
தமிழ்த் தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்துக்காக களமாடித் தம்முயிரீந்த மாவீரர்களதும்,அவ் இலட்சியப் போராட்டத்தின் கவசங்களாகவிருந்து குருதி சிந்தி சாவடைந்த மக்களதும் நினைவாக யேர்மனியின் எசன் நகரில் நிலை பெறுகின்றது ஓர் நினைவுத் தூபி.
தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமையப் பெற்றிருந்த மாவீரர் துயிலுமில்லங்களின் பிரதிபலிப்பாகவும் தோற்றம் பெற்றுள்ள இத் தூபி,ஐரோப்பா நாடுகளில் வாழும் அனைத்து தமிழ் மக்களினதும் வழிபாட்டுக்குரிய உணர்வுபூர்வமான வரலாற்று மையமாகத் துலங்கும்.
எதிர்வரும் 29.11.2014 (சனிக்கிழமை ) நண்பகல் 12.00 மணிக்கு திரைநீக்கம் செய்யப்படவுள்ள நிகழ்வில் தாயக உறவுகள் அனைவரையும் உணர்வு பூர்வமாக கலந்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.