
ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜேர்மனியின் பிராங்போட்டில் இருந்து நவநீதம்பிள்ளை பயணம் செய்த சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம்,இன்று காலை சுமார் 9.45 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
அவருடன் ஐ.நா மனிதஉரிமை ஆணையத்தை சேர்ந்த 5 உயரதிகாரிகளும் கொழும்பு வந்துள்ளனர்.
நவநீதம்பிள்ளையை, ஜெனிவாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க அழைத்து வந்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.