
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் இன்று திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள இவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மற்றும் வட மாகண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.அத்துடன் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு செயற்படும் பல அமைப்புக்களையும் சந்தித்து அவர் பேச்சு நடத்தியுள்ளார்.
இதேவேளை, யாழிலுள்ள சபாபதிப்பிள்ளை அகதி முகாமிற்கும் இவர் விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த முகாமிற்கு ஏற்கனவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் எதிர்வரும் 4ம் திகதி வரை இலங்கையினில் தங்கி நிற்கும் அவர் யுத்த பாதிப்பிற்குள்ளான பகுதிகளையும் நேரினில் பார்வையிட ஆர்வம் கொண்டுள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள அவர் வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயமுள்ளிட்ட பல பகுதிகளையும் நேரினில் சென்று பார்வையிட்டார். வலி.வடக்கு பிரதேசம் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள இடங்களை, கூட்டமைப்பு வலி.வடக்கு பிரதேச சபை தலைவர் சோ.சுகிர்தன் நேரினில் அழைத்து சென்று காண்பித்தார்.
நாளை முல்லைதீவிற்கும் அவர் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே ராதிகா சிற்சபேசனது யாழ் பயணம் தொடர்பாக அவரை இராணுவப் புலனாய்வு பிரிவினர் பின்தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.