தமிழின் முதல் கிரிக்கெட் வர்ணனையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (வயது 81) உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். 1980களில் கிரிக்கெட் போட்டிகளுக்கான தமிழ் வர்ணனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அப்துல் ஜப்பார். முதன் முதலாக சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தமிழகம்- கேரளா அணிகளுக்கு இடையேயான போட்டியை தமிழில் வர்ணனை செய்தார்.1982-ம் ஆண்டு சென்னையில் இங்கிலாந்து- இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டியையும் தமிழில் வர்ணனை செய்தார் அப்போது ஜப்பார். அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர், அப்துல் ஜப்பாரை நேரில் அழைத்து பாராட்டினார். பின்னர் 1999-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளராக ஐபிசி தமிழ் வானொலிக்காக பயணியாற்றினார். 2004-ம் ஆண்டு லண்டனில் உலகக் கிரிக்கெட் போட்டிகளை தமிழில் வர்ணனை செய்தார். 2007-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் ESPN - STAR CRICKET தொலைக்காட்சிக்காக, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 20:20 உலகக்கோப்பை கிரிக்கெட்டை தமிழில் வர்ணனை செய்தார். மொத்தம் 35 கிரிக்கெட் மற்றும் ஹாக்கி போட்டிகளின் வர்ணனையாளராக சிறப்பாகச் செயல்பட்டு உலகத் தமிழரின் நன்மதிப்பைப் பெற்றவர் அப்துல் ஜப்பார்.அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனையை பெரிதும் நேசித்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், சமாதான காலத்தில் அப்துல் ஜப்பாரை தமிழீழத்துக்கு அழைத்து விருந்து அளித்து உபசரித்தார். 'அழைத்தார் பிரபாகரன்' எனும் நூலில் தமிழீழ பயணம்,தேசியத் தலைவர் பிரபாகரனுடனான சந்திப்புகளை எழுதியவர் அப்துல் ஜப்பார். பன்முகத்தன்மை கொண்ட தமிழ் ஆளுமையான அப்துல் ஜப்பார் இன்று காலை மாரடைப்பால் காலமானார். இவர் ஐரோப்பாவில் இயங்கி வந்த தமிழ் தேசியத் தொலைக்காட்சியான ரி.ரி.என் தொலைக்காட்சியிலும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.அவரது மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு பேரிழப்பாகும்.
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
22 டிசம்பர் 2020
அரசுக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கும் வகையில் கூட்டமைப்பின் ஆவணம்!
அரசாங்கத்துக்கு மீண்டும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயல்படுகறது. அவர்களால் மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கு வழங்கத் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் நாம் ஒருபோதுமே கையொப்பமிடமாட்டோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைப் பணிமனையில் அவர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
“இத்தகைய விடயங்களை பிடிகொடுக்காமல் நாசூக்காக செய்வதற்கு பழக்கப்பட்டவராக சுமந்திரன் இருந்தாலும் அவரின், இத்தகைய போக்குகளை ஆரம்பத்திலிருந்தே எங்களைப் போன்றவர்கள் புரிந்து கொண்டு மக்களுக்கு அம்பலப்படுத்தி வந்திருக்கின்றோம். ஆனாலும் அத்தகைய செயல்பாடுகளையே அவர் இன்றைக்கும் செய்து வருகின்றார்.
வரவு – செலவுத் திட்ட விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த இறுதி நாளில் சுமந்திரன் என்னோடும் எமது கட்சியின் செயலாளரோடும் கதைத்திருந்தார். அப்போது, ஜெனிவா அமர்வில் இந்த முறை இரண்டு வருட கால அவகாசம் முடிவடைகின்ற நிலையிலே அந்த உறுப்பு நாடுகளுக்கு இலங்கை தொடர்பாக எப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுத்து மூலமான மகஜரை தயாரித்துள்ளது. இதனை ஒரு பொது மகஜராக, ஏனைய தமிழ்க் கட்சிகளும் பொது அமைப்புக்களும் புத்துஜீவிகளும் ஏற்று கையொப்பமிட்டு அனுப்பக்கூடிய ஆவணமாக வெளிவருவது தான் பொருத்தமாக இருக்குமென்று கூறி எம்மிடம் அதன் பிரதியொன்றை வழங்கினார்.
இதன் பின்னர் எம்முடைய அமைப்பு எங்கள் சட்ட ஆலோசகர்களிடமும் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் செயலாற்றுபவர்களுடனும் பேசியதன் பிற்பாடு நாங்கள் அந்த வரைபை நிராகரிக்கும் நிலைப்பாட்டிற்குத் தள்ளப்பட்டுள்ளோம். 7 பக்கங்கள் கொண்டதாக அந்த அறிக்கை இருக்கின்றது. அதில், பெரும்பாலானவை கூட்டமைப்பு முன்னர் எடுத்த விடயங்களை நியாயப்படுத்துகின்றன.
மேலும், இப்படியெல்லாம் செய்தும்கூட தமிழ் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆவணத்தை மிகவும் கவனமாக நாங்கள் படித்தோம். அதை முழுமையாக நாம் தொகுத்துப் பார்த்தபோது மீண்டும் ஒருமுறை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குகின்ற கோணத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணமாகத் தான் நாங்கள் அதனைப் பார்க்கின்றோம்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது ஒரு சர்வதேச விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் ஊடாகத்தான்பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான பொறுப்புக் கூறல் கிட்டும் என்ற விடயத்தை நாங்கள் இங்கு மட்டுமல்ல ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலிலும் ஆணித்தரமாக பதிவிட்டு வந்திருக்கின்றோம். ஆகவே, அந்தப் பிண்ணணியில் சுமந்திரனும் கூட்டமைப்பும் தயாரித்த அந்த அறிக்கையில் நாங்கள் கையொப்பம் இட முடியாது. இந்த நிலைமை சுமந்திரனுக்கே நன்றாகத் தெரியும்” என்றார்.
11 டிசம்பர் 2020
ஒரு இலட்சத்து 47 ஆயிரம் தமிழர்கள் எங்கே?நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார் கஜேந்திரன்!
இறுதிக்கட்டப் போரில் ஒரு இலட்சத்து 47 ஆயிரம் தமிழர்கள் இராணுவத்தினரிடம் அகப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்றையதினம் வரவு - செலவுத் திட்டத்தின் நிதி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு வினா எழுப்பினார்.
"இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். இந்தத் தினத்தில் பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர், சிறைகளில் வாடும் பிள்ளைகளை நினைத்துக் கதறும் பெற்றோர் என வடக்கு, கிழக்கு எங்கும் அவலக்குரலே கேட்டுக்கொண்டிருக்கின்றது.
இந்த நாளில் வடக்கு, கிழக்கு எங்கும் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடி அலைந்து திரிந்து கொண்டிருக்கும் அந்த மக்களின் போராட்டத்தோடு நாங்கள் கைகோர்க்கும் அதே நேரத்தில் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறைகளிலே அடைத்து வைத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.
சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காகவே காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் இலங்கை அரசால் உருவாக்கப்பட்டது. அந்த அலுவலகத்தின் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏமாற்றப்பட்டு தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர்.
காணாமல்போனவர்கள் இறந்து விட்டார்கள் என்று உறவினர்களை ஒப்புக்கொள்ள வைத்து அவர்களுக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கும் முயற்சிதான் நடைபெறுகின்றது.
வடக்கு, கிழக்கில் முழுமையான இனவாதக் கோணத்திலேயே நிதி அமைச்சின் திட்டங்கள் அமைந்துள்ளன. தொல்பொருள் திணைக்களம் என்பது உலக நாடுகளிலே கலாசார அமைச்சுக்களின் கீழ் உள்ளன.
ஆனால், இலங்கையில் அது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கோடிக் கணக்கான நிதியை நிதி அமைச்சு மூலம் ஒதுக்கிக் கொடுத்து, தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தை சிங்கள மயமாக்குகின்ற, பௌத்த மயமாக்குகின்ற செயற்பாடுகள் தான் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.
04 டிசம்பர் 2020
பாராளுமன்றில் தனித்து மோதிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
பிரபாகரனை கொல்ல வேண்டும் என்பதற்காக இலட்சக் கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றதே, போர் குற்றம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“இறுதி யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசினேன். நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரைச் சந்தித்தேன். விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்த பொதுமக்களை மீட்க நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தினர்.
அவர்களை வெளியேற்றி அவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர். அப்போதைய அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் நான் பத்து தடைவைகளுக்கும் அதிகமாக இதுகுறித்துப் பேசினேன். பொதுமக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்துப் பேசினோம்.
கடல் மார்க்கமாக அவர்களை ஏனைய பக்கங்களுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும் பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இல்லாத காரணத்தினால் தாமதமானது. பின்னர், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சகல பொதுமக்களையும் மீட்டுள்ளதாகவும், புலிகளின் கட்டுப்பாட்டில் எந்தவொரு பொதுமகனும் இல்லை, அனைவரையும் மீட்டுள்ளோம் எனவும் தொலைக்கட்சியில் அறிவிப்பு விடப்பட்டது. அதனைக் கேட்டு நான் அச்சப்பட்டேன்.
ஏனெனில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போதே நான்கு இலட்சத்து அறுபதாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் இருந்தனர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அரச தரப்பின் கணக்கெடுப்பு, அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளின் கணக்கெடுப்பு என அனைவரதும் எண்ணிக்கைக்கு அமைய அதிகளவில் மக்கள் இருந்திருக்க வேண்டும்.
அவ்வாறு இருக்கையில் பொதுமக்களை எப்படியேனும் வெளியேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் எனது தொடர்புகளைப் பயன்படுத்தி, நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பயன்படுத்தி அரச தரப்புடன் பேசி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தேன். ஆனால், அது நடக்கவில்லை” என்றார்.
அப்போது குறுக்கிட்டு ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய அமைச்சர் சரத் வீரகேசர, “நீங்கள் சபையை தவறாக வழிநடத்துகின்றீர்கள். மூன்று இலட்சம் மக்களை பிரபாகரன் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினார். நாங்கள் அவர்களைக் காப்பாற்றினோம்” என்றார்.
இதன்பின்னர் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா, “நாங்கள் ஒவ்வொரு தாக்குதலின் போதும் அதிகளவான பொதுமக்களைப் பாதுகாத்தோம். நீங்கள் பொய்களைக் கூறி சபையை தவறாக வழிநடத்த வேண்டாம். நாம் மக்களை மீட்ட நேரங்களில் நீங்கள் அந்தப் பகுதிகளுக்கு வரவில்லை” என்றார்.
இந்நிலையில், மீண்டும் உரையாற்றிய கஜேந்திரகுமார், “போராட்டம் தொடங்கிய வேளையில் நான்கரை இலட்சம் பொதுமக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழ்ந்தனர். ஆனால், 17 ஆயிரம் பொதுமக்களே அங்கு இருந்ததாக அரசாங்கம் கூறியது. உணவு மற்றும் மருந்துகளை வெறுமனே 17 ஆயிரம் மக்களுக்கு மட்டுமே அனுப்பினார்கள். இதுதான் உண்மை. மூன்றரை இலட்சம் மக்கள் பின்னர் முகாம்களுக்கு வந்தனர்.
ஆகவே, இலக்கங்களில் அரசாங்கம் பொய்களைக் கூறிக்கொண்டுள்ளது. இறுதி யுத்தத்தில் சிக்கிய ஒன்றரை இலட்சம் மக்களுக்கு என்னவானது என்றே தெரியவில்லை. 164ஆயிரம் மக்களை அரசாங்கம் கணக்கில் எடுக்கவில்லை 54 இராணுவ அதிகாரிகளுக்கு சர்வதேச நாடுகளுக்கான வீசா வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் சபையில் கூறினார். ஏன் அவர்களுக்கு வீசா வழங்கப்படவில்லை என சிந்தித்துப்பாருங்கள். குறித்த 54 அதிகாரிகளும் அப்பாவிகள் என்றால் அதனை நிரூபிக்க வேண்டும்.
ஆனால், அவர்கள் குற்றவாளிகள். இதனால்தான் இந்த நிலைமை உருவாகியுள்ளது. நீங்கள் இந்த நிலைமைகளை நினைத்து வெட்கப்பட வேண்டும்.
இப்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் இந்த அமைச்சை இனவழிப்பு அமைச்சு, தமிழர்களுக்கு எதிராக அமைச்சு என்றே நினைக்கின்றோம். அமைச்சிற்குப் பொறுப்பான சரத் வீரசேகர சற்று முன்னர் இந்த சபையில் ஒன்றைக் கூறினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும் என்றார். இதனை நினைத்து வெட்கப்பட வேண்டும்.
அதேபோல், மஹிந்த சமரசிங்க அண்மையில் இதே சபையில் ஒன்றைக் கூறினார், பொதுமக்களைப் பாதுகாக்க சர்வதேச நாடுகள் வந்த வேளையில் அதனை அனுமதிக்க முடியாது என மஹிந்த ராஜபக்ஷ கூறியதாகத் தெரிவித்தார். பிரபாகரன் தப்பித்து விடுவார் என்ற காரணத்திற்காக தமிழ் மக்களை வெளியேற்ற இடமளிக்க முடியாது என்றாராம்.
இதுதான் போர்க் குற்றம். ஒரு நபரைக் கொலைசெய்ய வேண்டும் என்பதற்காக இலட்சக் கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றமையே போர்க் குற்றமாகும். இன்றும் நாட்டில் உள்ள பாதுகாப்பு தளங்களில் அளவுக்கு அதிகமானவை வடக்கு கிழக்கிலேயே உள்ளது, இவர்களின் எதிரிகள் தமிழர்கள் என்பதே இவர்களின் நிலைப்பாடாகும். விடுதலைப் புலிகளின் பெயரைக் கூறி தமிழர்களை இன அழிப்புச் செய்துள்ளீர்கள். தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் நடவடிக்கையே முன்னெடுக்கப்பட்டது.
நேற்று தமிழர்கள், இன்று முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். இதுவே, நாளை உங்கள் இனத்திற்கு எதிராகத் திரும்பும். இதனை நன்றாக மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அரக்கத்தனமான ஆட்சியை நடத்தும் உங்களுக்கு நான் இதனை மீண்டும் கூறி பதிவு செய்துகொள்கிறேன். தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் அரசாங்கம் தோற்றுவிட்டது. இது நாட்டின் சகல வளர்ச்சிக்கும் பாதிப்பாக அமையும்” என்றார்.
இதன்போது குறுக்கிட்ட சரத் வீரகேகர, “இவர் முழுமையாக பொய்களைக் கூறுகின்றார். புலம்பெயர் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் இவர் பேசிக்கொண்டுள்ளார். நாம் பொதுமக்களைப் பாதுகாத்தோம். உலகத்தில் பொதுமக்களை மீட்ட மிகப்பெரிய நடவடிக்கையாகும். சர்வதேசமே அதனை ஏற்றுக்கொண்டது. எமது இராணுவத்திற்கு தங்கப்பதக்கம் கொடுக்க வேண்டும் எனவும், உலகிற்கே நாம் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் சர்வதேச நிபுணர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பிரபாகரன் முன்னிலையில் வாக்குறுதி எடுத்தவர்கள். அவர்களைத் தடுக்க வேண்டும் என்பது சரியானது” என்றார்.
இதையடுத்து உரையாற்றிய கஜேந்திரக்குமார், “நீங்கள் கூறுவதெல்லாம் உண்மையென்றால் ஏன் சர்வதேச விசாரணைக்குத் தயங்குகின்றீர்கள். நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொள்ளவதை விடவும் தைரியம் இருந்தால் சர்வதேச விசாரணைக்குச் செல்லுங்கள். ஏன் அதற்கு அஞ்சுகின்றீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, “கஜேந்திரகுமார் எம்.பி.யின் உரையில் நாடாளுமன்றத்திற்குப் பொருத்தமில்லாத சகல கருத்துக்களையும் நீக்க வேண்டும். இவர்கள் பிணங்களை விற்று வாழ்பவர்கள். சர்வதேச டொலர்களுக்காக இவர்கள் பேசிக்கொண்டுள்ளனர்” என்றார்.
இதனையடுத்து சபையில் சிங்கள உறுப்பினர்களிடையே கடும் விமர்சனம் ஏற்பட்டதுடன் பின்வரிசையில் இருந்த சிங்கள உறுப்பினர்கள் கடும் வார்த்தைகளில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரை விமர்சித்தனர்.
23 நவம்பர் 2020
இனப்படுகொலையை ஐ.நா.தடுக்கவில்லை- ஒபாமா!
இலங்கையில் இனப் படுகொலைகளைத் (ethnic slaughter) தடுக்க ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது. என்று “உறுதியளிக்கப்பட்ட நிலம்” (A Promised Land) என்ற சுயசரிதை நூலில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
“1945 இல் ஐ. நா. சாசனத்தை வாசித்தேன். அதன் நோக்கங்கள் எனது தாயின் லட்சியங்களோடு பொருந்திப் போவதைக் கண்டு வியந்தேன். ஆனால் ஐ. நா. எப்போதும் அந்த உயரிய நோக்கங்களுடன் செயற்படவில்லை என்பதை சொல்லத் தேவையில்லை” என்று ஒபாமா எழுதியுள்ளார்.
“பனிப்போரின் இடை நடுவில் பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகளிடையிலான பிளவுகளால் ஒருமித்த கருத்தை அடைவதற்கான வாய்ப்புகள் அரிதாக இருந்தன. அதனால் சோவியத் ஒன்றியத்தின் டாங்கிகள் ஹங்கேரிக்குள் நகர்ந்தன. ஐ. நா. கைகட்டி பார்த்து நின்றது. அமெரிக்க விமானங்கள் வியட்நாம் கிராமங்களில் நேபாம் குண்டுகளைப் போட்டன.”
“பனிப்போருக்குப் பின்னரும் ஐ. நா. பாதுகாப்புச் சபையில் நீடித்த பிளவுகள் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஐ. நாவின் திறனை கொண்டு நடத்தின.
“சோமாலியா போன்ற தோல்வி கண்ட அரசுகளை மீளக்கட்டியமைப்பதற்கோ அல்லது இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான படுகொலைகளைத் தடுப்பதற்கோ ஐ. நாவின் உறுப்பு நாடுகளிடையே வழி முறைகளோ அன்றி கூட்டு விருப்பமோ இருக்கவில்லை” – என்று முன்னாள் அதிபர் ஒபாமா தனது நூலில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இலங்கை “இனப்படுகொலை” என்பதை ஒபாமா “ethnic slaughter” என்ற ஆங்கில வார்த்தையிலேயே குறிப்பிட்டிருக்கிறார்.
07 நவம்பர் 2020
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி!
அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட திரு. ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கியப் போட்டிக்களமாகத் திகழ்ந்த பென்சில்வேனியா மாநிலத்தைக் கைப்பற்றியதன்மூலம், அவருக்கு அந்த வெற்றி சாத்தியமானது.
வெள்ளை மாளிகையைக் கைப்பற்றத் தேவையான அதிபர் மன்ற வாக்குகள் 270-ஐப் பெற, அந்த வெற்றி அவருக்கு வழிவகுத்தது.
இந்த வெற்றியின்மூலம், 'அமெரிக்க அதிபராகத் தெரிவுபெற்ற ஆக வயதானவர்' என்ற பெருமை, திரு. பைடனைச் சாரும்
அதேவேளையில், அமெரிக்காவின் 'முதலாவது பெண் துணையதிபர்' என்னும் பெருமையை அவரோடு இணைந்து போட்டியிட்ட திருவாட்டி கமலா ஹேரிஸ் பெறுகிறார்.
இந்தியத் தாய்க்கும் ஜமைக்காவைச் சேர்ந்த தந்தைக்கும் பிறந்த கலப்பினத்தவர் திருவாட்டி கமலா ஹேரிஸ்.
இருப்பினும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த திரு. டோனல்ட் டிரம்ப்பின் பிரசார இயக்கம், தனது வேட்பாளர், தோல்வியை ஒப்புக்கொள்ளத் திட்டமிடவில்லை எனக் கோடிகாட்டியுள்ளது.
1990களுக்குப் பிறகு, ஒரே ஒருமுறை மட்டும் பதவியில் இருந்த முதலாவது அதிபர் என்ற நிலையை, அண்மை முடிவு திரு. டிரம்ப்புக்கு ஏற்படுத்தியுள்ளது.
வாக்கு எண்ணிக்கையை ஏற்கெனவே முடித்துவிட்ட மாநிலங்களில் இருந்து பெற்ற அதிகாரபூர்வமற்ற முடிவுகளை அடிப்படையாகக்கொண்டு, BBC நிறுவனம் அண்மைத் தகவலை வெளியிட்டது.
விஸ்கோன்ஸின் உள்ளிட்ட மாநிலங்களில், இன்னமும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
கடந்த சுமார் நூறாண்டுகளில், ஆக அதிகமானோர் வாக்களித்த அதிபர் தேர்தல் இதுதான். இதுவரை, திரு. பைடன், 73 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில், இதுவரை வேறு எந்த வேட்பாளரும் இவ்வளவு வாக்குளைப் பெற்றதில்லை.
திரு. டிரம்ப், 70 மில்லியன் வாக்குகளைப் பெற்று அதற்கு அடுத்த நிலையில் உள்ளார்.
வாக்குகள் எண்ணி முடிக்காதநிலையில் திரு. டிரம்ப், தாமே தேர்தலின் வெற்றியாளர் எனத் தமக்குத் தாமே அறிவித்துக்கொண்டார்.
பின்னர் அவர், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இருப்பினும், மோசடிக்கான ஆதாரங்கள் எதனையும் அவர் முன்வைக்கவில்லை.
வாக்கு எண்ணிக்கை தொடங்கி முதலில் வெளியான முடிவுகளின்படி, அமெரிக்க வாக்காளர்கள், கிருமிப்பரவலைக் காட்டிலும் பொருளியலுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதுபோல் தோன்றுவதாக கவனிப்பாளர்கள் கூறியிருந்தனர்.
ஆனால், அஞ்சல் வாக்குகள் எண்ணத் தொடங்கி ஜனநாயகக் கட்சிக்கான வாக்குகள் அதிகரிக்கத் தொடங்கியதும், கிருமிப்பரவலே இந்தத் தேர்தல் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியது என்பது தெரியவந்தது.
திரு. டிரம்ப் கிருமிப்பரவலைக் கையாண்டவிதம் திருப்திகரமாக இல்லை என்பதை முன்வைத்தே, ஜனநாயகக் கட்சி தனது பிரசாரத்தை நடத்திவந்தது.
ஆனால், கிருமிப்பரவல் ஓர் அரசியல் உத்தி என்றுகூறிவந்த திரு. டிரம்ப், வாக்களிப்பு நாளுக்குப்பிறகு அது தணியத் தொடங்குமென்று கூறிவந்தார்.
உண்மையில், கடந்த மூன்று நாள்களாக அமெரிக்காவில், முன்னெப்போதும் இல்லாத அளவில் நூறாயிரத்துக்கு மேற்பட்ட புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
ஆகக் கடைசி நிலவரப்படி, அமெரிக்காவின் ஒருநாள் கிருமித்தொற்று எண்ணிக்கை, 132, 700 ஆக இருந்தது.
14 அக்டோபர் 2020
விஜய்சேதுபதிக்கு எதிராக திரண்ட கர்நாடக தமிழ் அமைப்புக்கள்!
சிங்கள தேசிய கொடியை மார்பில் குத்திக்கொண்டு தமிழ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் திரைப்படங்களை இனிமேல் கர்நாடகாவில் ஓட விடமாட்டோம் என்று கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் உலக அளவில் மிகப்பெரிய சுழல் பந்து வீச்சாளராக வலம் வந்தார்.
தமிழரான அவர் இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடி 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தவர் ஆகும்.
முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ஸ்ரீபதி என்பவர் பயோகிராபி படமாக இயக்குகிறார். இந்த படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் தமிழ் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.இந்த படம் தொடர்பான மோஷன் போஸ்டர் நேற்று, வெளியாகியது. அதில் முத்தையா முரளிதரனின் பழைய தோற்றத்தைப் போலவே விஜய் சேதுபதியின் முகம் மற்றும் முடி வெட்டு உள்ளிட்டவை பக்காவாக பொருந்தி இருந்தது. இந்த நிலையில்தான், விஜய் சேதுபதிக்கு தமிழ்தேசியவாதிகள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்ட இனப் போரின்போது இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர் முத்தையா முரளிதரன் என்று பரவலாக குற்றச்சாட்டு உண்டு. தமிழர்களுக்கு ஆதரவாக அவர் குரல் ஒலித்து இருந்தால், உலக அளவில் அதற்கு தனி கவனம் கிடைத்திருக்கும். ஆனால் அவர் சிங்கள அரசுக்கு தோள் கொடுத்தார் என்பது தமிழ் தேசியவாதிகள் குற்றச்சாட்டு.இந்த நிலையில்தான், "விஜய் சேதுபதியால் வெட்கம்" என்று பொருள்படும் வகையில், டுவிட்டரில் விஜய் சேதுபதிக்கு எதிராக, தேசிய அளவில், ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம் அமைப்பு, ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டது. அதில் கூறியுள்ளதாவது: தமிழ் பட நடிகர் விஜய் சேதுபதி, பீட்சா, ரம்மி, 96 போன்ற படங்களில் நடித்து புகழ் அடைந்தவர். தமிழ்படங்களால் வளர்ந்தவர். ஆனால் முத்தையா முரளிதரன் என்ற, இலங்கை கிரிக்கெட் வீரர் ஈழப்படுகொலையை மகிழ்ச்சியான நாள் என பேசியவர்.இனப்படுகொலையாளன் ராஜபக்சவை போற்றிப் புகழ்ந்தவர். அப்பேர்பட்ட தமிழினத் துரோகியின் வாழ்க்கை வரலாற்று கதையில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளது உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் வேலையை காட்டுகிறது. பணத்திற்காக எதையும் செய்ய துணிந்துள்ள, இதுபோன்ற சுயநலவாதிகள், தமிழினத்துக்கு எதிரானவர்களை நாம் கண்டிக்க தவறினால், நாளை எல்லோரும் தமிழர்களுக்கு எதிராக பேசத் தொடங்குவார்கள்.விஜய் சேதுபதி, "800" என்ற படத்திலிருந்து விலக வேண்டும். இல்லை என்றால் தமிழர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். எந்த வேகத்தில் வளர்ந்தாரோ, அதே வேகத்தில் சரிவார். விடுதலைப் புலிகளையும், தமிழர்களையும் இழிவுபடுத்தி யார் பேசினாலும் கர்நாடக தமிழர்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். விஜய்சேதுபதியின் படங்களை கர்நாடகாவில் ஓட விடமாட்டோம். இவ்வாறு கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இது தொடர்பாக அந்த இயக்கத்தின் தலைவர் கோபி ஏகாம்பரம், 'ஒன்இந்தியா தமிழ்' இணையதளத்திடம் வழங்கிய பிரத்யேக பேட்டியின்போது கூறியதாவது: கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம் மட்டுமின்றி, கர்நாடகாவிலுள்ள பிற தமிழ் இயக்கங்களையும் இந்த விஷயத்தில் ஒன்றிணைத்து வருகிறோம். கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம், பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர், கர்நாடக தமிழர் பேரவை உள்ளிட்ட அனைவருமே ஒத்த திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்."முரளிதரன் சாதனை தமிழர் என்பதால் அவர் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறேன், என்று விஜய் சேதுபதி கூறுகிறாரே, இலங்கை அரசுக்கு ஆதரவாக, விஜய் சேதுபதி நடிக்க வேண்டியதன் அவசியம் என்ன?" என்று நாம் எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த கோபி ஏகாம்பரம், "முத்தையா முரளிதரன் ஈழப் படுகொலையை கொண்டாடியவர். அந்த இனப் படுகொலையை யாராலும் ஜீரணிக்க முடியாது. அப்படியிருக்கும்போது தமிழருக்கு எதிரான படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது அவர் வன்மத்தைக் காட்டுகிறது. ஈழப் பிரச்சினையில், மக்களின் கோபம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை ஆழம் பார்க்க இந்த படம் எடுக்கப்படுவதாக நாங்கள் நினைக்கிறோம். தமிழகத்திலுள்ள கட்சிகள் எப்படி ஒன்றிணைகிறார்களோ தெரியாது. ஆனால், கர்நாடகாவிலுள்ள தமிழ் அமைப்புகள், ஒன்றிணைந்து எதிர்ப்போம், என்றார் அழுத்தம் திருத்தமாக.
09 அக்டோபர் 2020
தமிழர் தேசத்தை அங்கீகரித்து தனது கடப்பாட்டை இந்தியா நிறைவேற்றவேண்டும்!
13வது திருத்தம் அரசியல் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியல்ல என்றும், தமிழர் தேசத்தை அங்கீகரித்து தனது கடப்பாட்டை இந்தியா நிறைவேற்ற வேண்டும் என்றும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையை இந்தியாவிடம் விடுத்துள்ளார்.
“தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதே இந்திய - இலங்கை உடன்படிக்கையின் முக்கிய நோக்கமாக இருந்தது.தமிழ் மக்களை, ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ளப்படாதது இந்த உடன்படிக்கையின் மாபெரும் குறைபாடாகும்.
தமிழ் மக்களை ஒரு தரப்பாக ஏற்றுக் கொள்ளாமல் தவிர்க்கப்பட்டதால், தமிழ் மக்களின் சார்பில் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட இந்தியாவுக்கு இந்த உடன்படிக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் கடப்பாடு உள்ளது.
தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் ஓர் ஆரம்பப்புள்ளியாகக் கூட அமையவில்லை என்பதால், நாம் 13வது திருத்தச் சட்டத்தை நிராகரிக்கிறோம். இந்திய - இலங்கை உடன்படிக்கையும் 13ஆவது திருத்தச் சட்டமும் முற்றிலும் வேறுவேறானவை.
13வது திருத்தச் சட்டத்தை நாங்கள் நிராகரிக்கிறோமே தவிர இலங்கை – இந்திய உடன்படிக்கையை நிராகரிக்கவில்லை.
இந்த உடன்படிக்கையின் சரத்துக்களின்படி தமிழர் தேசத்தை அங்கீகரித்து அந்த ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றி, அதனடிப்படையில் இந்தத் தீவில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வை எட்டுவதற்கு, இந்தியா பொறுப்புக்கூறும் கடப்பாடு உடையது என்பதை வலியுறுத்துகிறோம்" என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
04 அக்டோபர் 2020
பிரான்சில் நடந்த கொடூரப் படுகொலை!
பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு அருகிலுள்ள Noisy-le-Sec நகரில் நேற்றுக் காலை இலங்கைத் தமிழர்கள் ஐவர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்ட மற்றும் படுகாயமடைந்த அனைவரும் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொல்லப்பட்டவர்களில் கைக்குழந்தை ஒன்று, நான்கு வயதுக் குழந்தை ஒன்று, 14 வயதுடைய இருவர், பெண் ஒருவர் என 5 பேர் உள்ளடங்கியுள்ளனர்.
உடல்கள் இப்பொழுது வரை அந்த வீட்டிலேயே உள்ளன. சடலங்களை எடுத்துச்செல்லும் வாகனம் சம்பவ இடத்துக்கு வந்திருக்கிறது. பொலிசார் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில் உள்ள வீட்டில், இரண்டு குடும்பங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையிலேயே இந்தக் கொலைகள் நடந்துள்ளன.
கொலை நடைபெற்ற இடத்திலிருந்து படுகாயமடைந்த நிலையில் தப்பிவந்த சிறுவன் ஒருவன் வீதியில் உள்ள மதுச்சாலை ஒன்றுக்கு வந்து உதவிக்குழுவை அழைக்கும் படி கோரியுள்ளான்.
“எனது மாமா என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்துவிட்டார்” என குறித்த சிறுவன் மதுச்சாலையின் நிர்வாகியிடம் தெரிவித்துள்ளான். சம்பவ இடத்துக்கு சில நிமிட இடைவெளியில் வந்து சேர்ந்த காவல்துறையினர், சம்பவ இடத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வீடு முழுவதும் இரத்தம் தெறித்து, இரத்த வெள்ளத்தில் ஐந்து பேரின் சடலங்களை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் ஐவர் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மரணமடைந்தவர்களில் சிறுவர்களும் உள்ளனர் என காவல்துறையினர் உறுதிப்படுத்தினார்கள். “சம்பவ இடம் மிகவும் பயங்கரமாக இருந்தது. எங்களில் பலர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். கத்தி ஒன்றும் பெரிய சுத்தியல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது” என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்தில் ‘கோமா’ நிலையில் இருந்ததாகவும், இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும் பிரெஞ்சு காவல்துறையினர் தெரிவித்தனர். விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை.
தேசிய மற்றும் நகரப் பொலீஸாரால் சம்பவம் நடந்த பகுதி உடனடியாக மூடப்பட்டு வெளியாட்கள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. பஸ் மற்றும் வாகனப் போக்குவரத்துகள் மாற்று வழிகளில் திசை திருப்பப் பட்டுள்ளன.
03 அக்டோபர் 2020
புங்குடுதீவில் பூசகர் கொலை சைவ மகாசபை கண்டனம்!
புங்குடுதீவு பாணாவிடை சிவன் கோவில் (ஈழத்து இராமேசுவரம் ) குரு ரூபன் சர்மா ஐயாவினுடைய கொலையை சைவ மகா சபை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. கொலையாளிகள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். பின்புலம் முழுமையாக ஆராயப்பட்டு உண்மைகள் வெளிக் கொணரப்பட வேண்டும்.
மனிதத்தற்கும் ஜிவகாருண்யத்திற்கும் போராடி உயிர்துறந்த தாய் மதத்தில் அளவு கடந்த பற்றுறுதி உடைய வணக்கத்துக்கும் போற்றத்துக்குரிய குருவிற்கு ஆத்மார்த்த அஞ்சலிகள் .
இறை சிவனின் பாதார விந்தங்களில் ஆத்ம சாந்தி பெறுங்கள். நிச்சயம் உங்கள் நல்ல எண்ணங்கள் இவ்வுலகில் நிலைத்து நிற்கும் ஐயா.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகநூல் பரா.நந்தகுமார்
01 அக்டோபர் 2020
இலங்கை சிங்களப் பெரும்பான்மைக்கு மட்டும் சொந்தமானதில்லை-கஜேந்திரகுமார்!
20 செப்டம்பர் 2020
என்னை தனியே விட்டு எங்கே சென்றீர்கள் மாமா? – சீமான் உருக்கம்!
என்னை தனியே விட்டு எங்கே சென்றீர்கள் என் தாய் மாமனே?
மாமா!
உங்களது பிரிவு மாபெரும் இருட்டுக்குள் என்னை
தள்ளிவிட்டிருக்கிறது. என் வாழ்நாளின் பல தருணங்களில் சொல்வழியே, செயல்வழியே நம்பிக்கை அளித்து வழிநடத்திய நீங்கள் நட்ட நடுவழியில் தவிக்கவிட்டு எங்கே சென்றீர்கள் மாமா? நீங்கள் இல்லாத இவ்வாழ்வினை எப்படி வாழப்போகிறேன்? என் வாழ்வின் அனைத்துப்பொழுதுகளிலும் நீங்கள்தானே மாமா நிறைந்து இருக்கிறீர்கள்! உங்களைப் போன்று என்னை உணர்ந்தவர் யாருண்டு மாமா? நான் மேடையேறியப் பொழுதுகளிலிருந்து உங்கள் விரல் பிடித்துதானே மாமா நான் வழிநடந்திருக்கிறேன்! என் வாழ்க்கையின் எல்லாவித ஏற்றத்தாழ்வுகளிலும் கூடவே இருந்திருக்கிறீர்கள்! எனது சுக துக்கங்களில் பங்கெடுத்திருக்கிறீர்கள்! நீங்கள் பொருளாதாரத்தில் உயர்ந்திருந்த பொழுதில், ‘நான் இருக்கிறேன் மருமகனே!’ என நம்பிக்கை அளித்திருக்கிறீர்கள்! பொருளாதாரத்தில் வீழ்ந்த காலக்கட்டத்திலும் “எப்படியாவது தேறி வந்து விடுவேன் மருமகனே! நீ துணிந்து நில்” என ஒவ்வொரு நொடியும் தேறுதல் வார்த்தைகள் பேசி கண்ணின் இமை போல என்னை காத்திருக்கிறீர்கள்! நாம் தமிழர் என்கின்ற இந்த மாபெரும் இயக்கத்தை உருவாக்க நாம் முடிவு செய்தபோது, நீங்கள் தானே மாமா எனக்கு முதுகெலும்பாய் மாறி நின்றீர்கள்! இப்போது என்னைவிட்டு எங்கே சென்றீர்கள் மாமா? ஈழ விடுதலைக்களத்தில், தமிழ்த்தேசியப் பயணத்தில் எண்ணற்றோர் சமரசமடைந்து மெளனித்தபோதும் நீங்கள் என்னோடு இருந்து நாம் செல்கின்ற திசை சரியென உலகுக்கு உணர்த்தினீர்களே மாமா! உளவியல் பலமாய், உற்ற துணையாய் எப்போதும் இருந்தீர்களே மாமா! இப்போது எங்கே சென்றீர்கள்? இனத்திற்காக பொல்லாத பொடா சட்டத்தின் கீழ் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைவாசம்! இனமான பணிகளுக்கென எவர் வந்தாலும் அள்ளி அள்ளிக்கொடுத்த வள்ளலைப் போன்ற வாழ்க்கை என எந்த சூழ்நிலையிலும் தமிழினத்தையும், தமிழ் மொழியையும் பற்றி சிந்திக்காமல் நீங்கள் இருந்ததில்லையே மாமா! இப்போது என்னை மட்டும் தனியே விட்டு தூரம் போய்விட்டீர்களே மாமா! நோயுற்ற பொழுதுகளிலும்கூட மருத்துவமனையிலிருந்து அலைபேசி வழியாக காணொளி அழைப்பு பேசியபோது வலது கரம் உயர்த்தி நம்பிக்கையோடு புன்னகைத்தீர்களே மாமா! அந்தப் புன்னகையை இனி நான் எங்கு காண்பேன்? எப்படியும் நீங்கள் திரும்பி வந்து விடுவீர்கள் என்றுதானே நான் காத்திருந்தேன்! இப்படி என்னை ஏமாற்றிவிட்டு சென்றீர்களே மாமா! உங்கள் மருமகனை முதல்முறையாக காத்திருக்க வைத்துவிட்டு, தாயற்றப் பிள்ளை போல தவிக்க விட்டுவிட்டு எங்கே சென்றீர்கள் மாமா? போராட்டமென்றதும் முதல் ஆளாய் களத்தில் நிற்பீர்களே! இனி எங்கு உங்களைக் காண்பேன்? ‘மருமகனே’ எனும் அந்தக் குரலை இனி எப்படி கேட்பேன்? ‘இறுதிவரை களத்தில் நிற்போம் மருமகனே!’ என நெஞ்சார சொல்வீர்களே! இப்படி பாதியிலேயே விட்டுவிட்டு போய்விட்டீர்களே மாமா? ‘மருமகனே’ என நீங்கள் அழைக்கும்போதெல்லாம் உங்கள் அன்பின் நிழல்பட்டு சிலிர்த்திருக்கிறேனே மாமா! அதுவெல்லாம் கனவாய் காற்றில் கரைந்துவிடுமா மாமா? தனியே கண்கலங்கி துடிக்கிறேன் மாமா! தேற்ற நீங்கள் இல்லை! மனம் கலங்கி நான் தவித்த பொழுதுகளிலெல்லாம் ஆறுதல் வார்த்தைகளால் நெஞ்சம் நிறைத்து தேற்றுவீர்களே மாமா! இப்போது நீங்கள் அழுகையைத் தந்து மீள முடியாத் துயரில் ஆழ்த்தி சென்றுவிட்டீர்களே மாமா! பொங்கிவரும் என் கண்ணீரின் ஊடே எந்த இலட்சியத்திற்காக இவ்வாழ்வில் நமது கரங்கள் ஒன்று சேர்ந்ததோ? அந்த இலட்சியம் வெல்ல நான் உயிர் உள்ளவரை உழைப்பேன் என உங்கள் பேரன்பு முகம் நினைத்து உறுதி ஏற்கிறேன் மாமா! நீங்கள் சுவாசித்த காற்று இன்னும் இந்த மண்ணில்தான் உலவிக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையோடு, எமது உணர்வாக, எமது விடுதலை கனவாக நிறைந்திருந்து நீங்கள் என்னை வழி நடத்துவீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன் மாமா. மீளாத் துயருடன் உங்கள் மருமகன் செந்தமிழன் சீமான்.
தள்ளிவிட்டிருக்கிறது. என் வாழ்நாளின் பல தருணங்களில் சொல்வழியே, செயல்வழியே நம்பிக்கை அளித்து வழிநடத்திய நீங்கள் நட்ட நடுவழியில் தவிக்கவிட்டு எங்கே சென்றீர்கள் மாமா? நீங்கள் இல்லாத இவ்வாழ்வினை எப்படி வாழப்போகிறேன்? என் வாழ்வின் அனைத்துப்பொழுதுகளிலும் நீங்கள்தானே மாமா நிறைந்து இருக்கிறீர்கள்! உங்களைப் போன்று என்னை உணர்ந்தவர் யாருண்டு மாமா? நான் மேடையேறியப் பொழுதுகளிலிருந்து உங்கள் விரல் பிடித்துதானே மாமா நான் வழிநடந்திருக்கிறேன்! என் வாழ்க்கையின் எல்லாவித ஏற்றத்தாழ்வுகளிலும் கூடவே இருந்திருக்கிறீர்கள்! எனது சுக துக்கங்களில் பங்கெடுத்திருக்கிறீர்கள்! நீங்கள் பொருளாதாரத்தில் உயர்ந்திருந்த பொழுதில், ‘நான் இருக்கிறேன் மருமகனே!’ என நம்பிக்கை அளித்திருக்கிறீர்கள்! பொருளாதாரத்தில் வீழ்ந்த காலக்கட்டத்திலும் “எப்படியாவது தேறி வந்து விடுவேன் மருமகனே! நீ துணிந்து நில்” என ஒவ்வொரு நொடியும் தேறுதல் வார்த்தைகள் பேசி கண்ணின் இமை போல என்னை காத்திருக்கிறீர்கள்! நாம் தமிழர் என்கின்ற இந்த மாபெரும் இயக்கத்தை உருவாக்க நாம் முடிவு செய்தபோது, நீங்கள் தானே மாமா எனக்கு முதுகெலும்பாய் மாறி நின்றீர்கள்! இப்போது என்னைவிட்டு எங்கே சென்றீர்கள் மாமா? ஈழ விடுதலைக்களத்தில், தமிழ்த்தேசியப் பயணத்தில் எண்ணற்றோர் சமரசமடைந்து மெளனித்தபோதும் நீங்கள் என்னோடு இருந்து நாம் செல்கின்ற திசை சரியென உலகுக்கு உணர்த்தினீர்களே மாமா! உளவியல் பலமாய், உற்ற துணையாய் எப்போதும் இருந்தீர்களே மாமா! இப்போது எங்கே சென்றீர்கள்? இனத்திற்காக பொல்லாத பொடா சட்டத்தின் கீழ் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைவாசம்! இனமான பணிகளுக்கென எவர் வந்தாலும் அள்ளி அள்ளிக்கொடுத்த வள்ளலைப் போன்ற வாழ்க்கை என எந்த சூழ்நிலையிலும் தமிழினத்தையும், தமிழ் மொழியையும் பற்றி சிந்திக்காமல் நீங்கள் இருந்ததில்லையே மாமா! இப்போது என்னை மட்டும் தனியே விட்டு தூரம் போய்விட்டீர்களே மாமா! நோயுற்ற பொழுதுகளிலும்கூட மருத்துவமனையிலிருந்து அலைபேசி வழியாக காணொளி அழைப்பு பேசியபோது வலது கரம் உயர்த்தி நம்பிக்கையோடு புன்னகைத்தீர்களே மாமா! அந்தப் புன்னகையை இனி நான் எங்கு காண்பேன்? எப்படியும் நீங்கள் திரும்பி வந்து விடுவீர்கள் என்றுதானே நான் காத்திருந்தேன்! இப்படி என்னை ஏமாற்றிவிட்டு சென்றீர்களே மாமா! உங்கள் மருமகனை முதல்முறையாக காத்திருக்க வைத்துவிட்டு, தாயற்றப் பிள்ளை போல தவிக்க விட்டுவிட்டு எங்கே சென்றீர்கள் மாமா? போராட்டமென்றதும் முதல் ஆளாய் களத்தில் நிற்பீர்களே! இனி எங்கு உங்களைக் காண்பேன்? ‘மருமகனே’ எனும் அந்தக் குரலை இனி எப்படி கேட்பேன்? ‘இறுதிவரை களத்தில் நிற்போம் மருமகனே!’ என நெஞ்சார சொல்வீர்களே! இப்படி பாதியிலேயே விட்டுவிட்டு போய்விட்டீர்களே மாமா? ‘மருமகனே’ என நீங்கள் அழைக்கும்போதெல்லாம் உங்கள் அன்பின் நிழல்பட்டு சிலிர்த்திருக்கிறேனே மாமா! அதுவெல்லாம் கனவாய் காற்றில் கரைந்துவிடுமா மாமா? தனியே கண்கலங்கி துடிக்கிறேன் மாமா! தேற்ற நீங்கள் இல்லை! மனம் கலங்கி நான் தவித்த பொழுதுகளிலெல்லாம் ஆறுதல் வார்த்தைகளால் நெஞ்சம் நிறைத்து தேற்றுவீர்களே மாமா! இப்போது நீங்கள் அழுகையைத் தந்து மீள முடியாத் துயரில் ஆழ்த்தி சென்றுவிட்டீர்களே மாமா! பொங்கிவரும் என் கண்ணீரின் ஊடே எந்த இலட்சியத்திற்காக இவ்வாழ்வில் நமது கரங்கள் ஒன்று சேர்ந்ததோ? அந்த இலட்சியம் வெல்ல நான் உயிர் உள்ளவரை உழைப்பேன் என உங்கள் பேரன்பு முகம் நினைத்து உறுதி ஏற்கிறேன் மாமா! நீங்கள் சுவாசித்த காற்று இன்னும் இந்த மண்ணில்தான் உலவிக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையோடு, எமது உணர்வாக, எமது விடுதலை கனவாக நிறைந்திருந்து நீங்கள் என்னை வழி நடத்துவீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன் மாமா. மீளாத் துயருடன் உங்கள் மருமகன் செந்தமிழன் சீமான்.
11 செப்டம்பர் 2020
இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்களே-விக்கினேஸ்வரன்!
நாங்கள் கள்ளத்தோணிகள் அல்ல, நாமே இலங்கையின் மூத்த குடி என நிரூபிக்கக் கூடிய ஆதாரங்கள் என்னிடமுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பல அறிஞர்களுடன் கலந்துரையாடி, புத்தகங்களினை படித்து ஆய்வு செய்தே நாடாளுமன்றத்தில் நிலவுரிமை குறித்துப் பேசினேன்.
இலங்கையின் ஆதிக்குடிமக்கள் பேசியது தமிழ் மொழிதான் என நிரூபிக்க என்னிடம் ஆதாரங்கள் உண்டு. கள்ளத்தோணிகள் நாமல்ல. நீங்கள் எம்மைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.
பாதுகாப்பு வலயம் என்று கூறப்பட்ட முள்ளிவாய்க்காலில் தான் அதிகளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகவே நான் எனது முதலாவது நாடாளுமன்ற அமர்வின் போது முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்குச் சென்றிருந்தேன்.
வன்னியில் இருந்தவர்கள் ஒருபோதும் பயங்கரவாதிகள் அல்ல. அனைவரும் அப்பாவி பொதுமக்களே. வயாதனவர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்று என்ன செய்தார்கள் என கேள்வி எழுப்பப்படுகிறது.
இளைஞர்கள் இவ்வளவு காலமும் நாடாளுமன்றம் சென்று என்ன செய்தார்கள்?
அங்ஜனுக்கு என்னைவிட விருப்பு வாக்குகள் அதிகம் கிடைக்கக் காரணம், அவரைப் போன்று நான் மதுபானம், பணம், வேலை வாங்கித்தருவதாக வாக்குறுதி கொடுத்து வாக்குக் கேட்கவில்லை.
தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிப்பது தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் அண்மையில் என்னிடன் பேசியிருந்தார். நான் அவருக்கு பதிலளிக்கையில் தீர்வு என்று ஒன்றிக்குள் கட்சி இறங்கும் போது அனைவரும் ஒன்றிணைவோம் என்று கூறினேன்.
நான் எனது சம்பந்தியுடன் இணைந்து அரசாங்கத்தின் உதவியுடன் வடக்கில் அபிவிருத்திகளையும் செய்ய எப்பொழுதும் தயாராய் உள்ளேன் என்று கூறியுள்ளார்.
30 ஆகஸ்ட் 2020
யாழ்,மருத்துவமனையின் நான்காம் மாடியிலிருந்து விழுந்து பெண் மரணம்!
29 ஆகஸ்ட் 2020
இனப்பிரச்சனைக்கு சரியான மருந்து சமஷ்டி என்கிறார் விக்கினேஸ்வரன்!
அமைச்சர் உதய கம்மன்பில வரலாற்றைப் படித்து விட்டு தன்னோடு விவாதத்துக்கு வர வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இடைக்கால கணக்கு அறிக்கை மீதான விவாதத்தில் க
லந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“எனது நண்பர் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு கூறுவது என்னவென்றால் அவரின் வரலாற்று குறிப்புகள் காலங்கடந்தவை. அவர் வரலாற்றை படித்துவிட்டு வரவேண்டும்.
நான் பிரிவினைவாதத்தை கேட்கவில்லை பல்வகைத்தன்மையில் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றே கூறுகிறேன். நாட்டின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையே சரியான மருந்து .
எனது உரை தொடர்பில் நேர்மையாகவும், தொழில்முறையாகவும் நடந்துக்கொண்ட நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு நன்றியை கூறிக்கொள்கிறேன்.
அரசாங்கம் சமர்ப்பித்துள்ள இடைக்கால கணக்கு அறிக்கை தொடர்பில் நான் எதனையும் கூறப்போவதில்லை. எந்தவொரு அரசாங்கமும் தமிழ் மக்களை துயரத்திலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. பொருளாதார உதவிகள் வழங்கப்படவில்லை. முதலமைச்சருக்கான நிதி கூட மறுக்கப்பட்டது. அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. எங்களது மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலம் கிடைத்திருக்கிறது. நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இதுவே பொன்னான தருனம். யுத்தத்தை வெல்வது இலகு. ஆனால் சமாதானத்தை வெல்வது கடினமானது. சமாதானமே உண்மையான வெற்றி.
“ஒருமித்த” நாட்டுக்குப் பதிலாக “ஐக்கிய” நாட்டை கட்டியெழுப்புவதன் மூலம், 10 ட்ரில்லியன் சர்வதேச கடன் இருக்கின்றபோதிலுங் கூட, இந்த நாட்டை இந்த உலகின் சொர்க்க பூமியாக உங்களால் மாற்ற முடியும்.
இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு சரியான மருந்து சமஷ்டி முறைமையே ஆகும். தயவுசெய்து இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடாதீர்கள். ஆபத்தை உணரும்போது, தீக்கோழி தனது தலையை மணலில் புதைத்துக் கொள்வதுபோல பிரச்சினைகள் இருக்கும்போது அவை இல்லை என்று கூறி அவற்றில் இருந்து விலகி ஓடுவது முட்டாள்த்தனமானது.” எனவும் தெரிவித்தார்.

28 ஆகஸ்ட் 2020
அவதானமாகவே இருக்கிறேன் என பொன்சேகாவிற்கு கஜேந்திரகுமார் பதில்!

பொன்னம்பலம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கருத்துக்கு பதிலளித்துள்ளார்.
சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் கடந்த காலத்தில் எதிர்கொண்ட விளைவுகளை சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும் என சரத்பொன்சேகா நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றியமை குறித்தே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து கஜேந்திரகுமார் சபையில் உரையாற்றுகையில், “சபை அமர்வில் உரையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எனது பெயரைக் குறிப்பிட்டமை தொடர்பாக கருத்துக்கூற விரும்புகிறேன்.
அவர், நான் பேசிய விடயங்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு எனக்கு சில அறிவுரைகளை வழங்கியதுடன், அதனூடாகவே இன நல்லிணக்கம் பேணப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
நான் பேசிய விடயங்கள் தொடர்பாக மிகவும் அவதானமாகவே இருக்கிறேன் என்பதை அவருக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் குறிப்பிட்ட விடயங்களின் அளவீடுகள் தொடர்பாக நான் பிரக்ஞையுடன் இருக்கிறேன். குறிப்பாக இவர் என்னை காரணப்படுத்துவதை நான் விசேடமாக அவதானித்தேன்.
ஏனெனில், இவர் இராணுவத் தளபதியாக செயற்பட்ட காலங்களில் இலங்கை சிங்கள மரம் என்றும் ஏனையவர்கள் அனைவரும் அந்த சிங்கள மரத்தின் மீதான கொடிகள் மற்றும் சிறிய உயிரினங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான கடுமையான வார்த்தைகள், பொதுவுடைமையாளராக இல்லாத அல்லது இனவாதியாக இருக்கக்கூடிய நபர்களிடம் இருந்தே வெளிவருகிறது. ஒருவேளை அவர் தனது பதவியை இழந்த பின்னர் அல்லது சிறையில் இருந்த பின்னர் மாறியிருக்கலாம். ஆனால், அவர் எனக்கு இந்த அறிவுரையினை வழங்கியமையை மிகமுக்கியமாகப் பார்க்கிறேன்.
வடக்கு கிழக்கு பகுதிகள் இலங்கையில் யுத்தத்தினை எதிர்கொண்ட, பாரிய அளவில் அழிவுகளைச் சந்தித்த பகுதிகள். 32 வருடங்களாக நாம் போரை எதிர்கொண்டோம்.
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாகவும் ஜெனரல் பொன்சேகாவாகவும் இருந்த அக்காலப்பகுதியில், வடக்கு கிழக்கு முழு பொருளாதார தடையின் கீழ் இருந்தது. அக்காலப்பகுதியில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை ஆயிரத்து 500 ரூபாயாக இருந்தது. வடக்கு கிழக்குப் பகுதிகள் எதிர்கொண்ட நிலை இதுவே.
32 வருடங்கள் முழுமையான அழிவுக்குப் பிறகு அந்தப் பகுதிகளை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுவது முற்றிலும் பொருத்தமற்றது. 32 வருடங்களுக்கு மேலாக பொருளாதார ரீதியில் பின்தள்ளப்பட்ட மக்களை, இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் சம அளவாக போட்டியிட எதிர்பார்ப்பது சாத்தியமற்றது”எனவும் தெரிவித்தார்.
22 ஆகஸ்ட் 2020
இறையாண்மையை காரணம் காட்டி இனப்படுகொலையை மறைக்க முடியாது!
இறுதி யுத்தத்தில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது. அவ்வாறு இருக்கையில் இறையாண்மையை முதன்மைப்படுத்தி போர் குற்றங்களை மறைக்கவோ சர்வதேச பொறுப்புக்களை கைவிடவோ முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றில் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் பேசும் போதே இதனை தெரிவித்தார்.
“இலங்கை என்பது தேசிய நாடு. இங்கு இரு தேசிய இனங்கள் பிரதிநிதித்துவப் படுத்துகின்றது. இவ்விரு இனங்களின் உரிமைகள் சமமானது. அரசியல் அமைப்பு ரீதியில் இந்த உரிமைகள் உறுதிப்படுத்தப்படுகின்றது.
இந்த ஆட்சியில் உள்ள தமிழ் தலைமைகள் தமது தேர்தல் கொள்கையில் தமிழர் தேசம் தலைநிமிர என பிரசாரம் செய்துள்ளனர். அப்படியென்றால் தமிழர் தேசம் பலமடைய வேண்டும் என்ற ஏகமனதான நிலைப்பாடு வடக்கு கிழக்கு மக்களால் விரும்பப்பட்டுள்ளது.
அந்த ஏகமனதான தீர்மானம் நிராகரிக்கப்பட முடியாது. தமிழ் மக்களுக்கு இந்த உரிமைகள் தடைகளின்றி வழங்கப்பட வேண்டும். அதேபோல் ஜனாதிபதி இறையாண்மை குறித்தும் பேசியுள்ளார். இந்த நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். அது சரியானதே, ஆனால் அந்த இறையாண்மை நிச்சயமாக சமரசத்திற்கு உற்படுத்தப்பட வேண்டும்.
இந்நாட்டில் யுத்தமொன்று இடம்பெற்றது. இந்த யுத்தத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக ஒட்டுமொத்த உலகமுமே கூறுகின்றது. சர்வதேச மட்டத்தை உள்ளடக்கிய பிரதான விடயங்களை அரசாங்கம் பாதுகாக்க தவறிவிட்டது. போற்குற்றத்தில் இன்றைய பிரதான கட்சி மீதே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
யுத்தத்தில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது. எனவே இறையாண்மையை முதன்மைப்படுத்தி இந்த விடயங்களை மறைக்கவோ சர்வதேச பொறுப்புக்களை கைவிடவோ முடியாது. மிக மோசமான போர் குற்றங்களை எக்காரணம் கொண்டும் மறைக்க முடியாது.
ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தில் பல நல்ல விடயங்கள் உள்ளது, வேறுநாட்டு மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவது தடுக்கப்படுவது, காணி இல்லாதவர்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறும் விடயங்கள் அனைத்துமே முக்கியமானதான விடயமாகும்.
அதேபோல் வடக்கு கிழக்கு பூமி கடந்த முப்பது ஆண்டுகள் யுத்தத்திற்கு முகங்கொடுதுள்ளது என்பதை ஜனாதிபதி மறந்துவிடக்கூடாது. இந்த முப்பது ஆண்டுகால யுத்தத்தினால் வடக்கு கிழக்கு மக்கள் முப்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளனர். அவர்களை சமமாக நடத்த வேண்டும், அவர்களை நிராகரிக்க முடியாது. அவர்களின் பொருளாதாரத்தை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
07 ஆகஸ்ட் 2020
மாமனிதர் ரவிராஜ்ஜின் முகம் கறுப்புத் துணியால் போர்த்தப்பட்டது!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் இ.ரவிராஜின் உருவ சிலையின் முக பகுதி கறுப்பு துணியால் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் இ.ரவிராஜின் பாரியார் சசிகலா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் மோசடி செய்
யப்பட்டு திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார் என சமூக வலைத்தளங்களில் குற்றசாட்டுகள் எழுந்ததையடுத்து, சசிகலாவும் தான் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலையே இன்றைய தினம் காலை சாவகச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள மாமனிதர் இ.ரவிராஜின் உருவ சிலையின் முக பகுதி கறுப்பு துணியினால் மூடப்பட்டுள்ளதுடன், கைகள் மற்றும் கால்கள் சிவப்பு மஞ்சள் துணியினால் கட்டப்பட்டுள்ளன.

03 ஆகஸ்ட் 2020
கள்ள வாக்குச் சீட்டுடன் நால்வர் கைது!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மாதிரி வாக்குச்சீட்டுக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ஒருவர் உள்ளிட்ட நான்கு பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மாதிரி வாக்குச்சீட்டுடன் கட்சி ஆதரவாளர்கள் நடமாடுவதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஒருவரும் கட்சியின் ஆதரவாளர் ஒருவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவருமாக நால்வர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
02 ஆகஸ்ட் 2020
சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க கோரிக்கை!
எதிர்வரும் பொதுத்தேர்தலில் கஜேந்திரகுமாரின் கட்சியை
ஆதரிக்கின்றோம் எனினும் போராட்டத்தை அரசியல் மயப்படுத்தவில்லை என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல்போன உறவினர்களின் இணைப்பாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார்.வவுனியாவில் இன்றயதினம் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களைக் கண்டுபிடிப்பதற்கான தொடர்ச்சியான போராட்டம் இன்று 1261வது நாளாக தொடர்ககிறது.இந்த நாளில் நாங்கள் எதிர்வரும் தேர்தலில் பார்வையாளர்களாக இருக்கமுடியாது.
எங்கள் அரசியலில் ஆகஸ்ட் 5 தேர்தலில் எதுவும் நடக்கட்டும் என்றும் பார்த்துகொண்டிருக்க விட முடியாது.காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் தமிழர்களைக் கண்டுபிடிப்பது ஒரு அரசியல் விவகாரம். அதை தமிழ் தேசிய கொள்கை உள்ள அரசியல்வாதிகளால் தான் தீர்க்க முடியும்.
இது சர்வதேச தலையீட்டின் மூலம் தான் தீர்க்கமுடியும். கடந்த 11 ஆண்டுகளில், இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தோல்வியுற்றது. நாம் தலைமையை மாற்ற வேண்டிய நேரம் இது.
எங்களுக்கு இப்போது இரண்டு மாற்றுதலைமகள் உள்ளன. ஒருவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்.
கஜேந்திரகுமாரின் தலைமையைப் பார்க்கும்போது, அவர் கட்சியில் மூன்று இளம் வழக்கறிஞர்கள்,அவர்கள் அதிக ஆற்றல் கொண்டவர்கள்,மிகவும் நெகிழக்கூடியவர், சர்வதேச அரசியல் மற்றும் ஐ.நா. நடைமுறைகளில் மிகவும் அறிவுள்ளவர்கள்.
அவர்களை வாங்க முடியாது,அவர்கள் மிகவும் நேர்மையானவர்கள் . அவர்களை நீதிமன்றத்திலும் பிரச்சாரங்களிலும் நாங்கள் பார்க்கும் போது, அவர்கள் நல்ல விவாதக்காரர்கள் என்று தெரிகிறது.
எனவே தமிழர்களின் அரசியல் விருப்பத்தை தீர்மானிக்க பொது வாக்கெடுப்புக்கும் சர்வதேச விசாரணைக்கும் யாரையும் ஒப்புக் கொள்ளக்கூடிய விவாதத்தை முன் வைக்க ஆற்றல் கொண்டவர்கள்.
அவர்கள் தமிழ் தேசியவாதிகள்,அவர்கள் ஸ்ரீலங்கா இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பவர்கள் தமிழர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்திற்காக என்ன விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பவர்கள்.
அவர்கள் தமிழர் தாயகத்தில் பொருளாதார வளர்ச்சிக்காக பல திட்டங்களை கொண்டுள்ளவர்கள் அதைச் செய்ய தமிழ் புலம்பெயர்ந்தோர் வளங்களைக் கொண்டு வருவதாக அவர்கள் உறுதியளிக்கிறார்கள். அவர்கள் எம்.பி.க்களாக வந்தால், அவர்கள் வருமானத்தில் ஒரு பகுதியை தமிழர்களுக்கு நன்கொடையாக வழங்க விரும்புகிறார்கள்.அவர்கள் இலங்கையுடன் பேச விரும்பவில்லை, ஆனால் அமெரிக்கா அல்லது இந்தியா மதிப்பீட்டாளர்களாக வந்தால்,இந்த வல்லரசுகளுக்கு முன்னால் இலங்கையுடன் பேசுவதை அவர்கள் கருத்தில் கொள்ளலாம் என்கிறார்கள்.
பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தாயகத்திற்காக தமிழர் தாயகத்தில் உள்ள வளங்களை பகிர்ந்து கொள்ள அமெரிக்கா அல்லது இந்தியாவுடன் பேரம் பேச அவர்கள் தயாராக உள்ளனர்.எனவே கஜேந்திரகுமாரின் கட்சியை ஆதரிக்க விரும்புகிறோம். ஆகவே ஆகஸ்ட் 5 ஆம் தேதி சைக்கிளுக்கு வாக்களிக்கவும்,தமிழ் தேசியத்தை பாதுகாக்கவும் கோருகிறோம் என்றார்.
இதேவேளை குறித்த போராட்டத்தில் அரசியல் கலப்பு ஏற்பட்டுள்ளதா என்று ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு அரசியல் கலப்பு எதுவும் இல்லை சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுபவர்கள் நாம் எதிர்பார்க்கும் பொறிமுறையில் செல்வதால் அவர்களை ஆதரிக்கின்றோம் என்றார்,வெளிப்படையாக இவ்வாறான பதாதைகளை காட்சிப்படுத்தி போராட்டத்தை மேற்கொள்வது தாய்மார்களது போராட்டத்தை கொச்சைப்படுத்துவதுபோல இல்லையா என்று கேட்டதற்கு. ஒரு கொச்சைப்படுத்தலும் இல்லை இத்தனை நாட்கள் போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம். எங்கள் போராட்டம் தொடர்பான விடயங்களை யார் முன்னெடுக்கின்றார்கள் என ஆராய்ந்த பின்னரே இந்த முடிவினை எடுத்துள்ளோம் என்று மேலும் தெரிவித்தார்.காணாமல் போனோர் போரட்டம் மேற்கொள்ளும் பந்தலை அரசியல் மேடையாக பாவிக்கின்றீர்களா என்று கேட்டதற்கு அப்படி எதுவும் இல்லை. இலங்கை பிரச்சனையாக இதனை வைத்திருக்க நினைப்பவர்களே அப்படி தெரிவிக்கின்றனர் என்றார்.

31 ஜூலை 2020
வளங்களை சூறையாடுபவர்களை அகற்றவேண்டும்-புளியங்கூடலில் மணிவண்ணன்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடர்பில் கஜேந்திரன்!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஏன் தெரிவு செய்யவேண்டும்?புலம்பெயர்ந்த மக்கள் என்பது மாபெரும் சக்தி. எமது தேசத்தின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள். ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபா உதவிகளை செய்துவருகின்றார்கள். ஆனால் அந்த திட்டங்களை ஒருங்கிணைக்க கூடிய அவர்களது வளங்களை பயன்படுத்தக்கூடிய விரிவுபடுத்தப்பட்ட திட்டங்களோ நிறுவன கட்டமைப்போ ஏற்படுத்தப்படவில்லை. இதனை, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளாக கட்சி சார்பற்ற பொதுவேலைக்கான கட்டமைப்பை, மாவட்ட ரீதியாக ஏற்படுத்தி, தேசிய ரீதியாக ஒருங்கிணைக்ககூடிய பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவோம்.
முஸ்லிம்கள்:மொழியால் ஒன்றித்த தனித்துவமான தேசிய இனம். வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாக - தமிழ் மக்களின் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதிகள் என்ற வகையில் நட்புறவான கலந்துரையாடல்களை ஆரம்பித்து உறவுநிலையை பலப்படுத்துவோம்.
மக்களால் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற அங்கீகாரத்தின் அடிப்படையில் செயற்படும்போதே, உள்ளக கட்டமைப்புகளையும் வெளியக கட்டமைப்புகளையும் விரிவுபடுத்தி, தமிழ்த் தேசத்திற்கான அரசியல் இயக்கமாக மக்களுக்கான பலவேலைத்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுக்க முடியும். சர்வதேச நாடுகளுடனும் சர்வதேச நிறுவனங்களுடனும் அதிகாரபூர்வ பிரதிநிதிகளாக தொடர்புகளை பேணி, எமது மக்களுக்கான நீதிக்கான கோரிக்கைகளை, அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய விடயங்களை தேவைகளை அவர்களுக்கு முன்வைக்கமுடியும். சர்வதேச நாடுகளுடன் தமிழர்களது தேவைகள் நலன்கள் தொடர்பாக பேசி தீர்வு காண்பதற்கு முயல்வோம். மாறாக அவர்களின் முகவர்களாக செயற்படமாட்டோம்.
நன்றி:முகநூல் செ.கஜேந்திரன்
30 ஜூலை 2020
29 ஜூலை 2020
தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஐந்து பொது அமைப்புக்கள் கூட்டாக ஆதரவு தெரிவிப்பு!

கிழக்கில் மக்கள் முன்னணிக்கு ஆயுததாரிகள் அச்சுறுத்தல்!
கிழக்கு மாகாணத்தில் தமது கட்சி வேட்பாளருக்கு ஆயுதமுனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகவேண்டும் என ஆயுதமேந்திய நபர்கள் எச்சரித்துள்ளனர் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூறியுள்ளது. குறிப்பிட்ட வேட்பாளரின் தந்தையை ஆயுதமுனையில் அச்சுறுத்தியுள்ள நபர்கள், மகனை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகச் சொல்லுங்கள் விலகாவிட்டால் கடத்துவோம் என எச்சரித்துள்ளனர் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
25 ஜூலை 2020
என்னுடன் விவாதிக்க தகுதியற்றவர் சுமந்திரன்!
.jpg)
24 ஜூலை 2020
மக்கள் முன்னணி அலுவலகத்திற்குள் புகுந்து அட்டகாசம் புரிந்த அங்கயனின் அடியாட்கள்!

நன்றி:தாரகம்
21 ஜூலை 2020
சுமந்திரனின் பெயரை உச்சரிக்கும் தேவை இனி இருக்காது!

17 ஜூலை 2020
என் வெற்றியை விட சம்பந்தன்,சுமந்திரன் தோல்வி செய்தியே எனக்கு மகிழ்ச்சி என்கிறார் சிவாஜி!

15 ஜூலை 2020
வேலணையில் தேர்தல் பரப்புரையின்போது மோதல்!
வேலணை வங்களாவடி பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள் மீது நேற்று மாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், இருவர் கடுமையாக காயமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்களாவடி பகுதியில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குழுவினர், அப்பகுதியில் இருந்த சில இளைஞர்களை இடைமறித்து தமது துண்டுப்பிரசுரங்களை கொடுத்துள்ளனர்.
அதன்போது இளைஞர்கள் காரசாரமாக கேள்விகளைத் தொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது கடும் வாக்குவாதமாக மாறி கைகலப்பு வரை சென்றுள்ளது. இதன் போது கோபமடைந்த குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் இளைஞர்களை சரமாரியாக தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த இளைஞன் வேலணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்,போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
14 ஜூலை 2020
ஊர்காவற்றுறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் திடீர் மரணம்!

12 ஜூலை 2020
புளியங்கூடல் சக்களாப்பதி அருள்மிகு கதிர்காமக் கந்தன்!

(ஆலய நிர்வாகத்தினர்)
செய்தி அனுப்பிய அன்பருக்கு நன்றி!
07 ஜூலை 2020
தீர்வு கிடைக்காமல் போனமைக்கு தமிழ் தலைமைகளே காரணம்!

05 ஜூலை 2020
மக்கள் முன்னணி அலுவலத்தில் படைதரப்பு தேடுதல்!
.jpg)
03 ஜூலை 2020
சுமந்திரனுக்கு வாக்களிப்பது தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகம்!

16 ஜூன் 2020
சீமானுக்கு அவுஸ்திரேலிய பா.உ.ஹக் நெகிழ்ச்சிக் கடிதம்!

நன்றி:சுடர் செய்தி
15 ஜூன் 2020
கஜேந்திரகுமார் தலைமையில் தேர்தல் தொடர்பிலான கலந்தாய்வு!
.jpg)
.jpg)
13 ஜூன் 2020
நினைவேந்தல்களை எட்டியும் பார்த்திராதவர் சுமந்திரன்!

02 ஜூன் 2020
ட்ரம்ப் வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும்,பொலிஸ் அதிகாரியின் கோபம்!

01 ஜூன் 2020
அமெரிக்காவில் மக்கள் போராட்டம்,பதுங்கு குழியில் டொனால்ட் ட்ரம்ப்!

18 மே 2020
சிறிலங்கா இணையங்கள் மீது சைபர் தாக்குதல்!

நன்றி:பதிவு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)