முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தன்னுடன் விவாதிப்பதற்கு தகுதி இல்லாத ஒருவர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம், பாண்டிருப்பு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இங்கு உரையாற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்த முறை சுமந்திரன் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு தோல்வி அடைவார் என்று குறிப்பிட்டார்.
தனது கட்சித் தலைவரினால் கூட நிராகரிக்கப்பட்ட அவருடன், விவாதத்திற்கு சென்று, மக்கள் மத்தியில் அவருக்கு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுக்க போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தான் ஒரு கட்சியின் தலைவர் என்றும், தன்னுடன் விவாதிப்பதற்கு சுமந்திரனுக்குத் தகுதி இல்லை என்றும், கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
அவருடன் பல இடங்களில் விவாதித்துள்ள நிலையில், தற்போது ஒளித்துக் கொண்டு திரியும் அவர், தப்புவதற்கான சில வழிகளை தேடி வருகின்றார் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.