
இராணுவப்புலனாய்வு பிரிவின் வழிநடத்தலில் நடந்த மன்னார் மாவட்ட முன்னாள் போராளி நகுலேஸ்வரன் படுகொலைக்கு ஐந்து இலட்சம் விலை பேசப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமார் இப்பணத்தினை கிராம அலுவலரான ஜெபநேசனிடம் வழங்கியதாகவும் அதில் 35 ஆயிரத்தினை முற்பணமாக வழங்கி வவுனியாவில் வசித்து வரும் தமிழ் என்பவரை கொண்டு இக்கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது.
கொலையின் பின்னர் மீதிப்பணம் வழங்கப்படுமென கிராம அலுவலரால் உறுதி அளிக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி படைத்தரப்பிடமிருந்தே பெறப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. இதனை அமைச்சர் றிசாத் பெற்று வழங்கியிருந்ததாக ஆரம்ப கட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பிரதேச செயலாளர் கைது செய்யப்பட்டால் தனது நிலை தொடர்பில் அச்சங்கொண்டுள்ள அமைச்சர் றிசாத் அவரை எப்பாடுபட்டேனும் காப்பாற்றுவதுடன் ஏனையவர்களினை மட்டும் சிக்கவைக்க முற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.