பிரித்தானியத் தமிழர் பேரவையும், தமிழருக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழுவும், இணைந்து ஏற்பாடு செய்த சிறிலங்கா அரசின் நில அபகரிப்பு தொடர்பான மகாநாடு இன்று காலை 10மணியளவில் பிரித்தானிய பாராளுமன்றத்தின் 14 ஆம் இலக்க அறையில் ஆரம்பமாகி தொடர்ந்து நடை பெற்று வருகின்றது.
பிரித்தானியர் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் ஆரம்பமான நிகழவில் தாயகத்திலிருந்து தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரித்தானியப் பாரராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். தாயகத்தில் இன்னுயிர் நீர்த்த எமது உறவுகளுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
மகாநாட்டின் முதற்கட்டமாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான சிவோன் மற்றும் லீ-ஸ்கொட் ஆகியோர் ஆரம்ப உரைகளை நிகழ்த்தினர்.
இம்மாநாட்டில் இலங்கை, இந்தியா, மலேசியா, தென் ஆபிரிக்கா உட்பட பல நாடுகளில் இருந்து அறிவுஜீவிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், பாக்கியசெல்வம் அரியநேத்திரன், சிவஞானம் சிறிதரன், கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் தண்டாயுதபாணி, மாகாணசபை உறுப்பினர் நாகேந்திரன், வடகிழக்கு மாகாண முன்னாள் காணி ஆணையாளர் குருநாதன்,கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
31 ஜனவரி 2014
29 ஜனவரி 2014
ஜெனீவா செல்வது பற்றி முடிவில்லை-அனந்தி
ஜெனீவாவிற்கு விஜயம் செய்வது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.
இந்த அமர்வுகளில் காணாமல் போதல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய ஆனந்தி சசிதரன் ஜெனீவாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜெனீவாவிற்கு தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மாகாணசபையில் ஆனந்தி சசிதரன் யோசனைத் திட்டமொன்றை முன்வைத்திருந்தார்.
தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவும், காணாமல் போனவர்கள் தொடர்பில் கேள்வி எழுப்பவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை பிரதிநிதிகள் குழுவொன்று ஜெனீவா விஜயம் செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவிற்கு விஜயம் செய்வது குறித்து கவனமாக சிந்தித்து தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
28 ஜனவரி 2014
"ஸ்டாலின் விரைவில் செத்துவிடுவார்"திட்டினார் அழகிரி!

27 ஜனவரி 2014
விக்கியை மீறி நினைவுத்தூபி அமைக்க பிரேரணை நிறைவேற்றம்!

26 ஜனவரி 2014
ஈபிடிபி ஊடகவியலாளர் மீது படையதிகாரி தாக்குதல்!
அரச ஆதரவு தரப்பான ஈபிடிபியின் தினமுரசு பத்திரிகையின் பிரதேச செய்தியாளர் ஒருவர் நேற்று இலங்கைப் படையினரால் தாக்கப்பட்டுள்ளார்.அத்துடன் அவரது புகைப்படக்கருவியும் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் அதிலிருந்த புகைப்படங்கள் பலவந்தமாக அழிக்கப்பட்டுமுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையினில் வலிகாமம் கிழக்கின் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட அச்சுவேலி இடைக்காடு பகுதியினில் படையினரால் புதைத்து வைக்கப்பட்டிருந்ததென நம்பப்படும் கண்ணிவெடியொன்று பொதுமக்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பினில் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுமுள்ளது. மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதியினில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி பற்றி செய்தி அறிக்கையிடச்சென்றிருந்த தினமுரசு ஊடகவியலாளரான கணேசமூர்த்தி விசயந்தன் (வயது 27) என்பவரே படை அதிகாரியொருவரால் பொதுமக்கள் முன்னிலையினில் தாக்கப்பட்டுள்ளார்.தன்னை ஊடகவியலாளர் என அடையாளப்படுத்திய போதும் அங்கு புகைப்படம் பிடித்ததாக குற்றஞ்சாட்டி அவ்வதிகாரி தாக்குதல் நடத்தியுள்ளார்.அத்துடன் அவரு புகைப்படக்கருவியினையும் பறிமுதல் செய்து சேதப்படுத்தியுள்ளதுடன் அதிலிருந்த புகைப்படங்களை அழித்துமுள்ளார். குறித்த தினமுரசு ஊடகவியலாளரான கணேசமூர்த்தி விசயந்தன் ஏற்கனவே இதே போன்று இனந்தெரியாத நபர்களினால் அண்மையினில் இரவு வேளையினில் தாக்கப்பட்டு காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
25 ஜனவரி 2014
அனந்தியுடன் அமெரிக்க தூதர் சந்திப்பு!

24 ஜனவரி 2014
நீதிபதி சிறீஸ்கந்தராஜா விஷம் மூலம் கொல்லப்பட்டாரா?

கமலேந்திரன் விடுதலையானால் ஆபத்து!
![]() |
கொல்லப்பட்ட ரெக்சியன் |
23 ஜனவரி 2014
விக்கி,சுமந்திரன் ஆகியோரை அமெரிக்கக் குழு சந்தித்தது!

22 ஜனவரி 2014
மன்னார் மனிதப்புதைகுழி விவகாரத்தில் கோத்தா!

விஜய் ஆதரவு குப்பைகளுக்கு ஐங்கரநேசன் செம அடி!
நாட்டில் பிள்ளையை காணவில்லை கணவனை காணவில்லை என துடிக்கும் மக்கள் மத்தியில் சினிமா காரணுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் தேவையா என்று ஆர்பாட்டகாரர்களுக்கு தகுந்த விளக்கம் கொடுத்துள்ளார் ஐங்கரநேசன்.யாழில் உதயன் பத்திரிகையினால் பிரசுரிக்கப்பட்ட நடிகர் விஜய் படம் தொடர்பிலான விமர்சனத்தை அதன் தொண்டர்கள் என கருதப்படும் சில இளைஞர்கள் எதிர்த்ததுடன் அது குறித்து தங்களிடம் மன்னிப்பு கேட்குமாறு பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் போரில் சொந்தபந்தங்களை இழந்து தவிக்கும் தமிழர்கள் இன்று உலகநாடுகளிடம் நீதிகேட்டு போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் இவ்வாறான இளைஞர்கள் ஒருசிலர் இருப்பதை காணாக்கூடியதாக உள்ளது இவர்களுக்கு விவசாய அமைச்சர் நல்லதொருகருத்தினை கொடுத்துள்ளார்.
சினிமா காரர்களுக்கு பால்வார்ப்பதும் கட்டவுட் வைப்பதும் விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு எல்லாம் நீங்கள் தமிழர்களா ஒரு பத்திரிகைக்கு எதிராக ஆர்பாட்டம் செய்கின்றீர்கள். நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை எடுத்து சொல்ல ஆட்கள்இல்லாமல் இன்று தமிழ் மக்களின் பிரச்சனைகளை எடுத்து சொல்லும் ஊடகத்திற்கு எதிராக ஆர்பாட்டம் செய்த இளைஞர்களுக்கு விவசாய அமைச்சர் காட்டமாக எச்சரித்துள்ளார்.
21 ஜனவரி 2014
இறப்பு பதிவுக்கு சன்மானம்!கிளிநொச்சி மக்களின் அவலம்!
20 ஜனவரி 2014
ஆணைக்குழு முன் அனந்தி சாட்சியம்!

முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன்) இராணுவத்தினரிடம் ஒப்படைத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. அதன்மூதல் அமர்வு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கிளிநொச்சியில் ஆரம்பமானது. அந்த அமர்பின் மூன்றாம் நாளான இன்று (திங்கட்கிழமை) கலந்து கொண்டு வாக்குமூலமளிக்கும் போதே அனந்தி சசிதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி நானும், எனது கணவரும், பிள்ளைகளும் இராணுவத்தினரிடம் சரணடைந்தோம். அப்போது, என்னையும், பிள்ளைகளையும் தனியாக வவுனியாவுக்கு அழைத்துச் சென்ற இராணுவத்தினர், எனது கணவரை விசாரணைகளின் பின் விடுதலை செய்யவதாக தெரிவித்தனர். நானும் எனது பிள்ளைகளும் செட்டிக்குளம் மெனிக்பார்ம் முகாமில் தங்கவைக்கப்பட்டோம். ஆனாலும், கணவர் பற்றிய விபரங்கள் அதன் பின்னர் கிடைக்கவில்லை. கடைசியாக, 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எனது கணவரை ரயிலில் அழைத்துச் செய்வதைக் கண்டதாக உறவினர் ஒருவர் கூறினார். கணவரை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தபோது பூவும் பொட்டுடனும் சுமங்கலியாகவே இருந்தேன். இன்றும் நான் அப்படியே இருக்கின்றேன். இனியும் அப்படித்தான் இருப்பேன்” என்று அனந்தி சசிதரன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே, நீங்கள் உங்கள் கணவரை ஒப்படைத்த இராணுவ அதிகாரியினை அடையாளப்படுத்த முடியுமா? என்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவினர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துள்ள அனந்தி சசிதரன், “எனது கணவரை இராணுவத்தினரிடம் ஒப்படைத்து 4 வருடங்கள் கடந்துவிட்டன. அன்றைய தினம் நான் அவரை ஒப்படைக்கும் போது மோதலின் அகோரத்தினால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன். அதனால் இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தேன் என்பதை, அவர்களின் உடைகளிலிருந்த சின்னங்கள் மூலம் உணரமுடிகிறதே தவிர; அவர்களை என்னால் அடையாளப்படுத்த முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
19 ஜனவரி 2014
ஊர்காவற்றுறையில் இளைஞர் சடலமாக மீட்பு!

18 ஜனவரி 2014
போர்க்குற்ற ஆதாரங்கள் பொய்யென நிரூபித்துக்காட்டட்டும்-மன்னார் ஆயர்

ஆதாரங்கள் கையளிப்பு
யாழ்ப்பாணத்துக்கு கடந்த 8 ஆம் திகதி அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள விசேட போர்க்குற்ற நிபுணர் ஸ்ரீபன் ராப் வந்திருந்தார். இவருடன் யாழ் ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஆகியோர் சந்திப்புக்களை நடத்தியிருந்தனர். இறுதிக் கட்டப் போரில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் கொத்துக்குண்டுகள், இரசாயனக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு போர்க்குற்ற ஆதாரங்கள் இந்தச் சந்திப்பில் ஆயர்களால் ஸ்ரீபன் ராப்பிடம் கையளிக்கப்பட்டன.
பொய்க் குற்றச்சாட்டுக்கள்
அரசின் மீது பொய்க் குற்றச் சாட்டுக்களைச் சுமத்தி வரும் மன்னார் மற்றும் யாழ்ப்பாண ஆயர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். இவர்கள் இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்ததாகப் பொய்யான தகவல்களை வழங்கியுள்னர். இதனாலேயே ஸ்ரீபன் ராப் இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டுமென்று தெரிவித்துள்ளார். எனவே பொய்யான தகவல்களை வழங்கிய இரு ஆயர்களையும் கைது செய்ய வேண்டும்’ என்று இராவண பலய என்ற சிங்கள பௌத்த கடும் போக்கு அமைப்பு பொலிஸ்மா அதிபரிடம் கோரியுள்ளது.
நிரூபியுங்கள் பார்க்கலாம்
கொடுத்த ஆதாரங்களை முடிந்தால் பொய்யென்று நிரூபிக்கட்டும். அவ்வாறு செய்த பின்னரே எங்களைக் கைது செய்வது தொடர்பில் கதைக்க முடியும் என ஆயர் குறிப்பிட்டார். எங்களுக்குப் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இறுதிக் கட்டப் போரில் சிக்குண்ட மக்கள், பங்குத் தந்தையர்கள் எல்லோருடனும் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம். அவர்கள் எங்களுக்குப் பல தகவல்களை வழங்கியுள்ளனர் என்றார். அதனையே நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம். அந்த மக்களிடம் வெளியாள்கள் சென்று தகவல் பெற முடியாது. அவர்கள் எம்மை நம்பியே வெளிப்படுத்தியுள்ளனர் எனவும் குறிப்பிட்டார். இறுதிப் போரில் நடந்த உண்மைகளைப் பலர் இரகசியமாக ஐ.நாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். நாங்கள் பகிரங்கமாகச் சொன்னதால் எங்களை எதிர்ப்பதாக ஆயர் மேலும் தெரிவித்தார்.
17 ஜனவரி 2014
அனந்திக்கு புனர்வாழ்வு அளித்தால் அரசு மோசமான நிலைக்கு செல்லும்!

16 ஜனவரி 2014
எனக்கு புனர்வாழ்வளிப்பது விந்தையானது:அனந்தி

15 ஜனவரி 2014
அனந்திக்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டுமாம்!

14 ஜனவரி 2014
யாழில் ஆக்கிரமித்த வீடுகளை விட்டு படைகள் வெளியேறுகின்றன!

13 ஜனவரி 2014
இலங்கைக்கு எதிராக கடுமையான பிரேரணை!

ரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு கருத்து வெளியிடுகையிலையே சுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்.. இங்கு கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பிரிந்துரைகள் எவையுயும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் அரசாங்கம் சர்வதேசத்திற்கு பொய்யான தகவல்களைத் தெரிவித்து வருகின்றது. இதற்கு மாறாக யுத்தம் முடிவடைந்த பின்னர் தொடர்ந்தும் காணி ஆக்கிரமிப்புக்கள் இரானுவ முகாம்களை அமைத்தல் மற்று தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் ஆகிய செயற்பாடுகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. இந் நிலையில் அடுத்தமாதம் ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்திலிருந்து தப்புவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றது. அதாவது யுத்த கணக்கெடுப்புக்கள் காணாமல் போனவர்கள் தொடர்பாக பொய்யான தகவல்களைத் திரட்டி ஜெனிவாவிற்கு கொடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்கமையவே காணமல் போனவர்கள் உயிரிழந்தவர்கள் தொடர்பாக பொய்யான தகவல் திரட்டினை மேற்கொண்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் அரசு நியமித்துள்ள காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக்குழு கூட கண்துடைப்பே.ஏற்கனவே அரசின் மனிதவுரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்டவற்றில் மக்கள் புகார் செய்துள்ளனர்.முதலில் அதற்கு என்ன நடந்ததென்பதை இக்குழு விசாரிக்கட்டுமென்றார். தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு அரசினால் எதிராக இழைக்கப்பட்டுள்ள அல்லது இழைக்கப்பட்டு வருகின்ற அநீதிகளுக்கு சர்வதே விசாரணையே இங்கு மேற்கொள்ளப்பட வேண்டும். இத்தகைய விசாரணையொன்றே இம்முறை ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ளதாக நம்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
12 ஜனவரி 2014
பிரான்சில் தமிழர் ஒருவரின் அகதி அந்தஸ்து இரத்து!

11 ஜனவரி 2014
படை முகாமை அகற்றக்கோரி வட்டுக்கோட்டையில் போராட்டம்!

லண்டனில் குழந்தைகளுடன் தாய் மரணம்!

10 ஜனவரி 2014
யுத்த சூனிய வலயம்– 2 இல் ஸ்டீபன் ஜே.ரெப்!
யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று நேரில் சென்று யுத்தகாலத்தின் யுத்த சூனியப் பிரதேசத்தை பார்வையிட்டார். இதன்போது யுத்த சூனிய வலயம் – 2 அமைக்கப்பட்டிருந்த புதுமாத்தளன் பாடசாலை, வைத்தியசாலை மற்றும் யுத்த காலத்தில் புதுக்குடியிருப்பில் அமைந்திருந்து ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கும் ரெப் சென்றுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசனும் இந்த பயணத்தில்; இணைந்துகொண்டார் என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட யுத்த சூன்ய வலயத்தில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பொதுமக்கள் அகப்பட்டிருந்தனர். யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் யுத்த சட்டங்களை மீறுவதாக மனித உரிமை கண்காணிப்பகம் 2009 ஆம் ஆண்டு அறிவித்திருந்தது. அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட மிகவும் ஒடுங்கிய பகுதியான யுத்த சூன்ய வலயத்தில் அகப்பட்டுள்ள பொதுமக்களை அப்பகுதியிலிருந்து வெளியேறுவதற்கு புலிகள் தடுத்துவருகின்றனர். அதேவேளை அரசாங்க தரப்பினர் அந்த பகுதியில் திரும்ப திரும்ப கண்மூடித்தனமாக ஷெல் தாக்குதலை மேற்கொண்டனர் என்றும் அவ்வமைப்பு அன்று தெரிவித்திருந்தது.புதுமாத்தளன் வைத்தியசாலையின் தற்காலிககொட்டகையும் இந்த யுத்தசூன்ய வலயத்தில் இருந்ததாகவும் 2009 ஆம் ஆண்டு 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் காயமடைந்தவர்கள் அந்த கொட்கையில் சிகிச்சை பெற்றுவந்தனர் என்றும் மனித உரிமை கண்காணிப்பகம் 2009ல் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
09 ஜனவரி 2014
ஈ.பி.டி.பி கமலுக்கு விடுமுறை,கொதித்து எழுந்த சிவாஜிலிங்கம்!

மீன் வயிற்றில் பாம்பு!

07 ஜனவரி 2014
யாழை கலக்கிய கொள்ளைக் குழுவில் இளம் பெண்!
யாழ் மாவட்டத்தை கலங்கடித்த 'ஆவ' எனப்படும் குழுவின் பெண் தலைவரை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு யாழ்ப்பாணம் பொலீசார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் மேற்படி குழுவைச் சேர்ந்த தலைவன் உள்ளிட்ட உறுப்பினர்கள் அடங்கலாக 16பேர் ஆயுதங்களுடன் யாழ் மாவட்ட பொலிஸ் பிரிவு பலவற்றிலிருந்து கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து இப்பெண் தொடர்பான தகவல் வெளிவந்துள்ளது. இரவு வேளைகளில் குறித்த பெண் நடமாடுவதாகவும், கொக்குவில் பிறவுன் வீதியை சேர்ந்த ராஜகுமார் ஜெனிட்டா என்கிற (வயது 23) என்பவரே இவர் என அடையாளம் காட்டப்பட்டுள்ளதாகவும் பொலீசார் தேடியதையடுத்து அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
06 ஜனவரி 2014
இலங்கை அரசு எதனையும் கொடுக்காது- இராயப்பு ஜோசப்!

05 ஜனவரி 2014
சிறுவன் துடிதுடித்து மரணம்!

04 ஜனவரி 2014
போர்க்குற்ற ஆணையர் கொழும்புக்கு விஜயம்!

03 ஜனவரி 2014
யார் என்ன சொன்னாலும் மஹிந்தவை சம்பந்தனும் சந்திப்பார்-சுமந்திரன்

02 ஜனவரி 2014
தமிழர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு செல்வோருக்கு பணகுவியல்!
ஜெனீவாவில் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் உலகளாவிய ரீதியில் வாழும் சிங்களவர்களையும் தமிழ் மக்களின் விடுதலைக்கு எதிராக செயற்படும் தமிழர்கள் சிலரையும் இணைத்து எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் அலுவலகம் முன்பாக சிறிலங்கா அரசாங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தாலி, பிரான்ஸ், பிரித்தானியா உட்படலான பல்வேறு நாடுகளில் வாழும் சிங்களவர்கள் ஒன்றிணைந்து புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராக இந்த பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று புதன்கிழமை பிரான்ஸின் தலைநகரான பரிஸில் இடம்பெற்றுள்ளது. இதில் சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸில் தமிழ் மக்களின் விடுதலைக்கு எதிராக செயற்படும் சில தமிழர்களும் கலந்து கொண்டனர். பெருந்தொகையான பணம் தரப்படும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்களை திரட்டி வருமாறும் இந்த கூட்ட ஏற்பாட்டாளர்கள் அங்கு கலந்து கொண்டவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வட மாகாணம் முதலிடம்!

01 ஜனவரி 2014
இராணுவ களியாட்ட நிகழ்வில் தளபதி பாப்பா!
இறுதி யுத்தத்தினில் காணாமல் போயிருந்த விடுதலைப்புலிகளது மற்றொரு தளபதியான பாப்பா உயிரிடனிருப்பது உறுதியாகியுள்ளது. பாப்பா உயிருடன் உள்ளார் அங்கு போனார் இங்கு வந்தார் என பரபரப்பு தகவல்கள் வெளியாகியிருந்த போதும் அவரை நேரினில் கண்ட சாட்சிகள் ஏதுமிருந்திருக்கவில்லை.இந்நிலையினில் யாழ்.நகரினில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றின் போது பகிரங்கமாக பலரும் பாப்பாவை கண்டுள்ளனர். யாழ்.மாவட்டத்தினில் பணியாற்றுகின்ற மூத்த இராணுவ அதிகாரிகள் சிவிலுடையினில் அந்நிகழ்வினில் கலந்து கொண்டிருந்த நிலையினில் அங்கு அவர்களுடன் பாப்பாவும் பிரசன்னமாகியுள்ளார்.குறித்த அதிகாரிகள் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி கத்துருசிங்கவின் உதவியாளர்கள் என்ற வகையினில் பலாலியிலிருந்தே வந்திருந்ததாகவும் அவ்வகையினில் பாப்பாவும் அங்கிருந்தே வந்திருக்கலாமென நம்பப்படுகின்றது.இறுதி யுத்தத்தினில் சரணடைந்த ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளது நிலை பற்றி தகவல்கள் அற்றிருக்கின்ற நிலையினில் அவர்களுடன் சரண் அடைந்த பாப்பா உயிருடனிருப்பது காணாமல் போனோரது குடும்பங்களிடையே சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளது.அரச தரப்பினால் இரகசிய தடுப்பு முகாம்கள் பேணப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையினில் பாப்பா பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.ஏற்கனவே புலிகளது தளபதிகளான பதுமன் மற்றும் ராம் நகுலன் ஆகியோர் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ள நிலையினில் தற்போது பாப்பாவும் வெளியே வந்துள்ளார்.வருட இறுதி கொண்டாட்டமாக கொழும்பிலிருந்து தருவிக்கப்பட்ட சிங்கள குமரிகளது குத்தாட்ட நிகழ்வொன்று மதுபான விருந்துடன் குறித்த விடுதியினில் ஏற்பாடாகியிருந்தது.இந்நிகழவிற்கே பாப்பா வருகை தந்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)