ஈரம் படத்தில் நாயகியாக நடித்த சிந்து மேனன் கம்ப்யூட்டர் என்ஜினியருடன் திடீர் திருமணம் செய்து கொண்டார். பாரதிராஜா இயக்கிய கடல் பூக்கள் படத்தின் கதாநாயகியாக அறிமுகமானவர் சிந்து மேனன். அதைத்தொடர்ந்து சரத்குமார் நடித்த சமுத்திரம் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கன்னடம், தெலுங்கு, மற்றும் மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் சுமார் பத்து வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் இயக்குநர் ஷங்கரின் சொந்த தயாரிப்பான ஈரம் படத்தின் கதாநாயகியாகவும் நடித்தார். நிஜமாகவே படத்தில் இவரது கேரக்டர் இதயத்தில் ஈரம் கசிய வைத்தது. அதன்பின் வந்த வாய்ப்புகள் எதுவும் சிந்துவின் மனசுக்கு பிடிக்காததால் மீண்டும் அன்னிய மொழி படங்களில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்தார். கேரளாவைச் சேர்ந்த அவர் பெங்களூரில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கும் லண்டனில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரியும் பிரபு என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்ததது. இருவரும் போன் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும் காதலித்து வந்தனர். இந்தநிலையில் சிந்துமேனனும், பிரபுவும் பெங்களூரில் திடீரென்று திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இந்த செய்தியை சிந்துமேனனோ, அவரது பெற்றோரோ உறுதி செய்யவுமில்லை, மறுக்கவுமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.