண்டு இரு சிசுக்களும் மீட்கப்பட்டன.
பிரஸ்தாப பெண் இரத்தப் போக்கால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்குமாறு உத்தரவிட்ட நீதிவான் அவரை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார். பிரஸ்தாப பெண் யாழ்.ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
11 மார்ச் 2011
முதலிரவுடன் மாயமான ஊர்காவற்றுறை மாப்பிள்ளை!

இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை அராலிப் பகுதியில்இடம் பெற்றது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இம்மாப்பிள்ளை ஊர்காவற்றுறையை சேர்ந்தவர் இவர் அராலியிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து தொழில் நிமித்தம் வெளிநாட்டிற்கு செல்வதற்கு முயற்சித்து வந்த வேளை அங்கிருந்த இளம் பெண்ணொருவருக்கு கடலை போட்டிருக்கின்றார்.
பின்னர் பெண்ணின் தாயை மெதுவாக மடக்கி தானும் அவரது மகளும் ஒருவரையொருவர் நேசிப்பதாகவும் குறித்த பெண்ணுக்கும் விருப்பம் என்று பொய் கூறியதுடன் அவரையே திருமணம் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்து திருமண ஏற்பாடுகளை செய்யும்படி கேட்டுள்ளார்.
இதனை அறிந்த பெண் தான் அவரை விரும்ப வில்லையென்று தாயிடம் தெரிவித்ததுடன், அப் பெண் உண்மையில் விரும்பியவருடன் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.
இதனால் ஏமாற்றமடைந்தவர் பெண்ணின் தாயிடம் திருமணம் என்று ஒன்று செய்தால் உங்களுடைய குடும்பத்தில்தான் திருமணம் என்று வீரவசனங்கள் பேசி அவர்கள் அனைவரை மயக்கியுள்ளார்.
வீரவசனத்தில் மயங்கியவர்கள் மானிப்பாயில் தந்தையிழந்த நிலையில் வசித்து வந்த தங்களுடைய உறவினரான பெண்ணொருவருக்கு அவரை திருமணம் செய்து வைக்க உரிய செயற்பாடுகளை மேற்கொண்டனர்.
இப்போது பதிவுத்திருமணமே செய்ய விரும்புவதாகவும் வெளிநாடு சென்று திரும்பிய பின்னர் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பதிவுத்திருமணம் நடைபெறவிருந்த நிலையில் அதற்கு முதல் நாளே அப்பெண்ணுடன் முதலிரவை முடித்துக்கொண்ட இவர் அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் பறந்து சென்று விட்டார்.
இந்நிலையில் செய்வதறியாத பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தவர்கள் கண் கலங்கிய நிலையில் மாப்பிள்ளையை தேடி வருகின்றனர்.
த.தே.கூ.உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல்!

வவுனியா சமயபுரம் பகுதியில் புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் முக்கியஸ்தரும், வர்த்தகப் பிரமுகருமாகிய எஸ்.செல்லத்துரை என்பவருக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது.
அரசியல் பிரமுகராகிய செல்லத்துரை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வெளியில் சென்றிருந்தபோது, அவரது வீட்டிற்கு வான் ஒன்றில் சென்ற பத்துப்பேரில் ஆறுபேர் அவரது வீட்டிற்குள் புகுந்து அவரைத் தேடியுள்ளனர்.
அவர் வீட்டில் இல்லாதிருந்ததையடுத்து, அவரது மனைவியிடம், அவரைக் கவனமாக இருக்குமாறும். தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும் எச்சரிக்கை செய்துள்ளனர்.
இவ்வாறு எச்சரிக்கை செய்வதற்கு வந்திருப்பவர்கள் யார் எனக் கேட்டு, அவரது மனைவி வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதையடுத்து, தாங்கள் அமைச்சரின் ஆட்கள், அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு அவரைக் கொலை செய்யுமாறுதான் உத்தரவு. நீ என்ன வாய் காட்டுகிறாய் எனக் கேட்டு அந்தப் பெண்ணின் கழுத்தைப் பிடித்து நெரித்துள்ளார்கள்.
இந்தச் சம்பவத்தையடுத்து. அயலில் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடிவரவே, வந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி தப்பிச் சென்றுள்ளார்கள்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது. தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் தெரிவித்ததையடுத்து, அவரது வீட்டுக்குப் பொலிசார் விசேட பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
லண்டனுக்கு புறப்பட்ட சுழிபுரம் இளைஞரை காணவில்லை!

லண்டனில் வசித்து வருகின்ற இவர் கடந்த 1ம் திகதி பண்டாரநாயக்கா விமான நிலையம் ஊடாக கொழும்பை சென்றடைந்திருந்தார். 3ம் திகதி யாழ்ப்பாணம் தொல்புரத்திலுள்ள தனது குடும்பத்துடன் இணைந்திருந்தார். பின்னர் நேற்று முன் தினம் இவர் கொழும்பிற்கென புறப்பட்டுச் சென்றதாகவும் எனினும் நேற்று மாலை வரை அவர் கொழும்பை சென்றடையவில்லை எனவும் இவருடனான தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவரது கைத்தொலைபேசி செயலிழந்து காணப்படுவதாகவும் கைத் தொலைபேசிக்கு அழைப்புகள் விடுக்கப்பட்ட போதும் பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இன்றிரவு குடும்பத்தினர் வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளனர். லண்டனில் சென்று ஒருவாரம் தங்கியிருந்த நிலையில் மீண்டும் 15ம் திகதி லண்டன் திரும்புவதற்காக இவர் விமானப் பயணச் சீட்டும் பெற்றிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடவத்தையில் துப்பாக்கி சூடு!பொலிஸ் காயம்.

இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் போது பொலிஸ் வாகனத்தில் மூவர் இருந்ததாகவும், அதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
10 மார்ச் 2011
பூமிக்கு அருகில் நிலா வருகிறது!

பூமியில் இருந்து நிலவு சுற்றிவரும் சுழற்சிப் பாதையில் அதன் சராசரி தூரம் 2,38,857 மைல்களாகும், அதாவது 3,84,403 கி.மீ. அது ஒரு நீள் வட்டப் பாதையில் பூமியை சுற்றி வருவதால் பூமிக்கு குறைந்த தூரத்திலும், பூமியில் இருந்து மிக அதிக தூரத்திற்கும் சென்று சுற்றி வருகிறது. அதன் சுழற்சிப் பாதையில் பூமியில் இருந்து வெகு தூரத்திற்கும் செல்லும்போது (அபோஜி) பூமியில் இருந்து 4,06,395 கி.மீ. தூரம் வரை செல்கிறது.
அது தனது சுழற்சிப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது (பெரிஜி) அதன் தூரம் 3,57,643 கி.மீ. ஆக சுருங்குகிறது. இப்படிப்பட்ட நிலைதான் வரும் 19ஆம் தேதி, சனிக்கிழமை ஏற்படுகிறது. அன்றைக்கு நிலவு பூமிக்கு மிக அருகில் வருகிறது. அன்று பூமியில் இருந்த அதனை நாம் காணும் தூரம் 2,21,567 மைல்களாக, அதாவது 3,54,507.2 கி.மீ. தூரத்திற்கு வருகிறது. இதனால் நிலவு மிகப் பெரியதாக தெரியும்.
இப்படிப்பட்ட குறைந்த தூரத்திற்கு நிலவு வருவது ஒவ்வொரு ஆண்டும் நிகழவில்லை என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்பு 1955, 1974, 1992, 2005 ஆகிய ஆண்டுகளில் நெருக்கமாக நிலவு வந்தது. அதன் பிறகு ஆறே ஆண்டுகளில் பூமிக்கு நெருக்கமாக வருகிறது.
அன்று வானத்தில் மேக மூட்டம் ஏதுமில்லாமல் இருந்தால் நீங்கள் அழகிய நிலவை மிக அருகில் நின்று பார்ப்பது போன்ற உணர்வுடன் பார்க்கலாம்.
மேட்டர் இத்துடன் முடிந்துவிடவில்லை! நிலவு இப்படி பூமியை நெருங்கி வருவதால் கடல் பொங்கும் (எல்லா பெளர்ணமி, அமாவாசை தினங்களிலும்தான் பொங்குகிறது), நில நடுக்கம் ஏற்படும், எரிமலைகள் வெடித்துச் சீரும் என்றெல்லாம் எக்கச்சக்க புரளிகளும் பரவி வருகின்றன. ஆனால் இதையெல்லாம் அறிவியலாளர்கள் மறுத்துள்ளனர். அன்றைக்கு கடலில் எழும் அலைகள் அதிகமாக இருக்கும் என்று மட்டும் கூறியுள்ளனர்.
தேர்தல் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலைப்படுகிறது!

அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் தேர்தல் வன்முறைகள் உக்கிரமடைந்துள்ளன. அங்கு இருவர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளனர். நியாயமானதும், சுயாதீனமானதுமான தேர்தல் நடைபெறுவதற்கு அமைதியான சூழ்நிலை அவசியம்.
எனவே தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும், வேட்பாளர்களும் அமைதியான முறையில் செயற்ப்பட வேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
09 மார்ச் 2011
தமிழ் மக்களை அடிமைப்படுத்தவே தேசிய பாதுகாப்பு சட்டம்!

தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாது இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கானவர்களை விடுதலை செய்யுமாறு சர்வதேச மனித உரிமை அமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருசிலர் இரகிசியமான இடங்களில் வைத்து தாக்கித் துன்புறுத்தப்பட்டோ அல்லது அவர் உயிரிழந்தோ இருக்கலாம என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளார்.
மேலும், அண்மையில் கிடைக்கப்பெற்ற உத்தியோபூர்வ அறிக்கைகளின்படி 1900க்கு மேற்பட்டவர்கள் எதுவித நீதிமன்ற விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் தீவிரவாத தடுப்புச் சட்டம் என்பன ஜனநாயகத்துக்கு எதிராக குரல் எழுப்புபவர்களுக்கு தொந்தரவு கொடுக்கவும் பயமுறுத்தவும் மற்றும் தண்டனை வழங்கவும் பயன்படுத்தப்படுவதாக ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் ஷரிபி தெரிவித்துள்ளார்.
மேலும், பிரபல்யமான ஒருசில ஊடகவியலாளர்களும்கூட தீவிரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தீவிரவாதிகளாக சந்தேகப்படுபவர்களின் உடமைகளை சீல் வைக்கவும், பரிசோதனை செய்யவும், அவர்களை தடுத்துவைக்கவும் பொலிஸார் மற்றும் இராணுவ பொலிஸாருக்கு ஆணையின்றி செயற்படும் அதிகாரம் இலங்கைச் சட்டத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எழில் என அறியப்படும் நபரொருவர் 10 வருடங்கள் விசாரணை ஏதுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலண்டனை தளமாக கொண்டு இயங்கும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் அறிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் தீவிரவாத தடுப்புச் சட்டம் என்பன ஜனநாயகத்துக்கு எதிராக குரல் எழுப்புபவர்களுக்கு தொந்தரவு கொடுக்கவும் பயமுறுத்தவும் மற்றும் தண்டனை வழங்கவும் பயன்படுத்தப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் ஷரிபி தெரிவித்துள்ளார்.
தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாது இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கானவர்களை விடுதலை செய்யுமாறு சர்வதேச மனித உரிமை அமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருசிலர் இரகிசியமான இடங்களில் வைத்து தாக்கித் துன்புறுத்தப்பட்டோ அல்லது அவர் உயிரிழந்தோ இருக்கலாம என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளார்.
மேலும், அண்மையில் கிடைக்கப்பெற்ற உத்தியோபூர்வ அறிக்கைகளின்படி 1900க்கு மேற்பட்டவர்கள் எதுவித நீதிமன்ற விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் தீவிரவாத தடுப்புச் சட்டம் என்பன ஜனநாயகத்துக்கு எதிராக குரல் எழுப்புபவர்களுக்கு தொந்தரவு கொடுக்கவும் பயமுறுத்தவும் மற்றும் தண்டனை வழங்கவும் பயன்படுத்தப்படுவதாக ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் ஷரிபி தெரிவித்துள்ளார்.
மேலும், பிரபல்யமான ஒருசில ஊடகவியலாளர்களும்கூட தீவிரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தீவிரவாதிகளாக சந்தேகப்படுபவர்களின் உடமைகளை சீல் வைக்கவும், பரிசோதனை செய்யவும், அவர்களை தடுத்துவைக்கவும் பொலிஸார் மற்றும் இராணுவ பொலிஸாருக்கு ஆணையின்றி செயற்படும் அதிகாரம் இலங்கைச் சட்டத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எழில் என அறியப்படும் நபரொருவர் 10 வருடங்கள் விசாரணை ஏதுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலண்டனை தளமாக கொண்டு இயங்கும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் அறிக்கை தெரிவித்துள்ளார்.
08 மார்ச் 2011
மகிந்த பயணித்த உலங்கு வானூர்தியில் கோளாறு!

இன்று மாலை மஹிந்த ராஜபக்ஷ மன்னாரில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிவிட்டு கொழும்பு திரும்பிக் கொண்டிருந்த ஹெலிகொப்டரில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் இன்று மாலை மூன்றரை மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதனையடுத்து ஹெலிகொப்டர் அவசர அவசரமாக பாராளுமன்றத் திடலில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.
அதன் பின் தனது உத்தியோகபூர்வ வாகனங்களை வரவழைத்த மகிந்த அங்கிருந்து காரிலேயே அலரிமாளிகைக்குச் சென்றுள்ளார்.
கோளாறுக்குள்ளான ஹெலிகொப்டர் இன்னும் பாராளுமன்றத் திடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதுடன், மின்மாற்றிகளை உபயோகித்து அதன் கோளாறைச் சரி செய்யும் நடவடிக்கைகள் தற்போதைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
துப்பாக்கிச்சூடு பட்டு இளைஞர் காயம்!

கடைக்குச் செல்வதாக தமது மகன் கூறிச் சென்றதாகவும் சிறிது நேரத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளாகி உள்ளதாக பொதுமக்கள் தமக்கு கூறியதனை அடுத்து அங்கு சென்ற போது அருள்தாஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகி காயம் அடைந்த நிலையில் வீதியில் விழுந்து கிடந்ததாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்த இளைஞரும் படைச் சிப்பாயும் துப்பாக்கியைப் பிடித்தவாறு இழுபறியில் இருந்ததாக அதனைப் பாரத்த சிலர் கூறியுள்ளதாக தெரியவருகிறது. எனினும் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பதனை உடனடியாக அறிய முடியவில்லை.
கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை எழுதியபின் பரீட்சை முடிவுகளுக்காக பார்த்திருந்த 17 வயதுடைய மாணவரே அருள்தாஸ் எனத் தெரிவிக்கப்படுகிறது.
07 மார்ச் 2011
சிறிதரன் மீதான தாக்குதலுக்கு கண்டனம்!

இது தொடர்பில் அது வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளுவதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது நொச்சியாகம் பகுதியில் உள்ள உதிதாகம பகுதியில் வைத்து அவரது வாகனத்தின் மீது ஆயுததாரிகளால் கைக்குண்டுத் தாக்குதலும் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறீதரன் அவர்கள் தமிழர்களது தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை என்ற கொள்கைகளில் உறுதியாக நின்று செயற்பட்டு வருகின்றார். இதனால் மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகிவருவது பெளத்த சிங்கள பேரினவாத அரசுக்கு எரிச்சலை உண்டு பண்ணியுள்ளது.
அதனால் அரசியலில் இருந்து அவரை ஓரங்கட்டும் நோக்கில் சில செயற்பாடுகள் அண்மையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.கொள்கையில் உறுதியாக இருக்கும் சிறீதரன் அவர்களை இல்லாமல் செய்யும் நோக்கில் அல்லது மிரட்டிப் பணிய வைக்கும் நோக்கிலுமே இக் கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.
அரசுக்குத் தெரியாமல் இவ்வாறான ஓர் தாக்குதல் ஒருபோதும் இடம்பெற்றிருக்க முடியாது. இப்படுகொலை முயற்சிக்கு இலங்கை அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள படுகொலை முயற்சியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
தொடரும் கொலைகளும் இவ்வாறான படுகொலை முயற்சிகளும் தடுத்து நிறுத்தப்படல் வேண்டுமாயின் இதுவரை காலமும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப் படுகொலை தொடர்பாக ஓர் சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகள் சர்வதேச சட்டப்படி தண்டிக்கப்படல் வேண்டும். இல்லையேல் இவ்வாறான கொலை முயற்சிகள் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் எதிராக இடம்பெறுவதனை தடுக்க முடியாது.
-தமிழ் தேசிய மக்கள் முன்னணி-
வழிபாடுகளுக்கும் தடை விதிக்கும் ஸ்ரீலங்கா படைகள்!

சிறீலங்கா அரசின் தடுப்பு முகாம்களில் இருந்த பெருமளவான மக்கள் விடுவிக்கப்பட்டபோதும், தற்போதும் அங்கு 27,000 தமிழ் மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு தங்கியுள்ள மக்கள் தாம் வழிபடுவதற்கு வெளியில் செல்லவேண்டும் என விடுக்கும் கோரிக்கைகளை சிறீலங்கா பாதுகாப்பு படையினர் புறக்கணித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மெனிக் பாஃம் முகாமில் முன்னர் தங்கியிருந்த கத்தோலிக்க மதகுருமார் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள கத்தோலிக்க மக்கள் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தேவாலயங்களுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சிறீலங்கா அரசின் தடுப்பு முகாம்களில் மிகப்பெரும் உளவியல் அழுத்தங்களுடன் தங்கியுள்ள தமிழ் மக்களுக்கு மத வழிபாடுகள் தான் சிறு ஆறுதலை தரும் விடயமாக இருந்துவருகின்றது. ஆனால் சிறீலங்கா படையினர் தற்போது அதனையும் தடுத்து வருவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)