யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் இன்று மதியம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 50இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில், கரும்புலிகள் தினத்தை நினைவு கூருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையிலேயே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக, கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தெரிவித்துள்ளார்.
இதற்கு கஜேந்திரகுமார், பொன்னம்பலம், பொலிசாருக்கு தவறான தகவல் கிடைத்திருக்கலாம் அல்லது கட்சி உறுப்பினர்களை அச்சுறுத்துவதற்காகவும் பொதுமக்களை தமது அமைப்பிலிருந்து ஒதுங்கி நிற்கச் செய்வதற்காக வேண்டுமென்றே இதனைச் செய்திருக்கலாம் என்றும் யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தாங்கள் மேலிட உத்தரவை மட்டுமே நடைமுறைப்படுத்தியதாக, யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.இவ்வாறு இணையம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.