
ஊர்காவற்றுறை மூன்றாம் கட்டைப்பகுதியில் உள்ள பற்றைக்குள்ளிருந்து
துணிகளினால் சுற்றப்பட்ட நிலையில் குறைமாத சிசுவொன்றின் சடலம் ஊர்காவற்றுறை பொலிசாரால் இன்று ஞாயிறு மீட்கப்பட்டுள்ளது.அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்ட சிசுவின் சடலமானது மிகவும் சிதைவடைந்து
காணப்படுவதாகவும்,இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக ஊர்காவற்றுறை பொலிசார்
தெரிவித்துள்ளனர்.மீட்கப்பட்ட சிசுவின் சடலம் மருத்துவ பரிசோதனைக்காக ஊர்காவற்றுறை அரசினர் மருத்துவ மனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சடலத்தை பற்றைக்குள் வீசியது தொடர்பாக விசாரணைகள் மேற்
கொள்ளப்படுவதாகவும் ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.