பக்கங்கள்

23 ஏப்ரல் 2010

சிங்கள காதலர் இருவர் யாழில் கத்திக்குத்து சண்டை!

யாழ் குடாநாட்டில் ஏற்கனவே பல வன்முறைகள் நடந்துவரும் நிலையில், நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் சிங்களக் காதலர்கள் இருவர் கத்திக்குத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் பலர் கூடும் இடத்தில் அதுவும் மிக அத்தியாவசிய சேவையான மருத்துவ சேவையில் கடமையாற்றும் இருவர் இவ்வாறு நடந்துகொண்டமை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதோடு முகஞ்சுழிக்கவும் வைத்துள்ளது. தென்னிலங்கையைச் சேர்ந்த சீ.கமகே (26) என்பவர் யாழ் போதனா வைத்தியசாலையின் கண் பரிசோதனை நிலையத்தில் தொழில்நுட்பவியலாளராக நியமனம் பெற்று வந்துவிட்டதால் அவரைச் சந்திப்பதற்கென அவரது காதலி அஞ்சலி (22) என்பவர் வந்துள்ளார். அஞ்சலி கொழும்பு தேசிய வைத்திய சாலையில் தாதியாகப் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வந்த இடத்தில் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு மாறி மாறி கத்தியால் குத்தியுள்ளனர்.இந்தச் சம்பவத்தில் கமகே கழுத்தில் படுகாயமடைந்தார். அஞ்சலி கையில் காயமடைந்தார். இப்போது இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். இச்சம்பவத்தை நேரில் பார்த்த நோயாளிகள் என்ன செய்வது எனத் தெரியாமல் அல்லாடியதைக் காணக்கூடியதாக இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.