
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
30 டிசம்பர் 2014
மைத்திரிக்கு ஆதரவு வழங்குவதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது!

23 டிசம்பர் 2014
மீனவர் ஜேசுதாசனின் படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும்–கஜதீபன்.
.jpg)
27 நவம்பர் 2014
'வடிவம் மாறலாம் ஆனால் போராட்டம் முடியவில்லை' : தமிழ்கவி
இலங்கையில் தமிழர் போராட்டம் முடிவுறவில்லை என்று கூறும் எழுத்தாளர் தமிழ்கவி, அதன் வடிவங்கள் மாற்றம்பெறலாம் என்கிறார்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியாகவும், போராளியின் தாயாகவும், ஊடகவியலாளராகவும் இறுதி யுத்தம் வரை, யுத்த மண்ணிலேயே இருந்த தமிழ்கவி அவர்கள், தனது போராட்ட அனுபவங்கள் குறித்து நூல் ஒன்றையும் எழுதியுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ஒரு உண்மையான போராளி என்று கூறும் அவர், அந்த அமைப்பின் உள்ளே நடந்த காட்டிக்கொடுப்புகளே, உள்முரண்பாடுகளே போரின் தோல்விக்கு காரணம் என்று கூறுகிறார்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இறந்துவிட்டதாகக் கூறும் அவர், பிரபாகரன் இறக்கவில்லை என்று கூறுபவர்களை கடுமையாக விமர்சிக்கிறார்.
அதேவேளை, தற்போதைய நிலையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வே முதன்மையானது என்று கூறும் அவர், அடிபட்டுப் போயிருக்கும் ஒருவனால், தற்போதைக்கு தமிழ் தேசியம் பேசிக்கொண்டிருக்க முடியாது என்றும் குறிப்பிடுகிறார்.
அரசாங்க புனர்வாழ்வுத்திட்டம் முன்னாள் போராளிகளுக்கு போதிய உதவிகளை செய்யவில்லை என்று கூறும் அவர் ஊரில் எஞ்சியுள்ள போராளிகளின் குடும்ப நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறுகிறார்.
இராணுவ பிரசன்னம், நில ஆக்கிரமிப்பு ஆகியவை குறித்தும் அவர் விமர்சிக்கிறார்.
அவர் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
உங்களின் கனவுகள் நிஜமாகும்;யாழில் அநாமதேய கடிதங்கள்!
உங்களின் கனவுகள் நிஜமாகும்; யாழில் அநாமதேய கடிதங்கள்
பாடைசாலைகளில் மாவீரர் தினத்தினை கொண்டாடுமாறு கோரி இனந்தெரியாதோரால் அநாமதேய கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.யாழ்ப்பாணத்தின் மத்தியில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளுக்கே இந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதில் உயிரை விதையாக்கி உதிரத்தை உரமாக்கி கனவு தேசத்தைக் கருவாக்கி ஓய்ந்த கரும்புலிகளே, மாவீரர்களே உங்களின் கனவுகள் நிஜமாகும் தமிழரின் நாடு உருவாகும் என்று எழுதப்பட்டுள்ளது.
26 நவம்பர் 2014
தலைவர் பிறந்தநாளில் யாழ்,பல்கலைக்கழகம் சுற்றிவளைப்பு!
25 நவம்பர் 2014
புலிகள் இயக்க உறுப்பினரை நீதிமன்றில் ஆயராகுமாறு உத்தரவு!
அனுராதப்புரம் வான்படை முகாம் மீது தரை மற்றும் வான் வழி தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் குற்றபத்திரிகை கையளிப்பதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் மற்றுமொரு உறுப்பினரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், டிசம்பர் மாதம் முதலாம் திகதி அவர் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என அனுராதப்புரம் விஷேட மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஏவுகணை பிரிவின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முன்னாள் உறுப்பினருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் சம்பவம் தொடர்பில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட மற்றுமொரு தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினரை டிசம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவி;டப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனுராதப்புரம் வான்படை முகாம் மீது தரை மற்றும் வான் வழி மூலம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மூலம் 10 வானுர்திகள் முற்றாகவும், 6 வானுர்திகள் பகுதியளவிலும் சேதமடைந்திருந்தமை குறிப்பிடதக்கது.
இந்த தாக்குதலின் போது, 14 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர்.
23 நவம்பர் 2014
ஜனாதிபதி வேட்பாளர் சுந்தரன் மகேந்திரன்!
புதிய இடதுசாரிகள் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக, அந்த கட்சியின் ஊடக பேச்சாளர் சுந்தரன் மகேந்திரன் நிறுத்தப்படவுள்ளார்.
அந்த கட்சியின் தலைவர் விக்ரமபாஹு கருணாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டிருந்தால் அவருக்கு ஆதரவளிக்க தமது கட்சி தயாராக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
ஆனால் அரசாங்கத்தின் அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவே பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமது கட்சி சார்பாக தனி வேட்பாளர் ஒருவரை நிறுத்த தீர்மானித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய சோசலிச கட்சியும் தமக்கான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த தீர்மானித்துள்ளது.
அந்த கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் வைத்து அதன் வேட்பாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஜே.வி.பியில் இருந்து பிரிந்து சென்ற முற்போக்கு சோசலிச கட்சியும் தனி வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த விருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
22 நவம்பர் 2014
சகோதரியுடன் சேட்டைவிட்ட சிப்பாயை பஸ்ஸை விட்டு இறக்கிய சகோதரர்கள்!

21 நவம்பர் 2014
எசன் மாநகரில் மாவீரர் நினைவுத்தூபி திரை நீக்கம்!

19 நவம்பர் 2014
மண்டைதீவு,குருநகர் மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்!

நன்றி:பிபிசி தமிழ்
18 நவம்பர் 2014
நெடுந்தீவிற்கான போக்கு வரத்து மழையால் பாதிப்பு!

17 நவம்பர் 2014
மன்னார் கொலையின் சூத்திரதாரி ஆதாரம் அம்பலம்!
16 நவம்பர் 2014
விக்னேஸ்வரன் ஐயாவுக்கு தெரிந்தவை இவைதான்-சீமான்

கூட்டமைப்பின் மூன்று நிபந்தனைகள்!

15 நவம்பர் 2014
கனடா விமான விபத்தில் இரண்டு தமிழர்கள் பலி!
12 நவம்பர் 2014
சரவணையில் மரநடுகை நிகழ்வு!
11 நவம்பர் 2014
ராஜீவ் கொலை முயற்சிகளுக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை!
09 நவம்பர் 2014
சுவிசில் தமிழ் தம்பதியினர் காருடன் தீ மூட்டி எரிந்து மரணம்!
07 நவம்பர் 2014
தனங்கிளப்பில் குண்டுகளை மீட்டு அழித்தனராம் படையினர்!

06 நவம்பர் 2014
சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சைப்பிரிவில்!

தூங்கிக் கொண்டிருந்த மாணவியுடன் சிப்பாய் கட்டாய உறவுக்கு முயற்சி!
இராணுவத்தின் தலைமைத்துவப் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவியொருவரிடம் படைச்சிப்பாய் தப்பாக நடந்து கொள்ள முயற்சித்தமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் கடந்த செப்டம்பரில் நடைபெற்றிருந்த போதும் இதுவரை காலமும் இராணுவத்தினரால் மூடி மறைக்கப்பட்டிருந்ததாக சிங்கள ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. கடந்த செப்டெம்பர் மாதம் கண்டி கண்ணொருவை இராணுவ முகாமில் பயிற்சியில் கலந்து கொண்ட பல்கலைக்கழக மாணவியொருவருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த மாணவி தூங்கிக் கொண்டிருந்த நிலையில் ஜன்னல் ஊடாக செலுத்தப்பட்ட கையொன்று அவரை தப்பான முறையில் ஸ்பரிசிக்க முயன்றுள்ளது.மாணவி திடுக்கிட்டு எழுந்து கூக்குரலிட்டபோது குறித்த மர்ம நபர் தப்பியோடியுள்ளார். சம்பவம் தொடர்பில் முகாமிலுள்ள இராணுவப் பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் சந்தேக நபர்கள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் குறித்த மாணவி தூங்கிக் கொண்டிருந்த ஜன்னல் அருகே சேற்றுக் கால் தடங்கள் இருப்பதை கவனித்த இராணுவப் பொலிசார் அதனை வைத்து விசாரணைகளை மேற்கொண்டபோது கோப்ரல் தர படைச்சிப்பாய் ஒருவர் தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.எனினும் இந்தச்சம்பவம் இதுவரை காலமும் இராணுவம் மற்றும் உயர்கல்வி அமைச்சினால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. தற்போது சிங்கள ஊடகங்களில் இந்தச் செய்தி குறித்த தகவல்கள் பரபரப்பாக வெளியிடப்பட்டுள்ளது. குறித்த செய்தி தொடர்பாக கொழும்பு டுடே செய்திச் சேவை இராணுவ ஊடக மையத்தின் பணிப்பாளர் ஜயநாத் ஜயசேனவை தொடர்பு கொண்ட போது இது ஒரு சாதாரண விடயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த படைச்சிப்பாய் தண்டனையாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
04 நவம்பர் 2014
இலங்கையின் பாதுகாப்பில் ஐ.நா.தலையிடக்கூடாது என எச்சரிக்கை!

02 நவம்பர் 2014
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் வீரவணக்க நாள் இன்று!
சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 வது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப் பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.
1986ல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.
தேசியத் தலைவர் அவர்களுடன் தாயகம் திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ்.தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
1991 வரை அப்பதவியில் அவர் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.
1991 இல் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார்.
1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.
1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.
அமைதிப் பேச்சுக்களில் வெளிநாடுகளின் முதன்மைப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசின் அமைதிப் பேச்சுக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.
படைத்துறை வழியில் அவரின் செயற்பாடுகள்
1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கையிலும் 1992 இல் சிறிலங்கா படையினரின் “பலவேகய – 02″ எதிர்ச்சமரிலும் முதன்மையானதாக இருந்தது.
மேலும் தச்சன்காடு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல்
காரைநகரில் சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல்
ஆகியவற்றிலும் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் முதன்மைப் பங்காற்றினார்.
1991 இல் மன்னார் சிலாபத்துறை சிறிலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார்.
ஆகாய கடல்வெளிச் சமரில் அவர் விழுப்புண் பட்டார்.
பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான “தவளை நடவடிக்கை”யில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் விழுப்புண் பட்டார்.
“ஒயாத அலைகள் – 03″ நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.
தன்னுடைய அரசியல் பணி மூலம் அதிகம் மக்கள் மனதில் நிறைந்தவராக சு.ப.தமிழ்ச்செல்வன் விளங்கினார்.தாயகத்திலும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக அவர் விளங்கினார்.
அமைதி நடவடிக்கையில் தமிழினத்தின் விடுதலைக் கொள்கையில் உறுதியாக நின்று எதிரிகளின் ஏமாற்று நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர் அவர்.
மேலும் பன்னாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பெருமதிப்பை பெற்றிருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.
01 நவம்பர் 2014
யாழில் ரவுடிகளை துரத்தித் துரத்தி வெட்டிய மாணவன்!
யாழ் இந்துக் கல்லுாரிக்கு அண்மையில் பஸ்சிற்காக காத்திருந்த 16 வயது மாணவனை அங்கு வந்த சில ரவுடிகள் செயின்கள் மற்றும் பொல்லுகளால் தாக்கிய போது மாணவன் தான் மறைத்து வைத்திருந்த வாளினால் அவா்களைத் துரத்தித் துரத்தி தாக்கியதில் மாணவனைத் தாக்கிய ரவுடிகள் கழுத்து மற்றும் கைகளில் கடும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ஓடி மறைந்துள்ளனா். இச் சம்பவத்தை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.இதனையடுத்து அங்கு வந்து பொலிசாாா் மாணவனைக் கைது செய்துள்ளனா். இதே வேளை மாணவனைத் தாக்கியவா்கள் யாா் என்பது பற்றியும் பொலிசாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகின்றது.
மாணவன் எதற்காக பாடசாலைக்கு வாள் கொண்டு வந்தாா் என்பதும் மாணவனை எதற்காக ரவுடிகள் தாக்கினாா்கள் என்பது பற்றியும் பொலிசாா் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.
இதே வேளை யாழ்ப்பாணபப் பாடசாலைகளில் மாணவா்களிடேயே போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள அதே வேளை ரவுடிகளுடனான தொடா்புகளும் அதிகரித்துக் காணப்படுவது கவலைக்குரிய ஒன்றாக உள்ளதாக கல்விச் சமூகம் தெரிவிக்கின்றது.
30 அக்டோபர் 2014
சிறீலங்கா நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி!போர்க்களமானது இராமேஸ்வரம்!
29 அக்டோபர் 2014
மலையகத்தில் மண்சரிவில் புதையுண்டனர் மக்கள்!
26 அக்டோபர் 2014
கிளி,யில் விசாரணைப்படிவம் வழங்கியவர் கைதாம்!

25 அக்டோபர் 2014
முள்ளிவாய்க்கால், ஆனந்தபுரம் பகுதிகளில் உடல்கள் எரிக்கப்பட்டுள்ள எச்சங்கள்!
நன்றி,-தமிழர் குரல்-
24 அக்டோபர் 2014
காணாமற்போன பெண் சடலமாக கண்டுபிடிப்பு!
நன்றி!மலரும்.கொம்
23 அக்டோபர் 2014
புலிகளுடன் தொடர்பு என்பது பொய்யென துரைராஜா மறுப்பு!
22 அக்டோபர் 2014
யாழ்,சங்கிலியன் அரண்மனைக்கு சிங்களவர் உரிமை கோருகிறார்!

21 அக்டோபர் 2014
இந்தியப்படைகளால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம்!

20 அக்டோபர் 2014
கஜதீபனை விழாக்களுக்கு அழைக்க விசாரணையாம்!
19 அக்டோபர் 2014
யாழில் மழையுடன் விழுந்தன மீன்கள்!

யாழில் பியர் விற்பனை அதிகரிப்பு!

17 அக்டோபர் 2014
மகிந்த வரவால் நெடுந்தீவு ஆசிரியர்களுக்கு வந்தது செலவு!

"ஜெயாவிற்கு பிணை"பட்டாசு கொளுத்திக் கொண்டாடினார் சரத்குமார்!

16 அக்டோபர் 2014
புலிகள் மீதான தடையை ஐரோப்பிய நீதிமன்றம் நீக்கியது!

இலங்கை அறிக்கை:
ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தும் விஷயம் இந்த உத்தரவில் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி ஐரோப்பிய கவுன்சிலுக்கு இலங்கை அரசு இதுவரை தகவல் வழங்கி வந்ததுபோலவே இனியும் தொடர்ந்து தகவல் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் சம்பந்தமாக ஐரோப்பிய ஆணையம் செய்யும் மறு பரிசீலனையிலும் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தாம் நம்புவதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
15 அக்டோபர் 2014
காவலூர் ராஜதுரை இயற்கை எய்தினார்!
![]() |
காவலூர் ராஜதுரை |
14 அக்டோபர் 2014
தீவகத்தில் மகிந்தோதய!

12 அக்டோபர் 2014
மஹிந்தவுக்கு ஒரு நுளம்பு கூடக் கடிக்ககூடாது!

நன்றி:ஈழநாதம்
11 அக்டோபர் 2014
ஈபிடிபியினரின் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினார் தர்மகர்த்தா!

10 அக்டோபர் 2014
குமார் குணரட்னம் இலங்கைக்குள் பிரவேசிக்கத் தடை!

09 அக்டோபர் 2014
கூட்டுக்கட்சிகளுடன் பேதம் பார்க்கவில்லை என்கிறார் வடக்கு முதல்வர்!

08 அக்டோபர் 2014
பிரஜைகள் குழு தலைவர் மீது தாக்குதல்!
![]() |
ஆவணப்படம் |
07 அக்டோபர் 2014
பேஸ்புக் துஷ்பிரயோகம்! 1500 கணக்குகள் முடக்கம்!

06 அக்டோபர் 2014
கோபியின் மனைவியை சுவிஸ் செல்லவிடாமல் தடுத்தது சிங்களம்!

05 அக்டோபர் 2014
குறிகாட்டுவானில் வடதாரகை!

வட்டக்கச்சியில் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி!
![]() |
ஆவணப்படம் |
04 அக்டோபர் 2014
தமிழ்மக்கள் தங்களை நேசிப்பதாக இராணுவம் மனப்பால் குடிக்கிறது – பொ.ஐங்கரநேசன்!
![]() |
பொ.ஐங்கரநேசன் |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)