இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இந்த முடிவை அறிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் மைத்ரிபால சிறிசேனா இன்று தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ள சூழலில் அவருக்கு ஆதரவு என்கிற தமது நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள இத்தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னனி, ஐக்கியத் தேசியக் கட்சி, ஜனநாயகக் கட்சி உட்பட பல கட்சிகளும் அமைப்புகளும் எதிரணியின் பொது வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
30 டிசம்பர் 2014
மைத்திரிக்கு ஆதரவு வழங்குவதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது!
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இந்த முடிவை அறிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் மைத்ரிபால சிறிசேனா இன்று தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ள சூழலில் அவருக்கு ஆதரவு என்கிற தமது நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள இத்தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னனி, ஐக்கியத் தேசியக் கட்சி, ஜனநாயகக் கட்சி உட்பட பல கட்சிகளும் அமைப்புகளும் எதிரணியின் பொது வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன.23 டிசம்பர் 2014
மீனவர் ஜேசுதாசனின் படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும்–கஜதீபன்.
கடற்படைப் படகினால் மோதிப் படுகொலை செய்யப்பட்ட எழுவைதீவு சேர்ந்த மீனவர் அலெக்ஸாண்டர் அன்ரனி ஜேசுதாசனின் உடல் மக்களின் உணர்வுக் கொந்தளிப்புடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனும் கலந்து கொண்டார். இதன் போது இரங்கலுரை நிகழ்த்திய அவர் பெரிய குடும்பமொன்றின் தலைவரான அன்ரனி ஜேசுதாசன் அவர்கள் கடற்றொழிலை மேற்கொண்டே தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்திருக்கிறார்.
கடற்படைப் படகினால் மோதிப் படுகொலை செய்யப்பட்ட எழுவைதீவு சேர்ந்த மீனவர் அலெக்ஸாண்டர் அன்ரனி ஜேசுதாசனின் உடல் மக்களின் உணர்வுக் கொந்தளிப்புடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனும் கலந்து கொண்டார். இதன் போது இரங்கலுரை நிகழ்த்திய அவர் பெரிய குடும்பமொன்றின் தலைவரான அன்ரனி ஜேசுதாசன் அவர்கள் கடற்றொழிலை மேற்கொண்டே தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்திருக்கிறார்.
வழமை போல தொழிலுக்குச் சென்ற அவரின் படகை கடற்படையினரின் அதிவேகப் படகினால் மோதி விட்டு, அவர் கடலில் வீழ்ந்து தத்தளிக்கும் போது காப்பாற்றாமல் சென்றுள்ளனர். சுமார் முக்கால் மணி நேரத்தின் பின்னரே ஜேசுதாசன் அவர்கள் தனது நிலையை உறவினர்களுக்கு அறிவித்த போது அவர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமாகியுள்ளார்.
கடற்படையினர் தம்மால் மோதப்பட்ட வரை, மனிதாபிமானத்துடன் உடனே காப்பாற்றியிருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்க முடிந்திருக்கும். ஆனால் அவரைக் காப்பாற்றாமல் ஓர் கொலைக்கு சமமான மரணத்தை ஏற்படுத்தியுள்ளனர். மக்கள் கொந்தளிக்கின்ற சூழ்நிலையில், மக்களின் உணர்வுகளை மதிக்காமல், இன்று இங்கு வந்துள்ள கடற்படை உயரதிகாரிகள், இவ்விடயத்தைப் பெரிதுபடுத்த வேண்டாமெனவும், இழப்பீடுகளும், வேலைவாய்ப்பும் தருவதாகவும், இவ்விடயத்தை அப்படியே விட்டுவிடுமாறும் கூறியுள்ளனர்.
பெரிய குடும்பமொன்றின் குடும்பஸ்தரான ஜேசுதாசன் அவர்களின் கொலைக்கு சட்டரீதியாக அரசினால் வழங்கப்பட வேண்டிய இழப்பீடுகள் உரிய விதத்தில் உடனே வழங்கப்படுவதுடன், கொலைக்கான நீதியும் வழங்கப்பட வேண்டும் என இவ்விடத்தில் நான் கோரிக்கையொன்றை விடுக்கின்றேன். வழமைபோல இவ்விடயம் அரசினாலும்,படையினராலும் ஏமாற்றப்படுமானால், நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக எமது மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும் போது, அதில் நானும் கலந்து கொண்டு போராடுவேன். எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பின்னர் மக்களின் கடற்படையினருக்கு எதிரான மனக்கொந்தளிப்பின் மத்தியிலும், கடற்படையினர் மற்றும் புலனாய்வுப்பிரிவினரின் கடும் கண்காணிப்பிலும் அன்ரனி ஜேசுதாசனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.27 நவம்பர் 2014
'வடிவம் மாறலாம் ஆனால் போராட்டம் முடியவில்லை' : தமிழ்கவி
இலங்கையில் தமிழர் போராட்டம் முடிவுறவில்லை என்று கூறும் எழுத்தாளர் தமிழ்கவி, அதன் வடிவங்கள் மாற்றம்பெறலாம் என்கிறார்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியாகவும், போராளியின் தாயாகவும், ஊடகவியலாளராகவும் இறுதி யுத்தம் வரை, யுத்த மண்ணிலேயே இருந்த தமிழ்கவி அவர்கள், தனது போராட்ட அனுபவங்கள் குறித்து நூல் ஒன்றையும் எழுதியுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ஒரு உண்மையான போராளி என்று கூறும் அவர், அந்த அமைப்பின் உள்ளே நடந்த காட்டிக்கொடுப்புகளே, உள்முரண்பாடுகளே போரின் தோல்விக்கு காரணம் என்று கூறுகிறார்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இறந்துவிட்டதாகக் கூறும் அவர், பிரபாகரன் இறக்கவில்லை என்று கூறுபவர்களை கடுமையாக விமர்சிக்கிறார்.
அதேவேளை, தற்போதைய நிலையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வே முதன்மையானது என்று கூறும் அவர், அடிபட்டுப் போயிருக்கும் ஒருவனால், தற்போதைக்கு தமிழ் தேசியம் பேசிக்கொண்டிருக்க முடியாது என்றும் குறிப்பிடுகிறார்.
அரசாங்க புனர்வாழ்வுத்திட்டம் முன்னாள் போராளிகளுக்கு போதிய உதவிகளை செய்யவில்லை என்று கூறும் அவர் ஊரில் எஞ்சியுள்ள போராளிகளின் குடும்ப நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறுகிறார்.
இராணுவ பிரசன்னம், நில ஆக்கிரமிப்பு ஆகியவை குறித்தும் அவர் விமர்சிக்கிறார்.
அவர் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
உங்களின் கனவுகள் நிஜமாகும்;யாழில் அநாமதேய கடிதங்கள்!
உங்களின் கனவுகள் நிஜமாகும்; யாழில் அநாமதேய கடிதங்கள்
பாடைசாலைகளில் மாவீரர் தினத்தினை கொண்டாடுமாறு கோரி இனந்தெரியாதோரால் அநாமதேய கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.யாழ்ப்பாணத்தின் மத்தியில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளுக்கே இந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதில் உயிரை விதையாக்கி உதிரத்தை உரமாக்கி கனவு தேசத்தைக் கருவாக்கி ஓய்ந்த கரும்புலிகளே, மாவீரர்களே உங்களின் கனவுகள் நிஜமாகும் தமிழரின் நாடு உருவாகும் என்று எழுதப்பட்டுள்ளது.
26 நவம்பர் 2014
தலைவர் பிறந்தநாளில் யாழ்,பல்கலைக்கழகம் சுற்றிவளைப்பு!
25 நவம்பர் 2014
புலிகள் இயக்க உறுப்பினரை நீதிமன்றில் ஆயராகுமாறு உத்தரவு!
அனுராதப்புரம் வான்படை முகாம் மீது தரை மற்றும் வான் வழி தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் குற்றபத்திரிகை கையளிப்பதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் மற்றுமொரு உறுப்பினரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், டிசம்பர் மாதம் முதலாம் திகதி அவர் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என அனுராதப்புரம் விஷேட மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஏவுகணை பிரிவின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முன்னாள் உறுப்பினருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் சம்பவம் தொடர்பில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட மற்றுமொரு தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினரை டிசம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவி;டப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனுராதப்புரம் வான்படை முகாம் மீது தரை மற்றும் வான் வழி மூலம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மூலம் 10 வானுர்திகள் முற்றாகவும், 6 வானுர்திகள் பகுதியளவிலும் சேதமடைந்திருந்தமை குறிப்பிடதக்கது.
இந்த தாக்குதலின் போது, 14 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர்.
23 நவம்பர் 2014
ஜனாதிபதி வேட்பாளர் சுந்தரன் மகேந்திரன்!
புதிய இடதுசாரிகள் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக, அந்த கட்சியின் ஊடக பேச்சாளர் சுந்தரன் மகேந்திரன் நிறுத்தப்படவுள்ளார்.
அந்த கட்சியின் தலைவர் விக்ரமபாஹு கருணாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டிருந்தால் அவருக்கு ஆதரவளிக்க தமது கட்சி தயாராக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
ஆனால் அரசாங்கத்தின் அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவே பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமது கட்சி சார்பாக தனி வேட்பாளர் ஒருவரை நிறுத்த தீர்மானித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய சோசலிச கட்சியும் தமக்கான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த தீர்மானித்துள்ளது.
அந்த கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் வைத்து அதன் வேட்பாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஜே.வி.பியில் இருந்து பிரிந்து சென்ற முற்போக்கு சோசலிச கட்சியும் தனி வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த விருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
22 நவம்பர் 2014
சகோதரியுடன் சேட்டைவிட்ட சிப்பாயை பஸ்ஸை விட்டு இறக்கிய சகோதரர்கள்!
மினிபஸ்ஸில் மதுபோதையில் பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்ட சிப்பாய் ஒருவர் பஸ்ஸிலிருந்து இறக்கி விடப்பட்டு எச்சரித்து விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் மானிப்பாயில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கிப் புறப்பட்ட மினி பஸ்ஸில் இராணுவ சிப்பாய் ஒருவரும் ஏறியுள்ளார். இவர் பஸ்சில் இருந்த பெண்ணுடன் அங்கசேஷ்டை புரிந்த நிலையில் குறிப்பிட்ட பெண் தனது சகோதரர்களுக்கு தொலைபேசியில் சம்பவத்தை கூறியுள்ளார்.பெண்ணின் சகோதரர்கள் மானிப்பாய் பூட்சிற்றிக்கு அண்மையாக குறிப்பிட்ட மினிபஸ்ஸை மறித்து அந்தச் சிப்பாயை பஸ்ஸில் இருந்து இறக்கியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் கூடிய பொதுமக்களால் சிப்பாய் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.21 நவம்பர் 2014
எசன் மாநகரில் மாவீரர் நினைவுத்தூபி திரை நீக்கம்!
தமிழ்த் தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்துக்காக களமாடித் தம்முயிரீந்த மாவீரர்களதும்,அவ் இலட்சியப் போராட்டத்தின் கவசங்களாகவிருந்து குருதி சிந்தி சாவடைந்த மக்களதும் நினைவாக யேர்மனியின் எசன் நகரில் நிலை பெறுகின்றது ஓர் நினைவுத் தூபி.
தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமையப் பெற்றிருந்த மாவீரர் துயிலுமில்லங்களின் பிரதிபலிப்பாகவும் தோற்றம் பெற்றுள்ள இத் தூபி,ஐரோப்பா நாடுகளில் வாழும் அனைத்து தமிழ் மக்களினதும் வழிபாட்டுக்குரிய உணர்வுபூர்வமான வரலாற்று மையமாகத் துலங்கும்.
எதிர்வரும் 29.11.2014 (சனிக்கிழமை ) நண்பகல் 12.00 மணிக்கு திரைநீக்கம் செய்யப்படவுள்ள நிகழ்வில் தாயக உறவுகள் அனைவரையும் உணர்வு பூர்வமாக கலந்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம்.19 நவம்பர் 2014
மண்டைதீவு,குருநகர் மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்!
போதைப் பொருள் கடத்திய குற்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் இன்று இந்திய மீனவர்கள் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதைப் போன்று, அவர்களுடன் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மண்டைதீவு மற்றும் குருநகர் ஆகிய இடங்களைச் சேர்ந்த இலங்கை மீனவர்கள் மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என அவர்களது உறவினர்கள் கோரியிருக்கின்றனர்.
இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும் இலங்கை மீனவர்கள் பற்றி தகவல் தெரிவிக்காதிருப்பது தங்களுக்குக் கவலையளிக்கின்றது என்று தண்டனை பெற்றவர்களில் ஒருவராகிய மண்டை தீவைச் சேர்ந்த கிறிஸ்துராஜா ஹில்மட்ராஜின் மனைவி மரியபுளோரன்ஸ பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
"எனது கணவருடன் குருநகரைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் துஷாந்தன், கமல் கிறிஸ்டி ஆகிய மூவரையுமே ஐந்து இந்திய மீனவர்களுடன் வழக்கில் தண்டனை வழங்கியிருந்தார்கள். இந்திய மீனவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யும்போது எங்கள் கணவன்மாரையும் விடுதலை செய்யாதது ஏன்? அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். அவ்வாறு விடுதலை செய்யாவிட்டால் நாங்களும் தூக்கில் தொங்குவதைவிட வேறு வழி எங்களுக்கு இல்லை", என்று மரிய புளோரன்ஸ் தெரிவித்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர்கள் மூவரும் மூன்று வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.
"இவர்களை விடுதலை செய்வார்கள் என்று எதிர்பார்த்துத்தான் நாங்கள் கடந்த மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றத்திற்குப் போயிருந்தோம். ஆனால் அவர்களுக்கு மரண தண்டனை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. இப்போது அவர்களுடன் தண்டனை வழங்கப்பட்ட இந்திய மீனவர்களை பொதுமன்னிப்பு என்று விடுதலை செய்துவிட்டார்கள். ஆனால் எங்கள் உறவுகளைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. எனக்கு ஒரு மகன் இருக்கின்றார். எனது கணவரை நம்பித்தான் நாங்கள் வாழ்கின்றோம். அவர்கள் இல்லாமல் எங்களால் வாழ முடியாது", என்றும் மரிய புளோரன்ஸ் கூறினார்.நன்றி:பிபிசி தமிழ்
18 நவம்பர் 2014
நெடுந்தீவிற்கான போக்கு வரத்து மழையால் பாதிப்பு!
கடும் மழை, கடல் கொந்தளிப்புக் காரணமாக நெடுந்தீவுக்கான போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் நெடுந்தீவு பயணசேவையில் ஈடுபடும் குமுதினிப் படகு இயந்திரக் கோளாறு காரணமாக சேவையில் ஈடுபடவில்லை. தனியார் படகுகளே சேவையில் ஈடுபட்டன. இந்நிலையில் இன்று கடும் மழையும் கடற்கொந்தளிப்பும் காணப்படுவதால் தனியார் படகுகள் சேவையில் ஈடுபடவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை குமுதினி படகு இயந்திரக் கோளாறால் பயணசேவையில் ஈடுபட முடியாத நிலையில் தனியார் படகுகளும் மேல்கூரை இல்லாமையால் மழை பெய்யும்போது பயணத்தில் ஈடுபட முடியாத நிலையே காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.17 நவம்பர் 2014
மன்னார் கொலையின் சூத்திரதாரி ஆதாரம் அம்பலம்!
16 நவம்பர் 2014
விக்னேஸ்வரன் ஐயாவுக்கு தெரிந்தவை இவைதான்-சீமான்
விக்னேஸ்வரன் ஜயாவுக்கு கோவில் வாசலும் ,நீதிமன்ற வாசலும் தான் தொியும் வேறொன்றும் தொியாது என்று நாம் தமிழா் கட்சியின் தலைவா் சீமான் தொிவித்தாா். இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே சீமான் மேற்கண்டவாறு தொிவித்தாா்.
அவா் அந்த நோ்காணலில் மேலும் தொிவித்ததாவது.
ஐயா விக்னேஸ்வரன் யார்? இவ்வளவு காலமும் அவர் எங்கிருந்தார்? ஈழப் போராட்டம் எத்தனை காலமாக இடம்பெற்று வருகின்றது என ஐயா விக்னேஸ்வரனுக்குத் தெரியுமா?
விக்னேஸ்வரன் இந்தியாவுக்கு வந்திருந்த போது இந்திய மக்கள் செய்யும் நடவடிக்கைகள் காரணமாக தங்களுக்கு நெருக்கடி வந்துள்ளதாகத் தெரிவித்திருக்கும் கருத்து வேதனை அளிக்கின்றது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக 60 வருடங்களாகப் போராட்டம் நடந்து வருகின்றது. இதில் எதிலாவது இவருக்குப் பங்கு உண்டா? உதாரணமாக சொல்லப் போனால் அரசியல் போராட்டமாக இருக்கட்டும் , ஆயுதப் போராட்டமாக இருக்கட்டும். அப்போது எங்கே போய் இருந்தார் .
இறுதிக் கட்டப் போரில் கூட எந்தவிதமான நன்மைகளும் தமிழ் மக்களுக்கு இவா் செய்யவில்லை. ஒரு கடிதம் கூட வெளிநாடுகளுக்கு இவர் எழுதவில்லை. இவருக்கு எப்படித் தெரியும் போராட்டம் என்றால் என்ன என்று?ஐயாவிற்குத் தெரிந்தது கோவில் வாசலும், நீதிமன்ற வாசலும்தான் வேறு ஒன்றும் இவருக்குத் தெரியாது.
இதில் உண்மை என்னவென்றால் இலங்கையில் தனது மண்ணுக்காகப் போராடிய போராளிகளுக்கு அதிக பட்ச தண்டனை கொடுத்தது, ஐயா மட்டும் தான் அது போன்று அதிகப் பேரை சிறையில் தள்ளியதும் ஐயா தான் என அவா் மேலும் தெரிவித்துள்ளார்.கூட்டமைப்பின் மூன்று நிபந்தனைகள்!
ஜனாதிபதித் தேர்தலில் மூன்று நிபந்தனைகளின் அடிப்படையிலேயே யாரை ஆதரிப்பது என்ற முடிவை தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இதுகுறித்து கொழும்பு ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர், தமிழ் அரசியல் கைதிகள் சரியான விசாரணைகளின்றி பல ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும், வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து இராணுவத்தை அகற்றி அங்கு மக்கள் குடியமர்த்தப்படுவர் என வாக்குறுதியளிக்க வேண்டும், மேலும் தமிழ் மக்களுக்கு நிரந்ரமான அரசியல் தீர்வு வழங்குவதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும்.இந்த மூன்று கோரிக்கையையும் ஏற்றுக் கொள்பவரை கூட்டமைப்பு ஆதரிக்கும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் இது சம்பந்தமாக எந்தவொரு அரசியல் கட்சியுடனும் பேசவில்லை என்று கூறியுள்ளார்.15 நவம்பர் 2014
கனடா விமான விபத்தில் இரண்டு தமிழர்கள் பலி!
12 நவம்பர் 2014
சரவணையில் மரநடுகை நிகழ்வு!
11 நவம்பர் 2014
ராஜீவ் கொலை முயற்சிகளுக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை!
09 நவம்பர் 2014
சுவிசில் தமிழ் தம்பதியினர் காருடன் தீ மூட்டி எரிந்து மரணம்!
07 நவம்பர் 2014
தனங்கிளப்பில் குண்டுகளை மீட்டு அழித்தனராம் படையினர்!
சாவகச்சேரி தனங்கிளப்பு கடற்கரைப் பகுதியில் வெடிக்காத நிலையில் கிடந்த வெடிபொருட்கள் வெடிக்கவைத்து அழிக்கப்பட்டன. தனங்கிளப்புப் பகுதியில் இன்று மாலை 6 மணியளவில் கடற்றொழிலுக்குச் சென்றவர்கள் கரையோரமாக பற்றைக்குள் குண்டுகள் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்தனர். அங்கு விரைந்த பொலிஸார் அப்பகுதியிலிருந்து 81எம்.எம். மோட்டார் குண்டுகள் - 4, கைக்குண்டுகள் - 4 என்பவற்றை மீட்டனர். தொடர்ந்து அவர்கள் படையினருக்கு அறிவிக்க அங்கு வந்த குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் அவற்றை மாலை 6.30 மணியளவில் வெடிக்க செய்து அழித்தனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.06 நவம்பர் 2014
சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சைப்பிரிவில்!
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசபையின் உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.தீடிர் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவரிற்கு நாளை வெள்ளிக்கிழமை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.கடந்த சில நாட்களாக கடுமையான உடல் அவதிகளை சந்தித்திருந்த நிலையில் அவர் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைவராகவும் சிவாஜிலிங்கம் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தூங்கிக் கொண்டிருந்த மாணவியுடன் சிப்பாய் கட்டாய உறவுக்கு முயற்சி!
இராணுவத்தின் தலைமைத்துவப் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவியொருவரிடம் படைச்சிப்பாய் தப்பாக நடந்து கொள்ள முயற்சித்தமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் கடந்த செப்டம்பரில் நடைபெற்றிருந்த போதும் இதுவரை காலமும் இராணுவத்தினரால் மூடி மறைக்கப்பட்டிருந்ததாக சிங்கள ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. கடந்த செப்டெம்பர் மாதம் கண்டி கண்ணொருவை இராணுவ முகாமில் பயிற்சியில் கலந்து கொண்ட பல்கலைக்கழக மாணவியொருவருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த மாணவி தூங்கிக் கொண்டிருந்த நிலையில் ஜன்னல் ஊடாக செலுத்தப்பட்ட கையொன்று அவரை தப்பான முறையில் ஸ்பரிசிக்க முயன்றுள்ளது.மாணவி திடுக்கிட்டு எழுந்து கூக்குரலிட்டபோது குறித்த மர்ம நபர் தப்பியோடியுள்ளார். சம்பவம் தொடர்பில் முகாமிலுள்ள இராணுவப் பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் சந்தேக நபர்கள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் குறித்த மாணவி தூங்கிக் கொண்டிருந்த ஜன்னல் அருகே சேற்றுக் கால் தடங்கள் இருப்பதை கவனித்த இராணுவப் பொலிசார் அதனை வைத்து விசாரணைகளை மேற்கொண்டபோது கோப்ரல் தர படைச்சிப்பாய் ஒருவர் தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.எனினும் இந்தச்சம்பவம் இதுவரை காலமும் இராணுவம் மற்றும் உயர்கல்வி அமைச்சினால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. தற்போது சிங்கள ஊடகங்களில் இந்தச் செய்தி குறித்த தகவல்கள் பரபரப்பாக வெளியிடப்பட்டுள்ளது. குறித்த செய்தி தொடர்பாக கொழும்பு டுடே செய்திச் சேவை இராணுவ ஊடக மையத்தின் பணிப்பாளர் ஜயநாத் ஜயசேனவை தொடர்பு கொண்ட போது இது ஒரு சாதாரண விடயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த படைச்சிப்பாய் தண்டனையாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
04 நவம்பர் 2014
இலங்கையின் பாதுகாப்பில் ஐ.நா.தலையிடக்கூடாது என எச்சரிக்கை!
நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற செயற்பாடுகளில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் தலையிடக்கூடாது என்று பதிலளித்திருக்கிறது இலங்கை அரசு. மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் ஒருவர் போட்டியிடக் கூடிய வகையில் அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்த 18 ஆவது திருத்தத்தை ரத்து செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் அண்மையில் அரசிடம் கோரியது. இந்தக் கோரிக்கையை மறுத்துள்ள இலங்கை அரசு, இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விடயங்களில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் தலையிடக்கூடாது என்று பதிலளித்துள்ளது. இந்த தகவலை கொழும்பு சிங்கள நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு கிடையாது என அரசின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றும் - 18 ஆவது திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உள்நாட்டில் இயங்கி வரும் அரசு சார்பற்ற நிறுவனமொன்று ஐ.நா.மனித உரிமை கவுன்ஸிலுக்கு சமர்ப்பித்துள்ளமை தமக்கு தெரியவந்துள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.02 நவம்பர் 2014
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் வீரவணக்க நாள் இன்று!
சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 வது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப் பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.
1986ல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.
தேசியத் தலைவர் அவர்களுடன் தாயகம் திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ்.தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
1991 வரை அப்பதவியில் அவர் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.
1991 இல் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார்.
1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.
1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.
அமைதிப் பேச்சுக்களில் வெளிநாடுகளின் முதன்மைப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசின் அமைதிப் பேச்சுக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.
படைத்துறை வழியில் அவரின் செயற்பாடுகள்
1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கையிலும் 1992 இல் சிறிலங்கா படையினரின் “பலவேகய – 02″ எதிர்ச்சமரிலும் முதன்மையானதாக இருந்தது.
மேலும் தச்சன்காடு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல்
காரைநகரில் சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல்
ஆகியவற்றிலும் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் முதன்மைப் பங்காற்றினார்.
1991 இல் மன்னார் சிலாபத்துறை சிறிலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார்.
ஆகாய கடல்வெளிச் சமரில் அவர் விழுப்புண் பட்டார்.
பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான “தவளை நடவடிக்கை”யில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் விழுப்புண் பட்டார்.
“ஒயாத அலைகள் – 03″ நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.
தன்னுடைய அரசியல் பணி மூலம் அதிகம் மக்கள் மனதில் நிறைந்தவராக சு.ப.தமிழ்ச்செல்வன் விளங்கினார்.தாயகத்திலும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக அவர் விளங்கினார்.
அமைதி நடவடிக்கையில் தமிழினத்தின் விடுதலைக் கொள்கையில் உறுதியாக நின்று எதிரிகளின் ஏமாற்று நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர் அவர்.
மேலும் பன்னாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பெருமதிப்பை பெற்றிருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.
01 நவம்பர் 2014
யாழில் ரவுடிகளை துரத்தித் துரத்தி வெட்டிய மாணவன்!
யாழ் இந்துக் கல்லுாரிக்கு அண்மையில் பஸ்சிற்காக காத்திருந்த 16 வயது மாணவனை அங்கு வந்த சில ரவுடிகள் செயின்கள் மற்றும் பொல்லுகளால் தாக்கிய போது மாணவன் தான் மறைத்து வைத்திருந்த வாளினால் அவா்களைத் துரத்தித் துரத்தி தாக்கியதில் மாணவனைத் தாக்கிய ரவுடிகள் கழுத்து மற்றும் கைகளில் கடும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ஓடி மறைந்துள்ளனா். இச் சம்பவத்தை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.இதனையடுத்து அங்கு வந்து பொலிசாாா் மாணவனைக் கைது செய்துள்ளனா். இதே வேளை மாணவனைத் தாக்கியவா்கள் யாா் என்பது பற்றியும் பொலிசாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகின்றது.
மாணவன் எதற்காக பாடசாலைக்கு வாள் கொண்டு வந்தாா் என்பதும் மாணவனை எதற்காக ரவுடிகள் தாக்கினாா்கள் என்பது பற்றியும் பொலிசாா் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.
இதே வேளை யாழ்ப்பாணபப் பாடசாலைகளில் மாணவா்களிடேயே போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள அதே வேளை ரவுடிகளுடனான தொடா்புகளும் அதிகரித்துக் காணப்படுவது கவலைக்குரிய ஒன்றாக உள்ளதாக கல்விச் சமூகம் தெரிவிக்கின்றது.
30 அக்டோபர் 2014
சிறீலங்கா நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி!போர்க்களமானது இராமேஸ்வரம்!
29 அக்டோபர் 2014
மலையகத்தில் மண்சரிவில் புதையுண்டனர் மக்கள்!
26 அக்டோபர் 2014
கிளி,யில் விசாரணைப்படிவம் வழங்கியவர் கைதாம்!
ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலால் நியமிக்கப்பட்ட போர்க்குற்ற விசாரணைக் குழுவுக்கு சாட்சியமளிப்பதற்கொனத் தயாரிக்கப்பட்ட படிவங்களை கிளிநொச்சிப்பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை பயங்கரவாதத் தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்தனர் என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் மக்களுக்கு படிவங்களை விநியோகித்துக் கொண்டிருந்த சமயமே நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. கைதான நபரிடமிருந்து போர்க்குற்ற விசாரணைக்காக சமர்ப்பிக்கப்படவிருந்த படிவங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும், அவரை வவுனியாவுக்கு கொண்டுசென்று விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதானவர் கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.25 அக்டோபர் 2014
முள்ளிவாய்க்கால், ஆனந்தபுரம் பகுதிகளில் உடல்கள் எரிக்கப்பட்டுள்ள எச்சங்கள்!
நன்றி,-தமிழர் குரல்-
24 அக்டோபர் 2014
காணாமற்போன பெண் சடலமாக கண்டுபிடிப்பு!
நன்றி!மலரும்.கொம்
23 அக்டோபர் 2014
புலிகளுடன் தொடர்பு என்பது பொய்யென துரைராஜா மறுப்பு!
22 அக்டோபர் 2014
யாழ்,சங்கிலியன் அரண்மனைக்கு சிங்களவர் உரிமை கோருகிறார்!
நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சங்கிலியன் அரண்மணை எனது பரம்பரைச்சொத்து. அதனை மீட்டுத் தரவேண்டும் என உரிமை கோரி திடீரென எங்கிருந்தோ வந்த தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அரண்மனைக்குச் சொந்தமான பரம்பரையின் இப்போதுள்ள வாரிசு நான்தான். ஆனால் இதனை தொல்பொருள் திணைக்களம் உரிமை கொண்டாடி வருகிறது எனவும் அந்த முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார். உரிய விசாரணை மேற்கொண்டு எனது பரம்பரைச் சொத்தை மீட்டுத் தரவேண்டும் எனவும் தனது முறைப்பாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண தமிழ் இராச்சியத்தின் சான்றுகளாக இப்போது எஞ்சியிருப்பது நல்லூர் சங்கிலிதோப்பு, மந்திரிமனை, அரண்மணை வாயில், சங்கிலிய மன்னனின் சிலை உள்ளிட்ட மிகச் சிலவே என்பது குறிப்பிடத்தக்கது.21 அக்டோபர் 2014
இந்தியப்படைகளால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம்!
யாழ்.போதனா வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு கடமையில் இருந்த போது சுட்டுக்கொல்லப்பட்ட 21 பேரின் 27 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், போதனா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் மலர் தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். 1987ஆம் ஆண்டு இதே தினத்தில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த இந்திய இராணுவம் அங்கு கடமையில் இருந்த வைத்தியர்கள் தாதியர்கள் உட்பட 21பேரையும் நோயாளர்கள் 60 பேரையும் சுட்டுக்கொன்றனர் என்பது தெரிந்ததே.20 அக்டோபர் 2014
கஜதீபனை விழாக்களுக்கு அழைக்க விசாரணையாம்!
19 அக்டோபர் 2014
யாழில் மழையுடன் விழுந்தன மீன்கள்!
யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை பெய்த மழையுடன் மீன்களும் விழுந்துள்ளன. குடாநாட்டில் பரவலாக பருவமழை பெய்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக வண்ணை வீரமாகாளி அம்மன் ஆலயப் பகுதியில் மீன் மழை பெய்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீரமாகாளி அம்மன் கோயில் பகுதியில் பெய்த மழையின்போது 30 தொடக்கம் 40 வரையான மீன்கள் மழையுடன் விழுந்துள்ளன. கறுப்பு நிறத்தில் இருந்த சிறிய மீன்களை பார்வையிட அப்பகுதியில் மக்கள் திரண்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக நேரில் கண்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் - அதிகாலைவேளை ஆலயத்தின் பிரதம குரு அருகில் இருந்த தனது வீட்டில் இருந்து ஆலயத்தை நோக்கிச் சென்றுள்ளார். இதன் போது ஆலயத்தின் முன்பகுதியில் சில மீன்கள் துடித்துக் கொண்டு இருப்பதை அவதானித்துள்ளார். இதன் பின்னர் அயலில் உள்ளவர்களை அழைத்துக் கொண்டு அப்பகுதியை முழுமையாக அவதானித்துள்ளார்.இதன் போது அப்பகுதியில் உள்ள தேர் முட்டியடியில் தேங்கி நின்ற மழை வெள்ளத்தில் ஏராளமான மீன்கள் காணப்பட்டதையும் அவதானித்துள்ளனர். அதே போன்று ஆலயத்தின் முன்பகுதியிலும் அதிகளவான மீன்கள் துடித்துக்கொண்டு இருந்துள்ளன. மழையுடன் சேர்ந்து மீன் விழுந்த சம்பவம் தொடர்பாக கதை தெரிந்த பலர் அங்கு வந்து மீன்களை பார்வையிட்டுச் சென்றிருந்தனர். இதன் பின்னர் அங்கிருந்த சில மீன்கள் பொது மக்களால் பிடித்துச் செல்லப்பட்டதுடன், பறவைகளும் தூக்கிச் சென்றுள்ளன என்று தெரிவித்திருந்தனர்.யாழில் பியர் விற்பனை அதிகரிப்பு!
யாழ்.மாவட்டத்தில் கடந்த பன்னிரெண்டு வருடங்களில் பியர் பாவனையாளர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமால் அதிகரித்துள்ளது என்று யாழ். மாவட்ட வணிகர் கழகம் தெரிவித்துள்ளது. யாழ். மாவட்ட வணிகர் கழக மண்டபத்தில் வணிகர் கழகத் தலைவர் எஸ்.ஜெயசேகரம் தலைமையில் நேற்று சனிக்கிழமை நடை பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு பியர் பாவனையானது 5 லட்சத்து 55 ஆயித்து 304 லீற்றராக இருந்தது. இந்த நுகர்வு கடந் 2013 ஆம் ஆண்டில் 40 லட்சத்து 56 ஆயிரத்து 999 லீற்றராக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பானது இளைய தலைமுறையினர் தவறான பாதையில் இட்டுச் செல்லப்படுகின்றனர் என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. இதுகுறித்து பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் அதிக அக்கறை காட்டவேண்டியது அவசியமாகும்.என வணிகர் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.17 அக்டோபர் 2014
மகிந்த வரவால் நெடுந்தீவு ஆசிரியர்களுக்கு வந்தது செலவு!
மஹிந்தவின் தீவக விஜயத்தின் போதான செலவுகளை ஆசிரியர்களது தலையில் கட்டியடிக்க முற்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. மஹிந்தவின் யாழ்ப்பாண வருகையை முன்னிட்டு பாடசாலையில் ஏற்பட்ட செலவுகளை ஆசிரியர்களே பொறுத்துக்கொள்ள வேண்டுமென நிர்ப்பந்திப்பதாகவே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.நெடுந்தீவிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர்களை இவ்விடயத்தனில் அதிபர் நிர்ப்பந்தித்து வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மஹிந்த யாழ்ப்பாணத்தில் தங்கி நின்று பல இடங்களிற்கும் சென்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். குறிப்பாக மூன்றாம் நாளன்று தீவுப்பகுதிகளுக்கு சென்றிருந்த வேளை நெடுந்தீவிற்கும் சென்றிருந்தார். இங்கு நெடுந்தீவு மகா வித்தியாலயத்திற்குச் சென்று மகிந்தோதயா ஆய்வு கூடத்தையும் திறந்து வைத்திருந்தார்.இதற்காக ஐனாதிபதியின் வருகையினை முன்னிட்டு பாடசாலையிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பல்வேறு அலங்கரிப்புக்களும் மேற்கொள்ளப்பட்டன.இதற்காக கல்வித் திணைக்களத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆயினும் அந்த நிதி போதாததால் மேலதிகமாக ஒரு இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் கணக்குக் காட்டியுள்ளார். ஆகவே இதனை குறித்த பாடசாலையிலுள்ள 16 ஆசிரியர்களுமே வழங்க வேண்டுமென்றும் கோரியுள்ளார்.ஆயினும் இதற்கு ஆசிரியர்கள் சம்மதம் தெரிவிக்காத போதும் குறித்த பாடசாலையின் அதிபர் அமைச்சர் டக்ளஸின் ஆசி பெற்றவர் என்றும் அவரை முன்னிறுத்தி ஏதும் பழிவாங்கலில் ஈடுபடலாமெனவும் ஆசிரியர்கள் அச்சம் கொண்டுள்ளதால் இச் சம்பவம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்திடம் முறையிட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது."ஜெயாவிற்கு பிணை"பட்டாசு கொளுத்திக் கொண்டாடினார் சரத்குமார்!
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைத்தது, தற்போதே தீபாவளியைக் கொண்டாடிய மகிழ்ச்சியை அளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார். 18 வருடங்களாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்து கடந்த மாதம் தீர்ப்பளித்தது பெங்களூர் சிறப்பு நீதிமன்றம். தீர்ப்பையடுத்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. அதனைத் தொடர்ந்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் வேண்டி மனுத் தாக்கல் செய்தார் ஜெயலலிதா. ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் ஜாமீன் வேண்டி மனுத்தாக்கல் செய்தார். ஜெ.க்கு ஜாமீன்... படப்பிடிப்பில் பட்டாசு வெடித்து ‘தீபாவளி’ கொண்டாடிய சரத்குமார் இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனை அறிந்த அதிமுகவினர் மகிழ்ச்சியாக இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைத்திருப்பது தொடர்பாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் எம்.எல்.ஏ. இது தொடர்பாக ஜெயா டிவிக்கு அளித்த தொலைபேசி பேட்டியில் அவர் கூறியதாவது:- அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைத்தது குறித்து கேள்விப் பட்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். அவர் தடைக் கற்களைத் தகர்த்தெறிந்து மீண்டு வருவார். இத்தகவலை அறிந்து மக்கள் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நான் தற்போது ஒரு படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் இருக்கிறேன். இங்கு எல்லாரும் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைத்திருப்பது குறித்து அறிந்து மகிழ்ச்சியாக உள்ளனர். பட்டாசுகள் வெடித்து இதனை நாங்கள் கொண்டாடுகிறோம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார். தனது பேச்சிற்கு இடையே படப்பிடிப்புத் தளத்தில் பட்டாசுகள் வெடித்த ஓசையையும் தொலைபேசி வழியாக அவர் கேட்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.16 அக்டோபர் 2014
புலிகள் மீதான தடையை ஐரோப்பிய நீதிமன்றம் நீக்கியது!
விடுதலை புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்ப்பதில் ஐரோப்பிய கவுன்சில் கையாண்டிருந்த நடைமுறையில் தவறுகள் இருக்கின்ற காரணத்தால், இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்று இந்தியாவில் அறிவிக்கப்பட்டிருந்த முடிவின் அடிப்படையில், ஐரோப்பிய கவுன்சில் முடிவெடுத்திருந்ததாகவும், அது முறையல்ல என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
எனவே ஒரு மூன்று மாத காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் வைத்திருப்பது பற்றி ஐரோப்பிய கவுன்சில் மறுபடியும் பரிசீலித்து புதிதாக முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
இடைப்பட்ட காலத்தில் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் நீடிக்கவே செய்யும் என்றும், அது நீக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக ஐரோப்பிய நீதிமன்றத்தின் ஊடககத்துறை அதிகாரியான கிறிஸ்டஃபர் ஃப்ரெட்வெல் பிபிசியிடம் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பா என்ற கேள்வியை ஐரோப்பிய நீதிமன்றம் பரிசீலித்திருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாத அமைப்புகளுக்கு பொருந்தக்கூடிய சர்வதேச விதிகளையும் அளவுகோல்களையும் விடுதலைப் புலிகளுக்கு பொருத்த முடியாது என்ற புலிகள் தரப்பு வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது என அவர் குறிப்பிட்டார்.இலங்கை அறிக்கை:
ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தும் விஷயம் இந்த உத்தரவில் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி ஐரோப்பிய கவுன்சிலுக்கு இலங்கை அரசு இதுவரை தகவல் வழங்கி வந்ததுபோலவே இனியும் தொடர்ந்து தகவல் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் சம்பந்தமாக ஐரோப்பிய ஆணையம் செய்யும் மறு பரிசீலனையிலும் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தாம் நம்புவதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
15 அக்டோபர் 2014
காவலூர் ராஜதுரை இயற்கை எய்தினார்!
![]() |
| காவலூர் ராஜதுரை |
14 அக்டோபர் 2014
தீவகத்தில் மகிந்தோதய!
வடபகுதிக்கு வருகை தந்த மகிந்த ராஜபக்ஷ நெடுந்தீவிற்கு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.நெடுந்தீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய பிரதேச செயலகக் கட்டிடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்காக கையளிக்கின்றார்.இதனிடையே நெடுந்தீவு மத்திய மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தையும் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து பாடசாலை சமூகத்திடம் கையளித்தார்.இதனிடையே வேலணையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதேச செயலகக் கட்டிடத்தை திறந்து வைத்து பாடசாலை சமூகத்திடம் கையளிக்கவுள்ள மகிந்த ராஜபக்ஷ ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி, காரைநகர் தியாகராஜா மத்திய மகாவித்தியாலயம் மற்றும் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி ஆகியவற்றில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய ஆய்வுகூடங்களையும் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து பாடசாலை சமூகத்திடம் கையளிக்கவுள்ளார்.இந்த நிகழ்வுகளில் சிறீலங்காவின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்துறைசார்ந்தோர் கலந்து கொண்டனர்.இன்றைய நிகழ்வுகளை நிறைவு செய்யும் மகிந்த ராஜபக்ஷ மாலை கொழும்புக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.12 அக்டோபர் 2014
மஹிந்தவுக்கு ஒரு நுளம்பு கூடக் கடிக்ககூடாது!
போர்க்குற்றவாளியின் வரவை ஒட்டி முன்னெப்போதும் இல்லாத வகையில் யாழ் சுகாதாரப் பகுதியினர் முற்றவெளிப் பிரதேசத்தில் நேற்றிரவு நுளம்பை ஒழிப்பதற்காகப் புகையூட்டும் பணி நடைபெற்றது.மஹிந்தவுக்கு ஒரு நுளம்பு கூடக் கடிக்ககூடாது என்பது டக்ளஸ் குழுவின் எதிர்பார்ப்பாம். இதனால் யாழ். வீரசிங்கம் மண்டபத் தைச் சூழ உள்ள பகுதியில் இந்தப் புகையூட்டும் பணிகள் மஹிந்தவிற்காக இடம்பெற்றன. அத்துடன் முற்றவெளி பகுதியைத் தூய்மை யாக்கும் பணியில் சுகாதார பகுதினர் கடந்த இரண்டு நாள்களாக ஈடுபட்டுவருகின்றனராம். அதேவேளைஇ வீரசிங்கம் மண்டபத்தில் உள்ள நன்னீர் கிணற்றின் குடிநீரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. கிணற்று நீரில் ஏதாவது தொற்று கிருமிகள் உண்டா என்பதைக் கண்டறிவதற்காகச் சுகாதாரப் பகுதியினர் அதன் மாதிரியை எடுத்து சென்றனர்.மஹிந்த தான் மனிதன் மற்ற குடா நாட்டு மக்கள் எல்லோரும் மிருகங்களா? இந்த வேலையை ஒழுங்காக வாரம் தோறும் செய்தாலுமே யாழ் குடா நாட்டில் டெங்கினையும் வயிற்றோட்டத்தினையும் கட்டுப்படுத்தலாம் அல்லவா?நன்றி:ஈழநாதம்
11 அக்டோபர் 2014
ஈபிடிபியினரின் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினார் தர்மகர்த்தா!
வடமராட்சியின் வல்லிபுரக்கோவில் ஆலய தர்மகர்த்தா ஒருவர் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி தாக்குதலிலிருந்து அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.ஈபிடிபி சார்பு முக்கியஸ்தர் ஒருவரால் ஆலய கட்டிட நிர்மாணப்பணிகளில் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 31 கோடி ஊழல் மோசடி தொடர்பில் நியாயம் கேட்டுப்போராடி வந்திருந்த 67 வயதுடைய சதானந்தன் கேசவானந்தன் என்பவரே கொலை முயற்சியிலிருந்து காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.இன்று நடைபெற்ற ஆலய தர்மகர்த்தா சபைக் கூட்டத்தில் பருத்தித்துறை பிரதேசசபையின் உறுப்பினரும் ஈபிடிபி ஆலய தர்மகர்த்தாக்களுள் ஒருவராக திணிக்கப்பட்டு உள்ளவருமான குறித்த நபரிடம் ஆலய புனரமைப்பு தொடர்பாக நடந்த மோசடிகள் தொடர்பாக முரண்பட்ட நிலையில் பருத்தித்துறை மருதங்கேணி வீதியினூடாக கற்கோவளத்திலுள்ள தனது வீடு நோக்கி சென்ற வேளையிலேயே அவர் தாக்கப்பட்டுள்ளார்.மோட்டார் சைக்கிளில் தமது முகங்களை மறைத்தவாறு சென்ற தாக்குதலாளிகள் இவர் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். தம்மால் எடுத்துவரப்பட்ட வாள்களால் இவரை வெட்ட முற்பட்ட வேளை வீதியால் வந்திருந்த அரச பேருந்து பயணிகளால் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். தன் மீதான கொலை முயற்சி பற்றி அவர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தினில் முறைப்பாடொன்றை செய்துமுள்ளார்.ஆலய தர்மகர்த்தா சபையில் இருக்கும் குறித்த ஈபிடிபி பிரமுகரிடமே ஆலய நிர்மாண வேலைகள் முறையற்ற விதத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் ஆலய நிர்வாக சபையிலுள்ள ஏனைய தர்மகர்த்தாக்கள் முரண்பட்டு வந்துள்ளனர். இப்பிரச்சினை உச்சம் பெற்றுள்ள நிலையில் ஆலய வருடாந்த உற்சவம் முடிவுற்றதும் ஒன்று கூடி ஆராய்ந்த கூட்டத்தில் முரண்பாடு உச்சம் பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே தன் மீதான கொலை முயற்சி இடம்பெற்றதாக தனது முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கலைக்கழக பேரவை முதல் போக்குவரத்து சபை, வைத்தியசாலை அபிவிருத்தி சபை வரை தமது ஆதரவாளர்களையும் முக்கியஸ்தர்களையும் ஈபிடிபி திணித்து வருவது தெரிந்ததே. தற்போது ஆலய தர்மகர்த்தா சபைகளையும் விட்டுவைக்காது தமது சாதனைகளை தொடர்வதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.10 அக்டோபர் 2014
குமார் குணரட்னம் இலங்கைக்குள் பிரவேசிக்கத் தடை!
முன்னணி சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் இலங்கைக்குள் பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குமார் குணரட்னத்தின் பெயர் கறுப்புப் பட்டியலிடப்படும் ஆவணத்தில் பதியப்பட்டுள்ளது.நாட்டுக்கு எதிரான வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தி குமார் குணரட்னத்திற்கு இவ்வாறு நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த சில காலங்களாக சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விஜயம் செய்து இலங்கைக்கு எதிராக பிரச்சாரங்களில் ஈடுபட்டதாக அவுஸ்திரேலிய பிரஜையான குமார் குணரட்னம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினர் இந்த குற்றச்சாட்டை உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் அடிப்படையில் குமார் குணரட்னத்தின் பெயரை இலங்கை குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம், நாட்டுக்குள் பிரவேசிக்க முடியாத கறுப்புப் பட்டியலிடப்பட்டவர்களின் வரிசையில் இணைத்துள்ளது.இதேவேளை, வீசா இன்றி நாட்டு;க்குள் தங்கியிருந்தமைக்காக கடந்த 2012ம் ஆண்டு நீதிமன்றம் விதித்திருந்த அபராதத் தொகை இதுவரையில் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.குமார் குணரட்னத்திற்கு எதிரான அபராதப் பணத்தை கட்சி செலுத்த உள்ளதாக முன்னணி சோசலிச கட்சி அறிவித்திருந்தது.எனினும் இதுவரையில் அபராதத் தொகை செலுத்தப்படவில்லை.ஜனாதிபதி தேர்தலில் குமார் குணரட்னத்தை கட்சியின் சார்பில் போட்டியிட செய்ய முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.09 அக்டோபர் 2014
கூட்டுக்கட்சிகளுடன் பேதம் பார்க்கவில்லை என்கிறார் வடக்கு முதல்வர்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளுடன் தான் பேதமின்றியே நடந்து கொள்வதாக, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், தமிழரசுக் கட்சியின் சார்பாக நான் நடந்து கொள்வதாக என்னிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளிக்கையில், நான் கொள்கை ரீதியாக தமிழரசுக் கட்சியுடன் மட்டுந்தான் இணந்திருக்க முடியுமேயொழிய, வன்முறையோடு சம்பந்தப்பட்ட ஈபிஆர்எல்எவ், டெலோ, புளொட் ஆகிய கட்சிகளுடன் கொள்கை ரீதியாக நான் இருக்க முடியாதென்று தெரிவித்தேன்.ஆனால் அந்தக் கட்சிகளை நான் எந்தவிதமான பேதத்துடனும் நடத்தவில்லை. அவர்களுடன் மனிதாபிமானத்துடன். சகோதரத்துவத்துடன் தான் நடந்து வருகின்றேன். அவ்வாறு பேதம் காட்டி நான் நடந்து கொள்வதாக இருந்தால் ஈபிஆர்எல்எப் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கமாட்டேன். அந்த மாநாட்டில் நான் கலந்து கொண்டு செயற்பட்டதை அவர்கள் போற்றி மகிழ்ந்திருக்கின்றார்கள்.‘இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளாமல் வெளியில் இருப்பவர்கள் நடைமுறைக்கு அப்பாற்பட்ட வகையில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்கள். இது துரதிஷ்டவசமானது. நான் எவரையும் வேற்றுமையுடன் நடத்தவில்லை. எனவே இது சம்பந்தமாக அவர்கள் எந்தவிதமான ஐயப்பாட்டையும் கொள்ளத் வேண்டியதில்லை. ஒரு சில்லறை விடயத்தை வெளியில் இருப்பவர்கள் பெரிதுபடுத்தியிருப்பது மன வருத்தத்தை அளிக்கின்றது என்றும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.அதேவேளை, இதுபற்றி பிபிசி தமிழோசையிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பின் ஊடாக முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கி முதலமைச்சராகியுள்ள, வடமாகாண முதலமைச்சர், நடுநிலை நின்று அனைவரையும் வழிநடத்திச் செயற்பட வேண்டும், ஒரு கட்சியின் சார்பாகச் செயற்படக் கூடாது என்று அவரைக் கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்டார்.முதலமைச்சர் தமிழரசுக் கட்சியின் சார்பாக நடந்து கொள்கின்றார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்ததற்குப் பதிலளித்த முதலமைச்சர், ‘இதற்கு நான் கூறுகின்ற பதிலையிட்டு நீங்கள் யாரும் கோபிக்கக் கூடாது. நான் ஈபிஆர்எல்ப் கட்சியுடனோ, டெலோவுடனோ, புளொட் கட்சியுடனோ சேர முடியாது. நான் தமிழரசுக் கட்சியின் சார்பாக இருக்கின்றேன் என தெரிவித்ததாகக் கூறினார்.முதலமைச்சருக்குப் பதிலளிக்கும் வகையில், நீங்கள் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள எல்லா கட்சிகளும் உங்களிடம் வேண்டிக் கொண்டதையடுத்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வந்த நீங்கள் எல்லோருக்கும் பொதுவாக நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் குறிப்பிடுகின்ற இந்தக் கட்சிகள் எல்லாம் 25 வருடங்களுக்கு முன்னர் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து தங்களை தேர்தல் திணைக்களத்தில் அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவியையும் வகிக்கின்றார்கள்.அரசாங்கத்துடனும், எதிர்க்கட்சிகளுடனும், வெளிநாடுகளுடனும் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் பேச்சுக்கள் நடத்தி வருகின்றார்கள். ஆயுதப் போரட்டத்தை மேற்கொண்டிருந்தவர்கள் என்று, நீங்கள் சுட்டிக்காட்டுவது இல்லாத ஒரு விடயத்தைப் புதிதாக உருவாக்குவதாகவே இருக்கின்றது.அத்துடன் தமிழரசுக் கட்சி உங்களை அவர்களுடன் சேருமாறு கேட்டிருக்கலாம், ஈபிஆர்எல்எப் கட்சியியோ, டெலோ மற்றும் புளொட் கட்சிகளோ உங்களைத் தங்களுடன் சேருமாறு கேட்கவுமில்லை. இந்த நிலையில் நீங்கள் குறிப்பிடுவது ஆயுதப் போராட்டத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகவும் அமைந்துள்ளது என அவரிடம் தெரிவித்தேன். அவருடைய பதில் எங்களுக்கு அதிருப்தி தரும் வகையிலேயே அமைந்திருந்தது என்பதையும் அவருக்கு எடுத்துக் கூறினேன் என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.08 அக்டோபர் 2014
பிரஜைகள் குழு தலைவர் மீது தாக்குதல்!
![]() |
| ஆவணப்படம் |
07 அக்டோபர் 2014
பேஸ்புக் துஷ்பிரயோகம்! 1500 கணக்குகள் முடக்கம்!
இலங்கையில் பேஸ்புக் துஷ்பிரயோக நடவடிக்கைகள் காரணமாக சுமார் 1500 பேஸ்புக் பயனாளர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர்.
பேஸ்புக் ஊடாக யுவதிகளை ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களின் கணக்குகள் இனங்காணப்பட்டு அவை தடை செய்யப்பட்டுள்ளன.பேஸ்புக் மோசடிகள் தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் இலங்கை கணணிசார் அவசர வினையாற்றல் குழு இதற்கான பரிந்துரைகளை செய்திருந்தது. பல்வேறு நபர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்தப் பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த வருடத்தில் மட்டும் பேஸ்புக் முறைகேடுகள் தொடர்பாக சுமார் 1800 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறித்த வினையாற்றல் குழுவின் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார். இவற்றில் பெரும்பாலானவை போலிப் பெயர்களில் உருவாக்கப்பட்ட பேஸ்புக் கணக்குகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பேஸ்புக் ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடிகளைத் தடுக்கும் வகையில் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தற்போது பேஸ்புக் மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு 011 2 691 692 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ள முடியும் என்றும் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.06 அக்டோபர் 2014
கோபியின் மனைவியை சுவிஸ் செல்லவிடாமல் தடுத்தது சிங்களம்!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்க முனைகிறார் எனக் குற்றம்சாட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட கோபியின் மனைவி சர்மிளா வெளிநாடு செல்வதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.சுவிற்சர்லாந்துக்கு செல்வதற்காக கோபியின் மனைவி சர்மிளா நேற்று ஞாயிற்றுக்கிழமை உரிய ஆவணங்களுடன் பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு சென்றார் என்றும் அங்கு வைத்தே அதிகாரிகள் சுவிஸுக்கு செல்ல விடாமல் அவரைத் தடுத்து நிறுத்தினர் என்றும் தெரிவிக்கப்பட்டது.அவரிடம் சுவிஸ் செல்வதற்கான நுழைவிசைவு (விஸா) இருந்த போதிலும் அவரது கணவர் தொடர்பான வழக்கு விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதனாலேயே அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.சர்மிளாவை விமான நிலையத்திலேயே சிறிது நேரம் அதிகாரிகள் தடுத்து வைத்திருந்தனர். இதனை எதிர்த்து சுவிஸ் தூதரக அதிகாரிகள் விமான நிலைய அதிகாரிகளுடன் வாதாடினர். இதன்போதே அவரின் கணவர் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கின்றமையால் அவரை வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனர்.மேலும் விமான நிலையத்தில் சர்மிளாவை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் துருவித் துருவி விசாரணைகளை மேற்கொண்டனர் என்றும் தெரியவருகிறது.05 அக்டோபர் 2014
குறிகாட்டுவானில் வடதாரகை!
சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நெடுந்தீவுக்கு அடுத்த வாரம் செல்லவுள்ள நிலையில் ஒரு வருட காலமாக யார் கண்ணிலும் படாமல் ஓய்வெடுத்த வடதாரகைப் படகு நேற்றைய தினம் திடீரென குறிகாட்டுவான் துறைமுகத்துக்கு கடற்கடையினரால் கொண்டுவந்து விடப்பட்டுள்ளது.பல்வேறு காரணங்களால் இதுவரை காலமும் வடதாரகை கடற்படையினரின் கைவசமிருந்தது. இது தொடர்பில் பல தரப்பினராலும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டும் இருந்தது. ஆனாலும் மக்கள் பயன்பாட்டுக்காக வராத வடதாரகை தற்போது மகிந்தவின் வருகையை முன்னிட்டு தனது சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது என தெரிகிறது.வட்டக்கச்சியில் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி!
![]() |
| ஆவணப்படம் |
04 அக்டோபர் 2014
தமிழ்மக்கள் தங்களை நேசிப்பதாக இராணுவம் மனப்பால் குடிக்கிறது – பொ.ஐங்கரநேசன்!
![]() |
| பொ.ஐங்கரநேசன் |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)








