
கனடாவில் செஸ்னா விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த இரண்டு தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். கனடாவில் ஒன்ராறியோ மாகாணத்தில் செஸ்னா 150 என்ற சிறு விமானத்தில் பயணம் செய்த லோகேஷ் லக்ஷ்மிகாந்தன் (25) மற்றும் ரவீந்திரன் அருளானந்தம்(31) என்ற இரு தமிழர்களுமே, விபத்தில் சிக்கி மரணமாகினர். இவர்கள் இருவரும் நோர்த் யோர்க் நகரில் வசித்து வரும் தமிழர்கள் என தெரியவந்துள்ளது.
விமானத்தில் எரிபொருள் தீர்ந்து விட்டதால் விமான ஓட்டுநர் லோகேஷ் விமானத்தின் கட்டுப்பாட்டை இழந்து அடர்ந்த காட்டில் உள்ள மரத்தில் விமானத்தை மோதியுள்ளார். இதனை அடுத்து விமானம் விபத்துக்குள்ளாகி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். ஹெலிகொப்டரின் மூலம் நடந்த தேடுதல் வேட்டையில் விமானத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. விமானத்தை ஓட்டிய லோகேஷிற்கு ஏற்கனவே 200 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளதாகவும், விபத்துக்குள்ளான விமானத்தை 30 மணி நேரம் முன்கூட்டியே ஓட்டியுள்ளார் என்றும், தேடுதல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு தாம் ஆபத்தில் இருப்பதாக விமானி உதவிக்கு அழைத்த போதும் விமானப்படையினரால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது. மறுநாள் செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டபோது லோகேஸ் , மற்றும் ரவீந்திரன் ஆகியோரை சடலமாகவே மீட்க முடிந்தது என தேடுதல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த லாகேஸ் இந்தியாவையும், ரவீந்திரன் இலங்கையையும் சேர்ந்த தமிழர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.