
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணைகளை சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கையாளவுள்ளது. இதற்காக கொழும்பிலிருந்து விசேட குழு ஒன்று மன்னாருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இதேவேளை, இந்த மனித புதை குழி புதன்கிழமையும் 11 ஆவது தடவையாக தோண்டப்பட்டபோது மேலும் மூன்று மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து மனித புதை குழியை மேலும் அரை மீற்றர் தூரத்துக்கு விசாலமாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதைகுழி தோண்டும் பணிகள் வியாழக்கிழமையும் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.