ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை
நிறைவேற்றத் தேவையான பெரும்பான்மை நாடுகளின் ஆதரவை அமெரிக்கா பெற்று விட்டதாக
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவுக்கு எதிரான இந்தத்
தீர்மானம், சிறிலங்கா நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் வாக்கெடுப்புக்கு
விடப்படவுள்ளது.
|
இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான பெரும்பான்மையான 24
நாடுகளின் ஆதரவை அமெரிக்கா பெற்றுக் கொண்டுள்ளது. அதேவேளை, நேற்றுமாலை 9 நாடுகளின்
ஆதரவை மட்டுமே கொண்டிருந்த சிறிலங்கா இன்று காலை 17 நாடுகளின் ஆதரவைப் பெற்ற
நிலையில் இருப்பதாகவும் கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. சீனா மேற்கொண்ட
பரப்புரைகளின் விளைவாகவே சிறிலங்காவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாகவும் அந்த ஊடகம்
குறிப்பிட்டுள்ளது.
|
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
22 மார்ச் 2012
பெரும்பான்மை ஆதரவுடன் வாக்கெடுப்பு களத்தில் அமெரிக்கா.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.