கொழும்பு தேசிய நூதனசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு (16) கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் நூதனசாலையில் வைக்கப்பட்டிருந்த வரலாற்றுப் புகழ்மிக்க வாள் காணாமல் போயுள்ளது. இந்த வாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்படவுள்ள பரிகார பலி பூசைக்காக திருடப்பட்டிருக்கலாம் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பு – புறக்கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் தற்போது உத்தியோகபூர்வ பணிகள் முன்னெடுக்கப்படுவதில்லை. இங்கே ஜனாதிபதிக்கான பரிகார பூசைகளும், மத வழிபாட்டு நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இங்கு இந்திய பூசாரிகளும், சாமியார்களும் தொடர் பூஜைகளையும், யாகங்களையும் செய்து வருகின்றனர். இந்தப் பூசாரிகளில் ஒருவர் கடந்த 15ஆம் திகதி பிற்பகல், ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரியொருவருடன் தேசிய நூதனசாலையைப் பார்வையிடச் சென்றுள்ளார்.
அன்றைய தினம் தேசிய நூதனசாலையில் மூடப்பட்டிருந்த அனைத்து அறைகளின் கதவுகளும் திறக்கப்பட்டதாக நூதனசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக வார இறுதி நாட்களில் கூட நூதனசாலை திறந்துவைக்கப்பட்டிருக்கும். எனினும், கடந்த வெள்ளிக்கிழமை சம்பவ தினத்தன்று நூதன சாலை மூடப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், தேசிய நூதனசாலைக்குப் பொறுப்பாக்க பணியாற்றும், தேசிய மரபுரிமைகள் அமைச்சின் செயலாளர் கலாநிதி ஜகத் பாலசூரியவின் மனைவியான, தென் மாகாண சபையின் ஆளுநர் குமாரி பாலசூரிய ஜனாதிபதிக்கு நெருக்கமான உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதிக்கு தற்போதுள்ள கண்டத்திற்குப் பரிகாரமாகவும், அவருக்கு நீண்ட ஆயுளை வேண்டியும் ‘மனித பலி’ பூஜையொன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக எமது இணையத்தளம் இதற்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது.
இதனை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது நூதனசாலையில் இருந்த வாள் குறித்த பலி பூஜைக்காகத் தான் திருடப்பட்டுள்ளது என்ற சந்தேகம் வலுத்து வருகிறது என எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நன்றி:(செய்தி) சரிதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.