யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்கு வீதி 90ம் இலக்க வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டின் குளியலறையில் இருந்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த வீட்டில் வசிக்கும் சிதம்பரபிள்ளை சண்முகநாதன் என தெரியவந்துள்ளது.
சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.