
சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து நடத்தப்பட்ட குழு விவாதத்தில் பங்கெடுக்க விடுக்கப்பட்ட அழைப்பை பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதுவர் கிறிஸ் நொனிஸ் நிராகரித்து விட்டார்.
புரொன்ட்லைன் கிளப்பில் நடந்த இந்த குழு நிலை விவாதத்தில், சிறிலங்காவின் முடிவுறாப் போர் ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் பிரான்செஸ் ஹரிசன், சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படங்களின் தயாரிப்பாளர் கலும் மக்ரே, சித்திரவதையில் இருந்து விடுதலை அமைப்பின் கொள்கை மற்றும் ஆலோசனை முகாமையாளர் சோனியா ஸ்கீற்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து வெளியிட்ட கலும் மக்ரே,
“சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் எந்த விசாரணைகளிலும் நம்பகத்தன்மை இல்லை.
சிறிலங்காவுக்கு விசாரணை ஆணைக்குழுக்களை நியமிக்கும் நீண்ட முடிவற்ற வரலாறு உள்ளது.
வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக இன்னும் பல ஆணைக்குழுக்களை நாம் பார்க்க முடியுமென நினைக்கிறேன்.
துரதிஷ்டவசமாக தென்னாபிரிக்காவின் உதவியுடன் போலியானதொரு உண்மை நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படும் என நினைக்கிறேன்.
கடந்த காலங்களில் அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதன் அடிப்படையில், எந்த விசாரணையும் போலியானதாக இருக்கும் என்று உத்தரவாதம் அளிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொன் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றது குறித்து கருத்து வெளியிட்ட கலும் மக்ரே, இப்போது நாம் அழுத்தங்களை தொடர வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.