நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
24 டிசம்பர் 2015
புரட்சித்தலைவர் நினைவு நாள் யாழில் அனுஷ்டிப்பு!
04 டிசம்பர் 2015
நடராஜா வித்தியாலய மாணவியை பலியெடுத்தது கடற்படை!
03 நவம்பர் 2015
சிசுவைக் காப்பாற்றிய கருணைகொண்ட நாய்!
வீதியில் வீசப்பட்ட சிசுவொன்றை நாயொன்று வாயால் கௌவ்விச் செல்லும் படமொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓமானில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீதியில் யாரோ ஒருவரால் வீசப்பட்டிருந்த தொப்புள் கொடியுடன் காணப்பட்ட சிசுவொன்றை நாயொன்று தூக்கிச் சென்று அருகில் இருந்த வீட்டு வாசலில் போட்டுள்ளது.
மேலும் வாசலில் நின்று குரைத்துமுள்ளது. வீட்டில் உள்ளோர் வெளியே வந்து பார்த்த தும் சிசுவொன்று வாசலில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அவ்வீட்டிலிருந்தோர் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் குழந்தை உயிரோடு இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் குழந்தைக்கு காயமேதும் ஏற்பட்டிருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
நாயின் புத்திக் கூர்மையான செயற்பாட்டால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி:கிரு நியூஸ்
நன்றி:கிரு நியூஸ்
27 அக்டோபர் 2015
கருணையே இல்லாத சிங்களப் படைகளுக்கு கருணைச்சபை!

எங்கே செல்லும் இந்தப்பாதை இதை யார்தான் யார்தான் அறிவாரோ?
-இது நீதி வேண்டும் ஒரு தமிழனின் ஆதங்கம்-
24 அக்டோபர் 2015
16 படுகொலைகளுடன் கோத்தாவுக்கு நேரடிப் பொறுப்பு!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் இரண்டு செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் உட்பட்ட 16 கொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் முன்னாள் பிரதியமைச்சர் கருணாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று கொழும்பு ஆங்கில செய்தி இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் இந்தக்கொலைகளுக்கு தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பறங்கியரான முன்னாள் பொலிஸ் அதிகாரி- பாபியன் ரோய்ஸ்டர் டௌஸியன்ட் உடந்தையாக இருந்துள்ளார். முன்னாள் பொலிஸ் அதிகாரியான பாபியனுக்கு வழங்கப்பட்ட பெருந்தொகை பணத்துக்காகவே அவர் இரண்டு செஞ்சிலுவை சங்க அதிகாரிகளை கொழும்பு கோட்டையில் இருந்து கடத்திச்சென்று கொலை செய்தார். பின்னர் சட்டவிரோதமான மனைவியுடன் குறித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி, அவுஸ்திரேலியாவுக்கு தப்பிவிட்டார்.
பொலிஸ் அதிகாரியின் சட்டவிரோத மனைவியும் சர்வதேச ரீதியில் பாரிய நிதிமோசடியில் ஈடுபட்டவர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் கோத்தபய மற்றும் கருணாவின் பெருந்தொகை பண உடன்பாட்டுக்காக முன்னாள் பொலிஸ் அதிகாரி பாபியன் மேற்கொண்ட கொலைகளை ஆங்கில இணையம் வரிசைப்படுத்தியுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், நிலம் சஞ்சிகையின் ஊடகவியலாளர் சந்திரபோஸ் சுதாகரன், வீரகேசரியின் மட்டக்களப்பு செய்தியாளர் நடேசன், மட்டக்களப்பு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமலன் சௌந்தரநாயகம், திருகோணமலை நகரசபையின் முன்னாள் தலைவர் வன்னியசிங்கம் விக்னேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எஸ்.எஸ் ஜெகநாதன், அம்பாறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு, செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களான சந்திரமோகன் மற்றும் சண்முகலிங்கம் உள்ளிட்டோரின் கொலைகளுக்கே கருணா மற்றும் கோத்தபய ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலைகளுக்காக பெற்ற பணத்தை கொண்டே முன்னாள் பொலிஸ் அதிகாரி பாபியனும் அவருடைய சட்டவிரோத மனைவியும் முதலீட்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதன்மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச்சென்று விட்டனர் என்று ஆங்கில இணையம் தெரிவித்துள்ளது.
18 அக்டோபர் 2015
தமிழீழ அரசியற்றுறை மகளிரணிப் பொறுப்பாளர் தமிழினி மரணம்!
![]() |
தமிழீழ தேசியக்கொடி ஏற்றுகிறார் தமிழினி |
12 அக்டோபர் 2015
தீவகத்தின் காந்தி டேவிட் ஐயா காலமானார்!

26 செப்டம்பர் 2015
தியாக தீபம் திலீபனின் 28ஆவது ஆண்டு நினைவு தினம்!
வடக்கு - கிழக்கு இணைந்த தமிழீழ விடுதலைக்காக யாழ். நல்லூரில் உண்ணாநோன்பிருந்து அஹிம்சை வழியில் போராடி தனது உயிரை
ஆகுதியாக்கிய தியாக தீபம் லெப்டினண்ட் கேர்ணல் திலீபனின் 28ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் அனுஷ்டிக்கப்படுகின்றது. தமிழீழத் தாயக மண்ணிலிருந்து இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி நல்லூரில் திலீபன் என்று அழைக்கப்படும் இராசையா பார்த்தீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். 12 நாள்கள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்த அவர் செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி வீரச்சாவடைந்தார்.

24 செப்டம்பர் 2015
சரவணையில் வெறிச்செயலில் களிசறைகள்!

20 செப்டம்பர் 2015
கட்டளையிட்டவர்களை கண்டறிவதே நோக்கம் என்கிறார் மங்கள!

19 செப்டம்பர் 2015
கலப்பு நீதிமன்றம் மற்றுமொரு நாடக அரங்கேற்றம்!

இந்த கலப்பு நீதிமன்றம் ஒரு கண்துடைப்பு நாடகமே!
16 செப்டம்பர் 2015
மனித உரிமை விவகாரத்தில் அமெரிக்கா பின்வாங்குகிறது!

12 செப்டம்பர் 2015
எப்போ மனோ த.தே.கூட்டமைப்பில் இணைந்தார்?-சிவாஜிலிங்கம்

10 செப்டம்பர் 2015
நீதிக்கான தேடல்' - கல்லம் மக்ரேயின் புதிய ஆவணப்படம்!

01 செப்டம்பர் 2015
சர்வதேச விசாரணை முடிந்து விட்டதாம்!சிங்கக்கொடி சம்பந்தர் சொல்கிறார்!

நன்றி:பிபிசீ தமிழோசை
30 ஆகஸ்ட் 2015
தேசியத் தலைவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்-கருணா(காணொளி)
இலங்கையின் இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை. கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என முன்னாள் அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். அத்துடன் அவரது மனைவி, மகள் ஆகியோர் ராணுவ ஷெல்வீச்சில் உயிரிழந்தனர் எனவும் தெரிவித்துள்ளார். தமிழக ஊடகமான 'புதிய தலைமுறை' தொலைக்காட்சிக்கு வழங்கி செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எனக்கும் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் சில முரண்பாடுகள் காணப்பட்டன என்பது உண்மையே. நான் என்றும் மதிக்கும் ஒரு தலைவர் பிரபாகரன். அவரது தியாகத்தையும், ஒழுக்கத்தையும் நாம் மதிக்க வேண்டும். போராட்டத்தில் மரணித்தவர்களின் தியாகத்திற்கு நாம் மரியாதை அளிக்க வேண்டும். - என்றார். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் 'அக்னிப்பரீட்சை' நிகழ்ச்சிக்கு கருணா அளித்த செவ்வி காணொளியாக இங்கே.
28 ஆகஸ்ட் 2015
உள்ளக விசாரணை! தர்மசங்கடத்தில் கூட்டமைப்பு ஆதவாளர்கள்!
தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைமை உள்ளக விசாரணைக்கு சாதகமான சமிக்ஞை காட்டியுள்ள நிலையினில் அதன் ஆதவாளர்கள் பலரும் மக்களிடத்தே கடுமையான எதிர்விளைவுகளை எதிர்நோக்க தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக ஆதரவாளர்களிற்கு பதிலளிப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களது தொலைபேசிகள் தயாராக இல்லையெனவும் கூறப்படுகின்றது.இதனால் பல ஆதவாளர்களும் முடக்க நிலையினை அடையத்தொடங்கியுள்ளனர்.நிஸா பிஸ்வாலுடனான சந்திப்பின் பின்னர் சுமந்திரன் ஊடககங்களிற்கு தெரிவித்துள்ள கருத்தினில் சர்வதேச பொறிமுறைகளின் கீழ் உள்ளக விசாரணையினை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.இது தமிழ் மக்களிடையே கடுமையான சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் மக்களது இத்தகைய எதிர்ப்பு நிலைப்பாடு தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட ஆதவாளர்களை தர்மசங்கடத்திற்குள்ளாக்கியுள்ளது.இதற்கு பதிலளிக்க முடியாது பலரும் தற்போது முடங்கிப்போயுள்ளனர்.குறிப்பாக சமூக வலைத்தளங்களினில் குரல் எழுப்பிய பலரும் தற்போது சுருண்டு போயுள்ளனரென அவதானிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.தொடர்ந்து வரப்போகும் ஜ.நா விசாரணை அறிக்கை வெளியீடு மற்றும் உள்ளக விசாரணை காலங்கள் கடுமையான எதிர்வினைகளினை கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களிற்கு கடுமையான தர்மசங்கடங்களை தரலாமென நம்பப்படுகின்றது.
16 ஆகஸ்ட் 2015
மாவையும் சிறீகாந்தாவும் சேர்ந்து திட்டமிட்ட குண்டுத்தாக்குதல்!
15 ஆகஸ்ட் 2015
சுமந்திரனுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு!

14 ஆகஸ்ட் 2015
தேவியனை அரசபடைகளுக்கு காட்டிக் கொடுக்க சிறீதரன் 4 கோடி ரூபா பெற்றார்!
![]() |
தேவியன் |
இவ்வாறு இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
13 ஆகஸ்ட் 2015
தோல்வி பயத்தால் முன்னணியினர் மீது கூட்டமைப்பு வன்முறைத்தாக்குதல்!
![]() |
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி |
11 ஆகஸ்ட் 2015
கொள்கையின் சின்னமாக உந்து ஊர்தி!
![]() |
புளியங்கூடல் |
07 ஆகஸ்ட் 2015
மன்னார் ஆயரின் சிகிச்சைக்கு நிதி உதவி கோரப்படுகிறது!

06 ஆகஸ்ட் 2015
சுமந்திரனின் விதண்டாவாதம்!(காணொலி இணைப்பு)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் சுமந்திரன் அவர்கள் இன்று மதியம் யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை நடாத்தினார். அதில் முக்கியமான தரவு ஒன்றினை பிழையாகச் சொன்னது மட்டுமல்லாது, மூத்த ஊடகவியலாளர் ஒருவர் அதனைச் சுட்டிக் காட்டிய போது அவரது கருத்தை பரிசீலிக்காமல் தான் சொன்னது தான் சரி என்கிற வகையில் நடந்து கொண்டுள்ளார்.
உண்மையில் 1982 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அமரர் குமார் பொன்னம்பலம் அவர்கள் தான் அதிக வாக்குகளைப் (87,263) பெற்றார். அதே நேரம் கொப்பேக்கடுவ அவர்கள் (77,300) வாக்குகளைப் பெற்று யாழில் இரண்டாவதாக வந்தார்.
ஆனால், சுமந்திரனோ யாழில் கொப்பேக்கடுவா தான் முதலாவதாக வந்தார். குமார் பொன்னம்பலம் இரண்டாவதாக வந்ததாக திரும்பத் திரும்பக் கூறினார்.
குறித்த தேர்தலில் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி நின்றுதான் குமார் பொன்னம்பலம் அதிக வாக்குகளைப் பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.
03 ஆகஸ்ட் 2015
கொள்கை மாறாதவர் கஜேந்திரகுமார் என்கிறார் தினேஷ்!

27 ஜூலை 2015
ஜனநாயகப் போராளிகளை மிரட்டுகிறதாம் இந்தியா!

25 ஜூலை 2015
நீங்கள் என்ன சொன்னாலும் சனம் நம்பாது என்றாராம் சிறீதரன்!

24 ஜூலை 2015
புளொட் சித்தார்த்தனை ஆதரிக்கும் அனந்திக்கு எதிர்ப்பு!

18 ஜூலை 2015
முதல்தர கொலையாளி வேட்பாளர்!வெளிக்கக்குகிறார் கருணா!

13 ஜூலை 2015
புலிமுகச்சிலந்தி ஜனநாயகப்போராளிகளின் சின்னம்!

த.தே.ம.முன்னணியின் வேட்பாளர் பட்டியல்!

(1)கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் த.தே.ம.மு தமிழ்காங்கிரஸ் கட்சி தலைவர் )
(2)செல்வராஜா கஜேந்திரன் (முன்னாள் நா.உ)
(3)மணிவண்ணன் (சட்டத்தரணி)
(4)ஆனந்தி சிவஞானசுந்தரம் (ஓய்வுபெற்ற அதிபர்- இராமநாதன் கல்லூரி)
(5)சுதா – (குருநகர் பாடும் மீன் விளையாட்டுக்கழக உபதலைவர் ) (6)அமிர்தலிங்கம் இராசகுமாரன் (விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழக முன்னாள் ஆசிரியர் சங்க தலைவர்)
(7) திருநாவுக்கரசு சிவகுமாரன் (சிவா) – யாழ் பல்கலைக்கழக பட்டதாரி - (தீவகம்)
(8)பத்மினி சிதம்பரநாதன் (முன்னாள் நா.உ)
(9)சின்னமணி கோகிலவாணி – (கிளிநொச்சி)
(10)ஜெயரட்ணம் வீரசிங்கம் (வீரா) - (பல்கலைக்கழக ஊழியர் சங்கம்)
07 ஜூலை 2015
குப்பி கடிக்காதோரை முன்னாள் போராளிகள் எனக்கூற முடியாதென்றாராம் சிறீதரன்!

06 ஜூலை 2015
ஸ்ரீலங்காவின் மூத்த படையதிகாரி திடீர் மரணம்!

இந்த படையதிகாரிக்கு மரணம் நேர்ந்திருக்கலாம் எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
02 ஜூலை 2015
எனையாளும் என் அன்னை ஒலிப்பேழை வெளியிடப்பட்டது.
தீவகத்தின் கண்ணே அமைந்துள்ள ஊர்காவற்றுறை புளியங்கூடல் செருத்தனைப்பதிதனில் அமர்ந்திருந்து அருள்பாலிக்கும் அன்னை ஸ்ரீ இராஜமகாமாரியின் துணையுடன் வெளிவந்திருக்கும் "எனையாளும் என் அன்னை"பக்தி மழை பொழியும் ஒலிப்பேழை 26.06.2015 அன்று ஆலய முன்றலில் வெளியீடு செய்யப்பட்டது.இந்த ஒலிப்பேழைகளை புலம்பெயர் தேசங்களிலும் பெற்றுக்கொள்ளும் வசதியை ஆலய நிர்வாகத்தினர் மேற்கொண்டிருக்கின்றனர்.
கனடா:புவனேஸ்வரன்-4164099947
ஜெர்மனி:இரவீந்திரகுமார்-015217517832
பிரான்ஸ்:ராசன்-0661474728
பிரித்தானியா:சாந்தகுமார்-02030974065
அவுஸ்திரேலியா:கிரிசாந்த்-0403231581
சுவிற்சர்லாந்து:திருவருட்செல்வம்-41766833019
உங்கள் வீடு தேடி வந்து அருள்பாலிக்கும் மகாமாரி அன்னையை
ஒவ்வொருவரும் பூஜித்துக்கொள்ளுங்கள்.இலக்கியன் அவர்களின் இனிமை ததும்பும் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் தேனாய் பாய்கிறது.
கனடா:புவனேஸ்வரன்-4164099947
ஜெர்மனி:இரவீந்திரகுமார்-015217517832
பிரான்ஸ்:ராசன்-0661474728
பிரித்தானியா:சாந்தகுமார்-02030974065
அவுஸ்திரேலியா:கிரிசாந்த்-0403231581
சுவிற்சர்லாந்து:திருவருட்செல்வம்-41766833019

ஒவ்வொருவரும் பூஜித்துக்கொள்ளுங்கள்.இலக்கியன் அவர்களின் இனிமை ததும்பும் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் தேனாய் பாய்கிறது.
குழந்தையை காப்பாற்றிய கடவுள்கள்!

20 ஜூன் 2015
கம்(Hamm)காமாட்சி அம்பாள் நாளை இரதோற்சவம்!
ஜெர்மனியின் கம்(Hamm)மாநகரில் கோவில் கொண்டருளியிருக்கும் ஸ்ரீ காமாட்சி அம்பாள் தேர்த்திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை(21.06.2015)நடைபெற உள்ளது.பகல் 12மணிக்கு அம்பாள் தேரேறி புறப்படுவாள்.இவ்வாலயத்தின் தேர் உற்சவத்தை காண ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு வருகின்றனர்.அத்துடன் பிற மதத்தை சார்ந்தவர்களும் குறிப்பாக வெள்ளையின மக்களும் பெருமளவில் கலந்து சிறப்பித்து வருகிறார்கள்.அத்துடன் ஜெர்மானிய பாடப்புத்தகங்களிலும் கம் காமாட்சி அம்பாள் ஆலயம் இந்துக்களின் அடையாளமாக குறிப்பிடப்பட்டிருப்பது சுட்டிக்காட்டதக்கது.
19 ஜூன் 2015
பிரான்சில் சிங்கள அரச புலனாய்வாளர்கள் அடாவடி!
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரான்ஸ்
13 ஜூன் 2015
யாழ்,நீதிமன்ற தாக்குதலில் ஈபிடிபி?

05 ஜூன் 2015
புளியங்கூடல் அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம்!

04 ஜூன் 2015
நாரந்தனையில் தொடரும் வாள்வெட்டு!
நாரந்தனையில் நேற்றுக்காலை மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் ஒருவரை வாளால் வெட்டியதில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இரு சமூகப் பிரிவுகளுக்கு இடையே கடந்த ஒரு மாத காலமாக நிலவும் பிரச்சினையே இந்த வாள்வெட்டுக்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே மது போதையில் சென்ற நால்வர் ஊர்காவற்றுறைப் பகுதியில் வைத்து ஒருவரை வாளால் வெட்டினர்.
இதில் படுகாயமடைந்தவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
01 ஜூன் 2015
பெண்களுடன் சேஷ்டை விடுவோரைக் கைது செய்ய உத்தரவு!

23 மே 2015
காணவில்லையென தேடப்படும் இளம்பெண் இவர்தான்!
யாழ்ப்பாணம், வேலணை கிழக்கு, 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் விமலினி (வயது 20) என்ற யுவதியை வியாழக்கிழமை (21) முதல் காணவில்லையென அவரது உறவினர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள நண்டு பதனிடும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இந்தச் யுவதி, வியாழக்கிழமை (21) காலை வேலைக்குச் சென்று, இதுவரையில் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து, உறவினர்கள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.முன்னர் நாரந்தனையை சேர்ந்தவர் என செய்திகள் வந்திருந்தமையால் நாமும் அதை பிரசுரித்திருந்தோம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
22 மே 2015
நாரந்தனையை சேர்ந்த இளம்பெண்ணை காணவில்லை!

21 மே 2015
வித்தியா கொலையாளிகள் 10 பேரையும் பகிரங்கமாக தூக்கிலிடவேண்டும்!

19 மே 2015
சுவிசிற்கு தப்பிச்செல்ல முயன்ற மகாலிங்கம் சிவகுமார் கைது!

17 மே 2015
புங்குடுதீவில் மாணவி படுகொலை!மேலும் ஐவர் கைது!
நல்லூரில் போராட்டம் |
15 மே 2015
புலிகளின் காலத்தில் பெண்களால் நள்ளிரவிலும் தனியாக நடமாட முடிந்தது!
விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் பெண்களால் நள்ளிரவிலும் தன்னந்தனியாக நடமாடமுடிந்தது. அதுபோன்ற ஒரு காலம் மீளவும் வராதா என்று மக்கள் இப்போது ஏங்க ஆரம்பித்துள்ளனர் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார்.
புங்குடுதீவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திப் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை ( 15.05.2015 ) புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அஞ்சலி உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையை மிருகத்தனமானது என்று சிலர் குறிப்பிட்டார்கள். நான் அவ்வாறு சொல்லமாட்டேன். மிருகங்கள்கூடச் செய்யத்துணியாத கொடுஞ்செயல் இது. இந்த மாபாதகத்தில் ஈடுபட்டவர்கள் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் எந்தப் பிறவியிலும் அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது.
போருக்குப் பிறகு இதுபோன்ற கொலைகளும், சமூகவிரோதச் செயற்பாடுகளும் அதிகிரித்துள்ளன. இவற்றின் பின்னணியில் போதைப்பழக்கம் ஒரு பிரதான காரணமாக இருக்கிறது. என்றும் இல்லாத வகையில் இளைய தலைமுறையிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. எமது இளைய தலைமுறையைத் தவறான பாதையில் வழிநடத்துவதன்மூலம் அவர்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்கச் செய்யலாம் என்ற நோக்கத்துடனேயே இங்கு போதைப்பொருள் பாவனை திட்டமிட்டு ஊக்கிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் காவல்துறை குற்றங்களைக் கட்டுப்படுத்தியிருந்தது. இப்போது கடும்குற்றவாளிகள்கூட சுதந்திரமாக நடமாடக்கூடியதாக உள்ளது. எனவே, எமது இளைய தலைமுறையின் பாதுகாப்புக் குறித்து பெற்றோர்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எமது இளைய தலைமுறையின் பழக்கவழக்கங்கள் குறித்துப் நாம் விழிப்பாயிருக்க வேண்டும். வடக்கு மாகாண சபையும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய தீர்க்கமான வழிமுறைகளை ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற இவ்வஞ்சலி நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன், வடமாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், மாகாணசபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன், பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம், க.சிவாஜிலிங்கம் ஆகியோருடன் கல்வித் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்கள்.
நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற இவ்வஞ்சலி நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன், வடமாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், மாகாணசபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன், பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம், க.சிவாஜிலிங்கம் ஆகியோருடன் கல்வித் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)