உயர்தரப் பரீட்சையில் தான் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காமையினால் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த மாணவரே விஷமருந்தி தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.வர்த்தகப் பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய குறித்த மாணவன் தனது சக மாணவர்களை விடவும் குறைந்தளவு மதிப்பெண்களை பெற்றதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.மாலை வேளையில் மாணவனது அறையில் அழுகுரல் கேட்டதாகவும்,ஓடிச்சென்று பார்த்தபோது மாணவன் வாந்தி எடுப்பதைக் கண்டு உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து சென்றதாகவும்,மாணவனது உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
29 டிசம்பர் 2017
மாணவன் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி!
உயர்தரப் பரீட்சையில் தான் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காமையினால் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த மாணவரே விஷமருந்தி தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.வர்த்தகப் பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய குறித்த மாணவன் தனது சக மாணவர்களை விடவும் குறைந்தளவு மதிப்பெண்களை பெற்றதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.மாலை வேளையில் மாணவனது அறையில் அழுகுரல் கேட்டதாகவும்,ஓடிச்சென்று பார்த்தபோது மாணவன் வாந்தி எடுப்பதைக் கண்டு உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து சென்றதாகவும்,மாணவனது உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.27 டிசம்பர் 2017
வெற்றி பெற்றால் ஊதியமின்றி பணி-மணிவண்ணன்.
26 டிசம்பர் 2017
தமிழரசுக் கட்சியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துகிறார் வடக்கு முதல்வர்!
நான் எந்தக் கட்சியையும் நாடிச் செல்லவில்லை. எந்தக் கட்சியின் ஆண்டு சந்தாப் பணத்தைக் கட்டி விடுபவனும் அல்ல. எந்தக் கட்சியும் என்னைத் தமது கூட்டங்களுக்கு அழைத்து வரவுமில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“நீங்கள் உங்கள் கட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றீர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. உங்கள் நடவடிக்கைகள் மீண்டும் வன்முறையைத் தோற்றி விடுமோ என்ற பயம் தெற்கில் எழுந்துள்ளது. உங்கள் பதில் என்ன?” என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.
'என்னைப் பொறுத்த வரையில் எனக்கென்று கட்சி ஒன்றில்லை. என்னுடைய ஒத்த கருத்துடையவர்கள் தமிழ் மக்கள் பேரவை என்ற நாமத்துடன் ஒரு மக்கள் இயக்கமாகப் பரிணமித்துள்ளார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமொன்று திருகோணமலையில் சில வருடங்களுக்கு முன்னர் நடந்த போது 8 பேர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் பின் அக் குழுவிற்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. கட்சி அரசியல் எதுவும் வேண்டாம் என்றிருந்த என்னை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் ஐந்து கட்சிகள் சேர்ந்த தலைவர்கள் ஒருங்கே வந்து வலிந்து கேட்ட போது மறுக்க முடியாமல் அரசியலில் கால் வைத்தேன். நான் சேர முன் வந்தது அந்த ஐந்து கட்சிகள் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள்ளேயே. அப்போது அது பதிவு செய்யப்படாத ஒரு அரசியல் கூட்டமைப்பு என்பது கூடத் தெரியாதிருந்தது.சேர்ந்த போது தான் பலதும் வெளிவந்தன. ஆனால் முன்னர் வன்முறை சாராத கட்சி என்ற வகையில் இயற்கையாகவே இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் தான் எனது தொடர்புகள் சார்ந்திருந்தன. 2013ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனம் எனக்குத் தரப்பட்டது. அதில் உள்ள கொள்கைகள் எனக்குச் சரியெனப்பட்டன. எனவே அதனை அடிப்படையாகக் கொண்டு என் அரசியல் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டேன். ஆனால் வெகுவிரைவில் ஒன்றை உணர்ந்து கொண்டேன். விஞ்ஞாபனக் கொள்கைகளுக்கும் விரவியிருந்த யதார்த்த நிலைக்கும் இடையில் பாரிய விரிசல் இருந்ததை நான் உணர்ந்தேன்.
கொள்கைகள் மக்களுக்கு ஆனால் அரசியல் கொடுக்கல் வாங்கல்கள் கட்சித் தலைமைப்பீடங்களுக்கே என்பது தான் யதார்த்தமாக இருந்தது. இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் அல்லது அவற்றோடு சம்பந்தப்பட்ட முடிவுகள் எந்தவித கூட்டுக் கருத்துப் பரிமாற்றத்தின் அடிப்படையில் எடுக்கப்படவில்லை என்பதையும் கண்டு கொண்டேன்.
நடைமுறை நலன்கள் எவ்வாறு அமைந்தனவோ அவற்றை முன்வைத்தே தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அங்கு சுயநலமே கட்சித் தலைமைப்பீடத்தால் கருத்துக்கெடுக்கப்பட்டது என்பதையும் உணர்ந்து கொண்டேன். உதாரணத்திற்கு தேர்தல் விஞ்ஞாபன சிந்தனைக்கேற்ப இனப்படுகொலை சம்பந்தமான பிரேரணை கொண்டுவரப்பட்டு எமது வடமாகாண சபையால் 10.02.2015இல் ஏக மனதாக ஏற்கப்பட்ட போது கட்சித் தலைமைத்துவம் அதிர்ச்சி அடைந்ததை நான் கண்டேன்.
அது சம்பந்தமான தலைமைத்துவக் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக அமைந்ததையும் கண்டு கொண்டேன். பின்னர் தான் அறிந்து கொண்டேன் சிலருக்கு வரவிருந்த சுயநல வரவுகள் சில அந்தப் பிரேரணையால் பறிபோனதென்று.நாங்கள் மக்களிடம் வாக்கு கேட்கும் போது எமது கொள்கைகளை முன் வைத்தே கேட்கின்றோம். என்னைப் பொறுத்த வரையில் அவற்றை மாற்றி, குறைத்தோ கூட்டியோ நாங்கள் அரசாங்கத்திடம் எமது கோரிக்கைகளை முன் வைப்பது என்றால் அது மக்களின் கருத்துக்கிசைவாக நடைபெற வேண்டும்.
ஆகக் குறைந்தது கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களின் கருத்தொருமிப்பின் அடிப்படையில் அவ்வாறான முரண்பட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட வேண்டும். ஏன் என்றால் நாங்கள் மக்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள். அவர்கள் நலம் சார்ந்தே நாங்கள் அரசியல் ரீதியாக நடந்து கொள்ள வேண்டும். தான்தோன்றித்தனமாக சுயலாபம் கருதி நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது.ஆனால் அவ்வாறு தலைமையே கூட்டுக் கட்சியின் கொள்கைகளை உதாசீனம் செய்யும் போது ஒருவர் என்ன செய்ய வேண்டும்? ஒன்று வெளியேற வேண்டும். வெளியேறினால் உதாசீனம் செய்து நடந்து கொள்பவர்கள் கை ஓங்கிவிடும். இது எமது மக்களையே பாதிக்கும்.மக்கள் பெருவாரியாக என்னைத் தேர்ந்தெடுத்த போது இலங்கைத் தமிழரசுக் கட்சியினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் ஒட்டு மொத்த கொள்கைகளின் அடிப்படையில் தான் தேர்ந்தெடுத்தார்கள். அவற்றிலிருந்து ஒரு கட்சியின் தலைமைத்துவம் வழுக முற்படும் போது கட்சியின் நடவடிக்கைகளை மக்கள் சார்பாக மாற்ற எத்தனிப்பதே எமது கடமை என்று உணர்ந்தேன்.
கட்சித் தலைமைத்துவம் கட்சிக் கொள்கைகளை மாற்றும் போது உபயோகிக்கும் கருவி தான் கட்சி ஒழுக்கம் என்ற பிரம்பு. “நாங்கள் சொல்வதை நீங்கள் செய்யுங்கள். இல்லையேல் அடுத்த முறை உங்களுக்குக் கட்சித் துண்டு கிடைக்காது” என்பார்கள் அல்லது “நாங்கள் சொல்வதை நீங்கள் மக்களுக்கு எடுத்துச் சென்றீர்கள் என்றால் அடுத்த முறை உங்களுக்குத் துண்டு நிச்சயம்” என்பார்கள்.
நான் என் கட்சியை அடையாளப்படுத்துங்கள் என்று ஏற்கனவே உங்களிடம் கேட்டுள்ளேன். இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கட்டுப்பட்டு நான் நடக்கவில்லை என்று கூறும் போது அதே கட்சியின் கொள்கைக்குக் கட்டுப்படாத கட்சித் தலைமைத்துவத்துக்கு நான் என்ன பதில் கூற முடியும்? என்னை கட்சிக் கூட்டங்களுக்கு அழைத்திருந்தால் எமது முரண்பாடுகள் பற்றிக் கூறியிருப்பேன். அது நடைபெறாத நிலையில் எமது கொள்கை ரீதியான விடயங்களை வெளிப்படையாக மக்களுக்குக் கூறுவதே எமது கடமை என்று நான் நினைத்தேன். அதையே செய்தும் வருகின்றேன்.
தவறிழைக்கும் கட்சித் தலைமைப்பீடம் தங்களைச் சரியான வழிக்கு மாற்றாமல் என்னைக் குறை கூறுவது விசித்திரமாக இருக்கின்றது. தற்போதைய உள்ளூராட்சித் தேர்தலுக்கு எந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தை முன் வைத்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வாக்குக் கேட்கின்றது என்பதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அப்பொழுது தான் கட்சித் தலைமைத்துவத்திடம் சில கேள்விகளை மக்கள் கேட்கலாம். அதாவது எமக்கு ஒன்றைக் கூறி அதற்கு மாறாக அரசாங்கத்துடன் நீங்கள் நடந்து கொள்ளும் நடவடிக்கையின் பின்னணி என்ன? நெருக்குதல்கள் காரணம் எனின் யாரால் ஏற்படுத்தப்பட்ட நெருக்குதல்கள்? என்று இன்னோரன்ன கேள்விகளை மக்கள் கேட்க வழிவகுக்க வேண்டும்.அதை விட்டு விட்டு “நாம் தான் தலைமை! நாம் முடிவெடுத்து விட்டோம். அது வழி நடவுங்கள் அல்லது சீட்டுமில்லை சிறப்புமில்லை” என்று கூறுவது ஜனநாயகம் ஆகாது. அவ்வாறான நடவடிக்கைகள் தமிழ் மக்களின் நலஞ் சாராது.ஆகவே தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு நான் கூறும் பதில் பல தடவைகள் சிறை சென்ற போது நீங்கள் கொண்டிருந்த உறுதியான கொள்கைகளில் இருந்து நீங்கள் வழுவி விட்டீர்களா? ஏன்? பிறழ்வான கொள்கைகளுக்கு என்னைப் பணியச் செய்வதில் உங்களுக்கென்ன இலாபம்? உங்கள் கொள்கைகளைப் பழையபடி உறுதியாக எடுத்தியம்பி நிலையான தமிழரசுக் கட்சிக் கொள்கைகளுக்கு நீங்கள் இன்னமும் விஸ்வாசமாக இருக்கின்றீர்கள் என்று பகிரங்கமாக அறிவியுங்கள்.
இடைக்கால அறிக்கையின் போதாமை பற்றிப் பிரஸ்தாபியுங்கள். எவற்றை நாங்கள் அரசியல் ரீதியாகப் பெறவேண்டும் என்பதைப் பகிரங்கமாக அறிவியுங்கள். அவை கட்சியின் 2013ஆம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு ஏற்புடையதாக இருந்தால் நான் கட்சி கூறுவதற்குக் கட்டுப்படுவேன்.
அடுத்து மீண்டும் வன்முறை வெடிக்கும் சாத்தியம் பற்றியது...
உண்மையைக் கூறினால் வன்முறை வெடிக்கும் என்று கூறுவதின் அர்த்தம் ஒருவர் மிரட்டினால் அடங்கிப் போங்கள் என்பது தான். நாம் கூறி வருவது எமக்குத் தெரிந்த உண்மை. உண்மையைக் கூறப் பின் நின்றால் பொய்மைக்கு நாம் இடமளிக்க வேண்டி வரும். சரித்திர ரீதியாக சிங்கள மொழி 6ஆம் 7ஆம் நூற்றாண்டுகளிலேயே பிறந்தது என்றேன். எனவே அதற்கு முன்னைய மக்களைச் சிங்கள மக்கள் என்று நாம் எவ்வாறு அழைக்க முடியும் என்று கேள்வி கேட்டேன். சிங்கள மொழி பேசுவதால் தான் ஒரு குழு மக்கள் சிங்கள மக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டார்கள்.
அந்த மொழியே ஒரு காலத்தில் இல்லாதிருந்த போது அம் மக்கள் அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று எவ்வாறு அடையாளப்படுத்த முடியும்? இது தான் யதார்த்தம். இது தான் உண்மை.நாங்கள் இது வரை இதைக் கூறவில்லை. இப்பொழுது இதை நான் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதைப் பொறுக்க மாட்டாதவர்கள் தான் என்னைப் பைத்தியம் என்கின்றார்கள், பயங்கரவாதி என்கின்றார்கள். பகைவனாகப் பார்க்கின்றார்கள்.அடுத்து நான் சமஷ்டியைக் கோருவதால் வன்முறை வெடித்துவிடும் என்று பயமுறுத்துகின்றார்கள். இப்பொழுது சிங்கள மக்களிடையே படிப்பறிவுடையவர்கள் சமஷ்டியைச் சரியென ஏற்றுக்கொண்டு வருகின்றார்கள்.பின் எதற்கு இந்தப் பயம்? ஒரு விடயம் புரியாமல் இருக்கும் போது உணர்ச்சிவசப்பட்டு நாங்கள் அதை இதைக் கூறிவிடுகின்றோம். ஆனால் புரிந்துணர்வு ஏற்படும் போது அமைதியாக சிந்திக்க தொடங்குகின்றோம்.
சமஷ்டி ஒரு பூச்சாண்டி அல்ல. அது பிரிவினை அல்ல. மாறாக மக்களைச் சேர்க்கும் ஒரு அரசியல் உபாயம் என்பதை நாங்கள் சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். எங்களுள் சிங்களம் தெரிந்தவர்கள் இதைச் சிங்களப் பொது மக்களின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும்.சிவாஜிலிங்கமும் நானும் இதைச் செய்கின்றோம். அதே போல் சம்பந்தனும், சுமந்திரனும் சிங்களம் தெரிந்தவர்கள் என்ற முறையில் சிங்கள மக்களுக்கு சமஷ்டியின் தேவைகளையும் அரசியல் ரீதியான பொருத்தத்தையும் எடுத்துக் கூற முன் வர வேண்டும்.
எம்மவருள் சிலர் “அது எப்படி சமஷ்டியைக் கேட்பது சிங்களவர்கள் அதற்கெதிரே” என்று கூறுகின்றார்கள். அவர்கள் தான் தெற்கில் இருந்து கொண்டு சிங்கள மக்கள் தலைவர்களை உசுப்பேற்றி விடுகின்றார்கள்.இவர்கள் ஒன்றைப் புரிந்த கொள்ள வேண்டும். நாங்கள் வடகிழக்கு இணைப்பை விட்டுக் கொடுத்து, தாயகத்தை விட்டுக் கொடுத்து, சுய நிர்ணய உரிமையை விட்டுக் கொடுத்து, சமஷ்டியை விட்டுக் கொடுத்து ஒரு சில எலும்புத் துண்டுகளுக்காகக் குறைந்த ஒரு தீர்வைப் பெற்று விடலாம். எலும்புத் துண்டுகள் எமது அப்போதைய சுயநலப் பசியைத் திருப்திப்படுத்தக் கூடும். ஆனால் நாளடைவில் நடக்கப் போவதென்ன? எமது தனித்துவம் அழிந்து விடும்.
மீண்டும் மீண்டும் எமது மக்கள் வெளிநாடுகள் நோக்கிச் செல்வார்கள். இப்பொழுது எமது வடமாகாண சபையில் இருவர் இருக்கும் இடத்தில் சபையின் பாதி அவர்களின் மக்கள் என்ற நிலை 20 வருடங்களுக்குள்ளேயே ஏற்பட்டு விடும்.இன்று பறங்கியர் பற்றி பேசும் போது நாம் கடந்த காலத்தைச் சுட்டியே பேசுகின்றோம். ஐம்பது வருடங்களின் பின்னர் எம்மைப் பற்றியும் கடந்த காலத்தில் தான் வைத்துப் பேசுவார்கள்.
இந்த நிலை வர ஒரு சில எலும்புகளைப் பெற்று கொள்கைகளை விட்டுக் கொடுப்பது தான் சரி என்று இந்தத் தெற்கத்தியத் தமிழர்கள் நினைக்கின்றார்களா? இந்த நிலை வர வேண்டும் என்பது தான் தெற்கத்தைய சிங்களவர் எதிர்பார்ப்பா? அப்படியானால் அது இனப்படுகொலை என்ற கருத்தினுள் அடங்கும் என்பதை அவர்கள் அறிவார்களா?வன்முறை வெடிக்கும் என்பது சம்பந்தமான எனது பதில் 'வன்முறை வரும்' என்பது எம்மைப் பயமுறுத்தும் ஒரு செயல்.போர் வெடித்ததால் எமது நாடு எவ்வாறான உயர் கடன்களைப் பெறவேண்டியிருந்தது என்பதைத் தெற்கு அறியும். அவர்களின் இராணுவம் செய்த அட்டூழியங்களை உலகம் அறியும். ஆகவே எமது சிங்கள அரசியல்வாதிகள் வன்முறை வெடிக்க விடமாட்டார்கள். இன்னுமொரு 1983 வந்தால் இலங்கையின் பெயர் உலக அரங்கில் நாறும். அதையும் மீறி அவ்வாறு வெடித்தால் வெடிக்கட்டுமே. நாம் இதுகாறும் கூறி வந்த உண்மையை உலகம் அறிந்து கொள்ளும், உணர்ந்து கொள்ளும்.
எமது மக்கள் இதுவரை பட்ட பாட்டிற்கு மேலதிகமாக நாங்கள் எதைச் சந்திக்கப் போகின்றோம்? வன்முறை வெடிக்கும் என்பது சுயநலவாதிகளின் பயமே ஒளிய அதில் உண்மை இல்லை.இந்தக் கூற்று தெற்கில் இருந்து வருவதில் இருந்து அதன் சுயநலப் போக்கைப் புரிந்து கொள்ளலாம். தெற்கில் கொழும்பில் சொகுசாக வாழ்பவர்கள் தான் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றார்கள்.
ஆகவே எமது கட்சித் தலைமைகள் தங்கள் நிலையை எமது மக்கள் சார்பாக அவர்களுடன் இணைந்து உருவாக்க முன்வரவேண்டும்” என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.25 டிசம்பர் 2017
தமிழரசுக் கட்சி போட்டியிடும் இடங்களில் புளொட் பிரச்சாரம் செய்யாது!
24 டிசம்பர் 2017
நாம் தமிழர் தினகரன் கூட்டணி சாத்தியமாகுமா?
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சுயேச்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரனின் கை ஓங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. இவை தமிழகத்தில் ஏற்படும் அரசியல் மாற்றங்களுக்கான அறிகுறியாக கருதப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் காலியான அவரது ஆர்.கே நகர் தொகுதிக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு இருந்த தேர்தல் பணப்பட்டுவாடா புகார்களால் தள்ளிவைக்கப்பட்டது.
அதற்கு பிறகு நீதிமன்ற தலையீட்டால் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில், ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இணைப்பு, இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு, ரெய்டு நடவடிக்கைகள், 2ஜி வழக்கு தீர்ப்பு என்று தமிழக அரசியல் களத்தில் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளது.இருப்பினும், தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் களமிறங்கிய டி.டி.வி தினகரனே முன்னிலை வகித்து வருகிறார். மாநிலத்தில் ஆட்சி கையில் இருந்தும், இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டும் அதிமுக தினகரனுக்கு அடுத்த இடத்திலேயே இருக்கிறது. இதனை மாநிலம் முழுவதிலும் உள்ள டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சமீபகாலங்களில் நடந்த இடைத்தேர்தல்களின் ஆளும்கட்சி தோற்றதில்லை என்பதையும், பல ஆண்டுகளுக்கு பிறகு சுயேச்சை ஒருவர் வெற்றி பெற போகிறார் என்பதும் தமிழக அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதுபோல, கடந்த கால மனக்கசப்புகளை எல்லாம் மறந்துவிட்டு திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து இருக்கும் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட்டுகள் கட்சிகளின் ஆதரவோடு களமிறங்கியும் திமுக மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறது. இவர்களுக்கு அடுத்ததாக களத்தில் இருக்கும் முக்கிய கட்சியான பா.ஜ.க தற்போது உ.பி.,குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல்களில் பெருவாரியான வெற்றிகளை பெற்று இருந்தாலும், இந்த இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளது.தமிழகத்தில் நடக்கப்போகும் அரசியல் மாற்றங்களுக்கான அச்சாரமே ஆர்.கே நகர் தேர்தல் தான் என்று அனைவரும் சொல்லிவந்த நிலையில் அந்த தேர்தல் தினகரனுக்கு ஆதரவானதாக மாறி இருப்பது அரசியல் கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மீண்டும் அதிமுக தொண்டர்கள் டி.டி.வி தினகரன் அணிக்கு திரும்ப யோசித்து வருகின்றனர் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. வரலாறு காணாத பணப்பட்டுவாடா, தேர்தல் விதி மீறல்கள் என புகார்கள் அணிவகுக்கும் வேளையில் இத்தனை குற்றச்சாட்டுகள் இருந்தும் தினகரனுக்கு வாக்களித்து இருப்பது தமிழகத்தில் ஆளும்கட்சி, எதிர்கட்சி, மத்தியில் ஆளும் பாஜக ஆகியவற்றின் மீது மக்கள் கோபமாக இருப்பதையே காட்டுகிறது.இந்நிலையில், ஆர்.கே நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வாங்கி இருக்கும் வாக்குகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து வரும் நிலையில் கணிசமான வாக்குகள் பெற்று டி.டி.தினகரன், மதுசூதனன், மருது கணேஷ் ஆகிய வேட்பாளர்களுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் அணி மற்றும் அதிமுக சார்பில் கோடி கோடியாக பணப்பட்டுவாடா நடந்ததாக சொல்லப்படும் நிலையில், தி.மு.க போல எதிர்கட்சி அந்தஸ்தோ, மத்தியில் ஆட்சி நடத்தும் பா.ஜ.க போலவோ எந்த வித பின்புலமும் இல்லாமல் நாம் தமிழர் வாங்கி உள்ள ஓட்டுகள் அரசியல் களத்தில் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் பெரும் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது இளைஞர்கள் பெருமளவில் அந்த கட்சிக்கு ஆதரவளிப்பதை சுட்டிக்காட்டுகிறது. தேர்தல் பிரச்சாரத்திலும், தனிப்பட்ட பேட்டிகளிலும் கூட திமுக, அதிமுக கட்சிகளையும், ஆட்சிகளையும் விமர்சித்தவர் தினகரன் அணியை பெரிதாக விமர்சிக்கவில்லை என்பதும், அதுபோல தினகரனும் நாம் தமிழரை பெரிதாக சீண்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை.இதனால் அடுத்த சட்டசபை தேர்தலில் தினகரன் தலைமையிலான அணியும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.22 டிசம்பர் 2017
பிக்குவின் உடலை கோட்டைப்பகுதியில் தகனம் செய்ய எதிர்ப்பு!
20 டிசம்பர் 2017
சர்வதேசத்திடம் தீர்வைக்கோரி வவுனியாவில் போராட்டம்!
15 டிசம்பர் 2017
கனடாவில் தமிழ் பெண் கொலை!கணவன் கைது!
11 டிசம்பர் 2017
தீயில் இருந்து முயலை காத்த உயிர்நேயவாதி!
10 டிசம்பர் 2017
கனடிய காவல்துறை அதிகாரி நல்லரட்ணம் அரசியலில்!
26 நவம்பர் 2017
உலகம் முழுதும் கொண்டாடப்பட்ட தலைவர் பிறந்தநாள் விழா!
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது 63-வது பிறந்த நாள் விழா உலகம் முழுவதும் தமிழர்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை ராயப்பேட்டையில் நள்ளிரவு 12 மணிக்கு தந்தை பெரியார் தி.க.வினரால் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பொது இடத்தில் தலைவரின் பிறந்த நாள் கொண்டாட போலீசார் தடை விதித்தனர். இதையடுத்து மாடி ஒன்றில் திரண்ட பெரியார் தி.க.வினர் கேக் வெட்டி தலைவரது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடினர். அப்போது தேசியத் தலைவரையும் தமிழீழத்தையும் வாழ்த்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவரது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் களைகட்டின.
முன்னதாக நேற்று மாலை கற்க கல்வி அறக்கட்டளை சார்பாக அம்பத்தூர் தாய் தமிழ் பள்ளியில் 100 மாணவர்களுக்கு தலைவரின் புகைப்படத்துடன் கூடிய புத்தகப்பை ஏடுகள் வழங்கப்பட்டன. கரு. அண்ணாமலை தலைமையில் பள்ளி குழந்தைகள் தலைவருக்கு தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள் பாடி கேக் வெட்டி கொண்டாடினர்.தலைவரின் பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு நாம் தமிழர் கட்சியினர் போர்வை, ரொட்டி வழங்கினர்.யாழ்ப்பாணத்தில் தலைவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையிலும் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. சிங்கள ராணுவம் இடித்த தலைவரின் வீட்டின் முன்பாக நள்ளிரவில் ராணுவ தடையை உடைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.தலைவர் பிறந்த நாளில் திடீரென வல்வெட்டித்துறையில் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி பறக்கவிடப்பட்டது. வன்னிச்சி அம்மன் கோவில் அருகே இக்கொடி பறக்கவிடப்பட்டது.வல்வெட்டித்துறையில் தேசியத் தலைவர் பிறந்த வீடு தமிழர்களின் புனித இடமாக கருதபட்டது. அதை சிங்கள ராணுவம் இடித்தது. இந்த வீட்டை தமிழர்கள் இன்று சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர்.தலைவரின் இடிக்கப்பட்ட வீடு முன்பாக தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திலும் தலைவரது பிறந்த நாள் விழா களைகட்டியது. பல்கலைக் கழகத்தில் புலிகளின் இலச்சினை,தலைவரின் படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.சுவிஸிலும் தலைவர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சுவிட்சர்லாந்தில் நிட்வால்டன் மாவட்டத்தில் நள்ளிரவு 12.00 மணிக்கு தலைவர்24 நவம்பர் 2017
தமிழர்களின் சனத்தொகை அதிகரிக்கப்பட வேண்டும்!
13 நவம்பர் 2017
மாவீரர் குடும்பத்தை சார்ந்தவர் மட்டுமே பிரதான சுடர் ஏற்ற வேண்டும்!
1. பிரதான சுடரினை ஒரு மாவீரரின் மனைவியோ, கணவரோ, பெற்றோரோ அல்லது பிள்ளைகளோ மட்டுமே ஏற்ற வேண்டும்.
2. சமரசம் உலாவிய இடமாக துயிலுமில்லங்கள் திகழ்கின்றன. பிரிகேடியர் முதல் காவல்துறை , எல்லைப்படை, துணைப்படை, போருதவிப்படை வீரர்கள் என சகலரையும் சமமாகவே தன்னுள் ஏற்றுக்கொண்டது இந்த மண். அந்த நிலை தொடர்ந்து பேணப்பட வேண்டும். முதன்மைச் சுடர் ஏற்றுபவரைத் தெரிவு செய்யும் போது மாவீரர் பதவி நிலைகளைக் கணக்கிலெடுக்கத் தேவையில்லை என்பது எமது தாழ்மையான அபிப்பிராயம்.
3. பிரிபடாத தமிழ் தேசத்தினதும் அதன் இறையாண்மையினதும் அங்கீகாரம் என்பதுவே எமது போராட்டத்தின் அடிப்படையாகும். எமது இந்த பிறப்புரிமைக்காக – லெப். ஜுனைதீன் (ஜோன்சன்) முதல் 43 முஸ்லீம் மாவீரர்கள், 1985 முதல் 1990 வரை, வீரச் சாவடைந்துள்ளனர். 2000ஆம் ஆண்டின் பின்னரும் இருவர் மாவீரர்களாகியுள்ளனர். எனவே முஸ்லீம் மாவீரர்களின் உறவுகளும் கௌரவிக்கப்பட வேண்டும்.
4. தமிழ் தேசத்தைப் பொறுத்தவரை – ஒரே ஒரு பிரபாகரன் தான். அவரது நிலையில் யாரும் தம்மை வைத்துப் பார்ப்பதையோ, அல்லது அவராகத் தம்மைச் சித்தரிக்கும் முனைவதையோ எமது இனம் அனுமதிக்காது. அத்தோடு – மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ எந்த ஒருவரது உரையும் தேவையற்றது. இதேவேளை மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ எந்த ஒர் அரசியல் கட்சிக்கும் அல்லது அரசியல்வாதிக்கும் சார்பாகவோ அல்லது எதிராகவோ பிரசுரங்களை வழங்க வேண்டாம். நிகழ்வு தொடர்பான அறிவுறுத்தல்களை ஒலிபெருக்கி ஊடாக வழங்குவோரும் இந்த வழிமுறையைப் பின்பற்றுவதே சிறந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
04 நவம்பர் 2017
துரைசிங்கம் பிறேமதாஸ் (பிறேம்)லண்டனில் காலமானார்!

புளியங்கூடல் அமரர் சாந்தலிங்கம் மற்றும் தவமணி மண இணையரின் இளைய மருமகனும் சாந்தலதாவின்(லதா)அன்புக் கணவருமான துரைசிங்கம் பிரேமதாஸ்(பிறேம்)நேற்று நள்ளிரவு லண்டனில் காலமானார் என்ற செய்தி கூடலூர் மக்களையும் அவரது நட்பு வட்டங்களையும் பெரும் அதிர்சசிக்குள்ளாக்கி இருக்கிறது.இளம் வயதில் சாந்தலதாவும் அவரது ஏக புதல்வியும் சந்தித்திருக்கும் இந்தப் பேரிழப்பை ஈடு செய்ய எவராலும் இயலாது.இவர்களை எண்ணிப்பார்க்கும்போது எமது நெஞ்சமே வெடித்து விடும்போல் இருக்கிறது.இனி எப்படித்தான் அந்த அன்புத்தங்கையோடு பேசமுடியும்?மனமெங்கும் அன்பை மட்டுமே சுமக்கும் லதாவை நாம் எப்படித்தான் தேற்றமுடியும்?இந்த மரணச் செய்தியின் அதிர்ச்சசியில் இருந்து மீளமுடியவில்லை.பிறேம் அவர்களின் ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதிபெற புளியங்கூடல்.கொம் எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றது.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
29 அக்டோபர் 2017
இலங்கையில் இன்னும் சித்திரவதை முகாம்கள்!
22 அக்டோபர் 2017
மனித மிருகங்கள் குதறிய மிருக மனிதம்
புளியங்கூடலில் சினைப்பசு ஒன்று பயங்கரமாகக் கழுத்திறுக்கிக் கொலைசெய்யப்பட்டுள்ளது!பெறுமதி வாய்ந்த உயர் இனப்பசு இது! 100% இந்து மக்கள் வாழும் புளியங்கூடல் கிராமத்திற்கு இது அவமானமல்லவா!மேய்ச்சலுக்கு விடப்பட்டமாடு இது! யாருடைய பயிரையாவது மேய்ந்தால் பிடித்துக்கட்ட வேண்டும்! ஏன் கொலைசெய்யவேண்டும்?
இது அராஜகமல்லவா! சம்பந்தப்பட்ட பசுக்கொலைக்காரரை சட்டத்தின் முன் நிறுத்த புளியங்கூடல் பொது அமைப்புக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்!
இப்போது கந்தசஷ்டி விரதகாலமல்லவா?
நமது பண்பாடு, விழுமியங்கள் எல்லாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?
(2017-10-22)
மாட்டின் உரிமையாளர் பெயர்: திரு.தில்லையம்பலம் பாஸ்கரன்!இவர் நமது வேலணை மேற்கு நடராஜ வித்தியாலய பழைய மாணவராவார்!நன்றி:(முகநூல்)இரத்தினம் ஞானசோதியன்(ஆசிரியர்)அவர்கள்.
10 அக்டோபர் 2017
குடும்பப் பெண் மரணத்தில் மர்மம்!இளைஞன் கைது!
07 அக்டோபர் 2017
சுவிஸில் தமிழ் இளைஞன் காவல்துறையால் சுட்டுக்கொலை!
28 செப்டம்பர் 2017
ஆறறிவு மிருகம் குதறிய ஜீவனை ஐந்தறிவு மிருகம் தேடுகின்றது!.
ஆறறிவு மிருகம் குதறிய ஜீவனை
ஐந்தறிவு மிருகம் தேடுகின்றது
. நெஞ்சை
நெகிழவைக்கும் வித்தியாவின்
ஐந்தறிவுள்ள நாய்....
விலங்கு மனத்தையும் விம்மி அழவைத்த வித்தியா!! உள்ளத்தை உருக்கிய பதிவுகள்! யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பிரிவு பல்கோடி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒன்று. பல தமிழ் மக்களை மட்டுமன்றி இனம் மதம் மொழி என அனைத்தையும் கடந்து மானுடத்தை நேசிக்கும் அத்தனை மக்களையும் அவளது பிரிவு உலுக்கியது. அந்த வகையில் மனிதர்களை மட்டுமன்றி
ஐந்தறிவு படைத்த சீவன் ஒன்றைக்கூட அந்த இளங்குருத்து வாடிப்போன சம்பவம் வேதனையில் வாட்டியுள்ளது. மாணவி வித்தியா செல்லமாக ஒரு நாயினை வளர்த்து வந்துள்ளாள். சிறு குட்டியாக இருக்கும்போதே அதனை வளர்த்தபடியால் அதற்கு ‘குட்டி’ என்று பெயர் சூட்டினாள். செல்லமாக வளர்க்கப்பட்ட அந்த நாய், வித்தியா தினமும் பாடசாலை செல்லும்போது வீதிவரை அவளது தாயோடு வந்து வாலாட்டி வழியனுப்பிவைக்கும். பின்னர் பாடசாலை முடித்து வீடு வரும்போதுகூட வாலைக்குழைத்தபடி வித்தியாவை வட்டமிடும். வித்தியா இந்த மண்ணை விட்டு மறைந்து புண்ணிய சொர்க்கத்தில் குடிபுகுந்தபோது இந்த ஐந்தறிவு சீவனும் கோடானகோடி மக்களில் ஓருயிராக கதிகலங்கிப்போனது. சாவு நிகழ்ந்த அந்த நாட்களில் மிகுந்த சோகத்துடன் இந்த நாய் காணப்பட்டுள்ளது. வித்தியாவின் உடலம் புதைக்கப்பட்ட இடத்தையே சில நாட்களாக குறித்த நாய் சுற்றிச் சுற்றி வந்து வானத்தைப் பார்த்து ஊளை ஒலி எழுப்பியுள்ளது. வித்தியாவின் நாற்பத்தைந்தாம் நாளின்போது ‘குட்டி’யின் முன்னால் வித்தியாவின் அமருவப் படம் காண்பிக்கப்பட்டுள்ளது. அதன்போது அந்தப் படத்தையே ‘குட்டி’ வெறித்தப்டி பார்த்துக்கொண்டு நின்றுள்ளது. இந்தக் காட்சி அப்போது அங்கே நின்ற மனிதர்களின் கண்களை மீண்டும் கலங்க வைத்துள்ளது. ஊதையிற் பட்ட பூளைப் பூவைப்போல் கயவர்களால் நூறி எறியப்பட்ட எங்கள் வித்தியாவின் ஆத்துமா மனிதத்தை மட்டுமன்றி ஐந்தறிவு விலங்கினத்தையும் உருகவைத்துள்ளமை இதனூடு கண்கூடாகின்றதல்லவா!

நன்றி:இராவணன் பாலம்(முக நூல்)
. நெஞ்சை
நெகிழவைக்கும் வித்தியாவின்
ஐந்தறிவுள்ள நாய்....
விலங்கு மனத்தையும் விம்மி அழவைத்த வித்தியா!! உள்ளத்தை உருக்கிய பதிவுகள்! யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பிரிவு பல்கோடி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒன்று. பல தமிழ் மக்களை மட்டுமன்றி இனம் மதம் மொழி என அனைத்தையும் கடந்து மானுடத்தை நேசிக்கும் அத்தனை மக்களையும் அவளது பிரிவு உலுக்கியது. அந்த வகையில் மனிதர்களை மட்டுமன்றி
ஐந்தறிவு படைத்த சீவன் ஒன்றைக்கூட அந்த இளங்குருத்து வாடிப்போன சம்பவம் வேதனையில் வாட்டியுள்ளது. மாணவி வித்தியா செல்லமாக ஒரு நாயினை வளர்த்து வந்துள்ளாள். சிறு குட்டியாக இருக்கும்போதே அதனை வளர்த்தபடியால் அதற்கு ‘குட்டி’ என்று பெயர் சூட்டினாள். செல்லமாக வளர்க்கப்பட்ட அந்த நாய், வித்தியா தினமும் பாடசாலை செல்லும்போது வீதிவரை அவளது தாயோடு வந்து வாலாட்டி வழியனுப்பிவைக்கும். பின்னர் பாடசாலை முடித்து வீடு வரும்போதுகூட வாலைக்குழைத்தபடி வித்தியாவை வட்டமிடும். வித்தியா இந்த மண்ணை விட்டு மறைந்து புண்ணிய சொர்க்கத்தில் குடிபுகுந்தபோது இந்த ஐந்தறிவு சீவனும் கோடானகோடி மக்களில் ஓருயிராக கதிகலங்கிப்போனது. சாவு நிகழ்ந்த அந்த நாட்களில் மிகுந்த சோகத்துடன் இந்த நாய் காணப்பட்டுள்ளது. வித்தியாவின் உடலம் புதைக்கப்பட்ட இடத்தையே சில நாட்களாக குறித்த நாய் சுற்றிச் சுற்றி வந்து வானத்தைப் பார்த்து ஊளை ஒலி எழுப்பியுள்ளது. வித்தியாவின் நாற்பத்தைந்தாம் நாளின்போது ‘குட்டி’யின் முன்னால் வித்தியாவின் அமருவப் படம் காண்பிக்கப்பட்டுள்ளது. அதன்போது அந்தப் படத்தையே ‘குட்டி’ வெறித்தப்டி பார்த்துக்கொண்டு நின்றுள்ளது. இந்தக் காட்சி அப்போது அங்கே நின்ற மனிதர்களின் கண்களை மீண்டும் கலங்க வைத்துள்ளது. ஊதையிற் பட்ட பூளைப் பூவைப்போல் கயவர்களால் நூறி எறியப்பட்ட எங்கள் வித்தியாவின் ஆத்துமா மனிதத்தை மட்டுமன்றி ஐந்தறிவு விலங்கினத்தையும் உருகவைத்துள்ளமை இதனூடு கண்கூடாகின்றதல்லவா!

நன்றி:இராவணன் பாலம்(முக நூல்)26 செப்டம்பர் 2017
சிறுவனின் கையை முறித்த கொடூரன்!
07 செப்டம்பர் 2017
தெருவில் விடப்பட்ட மூதாளரின் வீட்டை மீண்டும் பெற்றுக்கொடுத்த மனிதாபிகள்!
முரசறைந்து வெளியேற்றப்பட்ட மூதாட்டி
மீண்டும் சொந்த வீட்டில் குடியேற்றப்பட்டார்
-மனிதநேயச் செயற்பாட்டார்களின் நிதியுதவியில் வீடு மீட்கப்பட்டது- செய்தி மூலம் சமூகத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பிய சிவ தொண்டர் பொன் ராசாவும் விரைந்து செயலாற்றிய உண்மையான மனிதநேய சீலர்களும் மறக்க முடியாத சமூக முன்னுதாரணங்கள்
காரைநகரில் நீதிமன்ற உத்தரவின்பேரில் முரசறைந்து வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட மூதாட்டியின் வீடு நேற்று மீண்டும் அவருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. காரைநகரைச் சேர்ந்த மனிதநேயக் கொடையாளர்களின் நிதி உதவியுடன் அந்த பெண்மணி நேற்று மாலை மீண்டும் தனது சொந்தவீட்டில் குடியேறினார்.
காரைநகர் வெடியரசன் வீதியைச் சேர்ந்த ஏரம்பு ஞானேஸ்வரி என்ற பெண்மணி பணத் தேவையின் பொருட்டு தனது வீட்டை அவ்வூரைச் சேர்ந்த ஒருவரிடம் இரு வருட தவணை அடிப்படையில் அறுதி உறுதி எழுதி ஈடு வைத்தார். சுமார் மூன்று இலட்சம் ரூபாவிற்கு ஈடு வைக்கப்பட்டது.
உரிய காலத்தில் அந்த வீட்டை மீட்க முடியாத காரணத்தால் ஈடு பிடித்தவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையினல் அந்த வீடு ஈடு பிடித்தவர்களுக்குச் சொந்தமானது.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மூதாட்டியின் வீட்டுக்கு பொலிஸார் சகிதம் வந்த நீதிமன்றப் பணியாளர்கள் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் வெளியே, வீதியில் தூக்கி வைத்துவிட்டு அந்தப் பெண்மணியையும் வீட்டை விட்டு வெளியேற்றியிருந்தனர்.
'அவர்கள் வரும்போது பானையில் சோறு அவிந்துகொண்டிருந்தது. அந்தப் பானையை அப்படியே தூக்கி வெளியே வைத்தனர்' என மூதாட்டி அழுதவாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
மூதாட்டியின் நிலை தொடர்பாக சமூக வலைத்தளங்களும் இணைய, அச்சு ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டதன் அடிப்படையில் அவருக்கு உதவுவதற்கு பல தரப்பினரும் முன்வந்தனர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக மேஜர் இளமகள் என்ற மாவீரரைத் தந்த தாய் என்ற அடிப்படையில் அவர் மீது அனைவரின் பார்வையும் திரும்பியது.
இந்நிலையில், அவரது ஊரைச் சேர்ந்த வெளிநாட்டில் உள்ளவர்கள் சிலர் தாங்களாக முன்வந்து பணத்தை திரட்டி அனுப்பியதன் பயனாக ஈடு பிடித்தவர்களுக்கு 5 இலட்சத்து 26 ஆயிரம் ரூபா பணம் செலுத்தி அந்த வீடு மீண்டும் பெறப்பட்டு மூதாட்டியிடம் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வேம்படி காரைநகரில் உள்ள பாரதி கலைக் கல்லூரியின் புலம்பெயர் தேசத்தில் உள்ள செயற்பாட்டாளரும் சமூக ஆர்வலருமான தம்பையா கருணாநிதி (பபி கனடா) எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக சுமார் 2 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா நிதி சேர்க்கப்பட்டது.
மேலும், அவ்வூரைச் சேர்ந்த சிவகாமி நலன்புரி ஒன்றியத்தின் புலம்பெயர் செயற்பாட்டாளர்களின் முயற்சியால் 2 இலட்சத்து 96 ஆயிரம் ரூபா நிதி சேர்க்கப்பட்டது. இதன்மூலம் அந்தக் காணி தற்போது மீட்கப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் 6.00 மணியளவில் சட்டத்தரணி சாருஜா சிவநேசனின் காரைநகரில் உள்ள அலுவலகத்தில் காணி மீளவும் அந்த மூதாட்டியின் பெயரில் எழுதப்பட்டது.
இதன்போது ஈடு பிடித்தவர்கள், காணி உரிமையாளரான ஞானேஸ்வரி, பாரதி கலை மன்றம் மற்றும் சிவகாமி நலன்புரி ஒன்றியத்தின் பிரதிநிதிகள், அப்பிரதேச கிராம சேவையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் நலன்விரும்பிகள் சிலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
காணி எழுதப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் மூதாட்டியை அழைத்துச் சென்று அவரிடம் வீட்டுத் திறப்பைக் கையளித்து, வீட்டில் குடியேற்றினர். இதன்போது சட்டத்தரணி சாருஜா சிவநேசனும் அங்கு பிரசன்னமாகியிருந்தார்.
தனது வீடு மீண்டும் கிடைப்பதற்கு உதவி செய்த மனிதநேயம் மிக்க அனைவருக்கும் அந்த மூதாட்டி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். தனது இறப்பு வரை அவர்களைத் தாம் மறக்கமாட்டார் எனவும் அவர் கூறினார்.நன்றி:பரா நந்தகுமார்(முகநூல்)
30 ஆகஸ்ட் 2017
புலிகளின் பெயரில் வவுனியாவில் பிரசுரங்கள்!
28 ஆகஸ்ட் 2017
மண்டைதீவு கடலில் படகு கவிழ்ந்து மாணவர்கள் பலி!
27 ஆகஸ்ட் 2017
கம்பவாரிதி ஜெயராஜின் செயலுக்கு கண்டனம்!
19 ஆகஸ்ட் 2017
ஜீவசமாதி அடையப்போவதாக அறிவித்து தண்ணீர் மட்டும் அருந்துகிறார் முருகன்!
13 ஆகஸ்ட் 2017
இலங்கை மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!
26 ஜூலை 2017
புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய நீதிமன்றம்!
பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டிலிருந்து எந்தப் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடாததால் விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் நீக்கியுள்ளது.கடந்த 2006 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்புக்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து விடுதலைப் புலிகள் இயக்கம் 2011இல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பில் நெதர்லாந்து வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது ’2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுதம் ஏந்தவில்லை, வன்முறையற்ற வழிகளில்தான் போராட விரும்புகின்றனர்’ என்று வாதிடப்பட்டது. இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. 2009க்கு பிறகு எந்த வன்முறை செயலிலும் ஈடுபடாததால் தடை நீக்கப்படுவதாகவும், இந்த அமைப்புக்கு தாக்குதல் நடத்தும் திறன் இருப்பதற்கான எந்த ஆதாரமும் அளிக்கவில்லை எனக்கூறி தடையை நீக்கி ஐரோப்பிய யூனியன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.23 ஜூலை 2017
நீதியைக்காக்க தன்னுயிர் விட்ட மெய்ப்பாதுகாவலர்!
நீதியைக்காக்க தன்னுயிரை விட்டிருக்கிறார் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் கேமச்சந்திர அவர்கள்.15 வருடங்கள் தன்னுடைய மெய்ப்பாதுகாவலராக இருந்தவர்,மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் தன்னை விட்டு விலகாது அருகிலேயே இருந்தவர்,இன்று அமைதியான சூழல் ஏற்பட்டு விட்டதாக கூறப்படும் காலத்தில் அவரது உயிர் பறிக்கப்பட்டிருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்துவதாக கண்ணீர் விட்டிருக்கிறார் நீதியாளர் இளஞ்செழியன் அவர்கள்.நீதியாளர் இளஞ்செழியன் அவர்கள் தீவகத்தில் வேலணையை சொந்த இடமாக கொண்டவர்.இன்று உலக வரலாற்றில் ஒரு முன்னோடி நீதியாளராக திகள்பவர்.அமெரிக்காவில் ஒரு மாநிலம் அவரை ஒரு நாள் முதல்வராக அமர்த்தி மதிப்பளித்தது என்பது தமிழ்கூறு நல்லுலகிற்கு கிடைத்த பெருமையாகும்.அத்தகையதொரு நீதியாளருக்காகத்தான் தன்னுயிரை அர்ப்பணித்திருக்கிறார் கேமச்சந்திர என்ற போற்றுதற்குரிய மெய்ப்பாதுகாவலர்.உலகில் நல்ல நீதியாளருக்கு எடுத்துக்காட்டாக இளஞ்செழியன் அவர்கள் இருப்பதுபோல் ஸ்ரீலங்கா பொலிஸ் பிரிவிலும் நல்ல மனிதாபிமானமும் விசுவாசமும் உள்ள பொலிஸாரும் இருக்கிறார்கள் என்பதற்கு கேமச்சந்திர ஒரு எடுத்துக்காட்டு.அன்னாருக்கு புளியங்கூடல்.கொம் குழுமம் வீரவணக்கத்தை தெரிவித்து நிற்கிறது.22 ஜூலை 2017
நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாவலர் மரணம்!
நல்லூரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் எனக் கருதப்படும் சந்தேக நபரை விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் இணைந்து கைது செய்துள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம் நல்லூர் பகுதியில் வைத்து, நீதிபதி இளஞ்செழியன் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார்.
இத்தாக்குதலின் போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் படுகாயமடைந்திருந்தனர். குறித்த தாக்குதல்தாரி, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் லிங்கம் கூல்பார் வழியாக தப்பிச் சென்றிருந்தார்.
இதனையடுத்து யாழ். நகரப்பகுதி பலத்த பாதுகாப்பிற்குள் கொண்டுவரப்பட்டதுடன், விசேட அதிரடிப்படையினர் களத்தில் இறக்கப்பட்டனர்.
இந்நிலையில் தான் தீவகப் பகுதிக்கு தப்பிச் சென்ற மர்ம நபரை விசேட அதிரடிப் படையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர் என தெரியவருகிறது.
இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த நபரை யாழ் மாவட்ட பிராந்திய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இது குறித்து யாழ்.மாவட்ட பொலிஸார் உத்தியோகபூர்வமாக எந்தவிதமான தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.21 ஜூலை 2017
கனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளார்!
11 ஜூலை 2017
வடமராட்சியில் தொடரும் பதற்றம்!
மணல்காட்டில், நேற்றுமுன்தினம் இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, வடமராட்சியின் சில பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலை இன்றும் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. பவள் கவச வாகனங்களில் விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று இளைஞனின் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதால், நெல்லியடி, மந்திகை, துன்னாலை, கரவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒருவித பதற்றம் காணப்படுகிறது. பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
07 ஜூலை 2017
புளியங்கூடல் மக்களின் மனங்களில் நிறைந்து விட்ட எங்கள் குருஜிகள்!
புளியங்கூடல் மக்களின் மனங்களில் நிறைந்து விட்ட எங்கள் குருஜிகள்[திரு இரத்தினம் ஞானசோதியன்,திருமதி சரோஜினி ஞானசோதியன் மண இணையர்]கனடா-புளியங்கூடல் ஒன்றியத்தின் ஒற்றுமைக்கும் செயற்பாடுகளுக்கும் எம் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.முக்கியமாக தலைமைப் பொறுப்பை மிகவும் சிறப்பாக வழி நடத்திச்செல்லும் சிவா அண்ணாவிற்கு[இலட்சுமணபிள்ளை சிவசோதி]எம் விஷேட வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

27 ஜூன் 2017
புளியங்கூடல் அம்பாள் ஆலய மின் ஒளியால் பதற்றமான குடாநாடு!
பறக்கும் தட்டு பறப்பதாக நேற்றிரவு பரவிய வதந்தியால், யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், வீதியில் கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர். புளியங்கூடல் அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் நேற்றிரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்போது பயன்படுத்திய பெரிய மின் விளக்குகள் வானை நோக்கி செலுத்திய ஒளி, திரண்ட முகில் கூட்டங்கள் மீது பட்டு அவை பாரிய ஒளிவட்டங்களாக தென்பட்டன.
இதனைச் சிலர் பறக்கும் தட்டு என்று வதந்தியைக் கிளப்பி விட்டனர். இந்த செய்தி 3 மணித்தியாலங்களாக குடாநாடெங்கும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வீதிக்கு வந்து மக்கள் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். எனினும், அந்த ஒளிவட்டத்திற்கான காரணம் தெரியவர மக்கள் பதற்றம் நீங்கி இயல்பு நிலைக்கு வந்தனர்.
21 ஜூன் 2017
மீளப்பெறப்பட்டது நம்பிக்கையில்லாப் பிரேரணை!
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக கடந்தவாரம் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, இன்று திரும்பப் பெறப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சயந்தன் மற்றும் ஆயுப் அஸ்மின் ஆகிய இருவரும் இணைந்து,வட மாகாண ஆளுநரிடமிருந்து அந்தப் பிரேரணையை திரும்பப் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து குழப்ப நிலை முடிவுக்கு வந்துள்ளது.18 ஜூன் 2017
தனித்துச் செயற்பட பங்காளிக் கட்சிகள் யோசனை!
முதலமைச்சருக்கு எதிரான தமிழரசுக் கட்சி மாகாணசபைஉறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை திரும்பப் பெறாவிட்டால் பாராளுமன்றத்திலும் பங்காளிக்கட்சிகள் தனித்து இயங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரியவருகிறது. ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் தமிழரசுக்கட்சி அரச கட்சிகளுடன் இணைந்து முதலமைச்சருக்கு எதிராக தன்னிச்சையாக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகிய ஈபிஆர்எல்எப், ரெலோ,புளொட் ஆகிய கட்சிகள் வன்மையாக கண்டித்துள்ளதுடன் வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவை வழங்கியுள்ளன. இந்நிலையில் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தமிழரசுக் கட்சி உடனடியாக மீளப்பெறாவிட்டால்பாராளுமன்றத்திலும் இம் மூன்று பஙகாளிக் கட்சிகளும்,தனித்து இயங்குவது குறித்து பேசி வருவதாகவும் இது தொடர்பில்இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
15 ஜூன் 2017
முதல்வரை விலக்கினால் தமிழரசுக் கட்சியுடன் தொடர்பு துண்டிப்பு!
எதிர்க்கட்சியினருடன் இணைந்து வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை விலக்கினால் தமிழரசுக் கட்சியுடனான சகல தொடர்புகளையும் தமது கட்சி துண்டிக்கும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், வடக்கு மாகாண முதலமைச்சரை பதவி விலக்குவதற்கு தமிழரசுக்கட்சி வகுத்திருக்கும் வியூகங்கள் குறித்து பேசுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த விடயம் தொடர்பாக சுரேஸ் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”வடக்கு மாகாண முதலமைச்சர் என்பவர் ஒட்டு மொத்த வடக்கு மக்களின் பிரதிநிதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதி. அவரை கடந்த 2013இல் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளும் இணைந்தே அதற்கான முன்மொழிவை வைத்தன.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு இன்று முதலமைச்சராக உள்ள ஒருவரை, ஏனைய பங்காளிக் கட்சிகளை புறந்தள்ளிவிட்டு தமிழரசுக்கட்சி மாத்திரம் முடிவெடுத்து மாற்ற முடியாது. மாற்றுவதற்கும் அனுமதிக்க முடியாது. ஏனெனில், முதல்வர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் தேசிய உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடியதாக வடக்கு மாகாண சபையிலும் அதற்கு வெளியிலும் செயற்படுபவர்.
அவ்வாறானவர், ஊழல் மோசடிகளைச் செய்தவர்களை அமைச்சுப் பதவிகளில் இருந்து விலக்க முற்படும் போது, தமக்கு சார்பானவர்களைக் காப்பாற்றுவதற்காக எதிர்க்கட்சியின் துணை கொண்டு தமிழரசுக்கட்சி முதலமைச்சரையே விலக்க முற்படுவதானது, ஊழல் மோசடிக்காரர்களைப் பாதுகாப்பதாக அமைகிறது.
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலிலேயே இச்செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. வடக்கு மாகாண சபையின் 2 சிங்கள உறுப்பினர்கள், 3 முஸ்லிம் உறுப்பினர்களின் துணைகொண்டு முதலமைச்சருக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவதாக இருந்தால், அது தமிழரசுக்கட்சி மட்டுமல்ல ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியனவும் இணைந்தே அதனைக் கொண்டு வருவதாக அர்த்தம்.
மூச்சுக்கு 300 தடவை தந்தை செல்வாவின் பெயரைச் சொல்லும் தமிழரசுக்கட்சியா தமிழர் விரோத செயற்பாட்டைச் செய்கின்றது? தமிழரசுக்கட்சியின் நடவடிக்கைகளை ஈ.பி.ஆர்.எல்.எப். கடுமையாக எதிர்க்கின்றது. முதலமைச்சரை வெளியேற்றும் தீர்மானத்தை அக்கட்சி கொண்டு வந்தால், கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சியுடனான தொடர்புகளை ஈ.பி.ஆர்.எல்.எப். துண்டிக்கும். மக்களும் தமிழரசுக்கட்சியின் நடவடிக்கைகளை நிராகரிப்பார்கள். நீதி கேட்டு வீதிக்கு இறங்குவார்கள்’ என்றார்.06 ஜூன் 2017
தம்பாட்டியில் ஐவர் கைது!
பாடசாலை மாணவர்கள் மூவரை தகாத உறவுக்குட்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் தம்பாட்டி பகுதியைச் சேர்ந்த 5 பேரை ஊர்காவற்துறை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 ல் கல்வி பயிலும் மாணவர்கள் மூவரை 8 நபர்கள் அப்பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி தகாத உறவுக்குட்படுத்தியுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்களும் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றபோது 3 நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். ஏனைய ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட 3 மாணவர்களும் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.05 ஜூன் 2017
தியாகி பொன்.சிவகுமாரன் நினைவு நாள்!
தியாகி பொன்.சிவகுமாரன் நினைவு நாள் இன்றாகும்!
இன்று தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 43ம் ஆண்டு நினைவுதினமாகும்,26.08.1950ல் யாழ்,உரும்பிராயில் பிறந்த பொன்.சிவகுமாரன் அவர்கள் சிங்கள அரசின் கல்விதரப்படுத்தலுக்கு எதிராக போராட்டக்களத்தில் குதித்து வீரகாவியமான முதல் மாவீரன் என்ற பெருமைக்குரியவரானார்.தமிழ் துரோகி ஒருவனால் 05.06.1974ல் காட்டிக்கொடுக்கப்பட்டு சிங்களப்படைகள் சுற்றி வளைத்தவேளை நஞ்சருந்தி தன்னைத்தானே அழித்து முதற்களப்பலியானார்.இந்த மாவீரனது நினைவுகளை சுமந்தபடியே அவனது கனவுகளை நனவாக்க போராட்டக் களத்தில் நகர்ந்து செல்கிறது தமிழினம்.வரலாற்று ஏடுகளில் பொன் சிவகுமாரனின் பெயரும் என்றும் நிலைத்திருக்கும்.
(நன்றி:காவலூரான்)
04 ஜூன் 2017
லண்டன் தாக்குதலில் 7பேர் பலி,48பேர் காயம்!
லண்டனில் நேற்றிரவு பின்னேரம் நடந்த இரு தாக்குதல் சம்பவங்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 48 பேர் காயமடைந்திருக்கின்றனர் என்று லண்டன் போலிசார் கூறியிருக்கின்றனர்.
இந்த சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதுவதாகப் போலிசார் கூறியிருக்கின்றனர்.
லண்டன் பிரிட்ஜ் பகுதியில் ஒரு வாகனம் பாதசாரிகள் கூட்டத்துக்குள் நுழைந்து மோதியபோது இந்த வன்முறை தொடங்கியது.
மூன்று பேர் இந்த லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடியதை தான் பார்த்ததாக பிபிசியிடம் நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்தார்.
சாலையில் பலரை அவர்கள் கத்தியால் குத்தினர் என்று அவர் கூறினார்.
அதற்கு சற்று நேரத்திற்குப் பின், ஆயுதந்தாங்கிய போலிசார் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டன.
இந்த்த் தாக்குதல்கள் கோழைத்தனமானவை , வேண்டுமென்றே நடத்தப்பட்டவை என்று லண்டன் மேயர் சாதிக் கான் கண்டனம் செய்திருக்கிறார்.
இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களை எவ்விதத்திலும் நியாயப்படுத்தமுடியாது என்று அவர் கூறினார்.
பிரிட்டிஷ் பிரதமர் தெரீசா மே அரசின் அவசர பாதுகாப்பு குழு கூட்டத்தை நடத்தவுள்ளார்.
மான்செஸ்டர் நகரில் தற்கொலை தாக்குதல் ஒன்றில் 22 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து இரண்டு வாரத்துக்குள்ளாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
மார்ச் மாதத்தில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் கார் ஒன்று பாதசாரிகள் மீது நுழைந்து மோதியது, பின்னர் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில், ஒரு பொலிசார் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.நன்றி:பிபிசி தமிழ்
02 ஜூன் 2017
திருமுருகன் காந்திக்கு ஆதரவாக யாழில் போராட்டம்!
ஈழத்தமிழர் படுகொலையை நினைவு கூர்ந்தமைக்காக திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 08 ஆம் திகதி காலை 11 மணிக்கு எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், சென்னை மெரினா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை அனுஷ்டித்தமைக்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் தலைவர் உள்ளிட்ட நான்கு பேர் தமிழகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து யாழ்ப்பாணத்தில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளோம்.
ஈழத்தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டு என்பதற்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் தமிழ் மக்கள் பேரவை, சிவில் அமைப்புக்கள் ,தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
இலங்கை அரசாங்கமும், இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்படும் உலக வல்லரசுகளும் சேர்ந்து இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பை மூடி மறைக்கும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் ஜேர்மன் பிறைமன் நகரில் நடைபெற்ற நிரந்தர தீர்ப்பாயமொன்றில் கலந்து கொண்டு மேற்கு நாடுகள் மற்றும் இந்தியா போன்ற நாடுகளும் சேர்ந்து இலங்கையில் இனப்படுகொலையை மேற்கொண்டது என்பதை நிரூபிப்பதற்காகக் கடுமையாகப் பாடுபட்டவர்.
தன் சொந்த நாடான இந்தியா ஈழத்தமிழர்களுக்குத் துரோகமிழைத்து விட்டது என்பதை அந்த நாட்டிலிருந்தவாறு எந்தவித தயக்கமுமின்றி அம்பலப்படுத்தி வருபவர். மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஜெனிவாவில் இடம்பெறுகின்ற போது அங்கு இடம்பெறும் ஒவ்வொரு அமர்வுகளிலும் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக மிகவும் அழுத்தமான வகையில் குரல் கொடுத்து வருபவர்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ஜெனிவாவில் பக்க அறைகளில் அரசதரப்பினர் கலந்து கொண்டு பொய்ப் பிரச்சாரங்களை செய்கின்ற போது அதனை முற்றுமுழுதாக முறியடிக்கும் வகையில் திருமுருகன் காந்தி செயற்பட்டு வருகிறார். இவ்வாறு தமிழ்மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தைத் தலைமை தாங்கி நடத்துவது மிகவும் பொருத்தமானது.
தமிழக அரசு இவ்வாறான நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கின்ற போது அதனையும் மீறி நடத்துவது பாராட்டுக்குரியது. தமிழக அரசின் இவ்வாறான அடக்குமுறையான செயற்பாடு கண்டனத்துக்குரியது. தமிழக மக்களும் ஈழத்தமிழர்களும் இணைந்து இவ்வாறான அடக்கு முறையான செயற்பாடுகளுக்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்தார்.26 மே 2017
புளியங்கூடல் மகாமாரி அம்பாள் வருடாந்த மகோற்சவம் 2017!
புளியங்கூடல் செருத்தனைப்பதி அருள்மிகு சிறீ இராஜமகாமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் 09.06.2017 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பதினெட்டு(18)தினங்கள் விழா நடைபெறும்.பதின்நான்காம் திருவிழாவாகிய 22.06.2017 வியாழக்கிழமை வேட்டைத்திருவிழாவும்,பதினாறாம் திருவிழாவாகிய 24.06.2017 சனிக்கிழமை இரதோற்சவமும் நடைபெற்று பின்னர் மறுநாள் 25.06.2017 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவமும் நடைபெறும்.18ம் திருவிழாவாகிய 26.06.2017 திங்கட்கிழமை பூங்காவனமும் இடம்பெற்று கொடியிறக்கத்துடன் அம்பாளின் 2017ம் ஆண்டின் வருடாந்த உற்சவம் நிறைவுக்கு வரும்,ஆலய விழா தொடர்பான விபரங்களை ஆலய நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ளனர்.
25 மே 2017
மெலிஞ்சிமுனை சுற்றிவளைப்பில் சிலர் கைது!
ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை பகுதியில் பொலிஸார் நேற்று திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு சிலரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஈபிடிபி முன்னாள் உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிறுவன் ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் பதற்றநிலை உருவாகியிருந்தது.
இந்நிலையில், குறித்த பகுதியில் வன்முறையை தூண்டும் வகையில் செயற்பட்ட நபர்களை கைது செய்யுமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம். றியாழ் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் பலரை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை பகுதியில் இடம்பெற்ற பதற்ற நிலையை அடுத்து தாக்குதலுக்கு இலக்காகியிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.19 மே 2017
முகமாலையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறி தேடுதல்!
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் முகமாலை பிரதேசம் மீண்டும் போர்க்களம் போன்று காட்சியளிக்கிறது. இன்று அதிகாலை முதல் ஆயுதம் தாங்கிய பெருமளவு படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு ஏ9 பிரதான முகமாலை கச்சார்வெளி பிரதேசத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை தொடர்ந்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை வேளை 12.30 மணிக்கு பின்னரான காலப்பகுதியில் போக்குவரத்து பொலிஸார் ஏ9 பிரதான வீதியில் கடமையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது கச்சார்வெளி கிராம பக்கமாக எழுந்த சந்தேகத்திற்கு இடமான சத்தம் கேட்டபோது போக்குவரத்து பொலிஸார் டோர்ச் லைட் ஒளி மூலம் அவதானித்த போது இனந்ததெரியாத நபர் ஒருவர் ரி56 ரக துப்பாக்கியினால் நான்கு தடவைகள் பொலிஸார் மீது சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது பொலிஸாரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளளனர்.
இருந்த போதும் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை துப்பாக்கி தோட்டாக்கள் அருகில் காணப்பட்ட புகையிரத சமிஞ்கை கட்டுப்பாட்டு பெட்டிகளை தாக்கியிருக்கின்றன. இதனையடுத்து இன்று அதிகாலை பொலிஸாரினால் ஒலிபெருக்கி மூலம் கச்சார்வெளி உள்ளிட்ட சுற்றியுள்ள பிரதேசங்களில் மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிப்புகள் செய்யபட்டதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர். பெருமளவு ஆயுதம் தாங்கிய படையினர் மற்றும் பொலிஸார் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் என சொல்லப்படுகின்றது.17 மே 2017
வித்தியாவின் தாயார் மைத்திரிபாலவிற்கு கடிதம்!
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கினை கொழும்புக்கு மாற்றாது யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்குமாறு, அவரின் தாயார் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
புங்குடுதீவு, 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் சரஸ்வதி (தே.அ.அ.இல. 668512127V) ஆகிய நான் தங்களுக்கு செய்யும் தாழ்மையான விண்ணப்பமாவது. எனது மகள் வித்தியா கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமையை தாங்கள் அறிந்ததே. எனது மகளது கொலை வழக்கானது ஊர்காவற்துறை நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. தற்போது அவ்வழக்கின் விசாரணைகள் முடிவடைந்து வழக்கானது மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்படவுள்ள நிலையில் குறித்த வழக்கானது கொழும்பிற்கு மாற்றப்படவுள்ளதாக பத்திரிகை வாயிலாக கேள்வியுற்ற போது மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
குறித்த விசாரணைகள் தமிழ் மொழியில் பரீட்சயமற்ற நீதிபதிகளால் விசாரிக்கப்படவுள்ளதாகவும் அறிந்தேன். யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்த மாண்பு மிகுந்த ஐனாதிபதியவர்கள் கடந்த 2015.05.26ம் திகதி என்னை வேம்படி மகளீர் கல்லூரிக்கு அழைத்து குறித்த வழக்கானது யாழ்ப்பாணத்தில் Trial At Bar முறையில் நடைபெற தான் நடவடிக்கை எடுப்பேன் என்று உத்தரவாதம் வழங்கியிருந்தார். குறித்த உத்தரவாதத்திற்கு முரணாக தற்போது இவ்வழக்கானது கொழும்பிற்கு மாற்றப்படுவது எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பிற்கு வந்து தங்கியிருந்து வழக்கு விசாரணைகளில் பங்கு பெறுவது எனக்கும் ஏனைய சாட்சிகளுக்கும் வறுமையில் நாம் இருப்பதன் காரணமாக மிகுந்த பொருளாதார சுமையை ஏற்படுத்தும் என்பதுடன் வயது முதிர்ந்த நிலையில் இருக்கும் எனது உடல் நிலையும் அதற்கு ஒத்துழைக்காது. நாம் சிங்கள மொழி பேச முடியாது இருப்பதால் தமிழில் எம்மால் வழங்கப்படும் சாட்சியங்கள் சிங்கள மொழியிற்கு மொழிபெயர்க்கப்படும்போது திரிபடையும் வாய்ப்புகளும் உள்ளது. மேலும் எனது மகள் கொலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது.
ஊர்கர்வற்துறை நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகள் எல்லாம் தமிழ் மொழியில் காணப்படுவதால் அவற்றை மொழிபெயர்ப்பதற்காக மேலும் காலதாமதம் ஏற்படும் என அஞ்சுகின்றேன். எனவே இவை அனைத்தும் எனது மகளின் இழப்பிற்கு கிடைக்க வேண்டிய நீதியை இல்லாது செய்துவிடும் என நியாயமாக அஞ்சுகின்றேன். எனவே காலதாமதமின்றி இவ்வழக்கு நடவடிக்கைகளை கொழும்பில் மேற்கொள்ளாது யாழ்ப்பாணத்தில் Trial At Bar முறையில் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தங்களை தாழ்மையாக கோருகின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயார் எழுதியுள்ள இக்கடிதத்தின் பிரதியானது பிரதம மந்திரி, பிரதம நீதியரசர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




