
சிவகுல வீதி மானிப்பாயைச் சேர்ந்த 27 வயதுடைய எஸ் கோபிநாத் என்னும் இளம் குடும்பஸ்தரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். ஒரு பிள்ளையின் தந்தை இவர் எனக் கூறப்படுகின்றது.
தனது ஓட்டோ வாகனம் சகிதம் நேற்றிரவு இவர் தொழில் நிமித்தம் வெளியே சென்றதாகவும் பின்னர் இவர் வீடு திரும்பியிருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது. இதனையடுத்தே அவரது குடும்பத்தினர் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் அவ்வப்பகுதி காவல் நிலையங்கள் என்பவற்றுக்கு தகவல்களை வழங்கியிருக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.