பக்கங்கள்

20 ஏப்ரல் 2010

சூர்யாவுடன் ஜோடி சேர்கிறார் சுருதி!


குருவி,' `ஆதவன்' ஆகிய படங்களை தயாரித்தவர், உதயநிதி ஸ்டாலின். இவர் அடுத்து தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் ஒரு புதிய படம் தயாரிக்கிறார்.

இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்கிறார்.

இருவரும் இணைந்து பணிபுரிந்த `கஜினி' படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு இரண்டு பேரும் மீண்டும் இணையும் படம் இது என்பதால், இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.

முருகதாஸ் டைரக்டு செய்ய, சூர்யா நடிக்கும் இந்த புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக யாரை நடிக்க வைப்பது? என்று உதயநிதி ஸ்டாலினும், ஏ.ஆர்.முருகதாசும் விவாதித்து வந்தார்கள்.

சுருதி ஹாசனை நடிக்க வைக்கலாம் என்ற யோசனை முதலிலேயே எழுந்தது. இதையொட்டி ஏ.ஆர்.முருகதாஸ், சுருதிஹாசனை அணுகி பேச்சுவார்த்தை நடத்தினார். சுருதி ஏற்கனவே ஒரு இந்தி படத்தில் நடித்துக்கொண்டிருப்பதால், அவரால் உடனடியாக சம்மதம் தெரிவிக்க முடியவில்லை. ``யோசித்து சொல்கிறேன்'' என்றார்.

அதனால் வேறு கதாநாயகிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

இந்த நிலையில், சூர்யா ஜோடியாக நடிப்பதற்கு சுருதி ஹாசன் சம்மதம் தெரிவித்து இருக்கிறார். அவர் நடிக்கும் முதல் தமிழ் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் (மே) இறுதியில் தொடங்குகிறது. பெரும்பாலான காட்சிகளை சீனாவில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.