பூந்தமல்லி கரையான்சாவடியில் இலங்கை அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு பரமேஸ்வரன் (32), தர்ஷன் (30) உட்பட 8 பேர் உள்ளனர்.
ஏற்கனவே செந்தூரன் (32) என்பவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்ததாலும், தற்கொலைக்கு முயன்றதாலும், கடந்த 15 தினங்களுக்கு முன் சிவகங்கை திறந்தவெளி முகாமுக்கு மாற்றப்பட்டார்.
பரமேஸ்வரன், தன்னையும் திறந்தவெளி முகாமுக்கு மாற்ற கோரி கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தர்ஷனும் திறந்தவெளி முகாமுக்கு மாற்ற கோரி நேற்று முதல் உண்ணாவிரதம் தொடங்கினார்.
சிறப்பு முகாமில் மீண்டும் இரு அகதிகள் உண்ணாவிரதம் தொடங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.