
பிரெஞ்சு தொண்டு நிறுவனமான, ஏ.சி.எப் 2006ல் இலங்கையில் தனது உள்ளூர் ஊழியர்கள் 17 பேரைக் கொன்றது இலங்கைப் பாதுகாப்புப் படையினர்தான் என்று குற்றம் சாட்டியிருக்கிறது.
தனது ஊழியர்கள், முழங்காலிட வைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும், இவர்களைக் கொன்ற கொலையாளிகளை இலங்கை அரசு இது வரை பாதுகாத்து வருகிறது என்றும் கூறுகிறது.
இந்தத் தகவல் நேரில் கண்டவர்களிடமிருந்தும், ரகசிய ஆவணங்களிலிருந்தும், ராஜிய வட்டாரங்களிலிருந்தும் தனக்குக் கிடைத்துள்ளதாக அது கூறுகிறது.
இந்தத் தகவலை இது வரை இந்த நிறுவனம் வெளியிடாமல் வைத்திருந்ததன் உள்நோக்கங்களை இலங்கை ராணுவத்துக்காகப் பேசவல்ல அதிகாரி ஒருவர் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்.
நன்றி:பி.பி.சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.