டாவூர், கம்போடியா, ருவாண்டா, பொஸ்னியா போன்று இலங்கையிலும் போர்குற்றங்கள் இடம்பெற்றுள்ளது என்று, அவுஸ்திரேலியாவின் முன்நாள் வெளியுறவு அமைச்சர் கரத் இவான்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள சென்ரர் பாக்(மைதானம்) அளவுதான் முழு முள்ளிவாய்க்காலுமே இருக்கும். ஒருபக்கம் கடல், மறுபக்கம் இலங்கை இராணுவம். இரண்டுக்கும் நடுவே 3லட்சம் தமிழ் மக்கள் மாட்டிக்கொண்டார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். மிகவும் குறைந்த அளவாகச் சொல்லப்போனால் 10,000 முதல் 40,000 ஆயிரம் பொதுமக்கள் அங்கே 2009ம் ஆண்டு கொல்லப்பட்டார்கள். ஆனால் உலகம் அதனை வேடிக்கை பார்த்தது. இன்று சிரியாவில் 1 வர் இறந்தால் கூடப் பெரிதுபடுத்திக் காட்டும் ஊடகங்கள் அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படும்போது மெளனமாக இருந்தது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வரும் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனிதவுரிமை மாநாட்டில், இலங்கை தொடர்பான மேலதிக விவாதங்கள் நடைபெறவுள்ளது. இதனூடாக இலங்கை அரசுக்கு எதிராக மேலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக இவான்ஸ் மேலும் தெரிவித்தார். இதனூடாக இலங்கையில் போர்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இனி தப்பிக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.