கொழும்பில் இன்று நடைபெறும் ஆளும் கட்சியின் மேதினப்பேரணி, ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வதற்காக யாழிலிருந்து ஈ.பி.டி.பி பொதுமக்களை அழைத்துச் செல்கிறது. ஈ.பி.டி.பியினரின் ஏற்பாட்டிலேயே இவர்கள் பஸ்கள் மூலம் ஏற்றிச் செல்லப்பட்டனர்.
குடாநாட்டின் பல்வேறு கிராமப் பகுதிகளிலும் ஈ.பி.டி.பியினர் நேரடியாகச் சென்று வாக்குறுதிகளை அளித்தும் ஒலிபெருக்கி மூலம் “சலுகை” அறிவிப்பை விடுத்தும் அவர்களை கவர்ந்து செல்கின்றனர் என்று கிராம வாசிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கிடைத்த வேலை பறிபோய் விடும், பதவி உயர்வு கிடைக்கும், பதவி நிரந்தரமாகும் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி கொழும்பு செல்லும் அவர்கள், அங்கு ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிராக கோஷம் எழுப்பவும் தயாராகவே இருக்கிறார்கள் என்று அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சிற்றூழியர்களை “உங்களுக்கு நிரந்தர நியமனம் வேண்டுமானால் வரவேண்டும்” என்று கூறியே மேற்படி ஊழியர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். யாழ். வைத்தியசாலையில் இருந்து நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் மேற்படி ஊழியர்கள் பஸ்ஸில் ஏற்றப்பட்டனர். இதனால் வைத்தியசாலையின் முக்கிய பணிகள் முடங்கியுள்ளன என்றும் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் அதிருப்தி தெரிவித்தன.ஈ.பி.டி.பி.போன்ற தமிழினத் துரோகிகளுக்கு கட்டுப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் தமிழ் மக்கள் உள்ளமை தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.