
தமிழரசுக்கட்சி வேட்பாளர் சுமந்திரனிற்கு அமைச்சரவை பாதுகாப்பு இன்று காலை முதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் படி அமைச்சரவை பாதுகாப்பு பிரிவை சேர்ந்த மூவர் விசேட அதிரடிப்படையினை சேர்ந்த எண்மர் மற்றும் சாதாரண காவல்துறையினை சேர்ந்த நால்வரென பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தலை முன்னிட்டு வடமராட்சி வருகை தந்து தங்கியுள்ள சுமந்திரன் தான் மக்களுடன் நெருங்கி உறவாடுவது போல காட்டிக்கொள்ள தனது பாதுகாப்பு பொறிமுறைகளினை நீக்கிக்கொண்டிருந்தார்.பிரச்சாரங்கள் முடிவடைந்ததையடுத்து தற்போது தனது விசேட பாதுகாப்பினை பெற்றுக்கொண்டுள்ளார்.
முன்னதாக ஒட்டுக்குழு தலைவராக இருந்த டக்ளஸ் ஆளுநர் சந்திரசிறி போன்றவர்களிற்கு வழங்கப்பட்டதைவிட அதிக பாதுகாப்பு சுமந்திரனிற்கு வழங்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.