வேலணை வங்களாவடி பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள் மீது நேற்று மாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், இருவர் கடுமையாக காயமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்களாவடி பகுதியில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குழுவினர், அப்பகுதியில் இருந்த சில இளைஞர்களை இடைமறித்து தமது துண்டுப்பிரசுரங்களை கொடுத்துள்ளனர்.
அதன்போது இளைஞர்கள் காரசாரமாக கேள்விகளைத் தொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது கடும் வாக்குவாதமாக மாறி கைகலப்பு வரை சென்றுள்ளது. இதன் போது கோபமடைந்த குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் இளைஞர்களை சரமாரியாக தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த இளைஞன் வேலணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்,போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.