இலங்கை நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை கவனம் செலுத்தவில்லை என சூடான் தெரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அகில கால மீளாய்வு அமர்வுகளில் கலந்து கொண்ட போது சூடானிய பிரதிநிதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற ஆயுத வன்முறைகள் அனுதாபத்திற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
சூடானில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடாபில் ஜனாதிபதி ஒமர் அல் பஷாரிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சுமத்தியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இலங்கை நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை கவனம் செலுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.