பக்கங்கள்

31 ஜூலை 2020

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடர்பில் கஜேந்திரன்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஏன் தெரிவு செய்ய
வேண்டும்?புலம்பெயர்ந்த மக்கள் என்பது மாபெரும் சக்தி. எமது தேசத்தின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள். ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபா உதவிகளை செய்துவருகின்றார்கள். ஆனால் அந்த திட்டங்களை ஒருங்கிணைக்க கூடிய அவர்களது வளங்களை பயன்படுத்தக்கூடிய விரிவுபடுத்தப்பட்ட திட்டங்களோ நிறுவன கட்டமைப்போ ஏற்படுத்தப்படவில்லை. இதனை, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளாக கட்சி சார்பற்ற பொதுவேலைக்கான கட்டமைப்பை, மாவட்ட ரீதியாக ஏற்படுத்தி, தேசிய ரீதியாக ஒருங்கிணைக்ககூடிய பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவோம்.

முஸ்லிம்கள்:மொழியால் ஒன்றித்த தனித்துவமான தேசிய இனம். வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாக - தமிழ் மக்களின் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதிகள் என்ற வகையில் நட்புறவான கலந்துரையாடல்களை ஆரம்பித்து உறவுநிலையை பலப்படுத்துவோம்.
மக்களால் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற அங்கீகாரத்தின் அடிப்படையில் செயற்படும்போதே, உள்ளக கட்டமைப்புகளையும் வெளியக கட்டமைப்புகளையும் விரிவுபடுத்தி, தமிழ்த் தேசத்திற்கான அரசியல் இயக்கமாக மக்களுக்கான பலவேலைத்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுக்க முடியும். சர்வதேச நாடுகளுடனும் சர்வதேச நிறுவனங்களுடனும் அதிகாரபூர்வ பிரதிநிதிகளாக தொடர்புகளை பேணி, எமது மக்களுக்கான நீதிக்கான கோரிக்கைகளை, அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய விடயங்களை தேவைகளை அவர்களுக்கு முன்வைக்கமுடியும். சர்வதேச நாடுகளுடன் தமிழர்களது தேவைகள் நலன்கள் தொடர்பாக பேசி தீர்வு காண்பதற்கு முயல்வோம். மாறாக அவர்களின் முகவர்களாக செயற்படமாட்டோம்.

நன்றி:முகநூல் செ.கஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.