
2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை தலைநகரிற்கு விஜயம் மேற்கொண்ட நோர்வே சமாதானச் செயலாளர் எரிக் சொல்ஹேம் தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பான பரந்த பார்வையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எடுத்துரைத்ததாக ஒஸ்லோவில் அமைந்திருக்கும் அமெரிக்க உயர்ஸ்தானிகரகத்திற்கு எரிக் சொல்ஹேம் தெரிவித்துள்ளதாக புதிய விக்கிலீக்ஸ் தகவலொன்று ஒஸ்லோவை தளமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எனக்கு நன்கு தெரியும், அவர் இனப்பிரச்சினை சிக்கல் குறித்து நன்கு அறியாதவர், அவர் சமாதான நடவடிக்கைகளை எவ்வாறு சிறந்த முறையில் முன்னெடுப்பது என்பது தொடர்பில் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் ஒஸ்லோவில் அமைந்திருக்கும் உயர்ஸ்தானிகருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது என பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.