
தமிழர் தாயகம் மீது சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஜெர்மனியின் பிறேமனில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
ரோம் நகரை தலைமையமாகக் கொண்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், கடந்த மூன்று தினங்களாக இந்த விசாரணையை முன்னெடுத்தது.
இதன் இறுதி நாளான இன்று சிறிலங்காவுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதில் சிறிலங்கா அரசாங்கம் பாரியளவில் மனித படுகொலையில் ஈடுபட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் குற்றச் செயல்களுக்கு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் ஒத்துழைப்பு வழங்கியதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
சர்வதேச மனித உரிமைக் கூட்டமைப்பு மற்றும் சிறிலங்காசமாதானத்திற்கான அயர்லாந்து பேரவை ஆகியன இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தன.
இந்த வழக்கு தொடர்பான முதலாம் கட்ட விசாரணை 2010ம் ஆண்டில் டப்ளினில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
சிறிலங்காவுக்கு எதிரான யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் முதல் தடவையாக நீதிமன்றமொன்றில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சனல்4 ஊடகத்தின் ஊடகவியலாளர் கலம் மக்ரே மற்றும் புலம்பெயர் தமிழர்களும் இந்த நீதிமன்ற விசாரணைகளில் பங்கேற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிரந்தர மக்கள் நீதிமன்றின் இந்தத் தீர்ப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களிடம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.