சேலம் மாவட்டம் மேட்டூர் காவிரிபாலம் அருகே அண்ணாநகரில் அமைந்துள்ள எல்லை மாரியம்மன் கோயிலில் கடந்த சில நாட்களாக திருவிழா நடந்துவருகிறது. திருவிழாவின் இறுதிநாளான இன்று அதிகாலை சுவாமி ஊர்வலம் நடந்தது.
இந்நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு அம்மனின் இரண்டு கண்களில் இருந்தும் திடீரென கண்ணீர் வடிந்துள்ளது.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர் ஒருவர், பூசாரி மற்றும் அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் மக்கள் அங்கு திரண்டனர்.
இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதால், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மக்களும் ஏராளமானோர் குவிந்தனர். பக்தர்கள் அனைவரும் சூடம் ஏற்றி அம்மனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். மதியம் வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து சென்றனர். தொடர்ந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.